Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday, 22 February 2013

குழந்தைகளை சாப்பிட வைக்க - Child to eat healthy

குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே நோய்கள் வந்துவிடுகின்றன. அதற்கு போதிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் தான் காரணம். மேலும் இந்த மாதிரியான பழக்கவழக்கங்கள் வருவதற்கு மற்றொரு பெரும் காரணம், இந்த பழக்கவழக்கங்கள் சிறுவயதிலிருந்து பழகியது. எனவே அத்தகைய ஆரோக்கியமற்ற பழக்கத்தை குழந்தைகள் பின்பற்றாமல் இருப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது.

ஏனெனில் இன்றைய நவீன உலகில் மார்டன் என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு சென்று ஜங்க உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு அதன் சுவையானது நாவில் ஒட்டிக் கொண்டு, அதனையே அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவர். பின் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால் கூட, அதை விரும்பி சாப்பிடாமல், அடம்பிடித்து தவிர்த்து விடுவர். எனவே குழந்தைகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை கொடுத்து, அத்துடன் நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது.

சரி, இப்போது குழந்தைகள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நிபுணர்கள் ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களது குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

போர் அடிக்க கூடாது 
குழந்தைகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு போர் அடிக்காத வகையில், அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை கவனித்துக் கொண்டே சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

சரியான நேரம் 
குழந்தைகளுக்கு எப்போதும் சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 6-7 முறையாவது சரியான இடைவெளியில் சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும்.



ஒரே உணவு 
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதிகமான வெரைட்டியாக உணவுகளை கொடுக்க வேண்டாம். உண்ணும் நேரம் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் போது, நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும்

ஜங்க் உணவுகள் 
உணவுகளை கொடுக்கும் போது, உப்பு அதிகம் உள்ள உணவையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ அல்லது ஜங்க் உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

பானங்கள் குடிப்பதற்கு 
ஏதேனும் ஜூஸ் கேட்டால், அப்போது கார்போனேட்டட் பானங்களை கொடுப்பதற்கு பதிலாக, பழங்களால் செய்யப்பட்ட ஜூஸ் கொடுப்பது நல்லது.

ஆரோக்கியமான உணவுகள் 
குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் சிப்ஸை தவிர்த்து, பழங்களை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடுவர்.

குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும் 
பெற்றோர்கள் பழக்கம் தான் குழந்தைகளுக்கு வரும். எனவே குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டால், அவர்களும் மறுக்காமல் சாப்பிடுவர்.

உணவுகள் கொடுப்பதை பொறுத்தது 
எப்போது உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும், அவர்களுக்கு ஆரோக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளது மனம் மற்றதை நாடாமல், இருப்பதை விரும்பி சாப்பிடச் செய்யும்.

Is Your Kid Eating Healthy Festival Food?

Festivals and kids are very compatible with other when it comes to having fun. Kids love all the hustle bustle during celebrations, lots of people, the decorations and last but not the least, the food. The problem however is for the parents when it comes to managing kids during festivals. As a parent you cannot deviate from your principle of giving the kid healthy food but sometimes you have to helplessly stand by and watch the child munch on rubbish. Fun food for kids is popular and you can't stop just your kid from eating it in a huge group of children. Some relatives too might feed the child something you don't necessarily approve of. So what do you do?

Here some parenting tips to help you control your kid during festivals specially with regard to food.

What To Feed The Kid During Festivals? 
More or less all festival foods cooked at home are alright for the child. The deal is that they don't want to stay at home and eat sambar rice. They eat all kinds of unhealthy eatables like chaats and fruits with masala cut for a long time.

Due to the rush of people at home it is not possible for you to monitor the kids constantly; you'll simply be too busy. The only solution thus is to make these interesting foods at home to keep the little naughty ones at home. Make chaats and bhel puri in the clean environment of your own kitchen with healthy ingredients to prevent children from eating unhealthy street food.

Some relatives who gather during festivals are into the habit of giving children all sorts of inappropriate food or sponsoring it for them. If you have to ensure your kid eats healthy food then you will have to put your foot down somewhere. Tell such adults politely that you don't want your child to eat that particular food because they are allergic to it or fall sick quickly. After all you will be the only one who suffers with the child if the child is sick. Prevention is better than cure, isn't it?

Hot food is almost always healthy not only for kids but even adults. Make sure the festival foods your kid is consuming are piping hot and half your worries will be gone.

During festivals when huge feasts are prepared, all of it is not consumed at once. Very often the left overs are stocked and served later. Moreover, in the rush of the festival people don't get the chance to refrigerate the food properly.

For the first day or two is alright but after that you have to stop your kid from eating stale food. Let them have just dal and rice instead of special stale food. This is one of the best ways of ensuring that kids eat healthy food.

Keep your kids safe during festivals when it comes to food with these tips. If you also want to discuss about this discuss in our chat room http://FriendsTamil.cbox.ws


Thanks