பொங்கல் ரங்கோலி கோலங்கள் - Rangoli designs pongal decorations
பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளிலும் அழகான கோலங்கள் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதிலும் சில பண்டிகை நாட்களில் கோலப் போட்டியே நடைபெறும். முக்கியமாக பொங்கல் பண்டிகையன்று நிச்சயம் பெண்களுக்காக கோலப் போட்டிகள் நடைபெறும். கோலம் போடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அது ஒரு கலை. அந்த கலை உணர்வு இருந்தால், நிச்சயம் கோலம் போட முடியும்.
அன்றைய காலத்தில் எல்லாம் புள்ளி வைத்து தான் கோலங்களைப் போடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ரங்கோலி தான் பிரபலமாக உள்ளது. பெரும்பாலானோர் ரங்கோலி போடுவதில் தான் அதிக ஆர்வத்தை செலுத்துகின்றனர். ஏனெனில் ரங்கோலி என்றால், இப்படி தான் என்று இல்லாமல், எப்படி வேண்டுமானாலும் என்று இருப்பதாலேயே அனைவரும் இதை போடுகின்றனர்.
இத்தகைய ரங்கோலி போடும் போது, அதில் நிறங்களை நிரப்ப பொதுவாக கோலப் பொடியில் கலந்து தான் நிரப்புவோம். ஆனால் தற்போது சற்று வித்தியாசமாக உப்பில் கலந்தும் போடலாம். இப்போது அந்த ரங்கோலி டிசைனில் சிலவற்றை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அவற்றில் உங்களுக்கு விருப்பமான ஐடியாவை தேர்ந்தெடுத்து, கோலப் போட்டியில் வெற்றி பெறுங்கள்!!!
ரோஜாப்பூ கோலம்
இந்த டிசைனில் அரிசி மாவால் கோலத்தைப் போட்டு, வண்ணங்களால் நிரப்பி, கோலத்தின் மேல் ரோஜாப்பூக்களை வைத்து அலங்கரிக்கலாம்.
மலர்ந்த பூ போன்ற டிசைன்
இதில் பூவானது மலர்ந்தது போல் முதலில் ஒரு சாக்பீஸால் வரைந்து, பின் அந்த கோலத்தை வண்ணமயமான பூக்களால் நிரப்பலாம். இதனால் கோலமானது அழகாக காண்பதோடு, நன்கு மணத்தோடு இருக்கும்.
தாமரை டிசைன்
இந்த ரங்கோலியில் ஏதாவது ஒரு டிசைனை வரைந்து, பின் அதனை சுற்றி தாமரைப் பூக்களை வரைந்து விட வேண்டும். இதனால், கோலம் நன்கு பெரிதாக தெரிவதோடு, பிங்க் நிறத்தில் இருக்கும் தாமரைப் பூ மிகுந்த அழகைக் கொடுக்கும்.
சிம்பிள் மற்றும் மார்டன் டிசைன்
இந்த டிசைன் பார்ப்பதற்கு சிம்பிளாக, ஆனால் சற்று மார்டன் போன்று காணப்படும். அதற்கு காரணம், இதில் கலர் பொடியை கொடுத்துவிட்டு, பின் அதனுள் வெள்ளைப் பொடியால் அலங்கரித்திருப்பதே ஆகும்.
மின்னும் கோலம்
இந்த கோலத்தில் டிசைனை வரைந்துவிட்டு, அதில் நிறங்களை நிரப்புவதற்கு இதுவரை பொடியை வைத்து தான் செய்திருப்போம். ஆனால் இந்த கோலத்தில் கலர் பொடியை கல் உப்பில் கலந்து, கலர் கொடுத்திருப்பதால், அவை லேசாக மின்னுகிறது. இவ்வாறு செய்தால், அவை கோலத்திற்கு அழகை அதிகரிக்கும்.
வட்ட கோலம்
இந்த மாதிரியான ரங்கோலியில் எந்த ஒரு கடினமான டிசைனும் இல்லை. இதில் வட்டம் போட்டு, அதனுள் நிறங்களை நிரப்பி, பின் ஆங்காங்கு டிசைனை வரைந்துவிட்டால் போதுமானது.
ஸ்டைலிஸ் ரங்கோலி
இதிலும் கல் உப்பில் கலந்த நிறத்தை வைத்து தான் நிறங்களை நிரப்புகிறோம். ஆனால் என்ன இதில் ஆங்காங்கு கட்ட கட்டமாக வரைந்து, அதனுள் நிறங்களை நிரப்பி, பின் எஞ்சிய இடங்களில் வெள்ளை நிற உப்பை வைத்து நிரப்பி விட்டு, சுற்றி கருப்பு நிறத்தை கொடுத்துவிட்டால், அவ்வளவு தான்.
பொங்கல் டிசைன்
பொதுவாக பெரும்பாலானோர் பொங்கல் அன்று பொங்கல் பொங்குவது போன்ற டிசைனைத் தான் போடுவார்கள். அதிலும் பானை வரைந்துவிட்டு, அதற்கு நிறங்களை நிரப்புவதில் தான் விஷயமே இருக்கிறது. என்னதான் பொங்கல் பானை வைத்தாலும், அனைவருமே அழகான, இயற்கையான பொங்கல் பானை போன்றே வரைந்து, நிறம் கொடுத்துவிட முடியாது. அவ்வாறு நிறம் கொடுக்கும் போது சிறிது மாறிவிட்டாலும் அவ்வளவுதான்.
---------
Rangoli designs pongal decorations
Rangoli is a fine art that is commonly practiced in many Indian states. The colourful art is considered spiritual. That is why every occasion like Diwali or Pongal is incomplete without rangoli decorations.
A rangoli is ideally drawn on the entrance of the house and there are many types of rangolis that are drawn in front of houses. Kolam, Aripana, Alpana, Aipan etc are few types of rangoli.
Drawing a rangoli requires skill and creativity. You can either make rangoli with rice flour or add few colours to it and make it look bright.
As Pongal is around the corner, you have to draw Kolam outside the house to welcome guests and celebrate the Tamil harvest festival. Kolam is considered lucky as it brings peace and prosperity in the house. Every colour in the rangoli has a meaning attached to it. For example, red is the colour of celebration, white is of purity, green for nature and blue for peace. So, you can draw a beautiful rangoli outside your house to welcome your guests. Here are few colourful rangoli designs that you can pick up for Pongal decorations this year.
You can either be simple by picking up an easy design and few colours or try some innovative ideas to make your rangoli look fantastic.
Flower with lamps rangoli
This colourful rangoli is made with flowers especially pink, red and yellow roses. Green, blue, orange and yellow colours are used to draw the design. Earthen lamps (diyas) are adding a brightness to the design.
The floral rangoli
This is another beautiful rangoli design that is great for Pongal. The kolam design is prepared with flower petals as well as garlands. Apart from spreading the colours, this rangoli will also spread the aroma of flowers around you.
The lotus blooms
You can draw this rangoli design for Pongal, the Tamil harvest festival. The bigger the rangoli, the better the decorations will look. This rangoli is made with dark blue, red, yellow and pink colours. The pink lotuses around the rangoli looks nice.
The sitara
It is a simple yet beautiful rangoli design. This Pongal, you can try a colourful and simple rangoli if you are running out of time. The different coloured flowers look eye-catchy.
The creative art
This is a modern style rangoli that is inspired from art. The abstract art has been beautifully shown in this traditional rangoli.
The colourful stones rangoli
If you want to try something new this Pongal, then try this rangoli design. The rangoli is made with colourful stones and pebbles.
The circle
This huge circle designed rangoli is just breathtaking. You can cover lots of empty space at the entrance or near the pooja room by drawing this rangoli design. The blend of light and dark green is just wow! Colours like blue, saffron and white are also looking good in this design.
Marble and stones studded rangoli
Pongal decorations can be made stylish with such rangoli designs. The use of white marble pieces and colourful stones is just wow! The art also looks abstract.
The cow designed kolam
This is a traditional kolam that is drawn with colourful cows. Cows are holy and have a special significance with Pongal. Use flowers and bright colours to get the effect. Artist: Anisha Raghu
Modern art
This is a creative rangoli design that can be used to decorate your house this Pongal. Artist: Anisha Raghu
Thanks, Wish you all a happy pongal
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips : http://NanbanTamil.blogspot.com
No comments:
Post a Comment