சகோதர சகோதரி உறவு ஏன் முக்கியமானது? - Why Brother-Sister Relationships Are Important?
சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள்.
சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள் ஒட்டு மொத்த குடும்பத்தின் நிலையையும் உணர முடியும். தங்களுக்குள் நல்ல புரிந்துணர்வுடன் இல்லாத உறவுகளை கொண்ட குடம்பத்தினர்களை உடைய சகோதரர்களின் வாழ்க்கை சற்றே மன வேறுபாடுகளுடனேயே இருக்கும். அதே சமயம், மிகவும் நல்ல புரிந்துணர்வுடன் இருக்கும் குடும்பங்களில் உள்ள சகோதரர்கள், நட்புக்கு எடுத்துக்காட்டாக இருப்பார்கள். எனவே தான் ஒரு குழந்தையின் மன மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த கட்டுரையில் சகோதர உறவு முறை ஏன் முக்கியமானதாக உள்ளது என்று நாம் சில கருத்துகளை விவாதிப்போம். இதனை விளக்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
1. நண்பன், வழிகாட்டி மற்றும் ஆசான்
சகோதரர்கள் தங்களுக்குள் ஆரோக்கியமான உறவை பராமரிக்க வேண்டும். சகோதரர் அல்லது சகோதரிகள் தான் தனிமையில் இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் உற்ற நண்பர்களாவார்கள். அவர்கள் உங்களை புரிந்து கொள்வதுடன், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்கத்தையும் விளக்கமாக தெரிந்தும் வைத்திருப்பார்கள். நீங்கள் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில் சகோதரர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். கடினமான நேரங்களில் ஒரு நல்ல ஆசானாகவும, வழிகாட்டியாகவும் சகோதரர்கள் இருப்பார்கள். இந்த குணங்களை கொண்ட சகோதரர்கள் நண்பர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும் பாசத்துடன் இருப்பார்கள்.
2. உணர்வு ரீதியான ஆதரவு
சகோதரர்கள் ஒரே மாதிரியான குடும்ப சூழல் மற்றும் மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள். இது அவர்களின் ஒட்டுமொத்த மன மற்றும் கலாச்சார வளர்ச்சியும் ஒரே மாதிரியாக இருக்க வகை செய்கிறது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்திருக்கவும் உதவுகிறது. இவர்கள் உறவினர்கள் மட்டுமல்லாமல், இருவரும் தங்களுக்குள் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள். அவர்களுக்குள் சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள்.
3. புரிதல்
சகோதரர்கள் அல்லது சகோதரிகள் ஒருவரையொருவர் நன்றாக புர்pந்து கொள்வார்கள். நீங்கள் பெரியவராக வளர்ந்த பின்னரும் கூட சகோதர உறவுகளை நன்றாக பராமரிக்க வேண்டியது அவசியமாகும். ஆதன் மூலம் தனர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் குவலைகளையம், பிரச்னைகளையும் நம்பிக்கையான ஒருவரிடம் மனம் விட்டுப் பேச முடியும். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும், தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள். உங்களுக்கு சகோதரர்கள் இருந்தால், உங்களை ஊக்கப்படுத்த அலலது ஆதரவு தெரிவிக்க வேறு எவரும் தேவையில்லை.
4. குடும்ப ஒற்றுமை
குடும்பத்தை ஒற்றுமையுடன் வழி நடத்த சகோதர உறவு மிகவும் முக்கியமானதாகும். சகோதரர்கள் பாசத்துடன் இணைந்திருக்கும் வரையில் குடும்பத்தின் உறவும் நீடித்து ஒற்றுமையுடன் இருக்கும். இதன் மூலம் சகோதரர்கள் தாய் தந்தையரை சந்திக்கவும், அவர்களுடைய குழந்தைகள் மற்ற சகோதரர்களின் குழந்தைகளை சந்திக்கவும் முடிகிறது. குடும்பமாக இணைந்திருத்தல், குடும்பமாக வெளியே செல்லுதல் மற்றும் இரவு உணவு சாப்பிடுதல் போன்றவை இந்த உறவுகளை சகோதர, சகோதரிகளிடம் மேம்படுத்தி வளர்க்கின்றன.
5. இரத்த பந்தம்
சகோதர உறவுகளில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இரத்த பந்தம். ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதரர்கள் தங்களுடைய சிறப்பான உறவு முறைகளால், ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான குடும்பத்தை பராமரித்து வருகிறார்கள். இந்த இரத்த பந்தம், குடும்ப கலாச்சாரம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவற்றை பாதுகாத்தும், பராமரித்தும் வருவதற்கு சகோதர, சகோதரிகளிடம் நல்ல உறவு முறை இருந்து வர வேண்டும்.
=====================
Why Brother-Sister Relationships Are Important?
Siblings are an important part of childhood and growth. They have a huge effect on each other's lives. Siblings are brought up in the same family and therefore have a connection that is quite a mixture of love and friendship. Of course there are single kids who live all life without any sibling, but these kids miss a very strange but awesome bonding of brotherhood or sisterhood. Siblings know each other right from birth. Sibling relationship represents the whole status of the family. In a family where members are not quite close to each other, siblings also remain estranged. On the other hand, a family that has been very close to each other, siblings become best friends with each other.
Sibling relationship is thus very important for the mental and cultural growth of a kid. In this article, we will discuss why sibling relationship is important. The several reasons that explain the importance of sibling relationship are discussed below:
1. Friend, Guide And Mentor
Siblings should maintain a healthy relationship. This is because a brother or a sister can be the best friend when you are lonely. They can understand you well as they know every possible detail of your life. Similarly, a sibling can be a guide when you are confused and lost. A sibling can be a teacher and mentor at difficult times. These characteristics are easily found in a sibling more than a friend or a lover.
2. Emotional Support
Siblings are brought up in the same family environment. This results in an overall mental and cultural growth which is quite similar. Siblings know each other quite well and have lived in a similar phase. They can support each other mentally and emotionally better than other friends and relatives. Siblings can be there for each other during personal crisis or family situations.
3. Understanding
Siblings can understand each other well. It is important to maintain sibling relationships even after you grow old because these are the few people you can share all your worries and troubles with. Siblings can be the best confidante for each other. They can motivate and inspire each other all through their lives. When you have siblings around, you do not need anybody else for support or encouragement.
4. Family Unity
Sibling relationship is important for binding a family together. A family can stay united if the siblings share a good bond with each other. It is only when parents meet their siblings, this ensures the kids to get a chance to meet their cousins and other siblings as well. Family get-togethers, family outings and dinners are some ways by which you can enhance your relationship with your brothers and sisters.
5. Blood Ties
The one thing that always keeps siblings united is the blood bond. Siblings are of the same family and the special connection they share can keep their relationship healthy and lively always. The blood ties, family culture and family history is all preserved and nurtured if the siblings share a good relationship.
Thanks
Share your comments : http://bit.ly/1f1PYpS || http://goo.gl/zw2nIA
For more health tips : http://NanbanTamil.blogspot.com
No comments:
Post a Comment