தித்திக்கும் சர்க்கரை பொங்கல் - Recipes To Sweeten Your Sankrant / Pongal
பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் மற்றும் கரும்பு தான் ஸ்பெஷல். அதிலும் அந்த பொங்கலை புத்தம் புதிய அரிசியால், வெல்லம், நெய், பால் போன்றவற்றை வைத்து, சுவையாக அதிகாலையில் எழுந்து வைத்து, சூரியனுக்கு படைத்து வணங்குவர். பொங்கலின் ஸ்பெஷலே, பொங்கல் பொங்குவது தான். அவ்வாறு பொங்கல் பொங்கும் போது, வீட்டில் உள்ள அனைவரும் "பொங்கலோ பொங்கல்" என்று சொல்லி மகிழ்வர். உண்மையிலேயே, பொங்கல் பண்டிகையானது அனைவரது மனதிலும் பெரிய குதூகலத்தை ஏற்படுத்தும். மேலும் பொங்கலோடு தேங்காய் துருவலை சேர்த்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
பொங்கலின் மற்றொரு சிறப்பான கரும்பிற்காகவே பொங்கல் பண்டிகைக்கு காத்துக் கொண்டிருப்பார்கள். ஏனெனில் இந்த பண்டிகையின் போது கரும்பு மிகவும் விலை குறைவில் கிடைக்கும். அத்தகைய சிறப்புடன் இருக்கும் பொங்கல் பண்டிகையின் போது வைக்கப்படும் சர்க்கரைப் பொங்கலை சிலருக்கு சரியான சுவையில் வைக்கத் தெரியாது. அத்தகையவர்களுக்கு அந்த சர்க்கரைப் பொங்கல் எப்படி செய்வதென்று கீழே செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, சர்க்கரைப் பொங்கலை வைத்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷத்துடன் கொண்டாடி மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1/2 கிலோ
பாசிப்பருப்பு - 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் - 3/4 லிட்டர்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
வெல்லம் - 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் - 150 கிராம்
பச்சை கற்பூரம் - 1 சிறிய கட்டி (பொடி செய்து கொள்ளவும்)
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் ஊற வைத்து, பின் கழுவிய நீரை தனியாக ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும். வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடி மற்றும் பச்சை கற்பூரத்தை போட்டு ஒரு முறை கிளறி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி!!!
குறிப்பு : பொங்கலை மண்பானையில் செய்தால், அதன் சுவைக்கு அளவே இருக்காது. எனவே முடிந்தவரை மண்பானையில் செய்யவும்.
-----------
Ingredients :
Raw rice - 1 / 2 kg
Pacipparuppu - 50 grams ( washed with water )
Milk - 3 / 4 liters
Cashew - 10
Dry grapes - 10
Sugar - 600 grams ( powder please )
Ghee - 150 g
Menthol - 1 small tumor ( Make powdered )
Cardamom powder - 1 / 2 teaspoon
Method :
The rice is first soaked in water , then washing with water alone should be poured into a pan . Pongal pot or bowl to hold the soil and then put in the oven , and washing with water, milk and rice to fill the role . Towards the well- boiled furiously when it comes , it takes a bit of water , then put the rice and pacipparuppai , to dig a well . While another put the skillet in the oven , pour the ghee , cashews and dry , put a grape , roasted separately to keep.
Steamed rice , which is holding the roasted cashews , dry grapes and a generous pouring ghee and Freddie , then the powdered sugar , put on hold , to dig a well . Sugar is dissolved , stirring once put camphor and cardamom powder and green to drop . Delicious sugar Pongal Ready Now !
Note : If the mad stone Pongal , the taste will not be effective . So as to the mad stone .
-----------
Recipes To Sweeten Your Sankranti / Pongal
As the winter is receding, we have the auspicious festival of Makar Sankranti. This festival is celebrated across the country but it is named differently everywhere. For example, down South Tamilians call it Pongal which is their largest harvest festival. And all of know that no Indian festival is complete without food, especially the Indian desserts. Most of the recipes for Sankranti are sweet dishes. The main Pongal recipe of Sakkarai Pongal is also a sweet dish made with rice, jaggery and dal. The Sankranti recipes that hail from Eastern India, mainly the states of Odisha, Bengal and Assam are also very popular. These Sankranti recipes can be grouped together as pithe recipes.
Apart from the main sweet pongal, there are other recipes from Southern India that are prepared specially for this festival. If we take a pan India view, then kheer recipes are very popular for Sankranti. So we present a whole list of Sankranti recipes that have been picked from all parts of India.
Sweet Pongal
The sweet Pongal is made with rice, dal and flavoured with cardamom, nutmeg and cashew nuts. It is the main dish prepared for the Tamil festival of Pongal.
Patishapta
In patishapta we make a coconut filling inside the rice flour roll. The coconut filling can be made with jaggery, sugar or kheer. Patishapta is one of the Bengali sweets that can also be called coconut rolls.
Phirni
Phirni is a rice pudding and common sweet dish during the festivals. Although Phirni is more popular as a Ramzan recipe, it is also made during Makar Sankranti in Rajasthan.
Sabudana Kheer
For those who are fasting, Sabudana kheer is the best Sankranti recipe. You are allowed to eat sabudana even when you are fasting and it is a healthier replacement for rice in the kheer.
Tamarind Gojju
Gojju is a famous south Indian side dish and we usually have this with rice & khara pongal. Tamarind Gojju is made of tangy tamarind juice and can be preserved in an air tight container for atleast two days.
Bhapa Pitha
Bhapa pitha is a special sweet dish that is prepared usually on the occasion of Makar Sankranti. This unique pitha is not fried like most other varieties but steamed in a typical Bengali style.
Kesar Pista Kheer
Kesar pista kheer is mainly popular for its lovely aroma and flavouring. It is one of those recipes that are popular in all the Indian states.
Till Pitha
This is a special kind of pitha that is made with sesame seeds. The flavour of this dish is crisp and it is popular beyond the boundaries of Bengal.
Thanks, Wish you all a happy pongal
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips : http://NanbanTamil.blogspot.com
No comments:
Post a Comment