ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் ஆசனங்கள் -
Yoga Postures For Balancing Hormones
Yoga Postures For Balancing Hormones
உங்களுடைய ஹார்மோன் அளவினை சமநிலையில் பேணவேண்டுமென்று விரும்புகிறீர்களா? அதற்கேற்ற யோகாசனங்களைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இதற்கென ஏராளமான ஆசனங்கள் உள்ளன. இந்த ஆசனங்களை ஆண்களும் பெண்களும் செய்து பயன் பெறமுடியும். இருப்பினும் சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த ஆசனங்களை செய்து பிரசவத்திற்குப்பிந்தைய மனத்தளர்ச்சிக்கான அறிகுறிகளிலிருந்து விடுபடமுடியும்.
நமது உடல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துவது எண்டோக்ரைன் மண்டலம் எனப்படும் நாளமில்லாச் சுரப்பி மண்டலம். இந்த சிக்கலான சுரப்பிகள் அமைந்த கட்டமைப்பானது, நமது உடலில் உள்ள இதர மண்டலங்களுக்கு அனைத்து கட்டளைகளையும் பிறப்பிக்கிறது. நமது உடல் வளர்ச்சி முதல் ஒரு மனிதன் தனது உற்சாகத்தை அளவிடுவது வரை அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த சுரப்பிகளே.
ஹார்மோன்கள் என்பவை நமது உடலிலுள்ள சுரப்பிகளும் அங்கங்களும் சுரந்து, இதர உறுப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் குறிப்பிட்டவகையான வேதிப்பொருள்கள் ஆகும். இச்செயல்களை நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பி மண்டலம் கட்டுப்படுத்துகிறது.
நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளைத்தூண்டி, நமது உடலில் சீரான ஹார்மோன் உற்பத்தியை உறுதி செய்து, அவற்றின் அளவினைக் கட்டுப்படுத்தி சமநிலையில் பேணுவதற்கும் பகிர்ந்தளிக்கவும், சில வகையான யோகாசனங்கள் உதவுவதாக சிலர் நம்புகின்றனர்.
நமது உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகளைத்தூண்டி, நமது உடலில் சீரான ஹார்மோன் உற்பத்தியை உறுதி செய்து, அவற்றின் அளவினைக் கட்டுப்படுத்தி சமநிலையில் பேணுவதற்கும் பகிர்ந்தளிக்கவும், சில வகையான யோகாசனங்கள் உதவுவதாக சிலர் நம்புகின்றனர்.
உடலில் ஹார்மோன் அளவினை சமநிலையில் பேண உதவும் சில ஆசனங்கள்:
சசாங்காசனம் (Sasangasana)
---------------------------------------------------
இந்த ஆசனமானது தைராய்டு மற்றும் பாராதைராய்டுகளைத் தூண்டுகிறது. மனத்தளர்ச்சியிலிருந்து விடுபடவும் இது உதவுகிறது.
- முதலில் முழந்தாளிட்டு அமர்ந்து கொள்க.
- உங்கள் குதிகாலின் மீது உங்கள் பின்புறம் அமரட்டும்.
- உங்கள் முழங்காலிலிருந்து பாதம் வரை தரையில் ஒட்டியிருக்க வேண்டும்.
- உங்கள் கைகளிரண்டையும் பின்புறமாகக் கொண்டு சென்று உங்கள் இரண்டு பாதங்களின் கீழ்ப்பகுதியைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் முகத்தைக் கவிழ்த்து முகவாய்க்கட்டையை உங்கள் நெஞ்சில் பதித்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் இடுப்பை வளைத்து உங்கள் நெற்றி உங்கள் முழங்காலைத் தொடுமளவுக்குக் குனியுங்கள்.
- பிறகு உங்கள் நெற்றியைத் தரையை நோக்கித்தாழ்த்தித் தரையைத்தொடுங்கள்.
- அதேசமயம் உங்கள் இடுப்பை மேல் நோக்கி உயர்த்துங்கள்.
- மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடுங்கள்.
- சில நிமிடங்கள் இதே நிலையில் இருங்கள்.
ஜனுசிராசனம் (Janursirasana)
----------------------------------------------------
பஸ்சிமோத்தாசனத்துடன் இணைக்கப்பட்டு செய்யப்படும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவினை சமப்படுத்துகிறது. தைமஸ், தைராய்டு, சிறுநீரகங்கள், கணையம் ஆகியவற்றைத் தூண்டுகிறது.
- மலை நிலையில் தொடங்குங்கள்.
- உங்கள் வலது முழங்காலை உயர்த்தி, உங்கள் இரண்டு கைகளால் பிடித்துக் கொள்ளுங்கள்.
- மூச்சை நன்றாக உள்ளிழுங்கள்.
- பின்பு வெளியேவிடுங்கள்.
- அடுத்து மூச்சை உள்ளிழுக்கும்போது, உங்கள் கைகளைக் கீழே கொண்டு சென்று, உங்கள் வலதுகால் பாதத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள்.
- பின் மூச்சை வெளியில் விடுங்கள்.
- வலது காலை முன் நோக்கி உதையுங்கள்.
- உங்கள் வலது காலை 90 டிகிரி கோணத்தில் பிடித்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் தலையை உங்கள் வலது முழங்காலை நோக்கித் தாழ்த்துங்கள்.
- அதே நேரத்தில்,உங்கள் முழங்கைகளை பக்கவாட்டில் கீழே இறக்குங்கள்.
- இதே நிலையில் இருந்துகொண்டு இரண்டுமுறை மூச்சை நன்றாக உள்ளிழுத்து பின் வெளியே விடுஙள்.
- பிறகு இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யுங்கள். முதன்முறையாகச் செய்பவர்கள், முழங்காலைத் தங்களது உடலுடன் ஒட்டியிருக்குமாறு வைத்துக் கொண்டு செய்தால் எளிதாக இருக்கும். அல்லது பின்வரும் முறையில் பஸ்சிமோத்தாசனம் மட்டும் செய்யலாம்.
பஸ்சிமோத்தாசனம் (Paschimottanasana)
-----------------------------------------------------------------------
- நேராக நின்று கொள்ளுங்கள்.
- பாதங்களைத் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள்.
- இடுப்பிலிருந்து முன்பக்கமாகக் குனியுங்கள்.
- உங்களிரண்டு கைகளையும் கால்களுக்கு இணையாகக் கீழே தொங்கவிடுங்கள்.
- உங்கள் முதுகு வளையாமல் தட்டையாக இருக்கட்டும்.
- உங்கள் கைகள், உங்கள் கால்களுக்கு இணையாக இருக்குமாறு பார்த்துக் கொண்டு ஐந்து முறை மூச்சினை நன்றாக உள்ளிழுத்து வெளியில் விடுங்கள்.
- பிறகு மெதுவாக முதல் நிலைக்குத் திரும்புங்கள்.
சுகாசனம் (Sukhasana)
---------------------------------------
மெதுவான கட்டுப்படுத்தப்பட்ட சுவாசம் உங்களது ஹார்மோன் செயல்பாடுகளை சரிப்படுத்துகிறது. அட்ரீனல் சுரப்பியை அமைதிப்படுத்துகிறது. பதட்டத்தைக் குறைக்கிறது. மேலும் குழந்தைப் பேற்றுக்குப் பிந்தைய மனத்தளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது.
- இரண்டு அங்குலம் அளவுக்குக் குறையாத உயரத்திற்கு மடித்து தரையில் விரிக்கப்பட்டுள்ள விரிப்பின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.
- சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.
- உங்கள் கைகளை உங்கள் தொடைகள் மீது வைத்துக் கொள்ளுங்கள்.
- உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கட்டும். - நன்றாக நிமிர்ந்து உட்காருங்கள். ஆனால் இடுப்பு தளர்வாகவே இருக்கட்டும்.
- உங்களது மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே உங்கள் முகவாய்க்கட்டையையும், முதுகுத்தண்டையும் முன்னோக்கி நகர்த்துங்கள்.
- அதேநேரம் மூச்சை நன்றாக விரைவாக வெளிவிடுங்கள். முதுகை முன்னோக்கி வளையுங்கள்.
- இதே முறையை திரும்பத் திரும்ப செய்யுங்கள். மூச்சினை உள்ளிழுத்து வெளிவிடும் நேரத்தை 30 வினாடிகள் என்று சீராகப் பேணுங்கள்.
முத்திரைகள் (Mudras)
---------------------------------------
இம்முத்திரைகள் பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகளைத் தூண்ட உதவும்.
- உங்கள் உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பிரணாம் முத்திரைக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் கை கட்டை விரல்கள் இரண்டும் உங்கள் நெஞ்சினைத்தொடும் அளவில் இருக்கவேண்டும். இப்போது உங்கள் கட்டைவிரல்களை வலது பக்கம், கீழே, இடதுபக்கம், மேலே என்று சுழற்றுங்கள். இதே முறையைத்திரும்ப செய்யுங்கள்.
- அடுத்து உங்கள் கைகளைத் திறங்கள். உங்கள் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் ஞான முத்திரையில் இருப்பது போல சேர்த்து வையுங்கள். இப்போது விரல் நுனிகள் இரண்டையும் சேர்த்து அழுத்துங்கள்.
- அடுத்து நடுவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
- அடுத்து மோதிரவிரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
- அடுத்து சுண்டு விரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
- மீண்டும் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் சேர்த்து அழுத்துங்கள்.
- இச்செயல்களை உங்கள் சுவாசத்துடன் இணைத்து ஒரே சீராகச் செய்துவாருங்கள். இப்பயிற்சியை ஒவ்வொரு சுற்றினையும் இரண்டு நிமிடங்கள் செய்யலாம்.
Yoga Postures For Balancing Hormones
---------------------------------------------------------------
Some people believe by doing yoga poses that stimulate and/or activate certain glands and organs, the practice helps to maintain hormone balance and consistent production and distribution. Here we gave some of the best yoga postures for balancing hormones.
Penaventumenru like your hormone balance amount ? Do you want to know about yoga appropriate ? Unfortunately, there are plenty of seats . Men and women can get used to the seat . However, the majority of mothers who have a child recently after pregnancy vitupatamutiyum from symptoms of depression .
Functions of our body to regulate the endocrine system entokrain zone . The structure of this complex glands , and other regions in our body and gives all the orders . A man and his excitement to measure the growth of our body to regulate all these curappikale .
The glands are the organs of our body secretes hormones , particular chemicals is distributed to other organs . The endocrine system controls the operation of our body .
The endocrine glands and organs of our body , balanced hormone production in the body , making sure to keep in balance control and distribute their size , some people believe in some sort of helping yogasanas .
The amount of hormone in the body that helps to maintain the balance of seats :
Cacankacanam (Sasangasana)
-------------------------------------------------
Paratairaytukalai acanamanatu and stimulates the thyroid . It helps to get out of depression .
- First of all , please sit kneeling .
- Your back on your horse amarattum .
- From the foot up to your knee to the ground ottiyirukka .
- Go to the back of your kaikalirantaiyum Grab your two feet lower .
- Your face on your chest mukavaykkattaiyai flip .
- Your waist and your knees bent and your forehead to lean forward reaching .
- Then your forehead shoud bend down and touch the floor .
- At the same time , raise your hips upward .
- Hold your breath and exhaled let out .
- Stay in a similar position a few minutes .
Januciracanam (Janursirasana)
--------------------------------------------------
The balance of the amount of sugar in the blood when combined with pascimottacanat . Thymus , thyroid , kidneys , pancreas and stimulates .
- Start at the level of the mountain .
- Raise your right knee , your two hands to hold .
- Hold your breath and inhale .
- The veliyevitunkal .
- When the retractable breath , into your hands down , the feet and hold your valatuk .
- Then let out her breath .
- Utaiyunkal towards the front of the right leg .
- Hold your right leg at a 90 degree angle .
- Talttunkal your head toward your right knee .
- At the same time , Import your elbows down on the side .
- Hold your breath and exhaled twice after being on the same level vitunal out .
- The same method to the next foot . For the first time , making it easier to knee if their body is in keeping with sticky. Or at the following times can only pascimottacanam .
Pascimottacanam (Paschimottanasana)
---------------------------------------------------------------
- Keep standing up straight .
- Keep feet relaxed .
- Front and lean forward from the waist .
- Unkalirantu arms parallel to the legs hanging down .
- Keep your back flat valaiyamal .
- Your arms , your legs are parallel with the care for the exhaled breath as well let out .
- Then slowly return to the first level .
Cukacanam (Sukhasana)
-----------------------------------------
Slow controlled breath correcting your hormonal functions . Calms the adrenal gland . Reduces tension . The latter helps to reduce morale and postpartum .
- To the extent of not less than two inches in height and spread out on the floor , folded to sit on the carpet .
- Make cammanamittu sat .
- Keep your hands on your thighs .
- Keep the palms upward . - Well , sit upright . But be lenient hips .
- Keep your jaws your breath , spine , move forward .
- Hold your breath while supplies quickly . Valaiyunkal back forward .
- The same method can be repeated . Exhaled breath of relief that the time to 30 seconds Keep steadily .
Seals (Mudras)
-----------------
Piniyal immuttiraikal pituitary glands and helps to evoke .
- Bring your palms together along piranam label . Both thumbs should be in your hands touch in your chest level . Now your thumbs on the right , down , left , up the Dial . Muraiyaittirumpa do the same .
- Next , open your hands . Along with your thumb and index finger as you keep the seal of wisdom . To combine finger tips now .
- Along with the middle finger and thumb dial .
- Next motiraviralaiyum To add thumbs .
- The inclusion of a finger or thumb dial .
- To re- add the index finger and thumb .
- In conjunction with the operation of your breath ceytuvarunkal uniformly . They can be around every two minutes .
Taminglish
-----------------
Uṅkaḷuṭaiya hārmōṉ aḷaviṉai camanilaiyil pēṇavēṇṭumeṉṟu virumpukiṟīrkaḷā? Ataṟkēṟṟa yōkācaṉaṅkaḷaip paṟṟi aṟintukoḷḷa virumpukiṟīrkaḷā? Itaṟkeṉa ērāḷamāṉa ācaṉaṅkaḷ uḷḷaṉa. Inta ācaṉaṅkaḷai āṇkaḷum peṇkaḷum ceytu payaṉ peṟamuṭiyum. Iruppiṉum camīpattil kuḻantai peṟṟa tāymārkaḷ inta ācaṉaṅkaḷai ceytu piracavattiṟkuppintaiya maṉattaḷarccikkāṉa aṟikuṟikaḷiliruntu viṭupaṭamuṭiyum. Namatu uṭal ceyalpāṭukaḷaik kaṭṭuppaṭuttuvatu eṇṭōkraiṉ maṇṭalam eṉappaṭum nāḷamillāc curappi maṇṭalam. Inta cikkalāṉa curappikaḷ amainta kaṭṭamaippāṉatu, namatu uṭalil uḷḷa itara maṇṭalaṅkaḷukku aṉaittu kaṭṭaḷaikaḷaiyum piṟappikkiṟatu. Namatu uṭal vaḷarcci mutal oru maṉitaṉ taṉatu uṟcākattai aḷaviṭuvatu varai aṉaittaiyum kaṭṭuppaṭuttuvatu inta curappikaḷē. Hārmōṉkaḷ eṉpavai namatu uṭaliluḷḷa curappikaḷum aṅkaṅkaḷum curantu, itara uṟuppukaḷukku pakirntaḷikkappaṭum kuṟippiṭṭavakaiyāṉa vētipporuḷkaḷ ākum. Icceyalkaḷai namatu uṭaliluḷḷa nāḷamillāc curappi maṇṭalam kaṭṭuppaṭuttukiṟatu. Namatu uṭaliluḷḷa nāḷamillāc curappikaḷ maṟṟum uṟuppukaḷiṉ ceyalpāṭukaḷaittūṇṭi, namatu uṭalil cīrāṉa hārmōṉ uṟpattiyai uṟuti ceytu, avaṟṟiṉ aḷaviṉaik kaṭṭuppaṭutti camanilaiyil pēṇuvataṟkum pakirntaḷikkavum, cila vakaiyāṉa yōkācaṉaṅkaḷ utavuvatāka cilar nampukiṉṟaṉar. <Image> Namatu uṭaliluḷḷa nāḷamillāc curappikaḷ maṟṟum uṟuppukaḷiṉ ceyalpāṭukaḷaittūṇṭi, namatu uṭalil cīrāṉa hārmōṉ uṟpattiyai uṟuti ceytu, avaṟṟiṉ aḷaviṉaik kaṭṭuppaṭutti camanilaiyil pēṇuvataṟkum pakirntaḷikkavum, cila vakaiyāṉa yōkācaṉaṅkaḷ utavuvatāka cilar nampukiṉṟaṉar. Uṭalil hārmōṉ aḷaviṉai camanilaiyil pēṇa utavum cila ācaṉaṅkaḷ: Cacāṅkācaṉam (Sasangasana): Inta ācaṉamāṉatu tairāyṭu maṟṟum pārātairāyṭukaḷait tūṇṭukiṟatu. Maṉattaḷarcciyiliruntu viṭupaṭavum itu utavukiṟatu. - Mutalil muḻantāḷiṭṭu amarntu koḷka. - Uṅkaḷ kutikāliṉ mītu uṅkaḷ piṉpuṟam amaraṭṭum. - Uṅkaḷ muḻaṅkāliliruntu pātam varai taraiyil oṭṭiyirukka vēṇṭum. - Uṅkaḷ kaikaḷiraṇṭaiyum piṉpuṟamākak koṇṭu ceṉṟu uṅkaḷ iraṇṭu pātaṅkaḷiṉ kīḻppakutiyaip piṭittuk koḷḷuṅkaḷ. - Uṅkaḷ mukattaik kaviḻttu mukavāykkaṭṭaiyai uṅkaḷ neñcil patittukkoḷḷuṅkaḷ. - Uṅkaḷ iṭuppai vaḷaittu uṅkaḷ neṟṟi uṅkaḷ muḻaṅkālait toṭumaḷavukkuk kuṉiyuṅkaḷ. - Piṟaku uṅkaḷ neṟṟiyait taraiyai nōkkittāḻttit taraiyaittoṭuṅkaḷ. - Atēcamayam uṅkaḷ iṭuppai mēl nōkki uyarttuṅkaḷ. - Mūccai naṉṟāka uḷḷiḻuttu veḷiyē viṭuṅkaḷ. - Cila nimiṭaṅkaḷ itē nilaiyil iruṅkaḷ. Jaṉucirācaṉam (Janursirasana): Pascimōttācaṉattuṭaṉ iṇaikkappaṭṭu ceyyappaṭum pōtu irattattil carkkarai aḷaviṉai camappaṭuttukiṟatu. Taimas, tairāyṭu, ciṟunīrakaṅkaḷ, kaṇaiyam ākiyavaṟṟait tūṇṭukiṟatu. - Malai nilaiyil toṭaṅkuṅkaḷ. - Uṅkaḷ valatu muḻaṅkālai uyartti, uṅkaḷ iraṇṭu kaikaḷāl piṭittuk koḷḷuṅkaḷ. - Mūccai naṉṟāka uḷḷiḻuṅkaḷ. - Piṉpu veḷiyēviṭuṅkaḷ. - Aṭuttu mūccai uḷḷiḻukkumpōtu, uṅkaḷ kaikaḷaik kīḻē koṇṭu ceṉṟu, uṅkaḷ valatukāl pātattaip piṭittukkoḷḷuṅkaḷ. - Piṉ mūccai veḷiyil viṭuṅkaḷ. - Valatu kālai muṉ nōkki utaiyuṅkaḷ. - Uṅkaḷ valatu kālai 90 ṭikiri kōṇattil piṭittukkoḷḷuṅkaḷ. - Uṅkaḷ talaiyai uṅkaḷ valatu muḻaṅkālai nōkkit tāḻttuṅkaḷ. - Atē nērattil,uṅkaḷ muḻaṅkaikaḷai pakkavāṭṭil kīḻē iṟakkuṅkaḷ. - Itē nilaiyil iruntukoṇṭu iraṇṭumuṟai mūccai naṉṟāka uḷḷiḻuttu piṉ veḷiyē viṭuṅaḷ. - Piṟaku itē muṟaiyai aṭutta kālukku māṟṟi ceyyuṅkaḷ. Mutaṉmuṟaiyākac ceypavarkaḷ, muḻaṅkālait taṅkaḷatu uṭaluṭaṉ oṭṭiyirukkumāṟu vaittuk koṇṭu ceytāl eḷitāka irukkum. Allatu piṉvarum muṟaiyil pascimōttācaṉam maṭṭum ceyyalām. Pascimōttācaṉam (Paschimottanasana): Nērāka niṉṟu koḷḷuṅkaḷ. - Pātaṅkaḷait taḷarvāka vaittuk koḷḷuṅkaḷ. - Iṭuppiliruntu muṉpakkamākak kuṉiyuṅkaḷ. - Uṅkaḷiraṇṭu kaikaḷaiyum kālkaḷukku iṇaiyākak kīḻē toṅkaviṭuṅkaḷ. - Uṅkaḷ mutuku vaḷaiyāmal taṭṭaiyāka irukkaṭṭum. - Uṅkaḷ kaikaḷ, uṅkaḷ kālkaḷukku iṇaiyāka irukkumāṟu pārttuk koṇṭu aintu muṟai mūcciṉai naṉṟāka uḷḷiḻuttu veḷiyil viṭuṅkaḷ. - Piṟaku metuvāka mutal nilaikkut tirumpuṅkaḷ. Cukācaṉam (Sukhasana): Metuvāṉa kaṭṭuppaṭuttappaṭṭa cuvācam uṅkaḷatu hārmōṉ ceyalpāṭukaḷai carippaṭuttukiṟatu. Aṭrīṉal curappiyai amaitippaṭuttukiṟatu. Pataṭṭattaik kuṟaikkiṟatu. Mēlum kuḻantaip pēṟṟukkup pintaiya maṉattaḷarcciyaik kuṟaikka utavukiṟatu. - Iraṇṭu aṅkulam aḷavukkuk kuṟaiyāta uyarattiṟku maṭittu taraiyil virikkappaṭṭuḷḷa virippiṉ mītu amarntu koḷḷuṅkaḷ. - Cam'maṇamiṭṭu amarntu koḷḷuṅkaḷ. - Uṅkaḷ kaikaḷai uṅkaḷ toṭaikaḷ mītu vaittuk koḷḷuṅkaḷ. - Uḷḷaṅkaikaḷ mēl nōkki irukkaṭṭum. - Naṉṟāka nimirntu uṭkāruṅkaḷ. Āṉāl iṭuppu taḷarvākavē irukkaṭṭum. - Uṅkaḷatu mūccai uḷḷiḻuttuk koṇṭē uṅkaḷ mukavāykkaṭṭaiyaiyum, mutukuttaṇṭaiyum muṉṉōkki nakarttuṅkaḷ. - Atēnēram mūccai naṉṟāka viraivāka veḷiviṭuṅkaḷ. Mutukai muṉṉōkki vaḷaiyuṅkaḷ. - Itē muṟaiyai tirumpat tirumpa ceyyuṅkaḷ. Mūcciṉai uḷḷiḻuttu veḷiviṭum nērattai 30 viṉāṭikaḷ eṉṟu cīrākap pēṇuṅkaḷ. Muttiraikaḷ (Mudras): Im'muttiraikaḷ piṭyūṭṭari maṟṟum pīṉiyal curappikaḷait tūṇṭa utavum. - Uṅkaḷ uḷḷaṅkaikaḷ iraṇṭaiyum oṉṟākac cērttu piraṇām muttiraikkuk koṇṭu vāruṅkaḷ. Uṅkaḷ kai kaṭṭai viralkaḷ iraṇṭum uṅkaḷ neñciṉaittoṭum aḷavil irukkavēṇṭum. Ippōtu uṅkaḷ kaṭṭaiviralkaḷai valatu pakkam, kīḻē, iṭatupakkam, mēlē eṉṟu cuḻaṟṟuṅkaḷ. Itē muṟaiyaittirumpa ceyyuṅkaḷ. - Aṭuttu uṅkaḷ kaikaḷait tiṟaṅkaḷ. Uṅkaḷ kaṭṭai viralaiyum āḷkāṭṭi viralaiyum ñāṉa muttiraiyil iruppatu pōla cērttu vaiyuṅkaḷ. Ippōtu viral nuṉikaḷ iraṇṭaiyum cērttu aḻuttuṅkaḷ. - Aṭuttu naṭuviralaiyum kaṭṭai viralaiyum cērttu aḻuttuṅkaḷ. - Aṭuttu mōtiraviralaiyum kaṭṭai viralaiyum cērttu aḻuttuṅkaḷ. - Aṭuttu cuṇṭu viralaiyum kaṭṭai viralaiyum cērttu aḻuttuṅkaḷ. - Mīṇṭum āḷkāṭṭi viralaiyum kaṭṭai viralaiyum cērttu aḻuttuṅkaḷ. - Icceyalkaḷai uṅkaḷ cuvācattuṭaṉ iṇaittu orē cīrākac ceytuvāruṅkaḷ. Ippayiṟciyai ovvoru cuṟṟiṉaiyum iraṇṭu nimiṭaṅkaḷ ceyyalām.
Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips : http://NanbanTamil.blogspot.com
No comments:
Post a Comment