உலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் - Lose Weight With Dried Fruits
உலர் பழங்கள் என்பவை நீர்ச்சத்தை இழந்த பழங்கள். இந்த பழங்களில், கார்போஹைட்ரேட், சர்க்கரை மற்றும் பல சத்துக்கள் அடங்கி உள்ளன. பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் குங்கிலியம் போன்றவை உலர் பழங்களாகும். உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்துவதிலும், வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதிலும் உலர் பழங்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. உலர் பழங்களில் நல்ல ஆற்றல் கூறுகள் அடங்கி உள்ளன.
உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கடுமையான உடல் எடை குறைவிற்கு உட்பட்டவர்களுக்கும் உலர் பழங்கள் எடுத்துக் கொள்ள ஆலோசனை வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் இழந்த ஆற்றலை மீண்டும் பெற முடியும். கர்ப்பிணி பெண்களும், சின்ன குழந்தைகளும் உலர் பழங்களை எடுத்துக் கொள்ள வலியுறுத்தப்படுகின்றனர். இதனால் அவர்கள் உடலில் உள்ள சத்துக்கள் அதிகரிக்கின்றன.
பொதுவாக உடல் எடை அதிகரிப்பில் உலர் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் கொழுப்பு மற்றும் ஆற்றலுக்கான மூலக்கூறுகள் அதிக அளவில் உள்ளன. ஆனால் உடல் எடை குறைப்பிலும் உலர் பழங்கள் உதவுகின்றன. உலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பது என்பது ஒரு புதுமையான முறை. நமது உணவு முறையில் உலர் பழங்களை எடுத்துக் கொண்டு, உடல் எடைக் குறைப்பில் ஈடுபடும் போது, சத்துகளும்,ஆற்றலும் குறையாமல் உடல் எடையை குறைக்கலாம். உலர் பழங்களின் உதவியால் எடை குறைப்பதற்கான சில டிப்ஸ்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
அளவு
உலர் பழங்களில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அதிக அளவில் உள்ளது. இதனால் உலர் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொண்டால், உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்து விடும். இதனால் குறைவதற்கு பதில், உடல் எடை மிகுதியாக அதிகரித்து விடும். எனவே அதிக அளவிலான உலர் பழங்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உலர் பழங்களின் உதவியால் உடல் எடையை குறைப்பதற்கு, தினசரி உணவில் ஒரு சிறு கிண்ணம் அளவு மட்டும் உலர் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதற்கும், சத்துகளை பெறுவதற்கும் ஒரு கிண்ணம் போதுமானது.
குறித்த நேரத்தில் குறித்த பழங்களை எடுத்துக் கொள்ளுதல்
உலர் பழங்களின் உதவியால் எடையை குறைப்பதற்கு பிரித்தாளும் கொள்கையை பின்பற்ற வேண்டும். உலர் பழங்களை எந்த நேரமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. உதாரணமாக பாதாம் பருப்பை சிறிதளவு நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, அதிகாலையில் உட்கொள்ள வேண்டும். பாதாம் பருப்பில் அதிக அளவிலான ஆற்றல் மூலக்கூறுகள் உள்ளன. இவை உடலின் வளர் சிதை மாற்றத்தை தூண்டுகின்றன. அது போலவே குங்கிலியம் மற்றும் உலர் அத்தி போன்றவற்றை மதிய உணவின் போது உட்கொள்ள வேண்டும். இது போல ஒவ்வொரு உலர் பழ வகைகளையும் பிரித்து, அதற்குரிய நேரங்களில் உண்ண வேண்டும். அனைத்தையும் ஒரே நேரத்தில் உண்ண கூடாது.
பிஸ்தா பருப்பு
பிஸ்தா பருப்பு என்பது உடல் எடையை குறைக்க மிகவும் உதவுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்பு நிறைய நல்ல கொழுப்புசத்து, நார்ச்சத்து, புரதச்சத்துகளை கொண்டுள்ளது. பிஸ்தா பருப்பில் உள்ள கொழுப்பு சத்துக்கள் அனைத்தையும் நமது உடல் உறிஞ்சாது. அது குறைவான கலோரிகள் உள்ள உணவை உருவாக்குகிறது. எனவே ஒரு நல்ல டயடிற்கு தேவையான சிறந்த டிப்ஸ் என்னவென்றால், உலர் பழங்களில் இந்த பிஸ்தா பருப்பை அதிகமாக டயட்டில் பயன்படுத்த வேண்டும். இதனால் உங்கள் உடல் எடை நன்கு குறையும். அதிகமான பிஸ்தா பருப்பை எடுத்துக் கொண்டால், அதிகமாக எடை குறையும். உடல் எடையை குறைப்பதற்கான டயட்டில், இந்த பிஸ்தா பருப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பசி உணர்வு
உலர் பழங்களில் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து உள்ளது. ஒரு கிண்ணம் நிறைய உலர் பழங்களை எடுத்துக் கொண்டால் அது பசியை போக்க பயன்படுகிறது. குறைவான பசி, பிற உணவுகளை குறைவான அளவில் உட்கொள்ள உதவுகிறது. கொழுப்பு நிறைந்த உணவுகளான சிப்ஸ், பால் ஆடை கட்டி, ஜங்க் புட்ஸ் போன்றவைகளுக்கு பதிலாக சிறந்த உணவான உலர் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். தேவையான அளவு உணவுகளை மட்டும் உட்கொள்ள இடமளிக்கிறது உலர் பழங்கள். தேவையான அளவு உலர் பழங்களை சாப்பிடுவது, மட்டுமே உடல் எடையை குறைக்க உதவும்.
பிற நன்மைகள்
உலர் பழங்கள் உடல் எடையை குறைப்பதை தவிர, வேறு சில நன்மைகளையும் ஏற்படுத்துகிறது. உதாரணமாக பாதாம், அறிவு கூர்மையை ஏற்படுத்தி மன வளர்ச்சியை அதிகரிக்கிறது. உலர் அத்திப் பழங்கள் உடல் சோர்வுக்கும், சர்க்கரை நோய்க்கும் மற்றும் இரத்த ஓட்டத்திற்கும் நல்லது. குங்கிலியம் தோலிற்கும், உடல் செயற்பாட்டிற்கும் நல்லது. இது உடல் சூட்டை தணிக்கவும் பயன்படுகிறது. பாதாம் பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடலாம். முந்திரிப்பருப்புகள் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் அது அதிக அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புச்சத்துக்கள் கொண்டுள்ளது. முந்திரிப்பருப்பை இந்த எடை குறைக்கும் டயட்டில் இருந்து எடுப்பது நல்லது.
----------------------
Lose Weight With Dried Fruits
Dry fruits are fruits which lose all the moisture content. The fruit becomes rich in nutrients, carbohydrates and sugars. Dry fruits generally include almonds, cashew, pistachios, resins, etc.
Dry fruits have been considerable beneficial for improving health and body metabolism. Dry Fruits have good energy content in them. People who have been suffering with diseases and lost drastic weights are advised to intake a lot of dry fruits to make up for the lost energy. Pregnant women and small children are also recommended to have dry fruits for increasing the nutrients.
Dry fruits are generally considered good for weight gain. Dry fruits are rich in fat and energy. Losing weight with dry fruits is also possible.
The concept of weight loss with dry fruits is a little new. Dry fruits diet can be adopted for losing weight without losing any nutrient content from the body. Some diet tips are discussed below to help you lose weight using dry fruits.
Quantity – Dry fruits are rich in carbohydrates and sugar. Over eating of dry fruits will lead to increase in fats in the body. The weight will increase drastically rather than decrease. Therefore, use this diet tip and avoid consuming large quantities of dry fruits. To lose weight with dry fruit diet, include a bowl of dry fruits for your meal. A bowl is enough to keep the energy level and nutrient level of your body.
Fixed fruits at fixed timings – To lose weight with dry fruits only, use the divide and rule policy. Dry fruits should not be eaten anytime. For example, to utilize all the nutrients from almonds soak them overnight in water and eat them early in the morning. Almonds are high source of energy and they will boost your body metabolism. Similarly eat dry fruits like resins and dried figs during lunch. Divide each dry fruit type and do not eat all at the same time.
Pistachios – It is proven that pista or pistachios are good for weight loss. Pistachios are rich in healthy fats, nutrients and proteins. The fats of pistachios are not completely absorbed by our body, thus making them low calorie foods. A good diet tip for losing weight using dry fruits is to include more pistachios in your diet. The more the pistachios the more you will lose your weight. Pistachios are the best dry fruits for weight loss diet plan.
Hunger cravings – Dry fruits are rich in carbohydrates and fats. A bowl full of dried fruits can reduce hunger cravings. The lesser the cravings, the lesser intake of other foods. Dry fruits are a good option against other fat foods like chips, cheese and junk food. Dry fruits diet will help to ingest the necessary quantity of food alone. The important diet tip to follow here is to eat dry fruits in necessary amount. This tip will be useful for losing weight with dry fruits alone.
Other benefits – Dry fruits have many other benefits apart from weight loss. For example, Almonds are good for making the brain sharper and improving mental abilities. Dried figs are good for weakness, diabetes and blood virculation. Resins are also good for skin and body functioning. Resins help to reduce body heat as well. As almonds resins are also supposed to be soaked overnight and eaten. Cashew should not be eaten much as they have high calorie content and fat content. Avoid cashew in the weight loss diet plan.
Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips : http://NanbanTamil.blogspot.com
No comments:
Post a Comment