உங்கள் கம்ப்யூட்டரை வேகப்படுத்த சில எளிய வழிகள்
நம் வீடு அல்லது அலுவலகங்களில் கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறோம். பெரும்பாலான நேரங்களில் கம்ப்யூட்ரானது வேலை செய்யாது. அப்படியே நின்றுவிடும். இது எதனால் தெரியுமா?
கம்ப்யூட்டருக்கு அதிகப்படியான வேலை தருவதாலோ அல்லது கேம்கள் விளையாடுவதாலோ கூட ஏற்படலாம். வைரஸ்கள் கூட உங்கள் கணினியின் வேகத்தை குறைத்திருக்கலாம்.
கணினியானது வேகமாக இல்லையென்றாலே நம்மால் வேலைகளை எளிதில் முடிக்கவே முடியாது. அல்லது 'கேம்கள்' கூட நிம்மதியாகவே விளையாட முடியாது. இதற்கு என்னதான் வழி?!
உங்கள் கம்ப்யூட்டரை வேகமாக்கவேண்டும். அதற்கு எளிதான பல வழிகள் உள்ளன. எப்படி உங்கள் கணினியை வேகமாக்க இங்கே சில தகவல்கள்.
1. தொடங்குவதை வேகமாக்குங்கள்:
கம்ப்யூட்டரை ஆன் செய்தால் சிறிது நேரத்திற்குப்பிறகு தான் கணினியானது தொடங்கப்படும். இதை 'ஸ்டார்ட்-அப்' என சொல்கிறார்கள். இந்த 'ஸ்டார்ட்-அப்பானது' விண்டோஸ் 8 இயங்குதளத்தில் இல்லை என்பதை நினைவில்கொள்க.
இந்த ஸ்டார்ட்-அப்'களில் உள்ள தானாக இயங்கும் சில அப்ளிகேசன்களை நீக்குங்கள். இதை செய்வதற்கு "msconfig" என ரன்னில் தட்டச்சு செய்து, வரும் திரையில் 'ஸ்டார்ட்-அப்' என்பதை தெரிவுசெய்யுங்கள்.
இதில் எந்தெந்த அப்ளிகேசன்கள் இருக்கவேண்டும், எவற்றையெல்லாம் நீக்கவேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். இதை சரிசெய்தாலே உங்கள் கணினியானது சற்றே வேகமாகும்.
உதவியான சில இலவச அப்ளிகேசன்கள்:
2. கணினியை 'சுத்தம்' செய்யுங்கள்:
கணினியை 'சுத்தம்' செய்யுங்கள்:
கணினியை சுத்தம் செய்வதும் வீட்டை சுத்தம் செய்வதைப்போன்றதே. அதாவது தேவையில்லாத குப்பைகளை நீக்குவோமல்லவா? அதேபோல கணினியில் உள்ள தேவையற்ற குப்பை தரவுகளையும் நீக்கவேண்டும்.
இங்கே குப்பைகள் எனப்படுவது,
- a. டெம்பரரி தரவுகள்,
- b. சேமிக்கப்பட்ட இணைய பக்கங்கள்,
- c. கணினியில் படியும் இன்டர்நெட் தரவுகள்,
- d. கடைசியாக உபயோகித்த கணினியின் இடங்கள்,
இவைகளை நீக்கினாலே உங்கள் கணினியானது மேலும் அதிகமான வேகத்தில் செயல்படும். இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக நீக்குவது சற்றே கடினம்.
மேற்ச்சொன்னவற்றை ஒரே அழுததில் நீக்கவேண்டுமா? அப்படியானால் சிசிகிளீனர் என்ற அப்ளிகேசன் பயன்படுகிறது.
3. அளவை குறையுங்கள்:
நமது கணினியில் பயன்படுத்தும் சாதாரண அப்ளிகேசன்களின் எண்ணிக்கையையும், 'சைசையும்' குறைக்கவேண்டும். உதாரணமாக திரைப்படங்கள் பார்க்க நீங்கள் 'விண்டோஸ் மீடியா பிளேயர்' பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக VLC மீடியா பிளேயர் அல்லது மீடியா ப்ளேயர் கிளாசிக் பயன்படுத்திப்பாருங்கள்.
ஏனினில் விண்டோஸ் மீடியா பிளேயரானது அதிக அளவு ரேம் பகுதியை பயன்படுத்தும். இதனால் கணினியின் வேகம் குறையும்.
அதேபோல நீங்கள் டாகுமென்ட்களை படிப்பதற்காக 'மைக்ரோசாப்ட் ஆபீஸ்' பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதற்கு மாற்றாக 'ஓபன் சோர்ஸ்' அப்ளிகேசன்கள் சிலவற்றை பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்கள் கணினியானது வேகம்பெரும்.
இதற்கான ஓபன் சோர்ஸ் அப்ளிகேசன்கள் சில,
4. ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:
ஆட்டோமேட்டிக் அப்டேட்ஸ்:
நமது கணினி அவ்வப்போது அதை அப்டேட் செய்யவா? இதை அப்டேட் செய்யவா? என கேட்டுக்கொண்டே இருக்கும். நாமும் அதை 'நாளை'தள்ளிவைத்து விடுவோம். இது பெரிய வேலைகூட இல்லை. நாம் இப்படிச்செய்வதால் கணினியின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதுடன் இதன் வேகமும் குறையும்.
எனவே my computer -> properties -> Automatic updates என்றவரிசையில் தேர்வுசெய்து உடனுக்குடன் உங்கள் கணினியை அப்டேட் செய்யுங்கள். அல்லது அப்டேட் செக்கர்என்ற அப்ளிகேஷனை உங்கள் கணினியில் நிறுவினால் அதுவே அப்டேட் செய்துகொள்ளும்.
கண்டிப்பாக இந்த வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றினால் உங்களது கணினியானது வேகமாக செயல்பட ஆரம்பிக்கும். வித்யாசத்தை நீங்களே உணருங்கள் நண்பர்களே!
Some simple ways to speed up your computer
We use the computer at home or the office. computer does not work most of the time. Stand still. Do you know why this is?
when we give extra work or even computer games can reduce the speed. the speed of your computer viruses.
because of this we can not complete the work quickly and easily computer. Or 'games' can also play at peace. What the hell is this? '
Speed up your computer. There are many easy ways for that. Here's some information on how your computer faster.
1. speeding initial start up:
But if only a little time computer system start-up. This 'start - up' say that. The 'Start' in Windows 8 operating system is different from other windows versions.
The Start - Up 's running some application on the list. To do this, "msconfig" in the run type, the screen on the 'Start - Up' select that.
Which should the application, we all can decide whether you want to delete. If we correct this it slightly faster your computer.
Some free application assistance:
2. System 'clean' do:
System 'clean' do:
system would cleaned regularly As we do in house clean removing the unwanted garbage? As well as the data on the system to remove the unwanted junk.
Here is the debris,
a. Temparary data,
b. Saved Web pages,
c. Internet on the degree of computer data,
d. It used to be places of last system,
you can do this in your computer and run them at high speed. For each of these somewhat difficult to remove.
deleting all at once will be tough. The application helps for this is the CC Cleaner.
3. Reduce Application Size:
In our system, reduce the number of formal applications and its size. For example, Instead of using 'Windows Media Player' you can see the films hear the songs in VLC Media Player or KLite Media Player Classic.
Because Windows Media Player uses a large amount of RAM memory. This will reduce the speed of the computer.
As you read the documents in 'Microsoft Office', that will take more memory. Instead of this, if you are using the 'open source' applications it must speed up your computer.
Some of the open source application,
4. Automatic Updates:
Are you periodically update your system? Windows will ask you can Update this?. And we normally skip this to do it 'tomorrow'. It's not a big work. If we didn't update regularly then we can not increase the speed of the computer, And also security of the computer will become as a question mark
So my computer -> properties -> Automatic updates , choose to immediately update your system. Update Manually or You can use "Update Checker" software application.
Be sure to follow all these steps, your computer will start to act fast. You can feel the difference guys.
Thanks