Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday, 5 March 2013

நீர்ச்சத்துள்ள உணவுகள் - Water Rich Foods

டயட்டில் சேர்க்க வேண்டிய நீர்ச்சத்துள்ள உணவுகள்!!!

ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். மேலும் தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் பருக வேண்டுமென்றும் கூறுவார்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடிப்பதால், உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் உள்ள அனைத்து டாக்ஸின்களான நச்சுப் பொருட்களும் வெளியேறி, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது சீராக செயல்படுவதோடு, உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பமும் தணியும்.

பொதுவாக உடலில் வறட்சி ஏற்பட்டால், நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். குறிப்பாக மலச்சிக்கல், குடலியக்க கோளாறு, பைல்ஸ், சிறுநீரக கற்கள் போன்றவை ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் அனைத்தும் உடலில் வராமல் இருப்பதற்கு, போதிய நீர்ச்சத்து இருக்க வேண்டும். அதற்கு தண்ணீர் மட்டும் குடிக்க வேண்டுமென்பதில்லை. ஒருசில நீர்ச்சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட்டாலும், உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தானது கிடைத்துவிடும்.

மேலும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களான தர்பூசணி, வெள்ளரிக்காய், முள்ளங்கி, தக்காளி, கேரட் போன்றவற்றில் நீர்ச்சத்து மட்டுமின்றி, வைட்டமின்கள் மற்றும் புரோட்டின்களும் அதிகம் நிறைந்துள்ளது. சரி, இப்போது நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போமா!!!



தக்காளி 
தக்காளியில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் லைகோபைன் போன்றவை அதிகம் இருப்பதோடு, 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. எனவே அதனை சாப்பிட்டால், நீர்ச்சத்து கிடைப்பதோடு, உடல் எடையும் குறையும். மேலும் இதனை பச்சையாக சாப்பிட்டால், இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை பெறலாம்.
கேரட் 
கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிகம் இருப்பதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களும் அதிமம் உள்ளது. இவை உடலுக்கு மட்டுமன்றி, சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு டம்ளர் கேர்ட் ஜூஸ் குடித்தால், உடல் வறட்சியை நீங்குவதோடு, சருமமும் பொலிவோடு மின்னும்.
முள்ளங்கி 
முள்ளங்கி சாப்பிட்டால், உடலில் இருந்து வெளியேறிய நீரை மீண்டும் பெறலாம். மேலும் இவை எளிதில் செரிமானமடைவதால், அஜீரணக் கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். குறிப்பாக இதனை சாப்பிட்டால், வயிறு நிறைவதோடு, உடல் எடை குறையவும் உதவியாக இருக்கும்.
வெள்ளரிக்காய் 
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவருக்கும தெரிந்த விஷயமே. அதிலும் கோடைகாலத்தில் அதிகம் கிடைப்பதால், தவறாமல் வாங்கி சாப்பிட்டு, உடல் வறட்சியோடு, மலச்சிக்கலையும் தடுத்துவிடுங்கள்.

பீச் 
பீச் பழத்திலும் நீர்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதோடு, வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா-கரோட்டினும் உள்ளது. எனவே இதனையும் மறக்காமல் சாப்பிடுங்கள்.
ஆரஞ்சு 
சிட்ரஸ் பழத்தில் ஒன்றான ஆரஞ்சில் வைட்டமின் சி மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.
அன்னாசி
 நார்ச்சத்து அதிகம் உள்ள அன்னாசியில், நீர்ச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆனால் இதனை கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. இல்லையெனில் கருச்சிதைவு அல்லது குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

தர்பூசணி 
நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் பிரபலமான உணவுப் பொருள் தான் தர்பூசணி. அதிலும் இந்த பழம் கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்த உணவுப் பொருளில் வைட்டமின் ஏ, பி, பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் தையமின் சத்துக்களும் அதிகம் நிறைந்துள்ளது.
ஸ்ட்ராபெர்ரி 
பெர்ரிப் பழங்களில் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்தில் உள்ள ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன், நீர்ச்சத்தும் அதிக அளவில் உள்ளது.
திராட்சை 
இந்த சிறிய பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இந்த பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் வறட்சி நீங்குவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்படும்.

Water Rich Foods To Include In Diet

It is always recommended that we drink lots of water to stay hydrated and healthy. Drinking lots of water not only keeps you hydrated but also helps cleanse the system. Water flushes out toxins from the body and cleanses it properly. Water helps regulate body's metabolism and balances body temperature.

Dehydration can lead to many health problems like constipation, improper bowel movements, piles, kidney stones etc. There are few foods that can lead to dehydration. However, including some water-rich foods can keep you hydrated and also help you overcome health problems.

There are many water-rich fruits and vegetables that are not only rich in water content but are also packed with vitamins and proteins. Water-rich foods like watermelon, cucumber, radishes, tomatoes, carrots etc can be included in your diet. Check out the list of water-rich foods that are healthy and nutritious.

Tomatoes Rich in Vitamin C, potassium and lycopine, tomatoes consist around 90% water. Tomatoes also aid weight loss so, you can have the antioxidant rich juicy tomatoes raw.

Carrots Carrots are packed with antioxidants, vitamins and proteins that are not only good for your health but also for the skin and hair. Having a glass of carrot juice helps get rid of dehydration and skin problems naturally.

Radish Having radish in your diet helps retain water in the body. Radish is easy to digest so it helps get rid of digestive problems. Moreover, radish is filling and controls hunger thus aids weight loss.

Cucumber Also known as Cucumis sativus, cucumber is another water-rich food that can help get rid of dehydration and constipation.

Peaches This water-rich fruit is nutritious and loaded with Vitamin A, C and beta-carotene. The antioxidants in peaches removes free radicals from the body that can be harmful for your health.

Oranges The citrus fruit is also rich in water. You can have orange juice or add few slices of oranges in your diet to stay hydrated and healthy.

Pineapple The water-soluble antioxidants and fiber in this water-rich fruit makes it a must-have! Pregnant women should be careful as pineapple can lead to miscarriage or early labour.

Watermelon This is one of the most popular water-rich foods. On a hot summer day, you can have a bowl of watermelon slices to stay hydrated and healthy. Watermelons are rich in Vitamin A, B, potassium, magnesium and thiamin.

Strawberries Berries especially strawberries are another water-rich foods that are rich in vitamins, proteins and nutrients.

Grapes The small and juicy grapes are rich in water content. Have them in your diet to ease digestive problems.

If you know more water rich foods please share with us in Friends Tamil Chat Room

Thanks

Sunday, 3 March 2013

மெழுகுவர்த்தி அலங்காரங்கள் - Candle Display Ideas

வீட்டை ஒளிமயமாக்கும் மெழுகுவர்த்தி அலங்காரங்கள்!!!

முக்கிய விசேஷத்தின் போது வீடு முழுவதும் மெழுகுவர்த்திகளை ஏற்றிப்பார்த்தால், அதனுடைய ஒளி வெள்ளத்தில் வீடே சொர்க்கலோகமாக தெரியும். மேலும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் ஒரு சுவாரஸ்யமான உபகரணமாக மெழுகுவர்த்திகள் விளங்குகின்றன. மலிவு, மணம் மற்றும் கவரும் தன்மை ஆகியவற்றால் ஒரு அறையில் இதமான கதகதப்பை இவை தருகின்றன. மதச்சடங்குகள் திருமண விழாக்கள், இரவு விருந்துகள் என அனைத்திலும் மெழுகுவர்த்தி அலங்காரத்தை காணலாம். அலுவலகத்தில் வேலை பளுவால் சோர்ந்து வீட்டிற்கு வருகிறீர்களா? அப்போது வீட்டிற்கு வந்தவுடன் சில மணம் மிகுந்த மெழுகுவர்த்திகளை ஏற்றிப் பார்த்தால், மன அழுத்தம் குறைவதை நிச்சயம் உணரலாம்.

மெழுகுவர்த்திகளை முக்கிய நிகழ்ச்சிகளில் ஏற்றும் போது, அது அங்குள்ள சூழ்நிலையையே மாற்றும். மேலும் விருந்தினர்களிடையே ஆச்சர்யமான உணர்வை உருவாக்கும். மெழுகுவர்த்திகளால் வீட்டை மிக அழகாக அலங்கரிக்க முடியும் என்பது கூட பலருக்கு தெரியாது. வழக்கமாக, பலர் மெழுகுவர்த்தியை ஒரு மேஜையின் நடுவில் வைப்பர். ஆனால் மெழுகுவர்த்திகளை பலவழிகளில் அலங்கரித்து, பல விதமாக பார்வைக்கு வைக்கலாம். இது பார்ப்பவர்களையும் மகிழ்வித்து, நமக்கும் பாராட்டை பெற்றுத் தரும். இனி மெழுகுவர்த்திகளை எவ்விதங்களில் அலங்கரித்து, எவ்வாறு காட்சிக்கு வைக்கலாம் என்பதை பார்க்கலாம்.


மிதக்கும் மெழுகுவர்த்திகள் 
ஒரு நல்ல படுக்கை அறையை புதியதாகவும், கவர்ச்சியாகவும் மாற்ற விரும்பினால், ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சிறிய மெழுகுவர்த்திகளை மிதக்க விடலாம் அல்லது வீட்டில் நீச்சல் குளம் இருந்தால், அதிலும் இவ்வாறு செய்யலாம். மேலும் ஏதாவது வித்தியாசமாகச் செய்ய விரும்பினால், மெழுகுவர்த்தியை ஒரு சிறு கிண்ணத்தில் வைத்து, அதனைச் சுற்றி செயற்கை பூக்களை பல வண்ணங்களில் வைக்கலாம். இதனால் அந்த ஒளிகளுக்கிடையே அவை புதுமையாக தெரியும். இது விருந்தினரை நிச்சயம் ஈர்க்கும்.


அசாதாரண மெழுகுவர்த்திகள் 
உருளை வடிவமைப்பை தவிர வேறு வடிவங்களிலும் மெழுகுவர்த்திகள் கிடைக்கின்றன. புது வகையாக ரீசார்ஜ் மெழுகுவர்த்திகளும் தற்போது கிடைக்கின்றன. பாரம்பரியமான மெழுகுவர்த்திகளை விட இவை நீடித்து எரியும்.

வாசனை மெழுகுவர்த்திகள் 
வாசனை மெழுகுவர்த்திகள் தற்போது மிகப் பிரபலமாக உள்ளன. பலவித வாசனை கொண்ட மெழுகுவர்த்திகளை ஏற்றி வைப்பது ஒரு தனித் தன்மையை காட்டும். உதாரணமாக, லாவண்டர் மற்றும் வென்னிலா வாசனை உடையவை, ஒரு இதமான, அமைதியான சூழலை உருவாக்கும்.

பசுமைமாறா மெழுகுவர்த்திகள் 
ஒரு பாத்திரத்தில் மெழுகுவர்த்தியை வைத்து, அதனைச் சுற்றி பசுமையான பச்சை நிற சிறு சிறு இலைகள் அல்லது ஏதேனும் பூக்களை வைக்க, அது கண்ணுக்கினிய காட்சியாக அமையும்.

தொங்கும் மெழுகுவர்த்திகள் 
மெழுகுவர்த்திகளை கம்பிகள் மூலம் இணைத்து தொங்கவிடலாம். தொங்கும் மெழுகுவர்த்திகளுக்கிடையே சிறிய செயற்கை பூக்கள், மணிவகைகள் போன்றவற்றை வைக்கலாம்.

புத்தக அலமாரியில் மெழுகுவர்த்திகள் 
புத்தக அலமாரியை வெறுமையானதாக பார்க்க விரும்பாவிட்டால், பல வண்ணங்களில் உள்ள பெரிய மெழுகுவர்த்திகளை கண்ணாடி பாட்டிலின் உள்ளே வைத்து ஏற்றி வைக்கலாம். இதனால் அவற்றின் வண்ணங்கள் புத்தகங்கள் மீது பட்டு, புத்தகத்தின் தோற்றத்தை மெருகேற்றும்.



Glorious home decorations and candles!

During the ceremony errippart candles throughout the house, the house corkkalokam know its flood of light. And in many cases with the use of candles are an interesting instrument. Cheap, pleasant smell and attraction in a room and they provide katakatappai. Wedding ceremonies, rituals, and all night parties can make candles. Come home tired from work load in the office? I came home with some of the most fragrant candle, if you feel stress reduction.

When exporting the candles in the main event, where it converts culnilaiyaiye. In between guests and create a sense of surprise. Candles will be able to decorate the house is very beautiful, not too many. Usually, upon which many candles in the middle of a table. But candles and decorated in many ways, there will be many different ways. This as a happy, we would praise. Candles no longer on the deck, and see how that can be displayed.


Floating Candles
Room with a good bed and a fresh, sexy, and if you want to change, and leaving a small role in the small candles float on the water in the swimming pool, if possible, or at home, I can do this. And if you want to do something differently, in a small bowl with candles, artificial flowers around it can be in many colors. It's strange that they know olikalukkitaiye. This is sure to attract guests.



Extraordinary Candles
Candles are available in shapes other than cylindrical design. Recharge candles now available for the new category. These durable than traditional candles burning.


Aromatic Candles
Aromatic candles are the most popular. With various aromatic candle to show a single character. For example, Lavender and Vanilla scent possessing a pleasant, quiet environment to create.


Evergreen candles
In a pan with candles, flowers or any of the surrounding lush green leaves make a small, scenic view, it would be.


Hanging Candles
Tonkavitalam candles and connect the wires. Hanging candles in between small artificial flowers, etc. can manivakaikal.


Candles on the bookshelf
If you do not want to see verumaiyanat bookshelves, large candles in various colors can be lit inside of the glass bottle. The colors of the silk on the books, the book's appearance refinement.






Thanks