எலுமிச்சை அவல் ரெசிபி
அவல் கொண்டு நிறைய ரெசிபிக்கள் செய்யலாம். அதில் ஒன்று தான் எலுமிச்சை அவல் ரெசிபி. இது மிகவும் ஈஸியான, அதே சமயம் ஆரோக்கியமான காலை உணவும் கூட. மேலும் இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமல்லாமல், பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த எலுமிச்சை அவல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
அவல் - 3 கப் எலுமிச்சை - 2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1
சிட்டிகை பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து நறுக்கியது)
வேர்க்கடலை - 1 கப்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அவலை நீரில் 10 நிமிடம் அவல் மென்மையாகும் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் உருளைக்கிழங்கை போட்டு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து, வேர்க்கடலை சேர்த்து நன்கு கிளறி விட்டு, இறுதியில் அவலை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கிளறி இறக்கி, எலுமிச்சை சாற்றினை ஊற்றி பிரட்டி, மேலே கொத்தமல்லியை தூவினால், சுவையான எலுமிச்சை அவல் ரெசிபி ரெடி!!!
-----------
பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல்
பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரிப்பதோடு, இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். எனவே வாரம் ஒரு முறை பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சோகை ஏற்படுவதில் இருந்து தள்ளி இருக்கலாம். அதிலும் பீட்ரூட்டை நன்கு வேக வைத்து சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.
இங்கு பீட்ரூட் மற்றும் தேங்காய் பயன்படுத்தி செய்யக்கூடிய பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 3 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
வரமிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை: முதலில் பீட்ரூட்டை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை வடித்து விட்டு, பீட்ரூட்டை மட்டும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் வேக வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து 4 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும். இறுதியில் துருவிய தேங்காயை போட்டு, 3-4 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பீட்ரூட் மற்றும் தேங்காய் பொரியல் ரெடி!!!
---------------
குடைமிளகாய் சாதம்
இன்று நாம் சற்று வித்தியாசமான கலவை சாதத்தைப் பார்க்க போகிறோம். இந்த கலவை சாதம் காலை வேளையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதுடன், பேச்சுலர்கள் அனைவரும் செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும். அதுமட்டுமல்லாமல், இதில் நறுமணமிக்க மசாலா பொருட்கள் சேர்த்திருப்பதால், இது இன்னும் சுவையுடன் இருக்கும். சரி, இப்போது அந்த குடைமிளகாய் சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1
டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
மிளகு தூள் - 1/2
டீஸ்பூன் பட்டை - 1 துண்டு
துருவிய தேங்காய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பட்டை மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு, பின் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை போட்டு, தீயை குறைவில் வைத்து 4 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறி, பின் சாதம் மற்றும் முந்திரியைப் போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்கி விட்டு, இறுதியில் தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான குடைமிளகாய் சாதம் ரெடி!!!
-------------------------
Thanks
Share your comments : http://bit.ly/1f1PYpS || http://goo.gl/zw2nIA
For more health tips : http://NanbanTamil.blogspot.com
No comments:
Post a Comment