பக்கல் ஏரி, வாரங்கல்
வாரங்கல் நகருக்கு அருகிலேயே உள்ள பக்கல் சரணாலயத்தில் இந்த பக்கால் ஏரி அமைந்துள்ளது. இது மனித முயற்சியில் உருவான செயற்கை ஏரி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான 30 கி.மீ பரப்பளவை உள்ளடக்கிய இந்த ஏரி 1213ம் ஆண்டில் காகதீய வம்ச அரசரான கணபதிதேவ் என்பவரின் ஆட்சியில் வெட்டப்பட்டுள்ளது. மயக்க வைக்கும் இயற்கை காட்சிகள் இந்த ஏரிப்பகுதியில் பயணிகளை வரவேற்கின்றன.
காணும் இடமெல்லாம் பசுமையான ரம்மியம் இந்த ஏரியை சுற்றிலும் நிரம்பி வழிகிறது. மனதை லேசாக்கும் அனுபவத்தை தரும் இந்த இடத்திலிருந்து பயணிகளுக்கு நகரவே மனம் வருவதில்லை.
கன்னிமை மாறாத மலைப்பகுதிகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி போன்றவை இந்த ஏரியின் பின்னணி மற்றும் சூழலில் காட்சியளிப்பதே இதற்கு காரணம். வருடமுழுதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பிக்னிக் பயணமாக இந்த ஏரி ஸ்தலத்துக்கு விஜயம் செய்கின்றனர்.
இந்த பக்கல் ஏரியின் கரைகளை ஒட்டியே பக்கல் சரணாலயம் அமைந்திருக்கிறது. இதில் பலவிதமான தாவரவகைகள் மற்றும் உயிரினவகைகள் காணப்படுகின்றன. சிறுத்தைகள், உடும்புபல்லிகள், முதலைகள், கரடிகள், மலைப்பாம்பு மற்றும் ஓநாய்கள் போன்ற விலங்குகள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன. மொத்தமாக 839 ச.கி.மீ பரப்பளவை இந்த சரணாலயம் உள்ளடக்கியுள்ளது.
வரலாற்றின் பின்பக்கங்களின் ஊடே ஒரு பயணம்
12ம் நூற்றாண்டிலிருந்து 14ம் நூற்றாண்டு வரை இந்த வாரங்கல் பகுதி காகதீய ராஜ வம்சத்தினரால் ஆளப்பட்டிருக்கிறது. இந்த வம்சத்தை சேர்ந்த பிரதாப ருத்ரா என்ற மன்னரை வீழ்த்தி தோற்றுவிக்கப்பட்ட முசுன்றி நாயக்கர்களின் ஆட்சி ஒரு 50 ஆண்டு காலத்துக்கு நடந்திருக்கிறது.
பின்னர் நாயக்க தளபதிகளிடையே ஒற்றுமையில்லாத காரணத்தினாலல் இந்த ராஜாங்கம் வம்சச்சண்டையினால் முடிந்து போனது. அவர்களுக்கு அடுத்ததாக பாமனி அரசர்கள் வாரங்கல் பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் 1687ம் ஆண்டில் முகலாயப்பேரரசர் ஔரங்கசிப்'பால் கோல்கொண்டா கோட்டை கைப்பற்றப்பட்டபோது அதன் அங்கமாக இருந்த வாரங்கல் நகரமும் முகலாயர் வசம் சென்று 1724ம் ஆண்டுவரை அவர்களின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்துள்ளது.
1724ம் ஆண்டுக்கு ஹைதராபாத் சமஸ்தான ராஜ்ஜியம் என்ற ஒன்று உருவானபோது அதில் வாரங்கல் நகரமாவட்டமும், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் ஒருசில பகுதிகளும் அடங்கியிருந்தன.
பின்னர் இந்திய சுதந்திரத்திற்கு பின் 1948ம் ஆண்டில் ஹைதராபாத் தவிர்த்த மற்ற பகுதிகள் தனி மாநிலமாகி, இறுதியாக 1956ம் ஆண்டுஹைதராபாத் நிஜாம் சமஸ்தானம் உள்ளிட்ட தெலுங்கு பேசும் பகுதிகள் யாவும் ஒன்றிணைக்கப்பட்டு இன்றைக்குள்ள பரந்த ஆந்திரப்பிரதேச மாநிலம் உருவாக்கப்பட்டது.
12ம் நூற்றாண்டிற்கு முற்பகுதியில் இந்த வாரங்கல் நகரம் 'காகதீபுரம்' என்று அழைக்கப்பட்டதற்கான கல்வெட்டு குறிப்புகள் கிடைத்துள்ளன. அதாவது காகதீய ராஜ்ஜியத்தின் தலைநகரம் என்று குறிப்பிடும்படியாக இந்த பெயர் விளங்கியிருக்கிறது.
வாரங்கல் நகரத்திலும், அதைச்சுற்றியும் உள்ள விசேஷ அம்சங்கள்
வரலாற்று முக்கியத்துவம், பலவகையான வரலாற்றுச்சின்னங்கள், காட்டுயிர் சரணாலயங்கள் போன்றவற்றுக்காக இந்த வாரங்கல் நகரமானது வருடந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளால் விஜயம் செய்யப்படுகிறது.
பக்கால் ஏரி, வாரங்கல் கோட்டை, ஆயிரங்கால் மண்டபக்கோயில் மற்றும் பாறைத்தோட்டம் போன்றவை வாரங்கல் மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்களாகும்.
பத்மாக்ஷி கோயில் மற்றும் பத்ரகாளி கோயில் போன்ற ஆன்மீக திருத்தலங்களும் இங்கு பக்தி யாத்ரீகர்களை கவர்ந்து இழுக்கின்றன. வாரங்கல் பிளானட்டேரியம் மற்றும் ஏரிகள், பூங்காங்கள் போன்ற அம்சங்களும் இங்கு சுற்றுலா பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
சம்மக்கா சாரக்கா ஜாத்ரா அல்லது சம்மக்கா சாரளம்மா ஜாத்ரா என்றழைக்கப்படும் எனப்படும் உள்ளூர் சடங்குத்திருவிழா ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வாரங்கல் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.
கும்ப மேளாவுக்கு அடுத்தபடியான பெரிய சடங்குத்திருவிழாவாக கருதப்படும் இதில் சுமார் 80 லட்சம் முதல் 1 கோடி மக்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
காகதீய ராஜவம்ச ஆட்சியின்போது ஒரு கொடுமையான சட்டத்தை எதிர்த்து கலகம் செய்த 'சம்மக்கா – சாரளம்மா' என்ற தாயும்-மகளுமான இரண்டு புரட்சிப்பெண்களின் ஞாபகார்த்த சடங்காக இந்த திருவிழா காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே கும்ப மேளாவிற்கு அடுத்தப்படியான பெரிய திருவிழாக்கூட்டமாக இது பிரசித்தி பெற்றுள்ளது.
பலவிதமான மலர்களால் பெண் தெய்வங்களுக்கு பூஜை செய்து விசேஷ ஐதீகச்சடங்குகளில் பெண்கள் மட்டுமே ஈடுபடும் 'பத்துகம்மா' எனும் சடங்குப்பண்டிகையும் இங்கு கொண்டாடப்படுகிறது.
மஹாளய அமாவாசையில் துவங்கி துர்க்காஷ்டமிக்கு இரண்டு நாள் முன்னதாக இது முடிவடைகிறது. பாரம்பரிய உடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து பெண்கள் இந்த சடங்குகளில் ஈடுபடுகின்றனர்
பயண வசதிகள் மற்றும் இதர தகவல்கள்
அரசுப்பேருந்து சேவை நகரம் முழுவதுமே இயக்கப்படுவதால் இது பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு விஜயம் செய்து ரசிக்க வசதியாக உள்ளது. ஆட்டோ வசதிகளும் இந்த நகரத்தில் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து அம்சங்களுக்கு எந்த குறையுமில்லை. இருப்பினும் மீட்டர் கட்டண முறை இல்லாததால் முன்கூட்டியே கட்டணங்களை பேசியபின் ஆட்டோ வாடகைக்கு எடுப்பது அவசியம்.
சுற்றுலாப்பயணிகள் அதிக விஜயம் செய்யும் இடம் என்பதால் தங்கிமிடங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளவில்லை என்றால் சிரமத்துக்குள்ளாக நேரிடும். 750 ரூ வாடகையில் பட்ஜெட் விடுதிகள் இங்கு கிடைக்கின்றன.
எனினும் கோடைக்காலத்தில் வெயில் கொளுத்தும் என்பதால் இந்த சாதாரண விடுதிகளில் தங்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குளிர்வசதியுடன் கூடிய சொகுசு அறைகள் 1200 ரூபாய் வாடகையில் வாரங்கல் கோட்டை ஸ்தலத்துக்கு அருகில் கிடைக்கக்கூடும்.
நாளொன்றுக்கு 3000 முதல் 4000 ரூபாய் வரை செலவழிக்கூடிய சக்தி உடையவர்கள் இங்குள்ள ரிசார்ட் விடுதிகளில் தங்கலாம். அறைகளில் இன்டர்நெட் வசதி, நீச்சல் குளம், பன்னாட்டு பாணி உணவுக்கூடம் போன்ற வசதிகள் இது போன்ற ரிசார்ட் விடுதிகளில் வழங்கப்படுகின்றன.
வாரங்கல் ஈர்க்கும் இடங்கள்
ஆயிரம் தூண் கோயில், வாரங்கல்
வாரங்கல் கோட்டை, வாரங்கல்
கோவிந்த ராஜுல குட்டா, வாரங்கல்
ராக் கார்டன், வாரங்கல்
வாரங்கல் ரயில் நிலையம் நாட்டின் பல திசைகளிலிருந்தும் இயக்கப்படும் ரயில் சேவைகளை கொண்ட முக்கிய நிலையமாக அமைந்துள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், மற்றும் சென்னை போன்ற நகரங்களை இணைக்கும் பல ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.
இங்கிருந்து ரயில்கள் பெங்களூர் வரை வாரங்கல்
ரயிலின் பெயர் | புறப்பாடு | வருகை | ரயில் பயண நாட்கள் |
---|---|---|---|
Sanghamitra exp (12295) | 9:00 AM Bangalore city jn(SBC) | 1:11 AM Warangal (WL) | All days |
Bagmati express (12578) | 10:10 AM Bangalore city jn(SBC) | 1:55 AM Warangal (WL) | SAT |
உண்மைகள்
மாநிலம்: ஆந்திர பிரதேசம்
பிரபலம்: புலிகாட் ஏரி, ஆயிரம் தூண் கோயில், பத்மாக்ஷி கோயில்
மொழி : தெலுங்கு
சிறந்த சீசன்:செப்டம்பர்-மார்ச்
உயரம்: 302 மீட்டர்
எஸ்டிடி கோடு: 870
பின்கோடு: 50600x
Pakhal Lake, Warangal
Must Visit
Pakhal Lake is an artificial (man-made) lake situated in the Pakhal sanctuary close to Warangal City. Believed to have been constructed in 1213 A.D by the Kakatiya King Ganapathidev, the lake encompasses an area of 30 kilometers squared. A breathtaking, panoramic view coupled with the prospect of spending hours in isolated bliss make Pakhal Lake an extremely popular retreat for tourists. It is located in the midst of pristine hilly terrain and dense, lush forests and serves as a picnic spot for thousands of people around the year.
The Pakhal Wildlife Sanctuary runs around the lake's shorelines, and a variety of flora and fauna can be seen here. Panthers, monitor lizards, crocodiles, sloth bears, pythons and wolves are some of the wildlife that one can feast their eyes upon at the sanctuary. All in all, it covers an area of 839 kilometers squared.
Destinations | State | Theme | Distance | Noted For |
---|---|---|---|---|
Khammam | Andhra Pradesh | City | 122 km - 2 Hrs, 15 min | Fort City, Narsimhadri Te... More |
Pochampally | Andhra Pradesh | City | 126 km - 1 Hr, 55 min | Silk, Sight Seeing, Histo... More |
Hyderabad | Andhra Pradesh | City, Heritage | 144 km - 2 Hrs, 15 min | Forts, Heritage Site, His... More |
Nalgonda | Andhra Pradesh | City | 168 km - 2 Hrs, 40 min | Buddhist Sites, Forts, Te... More |
Bhadrachalam | Andhra Pradesh | Pilgrimage | 179 km - 3 Hrs, 20 min | Pilgrim, Myth, Temples, S... More |
Nizamabad | Andhra Pradesh | City | 217 km - 3 Hrs, 25 min | Forts,Temples,Dams,Histor... More |
Nagarjuna Sagar | Andhra Pradesh | Pilgrimage | 230 km - 3 Hrs, 40 min | Buddhist Pilgrim, History... More |
Vijayawada | Andhra Pradesh | City | 286 km - 4 Hrs, 20 min | Festivals,Kanka Durga Tem... More |
Amaravathi | Andhra Pradesh | Pilgrimage | 315 km - 5 Hrs, 5 min | Amaravathi Stupa , Religi... More |
Guntur | Andhra Pradesh | City | 317 km - 4 Hrs, 55 min | History, Heritage Site, F... More |
Rajahmundry | Andhra Pradesh | City | 329 km - 5 Hrs, 55 min | Culture, History, Aryabha... More |
Srisailam | Andhra Pradesh | Pilgrimage | 355 km - 5 Hrs, 45 min | Pilgrim, Bhramaramba Mall... More |
Kurnool | Andhra Pradesh | City | 373 km - 5 Hrs, 10 min | History, Temples, Shrines... More |
Mantralayam | Andhra Pradesh | Pilgrimage | 393 km - 5 Hrs, 50 min | Holy Town, Temples |
Thanks