Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday, 10 January 2013

எங்கே எனது கவிதை?

எங்கே எனது கவிதை...?

Where Is My Love   

ஒவ்வொரு காதலும் கவிதைதான்... ஒவ்வொரு காதலர்களும் கவிகள்தான். 

காதலிப்பது சுவாரஸ்யம் என்றால் அந்தக் காதலை உயிர்ப்போடு வைத்துக் கொள்வது அதை விட திரில்லானது. 

ரஜினி பேசும் வசனம் போலத்தான் இந்தக் காதலும். எப்ப வரும், எப்படி வரும், ஏன் வருது, எதற்கு வருது என்று யாருக்குமே தெரியாது, சொல்லவும் முடியாது. ஆனால் வந்த காதல் எதுவுமே அவ்வளவு சாமானியத்தில் போய் விடுவதில்லை - இதுவே உண்மை. 

ஒவ்வொரு மனிதனுக்கும் காதல் அனுபவம் நிச்சயம் இருக்கும். காதலிப்பவர்களுக்கு முதல் மாற்றமாக தெரிவது அவர்களுக்குள் ஏற்படும் பக்குவம்தான். அதுவரை இல்லாத அந்தப் பக்குவம் அவர்களை அழகாக்குகிறது, வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது. 

போரடித்துப் போயிருந்தேன் 
பளிச்சென என் மன வானில் வந்தாய் மின்னலாக 
எங்கிருந்தாய் இத்தனை காலம்?
 ஏன் வந்தாய் இந்த நேரம்?? 

இது காதல் அம்பு பட்டு பாதிக்கப்பட்டவர்களின் முதல் வார்த்தையாக இருக்கும். அத்தனை காலம் சிவனே என்று இருந்த இவர்களுக்கு காதல் வந்து தாக்கும்போது படும் அவஸ்தைகளும், சிரமங்களும் சொல்லில் அடங்க முடியாதது. அப்படி ஒரு இனிமையான அவஸ்தைதான் இந்தக் காதல். 

என் கவிதையே 
எங்கே நீ? 
உன் புன்னகை கோடி வாட்ஸுக்குச் சமம் 
தினசரி அது தாக்கி செத்துச் செத்துப் பிழைக்கிறேன் 
இருந்தாலும் பரவாயில்லை 
சிரித்தபடியே இரு! 

இது காதலியின் புன்னகையால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கிய காதலனின் நிலை. 

காதலை வெறும் உணர்வுகளின் சங்கமம் என்று மட்டும் சொல்லி விட முடியாது. இரு ஆத்மாக்களின் சங்கமம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் உண்மையான காதலாகவும் இருக்க முடியும். 

சுயநலமற்ற, விருப்புவெறுப்புகளற்ற காதல்தான் எப்போதும் உயிர்ப்போடும், உயிரோடும், ஈரத்தோடும் இருக்க முடியும் - பிழைக்கவும் முடியும். அன்பு, ஆதரவு, அரவணைப்பு, அனுசரணை, ஆறுதல், பாசம், நேசம், சந்தோஷம், பகிர்வு, தோள் கொடுக்கும் தோழமை என பல விஷயங்கள் இந்தக் காதலில் புதைந்துள்ளன. அதைச் சரியாக புரிந்து கொள்வோர் 100க்கு 10 பேர்தான் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் காதலை உண்மையாகப் புரிந்து கொண்டு ஜெயிக்கிறார்கள். 

நான் இருக்கிறேன் உனக்கு,தைரியமாக இரு என்ற ஒரு சொல் போதும், துணையை தன்னம்பிக்கையோடு நடக்க வைக்க. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்று சொன்னாரே வள்ளுவர் - எவ்வளவு பெரிய வார்த்தை...? 

என் உலகை ஜொலிக்க வைத்தாய் நீ 
என் பயங்களையெல்லாம் துடைத்துப் போட்டாய் 
உன் சிரிப்பு என்னை பலவானாக்கியது 
என் கண்ணீரை உன் விரல்கள் துடைத்துத் தூரப் போட்டன. 

நான் நினைத்த கனவு தேவதை நீ 
கனவுகளை மெய்ப்பித்த நிஜம் நீ 
என்னை உணர வைத்த உண்மை நீ 
லட்சம் முறை துடிக்கும் என் இதயம் 
கோடி முறை உன் பெயர் சொல்லும்
நம்பிக்கை தந்த தேவதையே 
கடைசி மூச்சு வரை உன் நிழலையே அண்டி நான்...! 

எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்வான் அந்தக் கவிதைக் காதலன். அத்தனை நாளாக எப்படியோ இருந்த அவனுக்கு இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த அந்த காதல் தேவதைக்கு நன்றிக் கடன்பட்டிருப்பானாம் -கடைசி வரை. 

ஒவ்வொரு காதலிலும் இதுதான் நடக்கிறது. நீ என்னை மாற்றியவன், நீ என்னை மாற்றியவள். உனக்கு நன்றிக் கடன் என்ன செய்வேன். என்ன கைமாறு செய்வேன்.. இதுதான் காதலர்களின் வாயிலிருந்து உதிரும் வார்த்தகள். ஆனால் இது மனதிலிருந்து வரும்போது கடைசி வரை அந்த சத்தியம் உயிர் பிழைத்திருக்கும். ஒருவேளை வாயளவோடு இருந்திருந்தால் நிச்சயம் அந்தக் காதல் தோல்வியிலேயே முடியும். 

காதல் வெற்றி அடைகிறதோ அல்லது தோல்வியில் வீழ்கிறதோ, எதுவாக இருந்தாலும் நிச்சயம் காதல் நல்ல விஷயங்களுக்கு வழி கோலுகிறது என்பது மட்டும் உண்மை.

Thanks


No comments:

Post a Comment