1. சேலம் மட்டன் குழம்பு
மட்டன் குழம்புகளில் நிறைய ஸ்டைல்கள் உள்ளன. அதிலும் தமிழ்நாட்டிலேயே பலவாறு மட்டன் குழம்பை சமைக்கலாம். ஒவ்வொரு ஸ்டைலும் ஒவ்வொரு ருசியைத் தரும். அவற்றில் ஒன்று தான் சேலம் மட்டன் குழம்பு. இது நன்கு சுவையோடு சமைக்கும் போது வீடே கமகமக்கும் வகையில் இருக்கும்.
இப்போது சேலம் ஸ்டைலில் எப்படி மட்டன் குழம்பு செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
மட்டன் - 3/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 மூடி (துருவியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 10
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் மட்டனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சிறிது கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகு சேர்த்து வறுத்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் உள்ள எஞ்சிய எண்ணெயில் பாதி வெங்காயத்தை போட்டு வதக்கி இறக்க வேண்டும். அடுத்து, மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் வதக்கிய அனைத்தையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு, நைஸாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் தனியாக எடுத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, மீதமுள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு 3-5 நிமிடம் வதக்கிவிட வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வேக வைத்துள்ள மட்டனை ஊற்றி, ஒரு கொதி விட வேண்டும். பின் அத்துடன் தேங்காய் கலவையை தவிர, அரைத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து, உப்பு போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் நைஸாக அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், அருமையான சேலம் மட்டன் குழம்பு ரெடி!!!
Make a Delicious Salem Mutton Curry using this simple recipe from Awesome Cuisine.
Make a Delicious Salem Mutton Curry using this simple recipe from Awesome Cuisine.
2. சிக்கன் பூனா
சிக்கன் பூனா வட இந்தியாவில் மிகவும் காரமான மற்றும் சுவையான ஒரு அசைவ உணவு. இதன் செய்முறை சற்று வித்தியாசமாக இருக்கும். மேலும் இதில் சிக்கனை கொஞ்சம் கொஞ்சமாக மெதுவாக வேக வைப்பதால், இதன் சுவை இன்னும் அதிகமாகும்.
இந்த ரெசிபி சிக்கனை வித்தியாசமாக சமைக்க நினைப்போருக்கு சிறந்ததாக இருக்கும். இப்போது அந்த சிக்கன் பூனாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
பூண்டு - 12 பற்கள்
வரமிளகாய் - 10
கிராம்பு - 4 பச்சை
ஏலக்காய் - 4
பட்டை - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை: முதலில் பூண்டு, வரமிளகாய், கிராம்பு, ஏலக்காய், பட்டை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் சிக்கனை நன்கு கழுவி, அதில் உள்ள ஈரத்தை பேப்பர் டவல் கொண்டு முற்றிலும் எடுத்துவிட வேண்டும்.
பின்பு சிக்கன் துண்டுகளின் மேல் எண்ணெய் தடவி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை தேய்த்து, 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டை போட்டு, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளித்து, வறுத்த சிக்கன் துண்டை சேர்த்து, உப்பு, தயிர் மற்றும் 1/ கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி விட வேண்டும்.
விசில் போனதும், அதனை திறந்து குளிர வைத்து, அதனை மற்றொரு வாணலியில் ஊற்றி, 5 நிமிடம் சிக்கன் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான சிக்கன் பூனா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாற வேண்டும்.
English: Chicken bhuna is a spicy and delicious non-vegetarian dish from North India. The key factor in this easy chicken bhuna recipe is that, the chicken is first grilled and then cooked with a lot of spices. If you are looking forward to prepare an easy chicken bhuna dish at home, here is a simple recipe which you can try without much hassle.
3. கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
3. கேரளா ஸ்டைல்: மட்டன் குருமா
மட்டன் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய அசைவ உணவுகளில் ஒன்று. இது மிகவும் சுவையானதும் கூட. மட்டனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதிலும் மட்டன் குருமா, மட்டன் சுக்கா, மட்டன் குழம்பு என்று பல. இவை அனைத்துமே மிகவும் சுவையானது. இத்தகைய மட்டனை பல ஸ்டைலில் சமைக்கலாம். அதில் எப்போதும் செட்டிநாடு தான் பிரபலமானது.
இப்போது அவற்றில் ஒரு ஸ்டைலான கேரளா ஸ்டைலில் மட்டன் குருமாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து பார்த்து செய்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (நறுக்கியது)
பூண்டு - 5 பல் (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப்
பட்டை - 1
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும்.
பின்பு அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மட்டனை நன்கு கழுவி, அதனை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
இறுதியில் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட், தேங்காய் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின்பு அத்துடன் வினிகர், முந்திரி பேஸ்ட் சேர்த்து, குழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கேரளா ஸ்டைல் மட்டன் குருமா ரெடி!!! இந்த குருமா சாதம் மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட ஏற்றதாக இருக்கும்.
4. நீலகிரி சிக்கன் குருமா
4. நீலகிரி சிக்கன் குருமா
எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் குழம்பை சாப்பிட்டு போர் அடித்திருக்கும். அவ்வாறு ஒரே மாதிரியை செய்து சாப்பிடுவதை விட்டு, தமிழ்நாட்டில் உள்ள வித்தியாசமான சில ஸ்டைல்களிலும் சிக்கனை செய்து சாப்பிடலாம். அவற்றில் ஒன்று தான் நீலகிரி ஸ்டைல். இதுமிகவும் குளிர்ச்சியான மலைப் பிரதேசம் என்பதால், இங்கு சற்று காரமாக சாப்பிட்டால் தான் நன்றாக இருக்கும்.
சரி இப்போது அங்கு செய்யப்படும் சிக்கன் குருமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...:
சீரகம் - 1 டீஸ்பூன்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கசகசா - 1 டீஸ்பூன்,
பட்டை - 1 இன்ச்,
ஏலக்காய் - 2,
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்,
முந்திரி - 8,
பச்சை மிளகாய் - 4,
கொத்தமல்லி - 3
டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
புதினா - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது),
தண்ணீர் - 3 1/2 கப்
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, அத்துடன் முந்திரி, தேங்காய், புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேத்துஇ 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன் துண்டுகளை போட்டு, 2 நிமிடம் பிரட்டி, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்
இப்போது சுவையாக நீலகிரி சிக்கன் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
English: The name of the Nilgiri Chicken Korma recipe hails from the famous blue mountains of South India- the Nilgiris. This is a simplified version of the recipe but the delicious combination of the flavours will definitely tingle your taste buds. Here is the recipe for Nilgiri chicken korma.
5. புதினா இறால் குழம்பு
5. புதினா இறால் குழம்பு
தினமும் சைவ உணவுகளை சாப்பிட்டு போர் அடித்தவர்கள், அவ்வப்போது அசைவ உணவுகளையும் சமைத்து சாப்பிட வேண்டும். அதிலும் இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். குறிப்பாக இது கோடைகாலம் என்பதால், உடலுக்கு புத்துணர்ச்சியையும், குளிர்ச்சியையும் தரும் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.
எனவே இவைகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஒரு புதுவிதமான ரெசிபியான புதினா இறால் குழம்பை செய்யலாம். இவை மிகவும் சுவையுடன் இருப்பதோடு, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால், அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த புதினா இறால் குழம்பின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இறால் - 200 கிராம்
புதினா - 1 சிறிய கட்டு (சுத்தம் செய்தது)
கொத்தமல்லி - 1/2 கட்டு (சுத்தம் செய்தது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 5 பற்கள்
பச்சை மிளகாய் - 1-2
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் பால் - 100 மி.லி
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 1/2 கப்
செய்முறை: இறாலை நன்கு கழுவி, அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகப் பொடி, மல்லி பொடி, இஞ்சி, பூண்டு மற்றும் 1 வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் பாலை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்பு ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்து, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, இறால் வெந்ததும், தீயை அணைத்து இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான புதினா இறால் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
Lets take a look at how to prepare this fresh and tasty prawn curry with mint.
Thanks
No comments:
Post a Comment