Flash News
Friends Tamil Chat
Search This Blog
Thursday, 31 January 2013
செல்போன் காணாமல் போனால் - To find your lost mobile
Wednesday, 30 January 2013
டைமிங் புகைப்படங்கள் - Perfect Timing Photographs
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
இதென்ன சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்கிறீர்களா?. பெர்ஃபக்ட் டைமிங் என்பார்களே அப்படி எடுக்கப்பட்ட படங்களைத்தான் இப்படிச்சொல்கிறோம்.
எல்லா படங்களும் அந்த மாதிரி அமைந்துவிடுவதில்லை. சில நேரங்களில் தவறாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட நன்றாக இருக்கும் அல்லது நமக்கே சிரிப்பை வரவழைக்கும்.
சில டைமிங் போட்டோக்கள் கீழே தரப்பட்டுள்ளன. நீங்களே பாருங்களேன்!
Photos taken at the right time
These photos are taken in perfect timing
All images wont come perfect the model. In some cases, it would be good or bad even saw the photos brings a smile.
Below are some timing photo. Just see for yourself!
Thanks
Tuesday, 29 January 2013
புற்றுநோயை குணமாக்க - To Cure Cancer
புற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.
புற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ளது. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட நிலையில் தாக்குவதும் உண்டு.
புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான வாசனையுடையதாக இருக்கும்.
பக்கவிளைவுகள் இல்லை
காட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது. அதனால் மற்ற கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.
இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
Monday, 28 January 2013
கம்ப்யூட்டரை வேகப்படுத்த - Speedup your computer
உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்
- a. டெம்பரரி தரவுகள்,
- b. சேமிக்கப்பட்ட இணைய பக்கங்கள்,
- c. கணினியில் படியும் இன்டர்நெட் தரவுகள்,
- d. கடைசியாக உபயோகித்த கணினியின் இடங்கள்,
Sunday, 27 January 2013
எலுமிச்சைப் பழத்தின் நன்மைகள் - Usefull lemon
அனைவருக்குமே எலுமிச்சையில் நிறைய நன்மைகள் உள்ளன என்று தெரியும். அதிலும் பெரும்பாலான மக்கள், எலுமிச்சை சாப்பிட்டால், உடல் எடை மட்டும் தான் குறையும் என்று நினைக்கின்றனர். ஆனால் அந்த பழத்தில் பலவிதமான நன்மைகள் உள்ளன. மேலும் இந்த பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் மற்றும் கூந்தலுக்கு நிறைய நன்மைகளைத் தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் தான். ஆனால் இந்த நன்மைகளைத் தவிர, இந்த சிட்ரஸ் பழத்தில் வேறு என்ன நன்மைகள் உள்ளன, என்பதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
Thanks
சென்னையை தாக்கும் நீரழிவு- Diabetes and hypertension
டெல்லி: இந்திய அளவில் தென்னிந்தியர்கள் அதிக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னைவாசிகள்தான் நீரிழிவு நோய்க்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 4ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இது நாட்டின் மொத்த சர்க்கரை நோயாளிகளின் சராசரியை விட 7 சதவீதம் அதிகம் என்றும் அதிர்ச்சியளிக்கிறது அந்த அறிக்கை.
டெல்லியில் 5.02 சதவிகிதம்
Saturday, 26 January 2013
கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க - To view cricket on mobile
கிரிக்கெட்டை செல்போனில் பார்க்க சில ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்கள்
'கிரிக்கெட்' என்ற வார்த்தையே மந்திரச்சொல்போல மாறிவிட்டது. கிரிக்கெட் பிடித்தவர்களை ஒப்பிடுகையில், பிடிக்காதவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவே. இப்பதிவை கிரிக்கெட் பிடித்தவர்களுக்காக வெளியிட்டுள்ளோம்.
கிரிக்கெட் பார்ப்பதற்காக நாம் என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை நினைத்துப்பாருங்கள். மானவர்களாக இருந்தால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 'கட்டடிக்கிறார்கள்'. அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கு கூட உடம்புசரியில்லை என்ற காரணம் தேவைப்படுகிறது.
கிரிக்கெட்டை நேரடியாக பார்க்க சில இணையதளங்கள் உதவுகின்றன. ஆனால் நமது இன்டர்நெட் வேகமென்னவோ 'ஆமை' தான். வெறும் 'ஸ்கோர்களை' மட்டும் பார்த்தால் போதுமா? பார்ப்பதைப்போல வருமா என்பவர்களுக்காக சில இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேசன்களை இங்கே கொடுத்துள்ளோம். நேரடி கிரிக்கெட் ஸ்கோர்களை உடனுக்குடன் பெறமுடியும்.
கிரிக்பஷ் கிரிக்கெட் ஸ்கோர்:
இதுவொரு கிரிக்கெட்டுக்கான எளிதான ஆன்ட்ராய்டு அப்ளிகேசன். மிகவும் பிரபலமான கிரிக்பஷ் இணையதளத்தின் சேவையிது. கிரிக்கெட் தொடர்பான செய்திகள் மற்றும் உடனடி கிரிக்கெட் ஸ்கோர்களையும் எளிதில் பெறமுடியும்.
யாஹூ கிரிக்கெட் அப்:
இது புகழ்பெற்ற தேடுபொறியான யாஹூ நிறுவனத்தின் கிரிக்கெட்டுக்கான அப்ளிகேசன். தகவல்கள்,படங்கள் மற்றும் ஸ்கோர் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் பெறமுடியும்.
இஎஸ்பிஎன் கிரிக்கெட் ஸ்கோர்:
இது புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியான ESPN நிறுவனத்தின் கிரிக்கெட்டுக்கான அப்ளிகேசன். தகவல்கள்,படங்கள் மற்றும் ஸ்கோர் தொடர்பான விவரங்கள் அனைத்தையும் உடனுக்குடன் பெறமுடியும்.
ஸ்கோர் மொபைல்:
இதுவொரு மிகவும் புகழ்பெற்ற அப்ளிகேசனாகும். இதில் கிரிக்கெட் ஸ்கோர்கள் மட்டுமல்லாமல் ஹாக்கி, ஃபுட்பால், பேஸ்கட்பால் மற்றும் பலவகையான விளையாட்டுக்கள் தொடர்பான அனைத்து தகவல்கள் மற்றும் ஸ்கோர் விபரங்களை உடனுக்குடன் கிடைக்கும்.
Some see cricket cell phone application antraytu
'Cricket' has become a msgic word. In comparison, like cricket, it provides a number of disliked. The best cricket score card applications are here.
What do we think about how to watch cricket. Students from bunk from schools and colleges . Because even need to go to the offices of utampucariyillai.
Some websites let you watch live cricket. But our Internet vekamennavo 'Tortoise' is. The 'score' is the only way? Some have been here for a free Android whether
parppataippola application. Live cricket scores can instantly.
CricBuzz Cricket Score:
Android This is a simple application for cricket. Cricbuzz the most popular services on the Internet. Cricket related news can be easily and immediately cricket scores.
Yahoo! Cricket Up:
This application for cricket's most famous search engine company Yahoo. Information, images, and receive updates about all the details of the score.
ESPN Cricket Score:
It's a popular ESPN sports television application for cricket. Information, images, and receive updates about all the details of the score.
Score Mobile:
This is a very famous aplikecanakum. The only cricket scores hockey, football, basketball and a variety of games and score all the information with details immediately available.
Thanks