Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday, 31 May 2013

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள் - foods fight fatigue pregnancy

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் உணவுகள்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது களைப்பு மற்றும் சோர்வு அடிக்கடி ஏற்படும். அதிலும் பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு சோர்வு ஒரு பெரும் தொந்தரவாக இருக்கும். ஏனெனில் விரும்பிய படி எதையும் செய்ய முடியாதவாறு இருக்கும். எப்போது பார்த்தாலும், சோம்பேறித்தனமாக, மயக்க நிலையில், உடலில் சக்தியின்றி சோர்வுடன் இருக்க நேரிடும். பெரும்பாலும், இந்த பிரச்சனை முதல் மூன்று மாதங்களிலும், இறுதி மூன்று மாதங்களிலும் தான் இருக்கும்.

அதிலும் முதல் மூன்று மாதங்களில் ஏற்படுவதற்கு பெரும் காரணம், ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் குமட்டல், வாந்தி மற்றும் அதிகப்படியான புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் சுரப்பு போன்றவை சோர்வை ஏற்படுத்துகின்றன. மேலும் இறுதி மூன்று மாதத்தில் ஏற்படுவதற்கு அதிகப்படியான உடல் எடை தான். அதுமட்டுமல்லாமல் முதுகு வலி, போதிய தூக்கமின்மை, தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவையும் ஏற்படுவதால், விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடுகிறது.

எனவே கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு முன் கவனமாகவும், நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, அவ்வப்போது சிறு உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் சக்தி கிடைத்து, புத்துணர்வுடன் இருக்கலாம். இப்போது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சோர்வை போக்கும் சில உணவுகளை சிலவற்றை பார்ப்போம்.


கடல் உணவுகள்
கடல் உணவுகளில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதே சமயம் அதில் மெர்குரி அதிக அளவில் இருப்பதால், இதனை அளவாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், அது தீங்கை விளைவிக்கும்.




தயிர்
தயிரில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆரோக்கியமான ப்ரோ-பயோடிக் பாக்டீரியாவும் நிறைந்திருப்பதால், இது சோர்வை தடுக்கும்.




பசலைக் கீரை
கீரைகளில் பசலைக் கீரையில் வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் புரோட்ஐன்கள் நல்ல அளவில் உள்ளன. அதே சமயம் இதில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சோர்வை நிச்சயம் தடுக்கலாம்.




வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இந்த ஆசிட் உடலில் ஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரித்து, உடல் வலி மற்றும் பிரச்சனையில்லாத பிரசவத்தைக் கொடுக்கும்.




வெந்தயக் கீரை
கர்ப்பமாக இருக்கும் போது உடல் வலிமையின்றி இருக்கும். எனவே நன்கு வலிமையோடும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் சோர்வு நீங்குவதோடு, எலும்புகள் நன்கு வலிமைபெறும். இத்தகைய கால்சியம் வெந்தயக் கீரையில் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் இந்த கீரையை அதிகம் சாப்பிடுவது நல்லது.




பாதாம்
இந்த ஆரோக்கியமான நட்ஸில், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும் மற்றும் சிசுவின் வளர்ச்சிக்கும் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது.




ஆரஞ்சு
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிக அளவில் உள்ளன. எனவே சோர்வினை நீக்குவதற்கு, பெண்கள் ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.




காராமணி
பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இரத்தச் சோகையினால், சோர்வு ஏற்படும். எனவே இரத்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு காராமணியை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது.




டோஃபு
டோஃபுவில் கலோரி மற்றும் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. மேலும் இதில் கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. எனவே கர்ப்பமாக இருக்கும் போது ஏற்படும் சோர்வினைப் போக்குவதற்கு, டோஃபுவை அதிகம் சாப்பிட வேண்டும்.




பார்லி
பார்லியில் இரும்புச்சத்து அதிகம் அடங்கியுள்ளது. இதுவும் சோர்விலிருந்து விடுதலை தரக்கூடிய உணவுகளில் ஒன்றாகும்.




கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் சோர்வை உணரும் போது கேரட்டை ஜூஸ் போட்டு குடித்தால், சோர்வை தவிர்க்கலாம்.




நூல்கோல் கீரை
கர்ப்பத்தன் போது கால்சியம் குறைபாடு இருந்தால், அது சோர்வை உண்டாக்கும். எனவே இத்தகைய குறைபாட்டை போக்குவதற்கு, நூல்கோல் கீரையை சாப்பிட்டால், சோர்வு நீங்கி, உடல் வலிமையோடு இருக்கும்.




மாதுளை
இந்த சிவப்பு நிற மாதுளைப் பழம் இரத்த சுழற்சியை அதிகரித்து, சோர்வை நீக்குவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும்.



நவதானியங்கள்
தானியங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை சாப்பிட்டால், வயிறு நிறைந்திருப்பதோடு, செரிமானப் பிரச்சனை இல்லாமலும் இருக்கும்.




ப்ராக்கோலி
இந்த சூப்பர் உணவில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் அதிகம் நிறைந்திருப்பதோடு, சோர்வைப் போக்கும் உணவுகளிலும் சிறந்ததாக உள்ளது.


Share your comments here

Thanks

No comments:

Post a Comment