Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday 16 July 2013

இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகள் - Most famous Indian sarees


இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகள் - Most famous Indian sarees

இந்தியா பாரம்பரிய உடை என்றால் அது புடவை தான். எவ்வளவு தான் பெண்கள் ஃபேஷனானவர்களாக இருந்தாலும், புடவைகளை அணிந்தால், அவர்கள் மங்களகரமாக காணப்படுவார்கள். அதுமட்டுமின்றி ஜீன்ஸ், டி-சர்ட் என்று எந்த ஒரு ஃபேஷனான ஆடைகளும், புடவைகளின் முன்பு தோற்றுவிடும். ஏனெனில் அந்த வகையில் புடவைகளிலேயே பல வெரைட்டிகள் உள்ளன.

Intiyā pārampariya uṭai eṉṟāl atu puṭavai tāṉ. Evvaḷavu tāṉ peṇkaḷ ḥpēṣaṉāṉavarkaḷāka iruntālum, puṭavaikaḷai aṇintāl, avarkaḷ maṅkaḷakaramāka kāṇappaṭuvārkaḷ. Atumaṭṭumiṉṟi jīṉs, ṭi-carṭ eṉṟu enta oru ḥpēṣaṉāṉa āṭaikaḷum, puṭavaikaḷiṉ muṉpu tōṟṟuviṭum. Ēṉeṉil anta vakaiyil puṭavaikaḷilēyē pala veraiṭṭikaḷ uḷḷaṉa.
மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான புடவைகள் பிரபலமாக மக்கள் மத்தியில் உள்ளன. அதுவும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சில்க் அல்லது காட்டன் போன்ற புடவைகள் வேறுபடும். அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள துணிவகைகள் மற்றும் புடவைகளில் இருக்கும் வேலைபாடுகளின் முறைகள் வேறுபட்டு இருக்கும். பொதுவாக இந்தியாவில் இரண்டு வகையான துணிவகைகளால் ஆன புடவைகள் உள்ளன. அவை சில்க் புடவைகள் மற்றும் காட்டன் புடவைகளாகும். ஆனால் இவைகளிலேயே பல வேறுபாடுகள் உள்ளன.

Mēlum intiyāvil uḷḷa ovvoru pakutiyilum ovvoru vitamāṉa puṭavaikaḷ pirapalamāka makkaḷ mattiyil uḷḷaṉa. Atuvum ovvoru mānilattilum uḷḷa cilk allatu kāṭṭaṉ pōṉṟa puṭavaikaḷ vēṟupaṭum. Atumaṭṭumallāmal, ovvoru mānilattilum uḷḷa tuṇivakaikaḷ maṟṟum puṭavaikaḷil irukkum vēlaipāṭukaḷiṉ muṟaikaḷ vēṟupaṭṭu irukkum. Potuvāka intiyāvil iraṇṭu vakaiyāṉa tuṇivakaikaḷāl āṉa puṭavaikaḷ uḷḷaṉa. Avai cilk puṭavaikaḷ maṟṟum kāṭṭaṉ puṭavaikaḷākum. Āṉāl ivaikaḷilēyē pala vēṟupāṭukaḷ uḷḷaṉa.
உதாரணமாக, பெங்காலியில் ஜாம்தானி வேலைபாடுகளுடன் கூடிய புடவைகள் பிரபலமானது. அதுவே அவுரங்காபாத்தில், பைத்தானி புடவையில் உள்ள தங்க நூல் வேலை மிகவும் பிரபலமானது. இவ்வாறு இந்தியாவில் பல வகையான புடவைகள் உள்ளன. அதுவும் எண்ண முடியாத அளவில் உள்ளன. ஆகவே, தமிழ் போல்டு ஸ்கை, இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான புடவைகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Utāraṇamāka, peṅkāliyil jāmtāṉi vēlaipāṭukaḷuṭaṉ kūṭiya puṭavaikaḷ pirapalamāṉatu. Atuvē avuraṅkāpāttil, paittāṉi puṭavaiyil uḷḷa taṅka nūl vēlai mikavum pirapalamāṉatu. Ivvāṟu intiyāvil pala vakaiyāṉa puṭavaikaḷ uḷḷaṉa. Atuvum eṇṇa muṭiyāta aḷavil uḷḷaṉa. Ākavē, tamiḻ pōlṭu skai, intiyāvil uḷḷa mikavum pirapalamāṉa puṭavaikaḷai paṭṭiyaliṭṭuḷḷatu. Ataip pārppōmā!!!


1. காஞ்சிபுரம்
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பட்டு புடவை மிகவும் பிரபலமானது. அதிலும் இந்த காஞ்சிபுரத்தில் திருமண முகூர்த்தப் பட்டுக்கள் எண்ணற்ற டிசைகளில், அழகான பார்டருடன், வித்தியாசமான நிறங்களில் இருக்கும்.

Kāñcipuram
Intiyāvilēyē tamiḻnāṭṭil uḷḷa kāñcipuram paṭṭu puṭavai mikavum pirapalamāṉatu. Atilum inta kāñcipurattil tirumaṇa mukūrttap paṭṭukkaḷ eṇṇaṟṟa ṭicaikaḷil, aḻakāṉa pārṭaruṭaṉ, vittiyācamāṉa niṟaṅkaḷil irukkum.



2. டாக்காய்
இந்தியாவின் வங்காளத்தில் இருக்கும் டாக்காவில் தயாரிக்கப்பட்டது தான் டாக்காய் காட்டன் புடவைகள். ஆனால் தற்போது ஜாம்தானி வேலை உள்ள சுத்தமான காட்டன் புடவைகள் கூட மிகவும் பிரபலமாக உள்ளது.

2. Ṭākkāy
Intiyāviṉ vaṅkāḷattil irukkum ṭākkāvil tayārikkappaṭṭatu tāṉ ṭākkāy kāṭṭaṉ puṭavaikaḷ. Āṉāl taṟpōtu jāmtāṉi vēlai uḷḷa cuttamāṉa kāṭṭaṉ puṭavaikaḷ kūṭa mikavum pirapalamāka uḷḷatu.



3. பைத்தானி
மஹாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது பைத்தானி புடவைகள். இந்த புடவைகளின் சிறப்பு என்னவென்றால், இதில் உண்மையான தங்க நூல் கொண்டு வேலைபாடுகள் செய்யப்பட்டிருப்பது தான்.

3. Paittāṉi
Mahārāṣṭirāvil mikavum pirapalamāṉatu paittāṉi puṭavaikaḷ. Inta puṭavaikaḷiṉ ciṟappu eṉṉaveṉṟāl, itil uṇmaiyāṉa taṅka nūl koṇṭu vēlaipāṭukaḷ ceyyappaṭṭiruppatu tāṉ.



4. சாம்பல்புரி
சாம்பல்புரி ஸ்டைலில் சில்க் மற்றும் காட்டன் என இருவகையான புடவைகளும் உள்ளன. மேலும் இந்த புடவையில் உள்ள சிறுசிறு எம்பிராய்டரியும், ஒரிசாவில் உள்ள சாம்பல்பூரில் இருந்து வந்தது.

4. Cāmpalpuri
Cāmpalpuri sṭailil cilk maṟṟum kāṭṭaṉ eṉa iruvakaiyāṉa puṭavaikaḷum uḷḷaṉa. Mēlum inta puṭavaiyil uḷḷa ciṟuciṟu empirāyṭariyum, oricāvil uḷḷa cāmpalpūril iruntu vantatu.

5. கேரள புடவை
கேரளா புடவையின் சிறப்பு என்னவெனில், இதில் சந்தன நிற பட்டுப் புடவையில், தங்க நிற பார்டர் மட்டும் இருப்பது தான்.

5. Kēraḷa puṭavai
Kēraḷā puṭavaiyiṉ ciṟappu eṉṉaveṉil, itil cantaṉa niṟa paṭṭup puṭavaiyil, taṅka niṟa pārṭar maṭṭum iruppatu tāṉ.

6. அஸ்ஸாம் புடவை
இந்தியாவிலேயே அஸ்ஸாமில் தான் சுத்தமான சில்க் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு தங்க நிற மோகா சில்க் மற்றும் அதன் தனித்துவமான நூல் வேலை தான் மிகவும் பிரபலமானது.

6. As'sām puṭavai
Intiyāvilēyē as'sāmil tāṉ cuttamāṉa cilk uṟpatti ceyyappaṭukiṟatu. Mēlum iṅku taṅka niṟa mōkā cilk maṟṟum ataṉ taṉittuvamāṉa nūl vēlai tāṉ mikavum pirapalamāṉatu.

7. பனாரஸ் புடவை
பனாரஸ் புடவை, அதன் நிறம் மற்றும் அதிகமான தங்க நிற எம்பிராய்டரியால் மிகவும் பிரபலமானது. மேலும் இது வட இந்திய திருமண பட்டு புடவைகளில் மிகவும் பிரபலமானது.

7. Paṉāras puṭavai
Paṉāras puṭavai, ataṉ niṟam maṟṟum atikamāṉa taṅka niṟa empirāyṭariyāl mikavum pirapalamāṉatu. Mēlum itu vaṭa intiya tirumaṇa paṭṭu puṭavaikaḷil mikavum pirapalamāṉatu.

8. பொச்சம்பள்ளி
காட்டன் புடவைகள் என்று வரும்போது, பொச்சம்பள்ளி புடவைகளும் அடங்கும். இந்த புடவைகளின் நிறங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.

8. Poccampaḷḷi
Kāṭṭaṉ puṭavaikaḷ eṉṟu varumpōtu, poccampaḷḷi puṭavaikaḷum aṭaṅkum. Inta puṭavaikaḷiṉ niṟaṅkaḷ caṟṟu vittiyācamāṉatāka irukkum.



9. கோடா புடவை
கோடா புடவையின் சிறப்பு என்னவென்றால், அந்த புடவைகளின் முனைகளில் சிறப்பான ஜரிகை இருக்கும். இது ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தது.

9. Kōṭā puṭavai
Kōṭā puṭavaiyiṉ ciṟappu eṉṉaveṉṟāl, anta puṭavaikaḷiṉ muṉaikaḷil ciṟappāṉa jarikai irukkum. Itu rājastāṉ maṟṟum uttara piratēcattil iruntu vantatu.

10. சந்தேரி
இது ஒருவிதமான சில்க் புடவை. இந்த புடவையானது மத்திய பிரதேசத்தில் மிகவும் பிரபலமான மற்றும் அழகான கலைநயத்துடன் காணப்படும் ஒரு புடவையாகும்.

10. Cantēri
Itu oruvitamāṉa cilk puṭavai. Inta puṭavaiyāṉatu mattiya piratēcattil mikavum pirapalamāṉa maṟṟum aḻakāṉa kalainayattuṭaṉ kāṇappaṭum oru puṭavaiyākum.



11. பொம்கை
ஒரிசா புடவை தயாரிப்பதில் மிகவும் சிறந்த மாநிலம் என்று சொல்லலாம். ஏனெனில் இங்குள்ள மற்றொரு சிறிய கிராமமான பொம்கையில் கைத்தறி புடவைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த புடவையும் மிகவும் பிரபலமானதே.

11. Pomkai
Oricā puṭavai tayārippatil mikavum ciṟanta mānilam eṉṟu collalām. Ēṉeṉil iṅkuḷḷa maṟṟoru ciṟiya kirāmamāṉa pomkaiyil kaittaṟi puṭavaikaḷ tayārikkappaṭukiṟatu. Inta puṭavaiyum mikavum pirapalamāṉatē.



12. டாண்ட்
நல்ல காட்டன் புடவை வேண்டுமெனில், வங்காளத்தில் உள்ள டாண்ட் புடவை சிறந்ததாக இருக்கும். இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், இது எப்போதும் கஞ்சி போட்டது போல் நேராகவே இருக்கும்.

12. Ṭāṇṭ
Nalla kāṭṭaṉ puṭavai vēṇṭumeṉil, vaṅkāḷattil uḷḷa ṭāṇṭ puṭavai ciṟantatāka irukkum. Inta puṭavaiyiṉ ciṟappu eṉṉaveṉṟāl, itu eppōtum kañci pōṭṭatu pōl nērākavē irukkum.



13. கோட்டா
பொதுவாக கோட்டா புடவைகளானது காட்டனால் செய்யப்பட்டது. இந்த புடவை ராஜஸ்தானில் உள்ள கோட்டா நகரத்தில் இருந்து வந்தது. இந்த புடவையானது வீட்டில் இருக்கும் போது உடுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.

13. Kōṭṭā
Potuvāka kōṭṭā puṭavaikaḷāṉatu kāṭṭaṉāl ceyyappaṭṭatu. Inta puṭavai rājastāṉil uḷḷa kōṭṭā nakarattil iruntu vantatu. Inta puṭavaiyāṉatu vīṭṭil irukkum pōtu uṭuttuvataṟku ēṟṟatāka irukkum.



14. கோட்கி
ஒரிசாவில் இருந்து வந்தது தான் கோட்கி புடவை. இந்த புடவையின் முந்தானையில் அழகான கோவில் பாணியில் வேலை செய்யப்பட்டிருக்கும்.

14. Kōṭki
Oricāvil iruntu vantatu tāṉ kōṭki puṭavai. Inta puṭavaiyiṉ muntāṉaiyil aḻakāṉa kōvil pāṇiyil vēlai ceyyappaṭṭirukkum.
English Source: http://www.boldsky.com/insync/life/2013/fourteen-most-famous-indian-sarees-034214.html

Share your comments here http://Friendstamil.cbox.ws

Thanks

No comments:

Post a Comment