Flash News

Friends Tamil Chat

Search This Blog

Wednesday, 10 April 2013

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy


கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்


கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிடுவார்கள். ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருப்பார்கள். மேலும் இந்த நேரத்தில் பெரியர்வர்கள் என்ன சொன்னாலும், அதையே கேட்டு நடப்போம்.

குறிப்பாக கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் கீரைகள், கேரட், ப்ராக்கோலி, குடைமிளகாய், பீன்ஸ், பருப்புகளும் மற்றும் தயிர், ஓட்ஸ், நட்ஸ், முட்டை போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். என்ன பழங்கள் சாப்பிட வேண்டும்? என்று கேட்கலாம். ஏனெனில் பழங்களில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்க வேண்டும்.

எனவே இப்போது பழங்களில் எந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழங்களை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


அவகேடோ
ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்திருக்கும் பழங்களில் அவகேடோவும் ஒன்று. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.




மாம்பழம்
இது சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.



திராட்சை
நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால், திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ, மெட்டபாலிக் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.


'
எலுமிச்சை
எலுமிச்சையை ஜூஸ் போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கருவிற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், காலை அசௌகரியம், செரிமான பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.





பெர்ரி
பெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சூப்பர் உணவுகளில் ஒன்றாக உள்ளது. இத்தகைய பழத்தையும் கர்ப்பிணிகள் சாப்பிடுவது கருவிற்கு நல்லது. மேலும் குழந்தை நன்கு அழகாக பிறக்கும்.




வாழைப்பழம்
கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.




ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழம், கர்ப்பிணிகளுக்கு சாப்பிட மிகவும் பிடிக்கும். அதிலும் ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை அழகாக பிறக்கும்.




ஆப்பிள்
வைட்டமின்கள் அதிகம் உள்ள ஆப்பிளை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிசுவிற்கும் நல்லது.



லிச்சி
கோடையில் கிடைக்கும் லிச்சி பழமும் கர்ப்பிணிகள் சாப்பிடுவதற்கு ஏற்றதாகும்.





பேரிக்காய்
பேரிக்காயில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், கர்ப்பிணிகள் இந்த பழத்தையும் சாப்பிடலாம்.





பீச்
பீச் பழத்தில், குழந்தையின் உடலை ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்படுவது நல்லது.



10 Fruits To Eat During Pregnancy

When you are pregnant, you think twice before eating anything. All this attempt is to protect yourself and growing baby in the womb. During your first pregnancy, you will give everything a second thought and act more protective. Your elders will guide you on what to eat and what to avoid.

The pregnancy diet must include healthy and nutritious foods to meet the daily requirements. Healthy foods like spinach, broccoli, yogurt, red bell pepper, soy products lentils, beans, oatmeal, nuts, eggs and carrots are a must-have during pregnancy. What about fruits? Most of the women are worried about eating fruits as papaya and pineapple are considered to be dangerous during pregnancy. If you want to know which fruits you can have during pregnancy, here is a list. Check out the fruits you should include in your pregnancy diet for a healthy you and baby!

Avocados: It is one of the fruits that is rich in folic acid. Women need loads of folic acid during pregnancy so, have this fruit.

Mangoes: The summer fruit is not just delicious but healthy too. It aids digestion and contains Vitamin A and C that are healthy for pregnant women.

Grapes: Many women think it is not safe to eat grapes. However, grapes are rich in Vitamin A which stabilises metabolic rate. Grapes also have folate, potassium, phosphorous, magnesium and sodium which is good during pregnancy.

Sweet lime: It is one of the fruits that reduces nausea, morning sickness and common health problems during pregnancy. The citrus fruit is loaded with antioxidants that are good for the baby.

Lemon: Lemon is often used by women to aid digestion, get rid of nausea and morning sickness during pregnancy. Lemon cleanses the body and flushes out toxins.

Bananas: Constipation is a common health problem during pregnancy. For easy passage of stool and a clean system, have bananas.

Berries: Berries are rich in antioxidants and is considered as a superfood. You can include this fruit in your pregnancy diet.

Oranges: They are sweet and tangy; perfect flavours a pregnant woman wants. Moreover, the citrus fruit is loaded with vitamins and nutrients.

Apples: It is healthy and loaded with healthy vitamins that are good for the body.

Lychee: This summer fruit is definitely a safe fruit during pregnancy.




 

Peach: Peach contains Vitamins A and Vitamin B6 which is good for baby health, and hence good for pregnant ladies.

Thanks