Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday, 27 January 2013

சென்னையை தாக்கும் நீரழிவு- Diabetes and hypertension

தென்னிந்தியர்களை அதிகம் தாக்கும் நீரிழிவு: சென்னையில்தான் அதிக பாதிப்பு

டெல்லி: இந்திய அளவில் தென்னிந்தியர்கள் அதிக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக சென்னைவாசிகள்தான் நீரிழிவு நோய்க்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 4ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. இது நாட்டின் மொத்த சர்க்கரை நோயாளிகளின் சராசரியை விட 7 சதவீதம் அதிகம் என்றும் அதிர்ச்சியளிக்கிறது அந்த அறிக்கை. 

அரிசி சாதம், மாவுச்சத்து அதிகம் உணவுகளை உட்கொள்வதாலேயே தென்னிந்தியர்கள் சர்க்கரை நோய்க்கு அதிகம் ஆளாகியுள்ளனர். அதேசமயம் மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலத்தில் குறைந்த அளவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதர்களை மெல்லக்கொல்லும் நோய்களில் முதன்மை வகிப்பது நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் தான். இந்தியாவில் பல கோடி மக்கள் நீரிழிவுக்கு ஆளாகியுள்ளனர். இந்த நோய் பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் சமீபத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.

சென்னையில் அதிர்ச்சி 
இந்தியாவில் உள்ள பிரபல மெட்ரோ நகரங்களாக டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், சென்னை ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 25 சதவிகிதம் சென்னைவாசிகள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நான்கில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. தமிழ்நாடு அளவில் 11.76 சதவிகிதம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.


பெங்களூரு இரண்டாம் இடம் 
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 10.22 சதவிகிதம் பேர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரத்தில் 14.77 சதவிகிதம் பேர் நீரிழிவுக்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் 8.83 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.


வடமாநிலங்களில் குறைவுதான் 
வடமாநிலங்களான இமாச்சல் பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நீரிழிவு பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 8.72 சதவிகிதம் பேரும், இமாச்சலபிரதேசத்தில் 6.06 சதவிகிதம் பேரும் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் மொத்தம் 5.91 சதவிகிதம் பேர்தான் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர்.


டெல்லியில் 5.02 சதவிகிதம் 
இந்தியாவின் மற்றொரு மிகப்பெரிய நகரமான அகமதாபாத்தில் 13.37 சதவிகிதம் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர். அதே சமயம் தலைநகர் டெல்லியில் 5.02 சதவிகிதம் மட்டுமே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தென்னிந்தியர்களுக்கு பாதிப்பு ஏன்? 
தென்னிந்தியர்கள் அதிகம் அரிசி, கார்ப்போஹைடிரேட் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்கின்றனர். உணவுக்கு பயன்படுத்தும் எண்ணெய், பழங்கள், காய்கறிகள் அதிகம் உட்கொள்ளாததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அதேபோல் மரபியல் ரீதியாகவும் நீரிழிவு பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


சரியான உணவு சாப்பிடுங்க 
நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும், ஆரம்ப கட்டத்திலேயே உணவில் கவனம் செலுத்தி , உடலின் எடையை சீராக குறைத்து நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழமுடியும். நாம் உண்ணும் உணவு என்பது மாவுச்சத்து, புரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும். அரிசி, கோதுமை ஆகியவற்றில் மாவுச்சத்து அதிகம் இருந்தாலும் கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து இரத்தத்தில் சக்கரையின் அளவு ஒரே சீராக சேரச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.


பாகற்காய் சாப்பிடலாம் 
காய்கறி, பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது. பாகற்காயில் இன்சுலின்போன்ற ஒரு பொருள் சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர். தினசரி காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினை குறைத்துக் கொள்ளலாம்.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது. அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும்திறனை அதிகரிக்கின்றது


நோ டென்சன் ரிலாக்ஸ் 
உடல் ஆரோக்கியத்தில் உணவு, உடற்பயிற்சி, ஓய்வு மற்றும் அமைதியான வாழ்க்கை முறை ஆகியவை முக்கியப் பங்காற்றுகின்றன. சத்தான உணவை முறையாகச் சாப்பிட்டால் பல நோய்களைத் தவிர்க்கலாம். அதேபோல் மன இறுக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். எரிச்சல், கோபம், டென்சன், மன இறுக்கம் யாவும் உடலில் கார்டிசோல் -எனப்படும் ஸ்டீராய்டைச் சுரக்க செய்து உடலின் வளர் சிதை மாற்றங்களை மந்தப்படுத்திவிடுகிறது. இதனால் உடல் எடை கூடிவிடும்.முக்கியமாக தொப்பையை உருவாக்கும். இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரிலாக்ஸ் ஆக இருப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் நிபுணர்கள்.





South Indian Diabetes affects more:  high impact in chennai

NEW DELHI: India's high level of diabetes in the southern and central health information affected by the disease. In chennai diabetes are particularly high. Diabetes is one of the 4. This is 7 percent higher than the average of the country's total sugar and shocked the reported cases.

Rice rice, high carbohydrate foods have been more in take southern diabetes. Whereas, in the state of Uttar Pradesh, with a population of less disease are diabetes.

Disease, high blood pressure, diabetes is the primary incharge silent killer humans. Many people have been in India for diabetes. Impact of this disease on behalf of the Federal Ministry of Health recently conducted research. The most shocking information.


The shock
The popular metro cities in India, New Delhi, Bangalore, Ahmedabad, Chennai and Chennaites diabetes by 25 percent in a survey conducted in the cities affected by the disease. The impact of diabetes is one in four. 11.76 percent of the people in Tamil Nadu have been affected with diabetes.



Second Place in Bangalore
10.22 percent of the total of people affected by the state of Karnataka nirilivin. 14.77 percent of diabetics have been killed in the city of Bangalore. Prevalence of diabetes in Kerala to 8.83 percent. Experts say this is because of the changing food pattern.



At temperatures less
Vatamanilankalana Himachal Pradesh, Uttar Pradesh, Uttarakhand, Punjab and Uttar Pradesh have less impact on the diabetes. People in the state of Punjab, 8.72 percent, 6.06 percent in imaccalapiratecat nirilivin are others. Uttar Pradesh and Uttarakhand states have been a total of 5.91 percent for persons with diabetes.


5.02 percent in Delhi
Another 13.37 percent of India's largest city, Ahmedabad been diabetes. Only 5.02 percent of the capital Delhi, while the disease are diabetes.



Damage to southern Why?
Most southern rice, consume foods high in carbohydrate. Used for food, oil, fruits, and vegetables are considered to be a reason for not taking too much. Most analysts say the impact of genetic as well as diabetes.



Eat the right food
Although diabetes is not a permanent solution, focused on the initial phase of the diet, the body weight of the diabetic control can reduce gradually. They can live a healthy life. The food we eat carbohydrate, and fat Chadha puratacattu. Rice, wheat and bran from wheat and remove most of the lactose in the large amount of rice in the amount of sugar in the blood narcattu uniformly to join. Reducing the impact of diabetes.



Bitter eat
Vegetables, fruits, when accompanied narporul choose what is good. Inculinponra secretes a substance in bitter gourd, manitanincarkkarai controlling the amount found in Britain. Pilintucaru taken daily in the morning on an empty stomach nalaintu cappittuvara Bitter, insulin can be reduced. Carkkaraiyinai klaikojan in excess of the storage material in the blood and help understand change. Celavitumtiranai carkkaraiyinai in excess of the increase in energy



No tencan Relax
Physical health, food, exercise, rest and peaceful way of life and play an important role. Eat nutritious food in order to avoid many diseases. As well as abolish the tension. Irritability, anger, tencan, all stress cortisol in the body - raising the decomposition of the body secrete steroids makes us dumb. The increased body weight. Mainly produce the cap. The damage caused by diabetes. Relax as you can by staying healthy, experts say.


Thanks

No comments:

Post a Comment