தீவிரவாதத்தை கட்டுப்படுத்த முடியுமா? சில சாதனங்கள்
தீவிரவாதம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதே தவிர குறையுமா என்றால், கேள்விக்குறியே மிச்சமிருக்கிறது. 2 தினங்களுக்கு முன் நடந்த ஹைதராபாத் குண்டுவெடிப்பும் ஒரு சாட்சி.
பிணங்கள் தின்னும் இந்த தீவிரவாதத்திற்கும் நாச வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி என்பதே கிடையாதா? ரத்தம் குடிக்க ஏன் இப்படித் திரிகிறார்கள்? அப்பாவிமக்களின் உயிர்கள் பறிப்பது பாவாமாக இவர்களுக்கு தோணாதா? என்றெல்லாம் ஆத்திரம் வருகிறது.
இம்மாதிரி உயிர் பறிப்பு செய்யும் தீவிரவாதத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் சில சாதனங்கள் உள்ளன. அவற்றை பற்றிய தகவல்கள் தான் பின்வருபவை.
ஹன்டர் கில்லர்:
இதுவொரு அதிநவீன போர் விமானம். இதை அமெரிக்கர்கள் UAV என அழைக்கிறார்கள். அதாவது, பெயர்தெரியாத உயரத்திலிருந்து தாக்கும் சாதனம் என்கிறார்கள். இந்த விமானத்திற்கு சில முக்கிய தீவிரவாதிகளை தீவிரவாத தலைவர்களை போட்டுத்தள்ளியத்தில் பங்கு அதிகமாம். இதில் ஏற்கெனவே ப்ரோக்ராம் செய்துகொள்ளலாம். இது சுமார் 50,000 அடி உயரத்திலிருந்து கூட இலக்கை சரியாக தாக்குமாம். நாமும்[இந்தியாவும்] இம்மாதிரி பயன்படுத்தலாம்.
வேவுபார்க்கும் ரோபோட்:
இதுவொரு பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் ரோபோட். இது சிறப்பாக உளவு பார்ப்பதுடன் இலக்கை சரியாக தாக்கியழிக்குமாம். இந்த சாதனத்தால் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கும், மனிதனால் செல்லமுடியாத பகுதிக்கும் பயணிக்கமுடியும். இது தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் சிறப்பம்சமும் பொருந்தியது.
ராணுவ செயற்கைக்கோள்:
இதை மிலிட்ரி கிரேடு ஸ்பை சாட்டிலைட் என்றழைக்கிறார்கள். இதன் மூலமாக நொடிக்குநொடி குறிப்பிட்ட இடத்தை என்ன நடக்கிறது என்பதை கண்காணிக்க முடியும். கூகுளின் மேப்ஸ் சேவைபோன்றதுதான். ஆனால் அதைவிட லட்சம் மடங்கு வேகமாகவும், துல்லியமாகவும் காட்சிகளை நேரடியாக படம்பிடித்துத் தரக்கூடியது.
டிபென்ஸ் ரவுண்ட்ஸ்:
இந்த சிறந்த தோட்டாவை உலகத்திலேயே ஒரே ஒரு ராணுவம் தான் பயன்படுத்த முடியுமாம். கண்டிப்பாக அந்த ராணுவம் அமெரிக்கர்களுடையதுதான். இதை லேதல் என்னும் தோட்டா தயாரிப்பு தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கியிருக்கிறார்கள்.
குண்டுகளை செயலிழக்கவைக்கும் ரோபோ:
இது குண்டுகளை செயலிழக்கவைக்கும் ரோபோவாகும். இதனால் கண்ணிவெடிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். இது எப்பேர்ப்பட்ட திறமைவாய்ந்த வெடிகுண்டையும் செயலிழக்கச்செய்யுமாம்.
Thanks