Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday, 9 June 2015

ஈறுகளில் இரத்தம் கசிவு - தடுக்கும் வழிகள்

ஈறுகளில் இரத்தம் கசிகிறதா? இதோ அதைத் தடுக்க சில இயற்கை வைத்தியங்கள்

"உன் சிரிப்புக்கு கோடி ரூபாயை கொட்டலாம்" என என்றாவது உங்களை யாராவது புகழ்ந்துள்ளார்களா? இல்லை உங்கள் துணியை நீங்கள் பார்த்த முதல் பார்வையிலேயே உங்கள் புன்னகையால் வசீகரித்துள்ளீர்களா? அப்படியானால் அழகான உங்கள் புன்னகையை பாதுகாத்திட உங்கள் பற்களை பாதுகாப்பாக வைத்திடுங்கள். முத்துக்கள் போன்ற உங்கள் பற்களை பாதுகாக்கும் சிப்பி தான் உங்கள் ஈறு.

எந்த வகையான தொற்றுக்களிடம் இருந்தும் உங்கள் பற்களை காப்பது அது தான். அதனால் உங்கள் ஈறுகளுக்கு எந்த விதமான பாக்டீரியா தாக்குதலும் ஏற்படாமல் பாதுகாத்திட வேண்டும். எந்த மாதிரியான ஈறு பிரச்சனைகள் ஏற்படலாம்? பல் ஈறு அழற்சி, புழைகள் போன்ற பல பிரச்சனைகள் இருக்கிறது. உங்கள் ஈறுகளை ஈறு அழற்சியில் இருந்து எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

முதலில் பல் ஈறு அழற்சி என்றால் என்னவென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு மிதமான ஈறு பிரச்சனையே. ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே இதனை சரியாக கவனிக்க தவறி விட்டால், நாளடைவில் இது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். ஈறு அழற்சியால் உங்கள் ஈறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது எப்படி நமக்கு தெரிய வரும்? உங்களுக்கு தெரிய வர வாய்ப்பில்லை. ஆனால் சிவத்தல், எரிச்சல் அல்லது சுவாச துர்நாற்றம் இருந்தால் இந்த பிரச்சனை இருக்கக்கூடும்.

இவ்வகையான பிரச்சனை ஏன் ஏற்படுகிறது? புகைப்பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், பற்களை ஒழுக்காக துலக்காமல் போவது போன்ற காரணங்களால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படலாம். இந்த அழற்சியை குறைக்க சந்தையில் பல பொருட்கள் கிடைக்கிறது. ஆனாலும் கூட வீட்டு சிகிச்சை தான் இதற்கு சிறந்த தீர்வாகும். இதோ உங்களுக்காக சில டிப்ஸ்:


உப்பு 
உங்களுக்கு பல் ஈறு அழற்சி இருந்தால், நீங்கள் பயன்படுத்தும் வீட்டு சிகிச்சையில் இந்த எளிய பொருளுக்கு முக்கிய இடமுண்டு. ½ டீஸ்பூன் உப்பை தண்ணீரில் கலந்து, காலையிலும் மாலையிலும் உங்கள் வாயை கழுவவும். உப்பில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள், ஈறு வீக்கத்தை குறைக்கும்.


ஆயில் புல்லிங் 
ஏற்கனவே சொன்னதைப் போல், பல் ஈறு அழற்சிக்கு வீட்டு சிகிச்சைகளே சிறந்த நிவாரணத்தை அளிக்கும். ஈறு அழற்சியை குணப்படுத்தும் எந்த ஒரு டிப்ஸாக இருந்தாலும் சரி, பாரம்பரிய மிக்க இந்த ஆயுர்வேத சிகிச்சையைப் பற்றி குறிப்பிடாமல் இருக்காது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் பின்பற்றி வந்தால் தொல்லை இருக்காது.


மஞ்சள் 
ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சைகளில் மிக பயனுள்ள டிப்ஸில் ஒன்றாக விளங்குகிறது மஞ்சள். மஞ்சளில் கர்குமின் என்ற பொருள் உள்ளது. இது ஈறு வலி, வீக்கம் மற்றும் எரிச்சலை சிறப்பான முறையில் குறைக்கும். மஞ்சளை வைட்டமின் ஈ எண்ணெயுடன் கலந்து கொள்ளுங்கள். இதனை உங்கள் ஈறுகளின் மீது தடவவும். 15 நிமிடங்கள் கழித்து வாயை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளவும்.

பேக்கிங் சோடா 
பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான நீருடன் கலந்து பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை உங்கள் ஈறுகளின் மீது தடவி, 2 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள். இதனை வாரத்திற்கு 2-3 முறையாவது பயன்படுத்துங்கள். இதனால் பேக்கிங் சோடா வாயில் உள்ள அமிலத்தை செயலிழக்க செய்யும். மேலும் பல் பிரச்சனைகள் மற்றும் ஈறு நோய்கள் ஏற்படும் இடர்பாடுகள் குறையும்.


எலுமிச்சை ஜூஸ் 
ஈறு அழற்சிக்கான வீட்டு சிகிச்சை என்றால் அதில் கண்டிப்பாக எலுமிச்சையும் அடங்கியிருக்கும். இதில் வைட்டமின் சி இருப்பதால் தொற்றுகளில் இருந்து அது உங்களை பாதுகாக்கும். எலுமிச்சை சாற்றை தண்ணீருடன் கலந்து, பல் துலக்கிய பின், அதைக் கொண்டு வாயை கழுவுங்கள். ஈறுகளில் இரத்த கசிவு மற்றும் வலி ஆகிய பிரச்சனைகள் முன்பை காட்டிலும் குறையத் தொடங்கி விடும்.


கற்றாழை 
உங்கள் சருமத்திற்கு கற்றாழை அளிக்கும் பயன்களைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள். இது உங்கள் ஈறுகளுக்கும் நல்லது. கற்றாழையை சாறு எடுத்து, அதனை நேரடியாக தடவுங்கள். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவி விடுங்கள்.

கிராம்பு 
கிருமி நாசினி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களை கொண்டுள்ள கிராம்பும் கூட சிறந்த வீட்டு சிகிச்சையாக விளங்குகிறது. ஈறுகளில் வலியை உணரும் போது 2-3 கிராம்புகளை மெல்லுங்கள். வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள்.

கொய்யா இலை 
இது உங்களுக்கு தெரியுமா? ஆச்சரியமாக உள்ளது தானே? ஆம், ரசாயனம் கலந்துள்ள பேஸ்ட்டிற்கு பதிலாக நற்பதமான கொய்யா இலைகளைக் கொண்ட பேஸ்ட்டை பயன்படுத்தினால் நொடிப்பொழுதில் ஈறு அழற்சிகள் ஓடியே போய் விடும். முயற்சி செய்து பாருங்கள்.

டீ ட்ரீ எண்ணெய் 
இதன் மற்ற பயன்பாடுகள் போக, ஈறு அழற்சியை போக்கவும் இது பெரிதளவில் உதவி செய்கிறது. டீ-ட்ரீ எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பி பொருட்கள் ஈறுகளில் ஏற்பட்டுள்ள தொற்று மற்றும் எரிச்சலை குறைக்கும். ஆகவே இதனை முக்கியமான பொருளாக பயன்படுத்தப்பட்டுள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இல்லையென்றால் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்ட்டில் இதனை சில துளிகள் சேர்த்துக் கொள்ளவும்.

புதினா 
புதினா இலைகளை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து, பல் துலக்கும் முன்பு வாயை கழுவுங்கள். உணவருந்தும் இடைவேளைகளில் புதினா தேநீர் கூட பருகலாம். இது வாய்க்கு நல்ல மணத்தை அளித்து, சுவாச பிரச்சனையைத் தீர்க்கும்.


--
Thanks

For More Articles Visit

1 comment:

  1. Sell your k1dney in India Urgently for the sum of $500,000,00,(3 crore) and Also In Foreign currency.For more info Email: healthc976@ gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete