Flash News

Friends Tamil Chat

Search This Blog

Monday, 10 February 2014

உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் உணவுகள் - 7 Foods for Fighting Pain

உடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் உணவுகள் - 7 Foods for Fighting Pain

இந்த வேகமான உலகத்தில் தினந்தோறும் நாம் எதிர்கொள்ளும் வலிகள் பல. வலிகள் இல்லாமல் வாழ்க்கை ஓடுவதில்லை. அவை மூட்டு வலியாகவோ, சதை பிடிப்புகளாகவோ, இதய எரிச்சலாகவோ அல்லது பி.எம்.எஸ் சுளுக்குகளாகவோ இருக்கலாம். இவற்றை எல்லாம் நமது உணவுகளின் மூலம் சரி செய்யலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு மாத்திரை சாப்பிடுவது எளிமையான விஷயமாக இருந்தாலும், அவை நம்முடைய நரம்புகளை சற்றே ஆற்றுப்படுத்தி வைக்குமே தவிர, வலிக்கான காரணத்தை முழுமையாக களைவதில்லை. பெரும்பாலான நேரங்களில் எரிச்சல் தான் வலிக்கான காரணமாக இருக்கும்.

நமது உடலில் சாதாரணமாகவே இவ்வாறு தாக்குதல் தரும் வெளிப்புற சக்திகளை எதிர்கொள்ளும் சக்திகள் இருந்தாலும், மிகுந்த மன அழுத்தம் அல்லது வேறு சில காரணங்களால் நமக்கு வலிகள் உருவாகின்றன. இது போன்ற வலிகளை குணப்படுத்தும் சில உணவுகளைப் பற்றி இந்த கட்டுரையில் கொடுத்துள்ளோம்.

1. மஞ்சள் 
இந்த மஞ்சள் நிற உணவில் குர்குமின் என்ற பொருள் கலந்துள்ளது. இந்த பொருளுக்கு எரிச்சலைக் கட்டுப்படுத்தும் குணம் உள்ளதால், நாள்பட்ட வலிகளுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.

2. இஞ்சி 
வேரே மருந்தாக இருக்கும் இந்த உணவில் புற்றுநோயை எதிர்க்கும் தொற்றுக் கிருமிகளும், நோய் எதிர்ப்பு சக்தி, குமட்டல் மற்றும் வாந்தியை தடுக்கும் ஆன்டி-எமிடிக் எஃபெக்ட் சக்தியும் மற்றும் வலிகளை குணப்படுத்தும் சக்திகளும் நிரம்பியுள்ளன. எரிச்சலுக்கு எதிரான குணங்களும் மற்றும் வலியை குறைக்கும் குணங்களும் கொண்டது தான் ஜிஞ்சரோல்ஸ் ஆகும். இவற்றை உங்களுடைய தினசரி உணவுகளிலும், தேநீர் போன்றவற்றிலும் சேர்த்துக் கொண்டு உணவை மருந்தாக்கிக் கொள்ளுங்கள்.

3. இலவங்கப்பட்டை 
ஒரு காபியிலோ, ஒரு கப் தயிரிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடக் கூடிய மருத்துவ குணம் மிக்க பொருள் தான் இலவங்கப் பட்டை. இது வலியை குறைப்பதற்கான வாசனைப்பொருளாக மட்டுமல்லாமல், பாக்டீரியா தொற்றுகளை குறைப்பதாகவும், இரத்தத்த்தில் அதிக குளுக்கோஸ் அளவை பராமரிக்கவும் மற்றும் மூளையின் சரியான செயல்பாட்டுக்கு உதவுவதாகவும் இருக்கும்.

4. செர்ரிகள் 
சுவைமிக்க செர்ரி பழங்களில் எரிச்சலைத் தடுக்கக் கூடிய குணங்களும், வலியை இபுப்ரோஃபன் ஆகவும் மாற்றும் குணங்களும் உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 4-5 செர்ரி பழங்களை சாப்பிடுவதால் 25% அளவிற்கு மூட்டுவலிகளை குறைக்க முடியும். சி-மறுவினை புரதங்களை குறைப்பதில் செர்ரி பழங்கள் உதவுவதால், எரிச்சல் ஏற்படுவதற்கான செயல்பாடுகள் குறைக்கப்படுகின்றன. கொழுப்புகளை குறைப்பதும் மற்றும் உடற்பயிற்சிகளால் தூண்டப்பட்ட தசைகளை குறைப்பதும் செர்ரி பழங்களின் பிற பயன்பாடுகளாகும்.

5. நட்ஸ் 
பல்வேறு விதமான நட்ஸ்களில் எரிச்சலைக் குறைக்கவும், வலிகளுக்கு நிவாரணம் தரவும் ஏற்ற குணங்கள் உள்ளன. ஒமேகா-3 அதிகம் உள்ள வால்நட்ஸ்களில் எரிச்சலைத் தடுக்கும் குணங்கள் நிரம்பியுள்ளன. பாதாம் கொட்டைகளில் அதிகளவு உள்ள ரிபோஃப்ளாவின் என்ற கூட்டுப்பொருள் பி.எம்.எஸ் போன்ற சுளுக்குகளையும், மூளை தடைகளையும் எதிர்க்கும் குணங்கள் உள்ளன. பிஸ்டாகியோஸ்களில் நிரம்பியுள்ள வைட்டமின் பி6 கூட தசைகளில் ஏற்படும் சுளுக்குகளை சரி செய்யவும், எரிச்சல் மற்றும் பி.எம்.எஸ்-உடன் தொடர்புடைய நீர்மங்களை தேக்கி நிறுத்தவும் உதவுகிறது.

6. விதைகள் 
மூன்று விதமான விதைகளுக்கு வலிகளை எதிர்க்கும் குணங்கள் உள்ளன. பூசணிக்காய் விதைகளில் மக்னீசியம் நிரம்பியுள்ளதால் தலைவலியை தீர்க்கவும், மக்னீசியத்தின் அளவை குறையாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். சாதாரண தலைவலிகளின் போது மூளைகளில் உள்ள தமனிகள் விரிவடைவதால், தலை வலி ஏற்படகிறது. இந்த தலைவலியை ஒரு கப் கொக்கோ விதைகள் அல்லது ஒரு கப் காபியை சாப்பிடுவதன் மூலம் சரி செய்ய முடியும். கோக்கோவில் உள்ள காப்ஃபைன் தமனிகளை கட்டுப்படுத்தி, வலிக்கு நிவாரணம் தருகிறது. ஆளி விதைகளில் உள்ள ஒமேக கொழுப்பு அமிலங்கள் எரிச்சலை ஏற்படுத்தும் வழிகளை அடைத்து, எரிச்சலை தவிர்க்கின்றன.

7. அன்னாசிப்பழம் 
ப்ரோமெலாய்ன் என்ற பெயரில் அன்னாசிப்பழத்தில் இருக்கும் என்ஸைமிற்கு தசைகளில் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது. இது மட்டுமல்லாமல் முடக்கவாதம் சார்ந்த மூட்டுவலிகள் போன்ற நாள்பட்ட வலிகளையும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவதையும் அன்னாசிப்பழம் செய்து வருவதால், அது வலிகளை எதிர்த்துப் போராடும் உணவுகளில் ஒன்றாக உள்ளது.


========================

7 Foods for Fighting Pain

Experts say these anti-inflammatory foods may help you beat pain.

pain fighting foods, ginger
1. Ginger
Ginger's been used for thousands of years to help with a variety of ailments from stomachaches to heart conditions. This anti-inflammatory add-in is excellent on a variety of foods, even tea.

2. Sage
2. Sage
This anti-inflammatory herb has also been shown in some research to boost memory. Perfect in poultry dishes, sage has been used for centuries and contains flavonoids that help to reduce swelling.

3. Coffee
3. Coffee
One cup of black coffee can provide relief from headaches and provide more antioxidants than a serving of berries. Preliminary research has also shown that drinking coffee may reduce the risk of some cancers.

4. Salmon
4. Salmon
Filled with Omega-3s, salmon provides an excellent source of protein and antioxidants. The fatty acids from this fish can help to lubricate tight joints in the body.

5. Green Tea
5. Green Tea
Used for centuries for a variety of medicinal purposes, green tea is an excellent source of polyphenols which may help to reduce free radicals in the body which can cause inflammation.

6. Olive Oil
6. Olive Oil
Here's a powerful anti-inflammatory ingredient that's comparable to over the counter pain medications. A staple of the Mediterranean diet, olive oil helps reduce the risk of strokes and some cancers.

7. Cherries
7. Cherries
Cherries help reduce inflammation by neutralizing free radicals in the body. These tart, sweet treats can also help to stop tissue inflammation.

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

No comments:

Post a Comment