பெண் குழந்தைகளை பெறுவதால், தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்
ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தைக்குப் பெற்றோர் என்பது வாழ்வில் மிகவும் அற்புதமானதொரு பயணமாகும். ஒரு பெண் எப்பொழுது முழுமையடைகிறாள் என்றால், அவள் தன் குழந்தைக்குத் தாயாகும் பொழுது தான். தாய்மை அடைதல் என்பது ஒரு பெண்ணுக்குள் உண்டாகும் அளவிட முடியாத ஆனந்த அனுபவமாகும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும். பெண்ணாக இருந்தாலும், எவ்வித நெருடலுமின்றி வாரி அணைத்துக் கொள்பவள் தான் தாய். அத்தகைய தாய் தனது தாய்மை உணர்வை வெளிப்படுத்தி, அல்லும் பகலும் வளர்ப்பாள். தன்னுடல் நோக தன்னை வருத்தி, கண் விழித்து, தன் சுக துக்கம் பாராமல், தன் குழந்தையை வளர்த்தெடுக்கும் தாய்க்கு, பிறந்தது ஒரு பெண் குழந்தையாக இருந்தால், அக்குழந்தையால் அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மகளைப் பெற்றுள்ள அன்னையா நீங்கள்? அப்படியென்றால், பெண்களுக்கான பொழுதுபோக்குகள் மற்றும் உணர்வுப் பரிமாற்றங்களுக்கு வேறு ஒரு தோழியைத் தேட வேண்டிய அவசியமே இராது. பெண் குழந்தை என்பது ஒரு தாய்க்குக் கூடுதல் சாதகமான விஷயம். குழந்தையே அவளுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்பாள். ஒரு தாய்க்கு ஆண்குழந்தையை விட பெண்குழந்தையிடம் தான், அதிக நெருக்கமாக மட்டும் இல்லாமல், ஒரு தோழியாகவும் இருக்க முடியும். இப்போது பெண் குழந்தையைப் பெற்ற ஒரு அன்னையானவள் அடையும் நன்மைகளை இங்கே காணலாம்.
தோழி
தொலைபேசியைத் தேடி எடுத்து தோழியுடன் உரையாட வேண்டிய அவசியமில்லை. மகளையே தோழியாக்கிக் கொண்டு, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். கணவரோ, மகனோ பெண்களின் பேச்சுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காமல் போகலாம். ஆனால் மகள் இருந்தாள் நிச்சயமாக உணர்வுகளையும், பேச்சையும் காது கொடுத்துக் கேட்பாள்.
ஓய்வு நேரம்
ஓய்வு நேரத்தை மிகவும் இனிமையாக செலவளிக்கலாம் என்பது ஒரு சாதகமான விஷயம். ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனைத் தயக்கமின்றி செய்யலாம். உதாரணமாக, இருவரும் புதிய வகை உணவுகளைத் தயாரிக்க முயலலாம். அப்போது ஜோக்கடித்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொண்டும் இருந்தால், நேரம் இனிமையாகக் கழியும். மென்மையான ரொமான்டிக் நகைச்சுவைத் திரைப்படங்களையோ, டிவியில் மெகா சீரியல்களையோ மகளுடன் சேர்ந்து காணலாம்.
ஆர்வங்கள்
தையல், சமையல், அலங்காரம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தால், மகளுக்கும் ஆர்வம் இருக்கக்கூடும் அல்லது இவற்றைக் கற்றுக் கொடுக்கலாம். அப்பொழுது தான் இருவரும் அவற்றைப் பற்றி விவாதித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, இருவரும் சேர்ந்து செய்து மகிழ முடியும்.
ஷாப்பிங்
பெண் குழந்தையின் மகத்துவம் ஷாப்பிங் செய்யும் போது தெரியும். பெரும்பாலான ஆண்கள் ஷாப்பிங் செய்யும் போது விலகியே இருப்பார்கள். ஷாப்பிங் செய்வது பெண்களின் வேலை என்று சொல்வார்கள். ஷாப்பிங் செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தால், இதை மகளுக்கும் கற்றுக் கொடுங்கள். உங்களோடு இணைந்து மகிழ்ச்சியாக ஷாப்பிங் செய்வாள். பொருத்தமான மற்றும் பிடித்தமான ஆடைகள், பொருட்களை முகம் சுழிக்காமல் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள்.
கருத்துப் பரிமாற்றம்
ஆடைகளிலும், அலங்காரப் பொருள்களிலும் மார்க்கெட்டுக்கு வந்துள்ள நவீன ஃபேஷன்கள் குறித்து விவாதித்துத் தெரிந்து கொள்ளலாம். லேட்டஸ்ட்டாக வந்துள்ள டிசைன்கள் மற்றுன் ஃபேஷன்கள் குறித்து, இன்றைய தேதி வரையிலும் துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். புதிதாக வாங்கியுள்ள ஆடைகள் உங்களுக்கு எப்படி இருக்கின்றன, கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்பது குறித்த உண்மையான விமர்சனங்களை பெற்றுக் கொள்ளலாம். எந்த வகை ஆடைகள் உடலுக்கு நன்றாக இருக்கும் எவை நன்றாக இருக்காது என்பது போன்ற விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், கணவர் அல்லது மகனிடம் இக்கேள்விகளைக் கேட்டால் வரும் ஒரே பதில் " இந்த ட்ரெஸ்ஸில் நீ மகாராணி போல் இருக்காய்!' என்பதாகத் தான் இருக்கும்.
அலங்கரிப்பு
வெளியிடங்களுக்கு செல்லும் போது, பெண் குழந்தைகள் இருந்தால், தன் அம்மா அழகாக இருக்க வேண்டுமென்று நினைப்பார்கள். அதற்காக மகள் உங்கள் நகத்திற்குப் பாலிஷ் போட்டுவிடுவார்கள். முடிகளைக் கர்லிங் செய்து விடுவார்கள். முகத்திற்கு ஃபேஷியல் போட்டுவிடுவார்கள். மேலும் பல அலங்காரங்களை செய்து விடுவார்கள்.
http://www.magforwomen.com/6-reasons-why-having-a-daughter-rocks/
6 Reasons Why Having a Daughter Rocks
Parenting a child, be it a boy or a girl, is a wonderful journey that parents undergo. However, it is an added advantage for the mother if she has a daughter because she has a companion who thinks on the same wavelength as she does. Given below are some reasons on why having a daughter rocks.
1. Girl-to-Girl Talks
You do not have to find a phone to talk to, you can share what you feel as a girl with your own daughter. Sometimes men do not pay heed to girlish activities or talks. But when you have a daughter, the listening ear is right by your side.
2. Leisure Hours
This is one of the plus points of having a daughter. You can spend your leisure hours doing what you like. Trying new dishes, which are of common interests between the two of you, can lead to a fun-filled time. You can even watch a lighthearted romantic comedy movie or a chick flick with your daughter.
3. Cultivate Common Interests
If you have a hobby or an interest in tailoring, fashion or other feminine areas, there are possibilities that your daughter will love these too. At least, you have a chance to cultivate these interests in her so that you both can enjoy doing things together.
4. Shop Together
This is why having a daughter rocks. Most men tend to stay away from shopping. They say shopping is always a girl's thing. If you are a shopaholic, then you can happily transfer it on to your daughter who would be ready to accompany you to pick your favorite clothes, whatever time it is, without any complaints.
5. Discuss Fashion
You can discuss about the latest fashion trends in the market and be up to date with dresses and fashion wear. You can also get honest inputs from your daughter on which dress fits you the best and which doesn't. If you would ask this question to your husband, the only answer would be "You look gorgeous in this".
6. Girls Night Out
You can plan for a night out with your daughter! You and your daughter can paint nails, curl hair and get facial done. You can even take a vacation with your daughter and be away from household chores for a few days.
So, for most mothers, having a daughter means never having to look far away for a companion to do feminine things together.
Share your comments
Thanks
No comments:
Post a Comment