Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 19 July 2013

திருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை - Thirunelveli Special

திருநெல்வேலி - திக்கெல்லாம் புகழுறும் நெல்லை

திருநெல்வேலி பலபெயர்களால் அறியப்பட்டாலும், பெரும்பாலும் நெல்லை,தின்னவேலி,திருநெல்வேலி ஆகிய மூன்று பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திருநெல்வேலி என்ற பெயரின் ஆங்கிலேய உச்சரிப்பான தின்னவேலி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு திருநெல்வேலி என்ற பெயரால் மீண்டும் அழைக்கப்படலானது.திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்டவர்கள் நெல்லை என்றே அழைக்கிறார்கள்.

திருநெல்வேலி புகைப்படங்கள் - நெல்லையப்பர் கோயில் - ராஜகோபுரம் 

தக்காண பீடபூமியின் தென் கோடி முனையில் அமைந்துள்ளதால், புவியியலமைப்பில் முக்கியத்துவம் பெற்ற நகரமாகவும் திருநெல்வேலி விளங்குகிறது. மாநிலத்தலைநகரமான சென்னையிலிருந்து 700 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருநெல்வேலி.
தமிழ்நாட்டின் அண்டைமாநிலமான கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரத்திலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி அமையப்பெற்றுள்ளது.

கோவில்களும், காற்றாலைகளும் நிறைந்த நிலம்!

பழங்காலக் கோவில்கள் ஏராளமாக நிறைந்த பகுதியாக திருநெல்வேலியும்,அதனைச் சுற்றிலுமுள்ள பகுதிகளும் அறியப்படுகின்றன. மாநிலத்திலேயே மிகப்பெரிய சிவாலயமான நெல்லையப்பர் ஆலயத்தை தன்னகத்தே கொண்ட பெருமையை கொண்டுள்ளது திருநெல்வேலி.
திருநெல்வேலியின் அமைவிடமானது காற்றாலைகளை நிறுவி வெற்றிகரமாக இயக்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஒருங்கே பெற்றதாகும்.
காற்றாலைகளில் முன்னோடி நிறுவனங்கள் திருநெல்வேலியைச் சுற்றியுள்ள இடங்களில் ஆலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்கின்றன. இந்நிறுவனங்கள் காற்றாலைகளின் மூலம் 3500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்றன.
கப்பல் மாதா தேவாலயம், ஸ்ரீ அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோவில், மேல திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருவேங்கடநாதபுரம் கோவில், கீழத் திருப்பதி போன்றவை இவ்விடததைச் சுற்றிலுமுள்ள இதர முக்கிய இடங்கள் ஆகும்.

திருநெல்வேலியை சென்றடைவது எப்படி?

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் மற்றும், தூத்துக்குடி துறைமுகம், மதுரை அண்டை மாவட்டமான கன்னியாகுமரி ஆகியவற்றை திருநெல்வேலியுடன் இணைக்கும் நல்லதொரு சாலைக் கட்டமைப்பு உள்ளது.

திருநெல்வேலியின் காலநிலையானது, தமிழகத்தின் இதர பகுதிகளில் நிலவும் காலநிலையை விட வித்தியாசமானது அல்ல. கோடையில், ஈரப்பதத்துடன் கூடிய வெம்மையும், மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில், குறைவான வெப்பமும் நிலவுகின்றன.
ஈர்க்கும் இடங்கள்
1. கப்பல் மாதா தேவாலயம்

திருநெல்வேலி புகைப்படங்கள் - கப்பல் மாதா தேவாலயம் 
கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது.
அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தின் சக்தியைப்பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன.
இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது  அவற்றில் ஒரு சடங்காக அனுசரிக்கப்படுகிறது.  முன்பொரு நாள் இரவில் இங்குள்ள செல்வமாதாவின் திருச்சிலை மீது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி ஒருமணி நேரம் பிரகாசித்ததாம்.
வேறு விளக்கோ மெழுகுவர்த்தியோ எரியாதபோது இவ்விதமான அதிசய ஒளி தோன்றிய செப்டம்பர் 18 ஆம் நாளை ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
இத்தேவாலயமானது கோவா கிறித்தவ துறவிகளால் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உவரி என்னும் கடற்கரை கிராமத்தில் இத்தேவாலயம் அமைந்துள்ளது.
2. நெல்லையப்பர் ஆலயம், திருநெல்வேலி
திருநெல்வேலி புகைப்படங்கள் - நெல்லையப்பர் கோயில் - ராஜகோபுரம் 
திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோவில் இதுவாகும். இரண்டு கோவில்களும், 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன.
இக்கோவிலின் கோபுரங்களும் 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தலங்களில் நெல்லையும் ஒன்றாகும்.
இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக்கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாக திருநெல்வேலி கருதப்படுகிறது. இந்நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள் படும் தாமிர அம்பலம்/தாமிர சபை அமைக்கப்பட்டு உள்ளது.
திருக்கல்யாணம், நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற சிறப்பான விழா நாட்களில் இக்கோவிலைத்தரிசனம் செய்வது இனிமையான அனுபவமாகும். அக்டோபர் மாதம் 15 முதல் நவம்பர் மாதம் 15 வரை அதாவது தமிழ் மாதமான ஐப்பசி திங்களில் மேலே கூறிய விழாக்கள் நடைபெறும்.
தைப்பூச திருவிழாவானது இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும் மற்றொரு திருவிழாவாகும். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலை கண்டுபிடித்து வந்து சேருவதில் சுற்றுலாப்பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.  


அருகாமை இடங்கள் திருநெல்வேலி (வாரவிடுமுறை பிக்னிக் ஸ்தலங்கள்)
1. குற்றாலம் - எங்கே கிடைக்கும் இந்த சுகம் (57 km - 55min)

'தென்இந்தியாவின் ஸ்பா' என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம், எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
குற்றாலம் புகைப்படங்கள் - குற்றாலம் அருவி - ஐந்தருவி 
எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

குற்றாலம் மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது.
மேலும் இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.
இந்நகரத்தை சுற்றியுள்ள மற்ற கண்கவர் இடங்கள் தெற்கு மலை எஸ்டேட், ஐந்தருவியை ஒட்டி அமைந்துள்ள படகு இல்லம், மற்றும் பழைய குற்றால அருவி. பாம்பு பண்ணையும், மீன் பண்ணையும் பேரருவிக்கு அருகில் அமைந்துள்ளன மற்றும் சிறுவர்களுக்கான பூங்காக்களும் நிறைய உள்ளன.
குற்றாலம் என்ற பெயர் உள்ளூர் மக்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வரும் குத்தாலம் என்ற பெயரின் திரிபாகும். இந்த அருவி முக்திவேலி, நன்னகரம், கந்தபிதூர், தீர்த்தபுரம், திரு நகரம் மற்றும் வசந்த பேரூர் என்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.
இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒரு பிரபலமான புராணக்கதை உள்ளது. சிவன் கைலாசமலையில் நடைபெறும் தனது திருகல்யானத்திற்கு செல்வதற்காக தெற்கில் முண்டியடித்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்திய முனிவரை அனுப்பினார் என்று நம்பப்படுகிறது.
குற்றாலத்திலுள்ள பெரும்பாலான கோவில்கள் சிவனிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பல்வேறு வரலாறுகள் இக்கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
குற்றாலத்தை அடைவது எப்படி?
சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகின்றன. குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங்களின் வழியாக எளிதில் அணுக முடியும்.
குற்றாலத்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும். சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது.
இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும். தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றாலத்தை அடைய முடியும்.

குற்றாலம் வருவதற்கு சிறந்த பருவம்
குற்றாலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் ஜூலை முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமழை மற்றும் குளிர்கால பருவங்கள் ஆகும். கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதால் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அருவிகள் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும்.
பருவ மழை மாதங்களும் அதே போல் குளிர்கால மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கும். ஆண்டின் இந்த பருவ மழை காலங்களில் காணப்படும் மழைச்சாரலும், இதமான காற்றும் இந்த காலகட்டத்தில் இந்நகரை சுற்றிப்பார்பதற்கு மேலும் வசீகரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

2. தூத்துக்குடி - துறைமுகம் மற்றும் முத்துக்களின் நகரம்! (57 km - 1Hr, 5 min)

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு பிரபலமான துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் முத்து குளித்தலுக்கு பிரபலமானதினால் 'முத்து நகரம்' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி புகைப்படங்கள் - மணப்பாடு பீச் மற்றும் சர்ச் - மணப்பாடு பீச் 

இந்நகரம் மீன்பிடி மற்றும் கப்பல் கட்டுதலுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மற்றும் மேற்கு பக்கத்தில் திருநெல்வேலி மாவட்டமும் மற்றும் அதன் கிழக்கில் ராமநாதபுரமும் விருதுநகரும் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டின் தலை நகரமான சென்னை  தூத்துக்குடி நகரில் இருந்து 600 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கேரள தலைநகரம் திருவனந்தபுரம் தூத்துக்குடியிலிருந்து 190 கி. மீ தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது.

தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்
கடல் ஆர்வலர்களுக்கு, தூத்துக்குடி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக உள்ளது. நகரின் துறைமுகம் மிக முக்கியமான மற்றும் கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களில் ஒன்று.
இந்த நகரம் அதன் பூங்காக்களுக்கு பேர் போனது, அவற்றில் மிகவும் பிரபலமான பூங்காக்கள் துறைமுகம் பூங்கா, ராஜாஜி பூங்கா மற்றும் ரோச் பூங்கா போன்றவை.
தூத்துக்குடியில் உள்ள திருச்செந்தூர் கோவில் பக்தர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக விளங்குகிறது. இது சுப்ரமணிய கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்நகரம் பிரபலமான மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தை (CMFRI) தன்னகத்தே கொண்டுள்ளது . மற்ற சுற்றுலா இடங்கள் மானப்பாடு, கழுகுமலை, ஒட்டபிடாரம், எட்டயபுரம் கொற்கை ஆதிச்ச நல்லூர், வாஞ்சி மணியாச்சி, பாஞ்சாலங்குறிச்கி, நவ திருப்பதி போன்றவை.
மலையை குடைந்து கட்டப்பட்ட பிரபல ஜெயின் கோவில் அமைந்துள்ள கழுகு மலை, கொற்கை குளம் மற்றும் வெற்றி வேளம்மன் கோவில் முதலியன பிரபலமான சுற்றுலாத் தலங்கள்.
கடைசியாக சொல்லப்பட்ட இரண்டு இடங்களும் புகழ்பெற்ற பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடங்களாகும். புகழ்பெற்ற வரலாற்று இடமும் இங்கு இருக்கிறது, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டபொம்மன் நினைவு கோட்டை  இந்நகரத்தில் உள்ளது.

வரலாற்று பயணம்
தூத்துக்குடி கடந்த காலத்தில் 'திரு மந்திர் நகர்' என்று அறியப்பட்டது. அனுமான் சீதையை தேடி இலங்கை செல்லும் வழியில் தூத்துக்குடி நகரில் முகாமிட்டிருந்தான் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த நகரத்தின் பெயரும் கூட "தூதன்" என்ற வார்த்தையில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்நகரத்தின் பெயர் பின் வரும் இரண்டு வார்த்தைகளில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது "தூர்த்து" இதன் பொருள் 'கடலில் இருந்து உருமாறி வந்த நிலம்'.
"குடி" இதன் பொருள் ' குடியமர்தல்'. வரலாற்றின் ஆரம்ப நாட்களில் இருந்து துறைமுக நகராக இருப்பதினால் இது பிரபலமாக உள்ளது. பாண்டிய மன்னன் ஆட்சி காலத்தில் கூட இது ஒரு பிரபலமான துறைமுகமாக இருந்து வந்துள்ளது.
1548 ம் ஆண்டு ,இந்நகரத்தை பாண்டிய மன்னனிடம்  இருந்து போர்த்துகீசியர் எடுத்து கொண்டனர். பின்னர் 1658 இல் இந்நகரம் டச்சுகாரர்கள் வசம் சென்றது. பின்னர் 1825 இல் இது ஆங்கிலேயர் கீழ் வந்தது.
1866 ல் இது ஒரு நகராட்சியாக நிறுவப்பட்டது மற்றும் ரோச் விக்டோரியா இந்நகரத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2008 ல் இது ஒரு மாநகராட்சியாக மாற்றப்பட்டது.

தூத்துக்குடியை சென்றடைவது எப்படி?
மாநிலத்தின் மற்ற எல்லா இடங்களில் இருந்தும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடி நகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்தில் விமான நிலையம் உள்ளது அது சென்னை விமான நிலையத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது.
இந்நகரின் ரயில் நிலையம் தென் இந்தியாவின்  பல நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்நகரில் இருந்து தமிழ் நாட்டின் மற்ற மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் பேருந்துகள் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்கின்றன.

தூத்துக்குடி வானிலை
தூத்துக்குடி காலநிலை வெப்பமண்டல கால நிலையாகும். எனவே கோடை காலம் மிகவும் சூடாக இருக்கும். இதன் காரணமாக கோடை காலத்தில் இந் நகரத்தில் பயணம் செய்வது மிகவும் கடினம். பருவமழை காலத்தில் தூத்துகுடி அடிக்கடி மழை பெறும் இது சுற்றுலா நடவடிக்கைகளுக்கு சற்று இடையூராக இருக்கும். எனவே இந்நகரத்தை சுற்றி பார்க்க சிறந்த நேரம் குளிர்காலமான அக்டோபர் முதல் மார்ச் இடைப்பட்ட மாதங்கள் தான். அப்போது வெப்ப நிலை இதமாகவும் சற்று தணிந்தும் காணப்படும்.



3. கன்னியாகுமரி - எழில்மிகு விடியல்களும்! அஸ்த்தமனங்களும்! (91 km - 1Hr, 25 min)

ஆங்கிலேயர்களால் 'கேப்  கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காச்தியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 km தொலைவில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரி புகைப்படங்கள் - விவேகானந்தர் பாறை 

கோயில்களும்! கடற்கரைகளும்!
கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள  கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.
விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான்   இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.
இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில் சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும்.
குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

கன்னியாகுமரியின் வரலாறு
சமயம் மற்றும் கலைகளுக்கு மட்டும் பேர் போனதல்ல கன்னியாகுமரி. சில ஆண்டு காலங்களாக தொழில் மற்றும் வர்த்தகத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.
கன்னியாகுமரி பாண்டியர்கள், சோழர்கள், நாயகர்கள், சேரர்கள் போன்ற பல அரச சம்ராஜ்யங்களால் ஆளப்பட்டவை. இங்குள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலையும் இந்த சாம்ராஜ்யங்களின் கலை மற்றும் நாகரிகத்துக்கு மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.
பின்நாளில் கன்னியாகுமரி வேணாடு அரசவம்சம் கீழ் ஆளப்பட்டது. அவ்வேளையில் கன்னியாகுமரியின் தலைநகரம், பத்மநாபபுரத்தில் இருந்து வந்தது.
1729-1758 இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வேணாட்டின் அரசரான அனிழம் திருநல் மார்த்தாண்ட வர்மாவால்  உருவாகப்பட்டது தான் திருவாங்கூர் அரசு. அதில் தெற்கு திருவாங்கூர் இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டதின் கீழ் அமையப்பெற்றிருக்கிறது.
பரவர் ராஜாங்கத்திற்கு பிறகு, இந்தியா 1947-ல் சுதந்திரம் அடையும் வரை, கன்னியாகுமரி வெள்ளையர்களின் துணையோடு திருவாங்கூர் சமஸ்தானத்தால் ஆளப்பட்டது. பின் 1947-ல், திருவாங்கூர் சமஸ்தானத்தின் தனி ஆளுமை  முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

மக்களும் பண்பாடும்
ஆயிரம் ஆண்டு காலமாக கலை, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் வரலாறு ஆகியவற்றுக்கு பேர்போன்றதாக விளங்குகிறது கன்னியாகுமரி. கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் கலவையாக கன்யாகுமரி விளங்குவதால் இங்கே கலவையான பண்பாடை பார்க்கக்கூடும்.
கன்னியாகுமரி பல புனித பயணம் மேற்கொள்பவர்களை கவர காரணம், பல நூற்றாண்டுகளாக இங்கே கொட்டிக்  கிடக்கும் வளமான பாரம்பரிய கலாச்சாரமே. ஏராளமான அழகிய கிறிஸ்துவ ஆலயங்கள், கோயில்கள், கற்சிலைகள் மற்றும் மதத்தூண்களை இங்கே கண்டு களிக்கலாம்.
பலதரப்பட்ட கலாச்சாராங்களால் ஆனவை தான் கன்னியாகுமரி என்பதற்கு இங்கே இருக்கும் கட்டுமானங்கள், கலைகள் மற்றும் சமையற்கலைகளே சான்று. கன்னியாகுமரியின் பாரம்பரிய நடனம் கதகளியை போல் புகழ் பெற்றது.
இங்கே கொண்டாடப்படும் திருவிழாக்களில்  முக்கியமானதாக கருதப்படுவது  கதோலிக் ஆலயங்களின் புனித ஆண்டு விழா, நவராத்திரி மற்றும் சித்ரா பௌர்ணமி.

கன்னியாகுமரியில் வாங்கக் கிடைக்கும் பொருட்கள்
கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கி மகிழ்வோருக்கு உகுந்த இடமல்ல கன்னியாகுமரி. இருப்பினும் இங்கே நம் மனம்  விரும்பியவர்களுக்கான நினைவுக் குறிப்புகள் வாங்க பல கடைகள் உண்டு.
பலவிதமான கடல் சிப்பிகளும், சிப்பிகளை வைத்து உண்டாக்கிய ஆபரணங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளும் கிடைக்கும். உள்ளூர் மக்களால் செய்து விற்கப்படும் கைவினைப் பொருட்களும் ஏராளமாக கிடைக்ககூடும்.
இந்த அழகிய பொருட்கள் பிரம்பு, மூங்கில் மற்றும் மரத்தினால் செய்யப்பட்டவைகள். இவைகளை வாங்கி நம் வீட்டை அலங்கரிக்கலாம் அல்லது உற்றார், உரிவினர் மற்றும் நண்பர்களுக்கு பரிசளிக்காம்.
பல விதமான கடல் சிப்பிகள் மற்றும் பல வண்ணக் கடல் மண்ணால் செய்யப்பட்ட சிறிய வகை ஆபரணங்களையும் வாங்கலாம். இண்டோ ப்ராடக்ட்ஸ், தமிழ்நாடு கோ-ஆப்டெக்ஸ் சேல்ஸ் எம்போரியம் மற்றும் தமிழ்நாடு கிராப்ட்ஸ்  அண்ட் பூம்புகார் ஆகியவை கன்னியாகுமரியிலுள்ள சில முக்கிய கடைகள்.
பலதரப்பட்ட ஆடை வகைகள் மற்றும் கைவினை பொருட்களை இங்கே வாங்கலாம். தெரு ஓரங்களில் விற்கப்படும் பொருட்களை மலிவான விலைக்கு வாங்கலாம்.

சாப்பாட்டு பிரியர்களுக்கு - கன்னியாகுமரியின் உணவு வழக்கம்
கன்னியாகுமரியில் புகழ் பெற்ற உணவு வகைகள் என்றால் அது கடல் உணவுகள் தான். காரசாரமான உணவுகள் இங்கே அதிகம் கிடைக்கும். தேங்காய் சேர்க்காத உணவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு, தேங்காயின் பயன்பாடு அதிகமாக இருக்கும்.
பெரும்பாலான உணவகத்தில் எல்லா வகையான தெற்கிந்திய உணவு வகைகளும் கிடைக்கும். இதில் இட்லி, வடை, தோசை மற்றும் ஊத்தாப்பம் அடங்கும். இது போக சில சைனீஸ், ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி வகை உணவகங்களும் இருக்கின்றன.

கன்னியாகுமரியை அடைய
கன்னியாகுமரியின் மிக அருகில் இருக்கும் விமான நிலையம் திருவனந்தபுரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி, ரயில் அல்லது பேருந்து மூலியமாக கன்னியாகுமரியை வந்தடையலாம். ஊருக்குள் சுற்றித்திறிய ஆட்டோ, தனியார் டாக்ஸி அல்லது உள்ளூர் பேருந்தை பயன்படுத்தலாம்.

கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல உகுந்த நேரம்
கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல உகுந்த நேரம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை. இந்த இடைப்பட்ட காலத்தில் இனிமையான பருவநிலையை அனுபவிக்கலாம். ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலானாது மழைக்காலம் என்பதால் இந்நேரத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.


4. சுசீந்திரம் – புனித யாத்திரை நகரம்! (95 km - 1Hr, 30 min)

தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் என்னும் புகழ்பெற்ற புனித நகரம் பக்தியும் சாந்தமும் பொருந்திய இடமாகும். இந்த நகரம் மிகவும் பிரசித்திபெற்ற யாத்திரை ஸ்தலமாக விளங்கக் காரணம், இங்கு அமைந்துள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் ஆகும். இந்நகரமே பழங்கால திருவாங்கூர் சமஸ்தான கோட்டையாக விளங்கியது.

சுசீந்திரம் புகைப்படங்கள் - தாணுமாலயன் கோயில்

இங்கு மார்கழித்திருவிழா மற்றும் சித்திரைத் திருவிழா ஆகியவை மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் அருகிலுள்ள மாநிலங்களிலிருந்து பலமக்கள் இவ்விழாக்களில் பங்கு கொள்கின்றனர்.
மார்கழித் திருவிழா டிசம்பர் அல்லது ஜனவரி மாதங்களில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இறுதி நாளான ஒன்பதாவது நாளன்று, இந்து சமய கடவுளரின் சிலைகள் தேர்களில் ஏற்றப்பட்டு நகர் முழுதும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
மற்றொரு திருவிழாவான சித்திரைத்திருவிழா ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கொண்டாடப்படுகின்றது. புகழ்பெற்ற தாணுமாலயன் ஆலயம் மட்டுமின்றி துவாரகைக் கிருஷ்ணர் கோவில், முன்னூற்றிநங்கைக் கோவில், சாஸ்தா ஆசிரமக் கோவில், கருப்பசாமி கோவில், தம்புரான் தம்புராட்டி கோவில், அக்கரைக் கோவில், அனுசூயா ஆத்ரி முனிவர் ஹோமகுண்டம், முத்தாரம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், பேரம்பலம் நடராஜர் கோவில் போன்ற பல கோவில்கள் இந்நகரத்தில் உள்ளன.
தாணுமாலயன் சுவாமி ஆலயத்தில், மூன்று இந்துக் கடவுள்கள்( சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மன்), ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருக்கும் விஷேசத்தாலேயே புனித யாத்திரை மேற்கொள்வோரை வெகுவாகக் கவரக் கூடிய இடமாக இது உள்ளது.
சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயன் சுவாமி ஆலயம் மற்றும் சுசீந்திரத்திற்கு அருகில் உள்ள புகழ்பெற்ற குளச்சல் என்ற நகரம் ஆகியவை மக்களைக் கவரக்கூடிய இடங்கள் ஆகும்.
சுசீந்திரத்திற்கு அருகாமையிலுள்ள விமான நிலையம், திருவனந்தபுரம் விமான நிலையம் ஆகும். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகாமையிலுள்ள இரயில் நிலையம் ஆகும். தென்னிந்திய நகரங்களிலிருந்து நேரடியாக பேருந்து மூலமும் சுசீந்திரம் செல்லலாம்.
இந்நகரத்தில் கோடைகாலங்களில் மட்டும் அதிக வெப்பநிலை காணப்படுகிறது. இதர காலங்களில் ஒரே மாதிரியான சீரான வெப்பநிலையே நிலவுகிறது.



5. ஸ்ரீவில்லிபுத்தூர் - தமிழகத்தின் கோவில் மாநகரம் (102 km - 1Hr, 40 min)

பால்கோவா என்று கூறியதுமே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிப்புத்தூர் தான். இது பால்கோவாவிற்கு மாத்திரம் அல்ல கோவிலுக்கும் பெயர்பெற்ற நகரமாக திகழ்கின்றது. தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரமான ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ் நாட்டில் உள்ள விருதுநகரில் இருக்கின்றது. இந்தியா முழுவதிலும் இக்கோவில்கள் புகழ்பெற்றனவாக இருக்கின்றன, தமிழக மக்கள் இவற்றை புனிதமானதாக மதிக்கின்றார்கள்.

ஸ்ரீபெரும்புதூர் புகைப்படங்கள் - ஆண்டாள் கோயில் - ராஜகோபுரம் 


வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட பதினோரு கலசங்கள் கொண்ட கோபுரமே இவ்விடத்தின் அடையாள சின்னம். ஆண்டு தோறும் நிகழும் சில மகாதிருவிழாக்களுக்கு இவ்விடம் புகழ்பெற்றது.
இவ்விடத்தின் தெய்வம் சக்திவாய்ந்தது என்றும் மக்கள் கருதுகின்றனர். இந்நகரத்தின் மக்கள் தொகை பின்வருமாறு 36411 ஆண்கள் 36772 பெண்கள், ஆக மொத்தம் 73183. மேலும் இங்கே 18911 மேற்பட்ட வீடுகளும் உடையது இந்நகரம்.

வரலாறு
வில்லியும் கண்டனும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டணத்தை ஆட்சிசெய்த மகாராணி மல்லியின் இரு புதல்வர்கள். காட்டிற்கு வேட்டையாட சென்ற போது கண்டன் ஒரு புலியினால் கொல்லப்பட்டார்.
தனது சகோதரனுக்கு நிகழ்ந்த துன்பத்தை கடவுள் காட்டிலே உறங்கிக்கொண்டு இருந்த வில்லிக்கு தெரியப்படுத்தினார். தெய்வீக ஆணையின்படி காட்டின் நடுவே வில்லி ஒரு அழகான இடத்தை உருவாக்கினார்.
அதனால் ஆரம்பத்தில் இது வில்லிப்புத்தூர் என்று அழைக்கப்பட்டது, பின்னர் ஸ்ரீ ஆண்டாள் தேவி இவ்வூரில் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று பெயர்மாற்றம் பெற்றது. தமிழில் இதை திருவில்லிப்புத்தூர் என்று அழைப்பர். பல தமிழ் சமய நூல்களை எழுதிய மகான்கள் இந்த பட்டணத்தின் பெயரை தங்கள் இலக்கிய படைப்புகளில் பயன்படுத்தி இருக்கின்றனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் அதை சுற்றுலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள்
இந்த கோவில் நகரத்தில் பல்வேறு அற்புதமான இடங்கள் இருக்கின்றன. 108 திவ்யதரிசனங்களில் ஒன்றான ஸ்ரீ ஆண்டாள் கோவில் மகா விஷ்ணுவின் வீடுகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இவ்விடத்தில் பிறந்த ஆள்வார்களில் பெரியாள்வாரும், ஆண்டாளும் தமிழ் வரலாற்றில் மிகவும் முக்கியமானவர்கள். ரங்கமன்னார் என்றும் அழைக்கப்படும் வடபத்ரசாயி கோவிலும் இங்கு உள்ளது. பெருவெள்ளத்தின் போது இந்த தெய்வம் குழந்தை வடிவத்தில், வடபத்ரம் என்று அழைக்கப்படும் ஆலைமர இலையில் ஓய்ந்திருக்கிறார்.
சித்தார் ஆண்டவரின் வீடு அமைந்துள்ள சதுரகிரி மலையும் இவ்விடத்தில் இருக்கின்றது. மடவார் வளாகம் வைத்தியநாதர் கோவிலில் ஆறு அடி நீல நடராஜர் திருவுருவமும் இருக்கின்றது. இவ்விடத்திற்கென்று ஒரு பழங்கால வரலாறும்  உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் கட்டழகர் கோவிலில் கள்ளழகர் கட்டழகர் வடிவத்தில் இருக்கிறார். இக்கோவில் மண்டுகா கோவிலில் இருக்கின்றது.
ஆண்டு முழுவதும் தீர்த்த தொட்டி நீர் இவ்விடத்தில் பாய்ந்து ஓடுகின்றது. இவ்விடத்தின் தேர் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. இத்திருவிழாவின் போது தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அறிந்துகொள்ள திரளான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.



திருநெல்வேலி வானிலை
மழைக்காலத்தை தொடர்ந்து வரும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரையான நாட்களில் வெப்பநிலை கணிசமாக குறைந்து, குறைந்தபட்சமாக 26 டிகிரியும் அதிகபட்சமாக 33 டிகிரியும் நிலவுகிறது. இக்காலமே திருநெல்வேலியைச் சுற்றிப் பார்ப்பதற்கு உகந்த காலமாகும். எனினும் எந்நேரத்தில் திருநெல்வேலிக்குச் செல்வதானாலும், ஒருவர், பருத்தி ஆடைகளை உடன் கொண்டு செல்வது சிறந்தது.

விமானம் மூலம்
திருநெல்வேலிக்கு மிக அருகில் உள்ள விமான நிலையம், மதுரை ஆகும். இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் கிடைக்கின்றன. மதுரைக்கு விமானம் மூலம் வந்து அங்கிருந்து சாலை வழியாகவோ, இரயில் வழியாகவோ திருநெல்வேலி வருவது உசிதம். திருநெல்வேலியிலிருந்து மதுரை 154 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சாலைகள் மிக அருமையாக பராமரிக்கப்படுவதால், இத்தூரத்தை சாலை வழியாக இரண்டரை மணிநேரத்தில் கடந்துவிடலாம்.

திருநெல்வேலி வரைபடம்





Share your comments here

Thanks

No comments:

Post a Comment