Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 8 June 2013

வழுக்கை தலையாவதை தடுக்க - home remedies hair care men

வழுக்கை தலையாவதை தடுக்க

வழுக்கைத் தலை பிரச்சனையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.

உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்துவிடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர். ஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர்.

என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறை கொண்டு, சில எளிமையான முடி பராமரிப்புக்களை மேற்கொள்ளுங்கள். அதற்காகவே உங்களுக்காக தமிழ் போல்டு ஸ்கை, முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழிகளை பட்டியலிட்டுள்ள்து. இத்தகைய வழிகளை பின்பற்றினால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபட்டு, வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.


எண்ணெய் மசாஜ்
அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில் செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக் கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பது தான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்களை கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.



தேங்காய் பால்
தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும்.. எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.



கற்றாழை
முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்காப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.



வேப்பிலை
வேப்பிலை அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு, முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இநத் முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.



முட்டை
முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 3-4 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உத்து பௌலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்தமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.



வெந்தயம்
2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணிநேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.



அவகேடோ
அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.



ஆரஞ்சு
ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.



மருதாணி இலை
நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலையை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.



ஆளி விதை
2-3 டேபிள் ஸ்பூன் ஆளி விதையை, நீரில் போட்டு 5 நாட்கள் ஊற வைத்து, அந்த நீரை காட்டனில் நனைத்து, ஸ்கால்ப்பில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.



எலுமிச்சை சாறு
எலுமிச்சை முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி, 3-4 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம்.



ஜிஜோபா ஆயில்
இந்த எண்ணெய் வலிமையான மற்றும் மென்மையான முடியின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் இந்த எண்ணெய் முடியின் வறட்சியையும் தடுக்கும். அதற்கு இந்த எண்ணெயை கொண்டும் முடிக்கு மசாஜ் செய்து குளிக்கலாம்.



மயோனைஸ்
பாதிக்கப்பட்டுள்ள முடியைப் சரிசெய்ய, மயோனைஸை முடியில் தடவி, ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு தலையை சுற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.



முட்டை மற்றும் மயோனைஸ்
இந்த முறையில் மென்மையான மற்றும் அழகான முடியைப் பெறலாம். அதற்கு முட்டை மற்றும் மயோனைஸை கலந்து, முடிக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.



தேன்
தேன் முடிக்கு ஆரோக்கியத்தையும், மினுமினுப்பையும் தரக்கூடியது. எனவே தேனை, ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.



செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை
நல்ல ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு, செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை அரைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி கலந்து, இரவில் தூங்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.



நெல்லிக்காய்
நெல்லிக்காய் பொடியை, பூந்திக்கொட்டை, சீகைக்காய் பொடியுடன் சேர்த்து, தயிர் மற்றும் எலுமிச்சை சேர்த்து கலந்து, முடிக்கு தடவினால், முடி ஆரோக்கியமாகவும், பட்டுப் போன்றும் இருக்கும்.



தயிர்
ஸ்காப்பில் உள்ள பொடுகைப் போக்குவதற்கு, 2 டீஸ்பூன் மிளகுத் தூளை தயிரில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, வறட்சியும் நீங்கும்.



வினிகர்
வினிகரில் பொடுகை நீக்கும் பொட்டாசியம் மற்றும் நொதிகள் உள்ளன. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை ஸ்கால்ப்பில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால், தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு நீங்கி, மயிர்கால்களை நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.



பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவும் பொடுகை நீக்கும் தன்மையுடையது. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் பேக்கிங் சேடாவை, ஷாம்புவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்தால், பொடுகு நீங்கி, முடி உதிர்தல் தடைபடும்.



Hair Care: 20 Home Remedies for Hair Care in Men

http://healthmeup.com/photogallery-healthy-living/mens-hair-care-20-home-remedies-for-hair-care-in-men/21836

Frizzy hair, brittle hair, hair loss, bad hair growth and oily scalps are frequent hair problems in men. Like their female counterparts men need to indulge in home remedies to pamper their tresses to improve hair growth. Here we list out 20 home remedies that men can use for luscious healthy hair.

Oil Massage: Massaging hair with oils replenishes hair-nutrition. Besides, it reverses the effect of serious damage to your hair. Oils such as almond, olive and coconut are ideal for hair massage twice a week.

Coconut Milk: Coconut milk nourishes hair and encourages growth. Furthermore, it helps make hair soft.

Aloe Vera: If you want to add sheen or strengthen your hair, massage aloe gel to the scalp. Massaging twice a week with aloe vera will prevent hair loss, repairs dry hair or infected scalp.

Neem Paste: The therapeutic neem paste will help restore alkaline balance of the scalp and preventing hair fall. To make it better, one can add honey and olive oil to the paste.

Egg: Protein treatment is elementary to hair care. If you want to have stronger and thicker hair, try protein treatment three to four times a week. All you have to do is beat a raw egg and apply to your wet hair. Wash hair with lukewarm water after 15 minutes.

Fenugreek Seeds: Soak two to three tablespoons of fenugreek seeds in water for eight to ten hours. Make a fine paste of it and apply onto your scalp. The solution not just prevents hair loss but also encourages hair growth and helps you to get rid of dandruff.

Avocado: Make a mixture of mashed avocado and banana. Massage it on your scalp and leave the mixture on your hair for about half an hour. When you wash your hair with lukewarm water, you will notice that they have become healthy and thicker.

Orange Juice: If you are struggling with oily scalp and dandruff, here is a solution for you. Take off the orange peel and mash it to make a pulp. Apply pulp on hair as a hair pack (once a week).

Henna Leaves: If you want to get thicker hair naturally, apply henna paste (made by grinding henna leaves). Cover your hair for about three hours with a shower cap before rinsing.

Flax Seed: Soak two-three tablespoons of flaxseed in a bowl of water for about five days. Use a cotton ball or apply it with fingers onto the scalp. Rinse it off with warm water after 30 minutes.

Lemon juice: Mix one part of lemon juice with two parts of coconut oil. Massage the solution into the roots of the hair regularly. Either leave it overnight or let it seep into the roots, keeping it for at least three to four hours before rinsing with cold water.

Jojoba oil: The oil encourages steady hair growth besides making the ends softer. The remedy works well for frizzy hair and dry locks.

Mayonnaise: To reverse or repair the hair damage, you can apply mayonnaise to your dry hair. After applying, cover your head with a plastic wrap. Keep it for at least half-hour before washing it off.

Egg + Mayonnaise: This is a remedy to make hair soft and lustrous. Apply a combination of eggs and mayonnaise on your hair; leave it for 30 minutes before rinsing hair with a shampoo.

Honey: For shining and healthy looking hair, you should try honey remedy. Combine equal parts of honey and olive oil. Rub the mixture into your hair and wash it off after 30 minutes.

Coconut + Hibiscus + Curry Leaves: if you want your hair to be healthy and strong, combine coconut oil mixed with grinded hibiscus and curry leaves. Apply the paste onto your scalp and leave it overnight. Wash it off in the morning.

Amla: Amla, ritha, shikakai and bhringraj powders in combination with curd and lemon can make your hair healthy and lustrous.

Yogurt and Black pepper: To shake off the flake from your scalp, this remedy will prove very effective. Mix 2 teaspoon of black pepper powder with three spoons of curd. After blending it, rub the mixture on to scalp and let it sit for an hour before rinsing it with a mild shampoo.

Vinegar: Vinegar has potassium and enzymes, to help cure an itchy scalp and dandruff. You have to simple massage apple cider vinegar on to the scalp for 5 minutes. It get rids of dead skin cells, which have been clogging the hair follicles and leading to dandruff flakes.

Baking Soda: Baking soda helps clear the dandruff from the scalp. One tablespoon of baking soda with handful of shampoo on a regular basis will see-off dandruff flakes from your hair strands.

Share your comments here

Thanks

3 comments:

  1. How to fast froth hare please tall me please

    ReplyDelete
  2. Useful blog. Keep share your great knowledge with us. Check also here about Symptoms of dry skin and home treatment for dry skin.

    ReplyDelete