Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday, 23 May 2013

வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - health benefits of banana


வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்



வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.

அவ்வாறு சாப்பிட வாங்கும் வாழைப்பழத்தை கனிந்ததாகவே வாங்கினால், அது சீக்கிரம் பாழாகிவிடும். ஆகவே சிலர் காயாக வாங்குவார்கள். அத்தகையவர்கள் அதனை விரைவில் பழுக்க வைப்பதற்கு ஒரு சூப்பர் டிப்ஸ் உள்ளது. அது என்னவென்றால், அதனை ஒரு ப்ரௌன் பேப்பரில் போட்டு சுற்றிவிட்டால், சீக்கிரம் பழுத்துவிடும். மேலும் சிலர் ப்ரிட்ஜில் வைப்பார்கள். அவ்வாறு வைத்தால், அது கருப்பாக மாறிவிடும். அதற்காக சாப்பிட கூடாது என்பதில்லை. சிலருக்கு நிறம் மாறிவிட்டால், கெட்டுப் போய்விட்டது என்று தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்பதாலேயே தான்.

இவ்வாறு நன்கு கனிந்த வாழைப்பழத்தை பலவாறு சாப்பிடலாம். குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன. இப்போது அதில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.


அலர்ஜி
வாழைப்பழம் அலர்ஜியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. ஏனெனில் இதில் தீங்கற்ற அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கும்.



இரத்த சோகை
அதிகப்படியான இரும்புச்சத்து வாழைப்பழத்தில் இருப்பதால், இதனை சாப்பிட்டால், இரத்த சோகை நீங்கி, இரத்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.



அதிகப்படியான ஆற்றல்
வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களை அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட சொல்கிறார்கள்.




மலச்சிக்கல்
மலச்சிக்கலாம் பாதிக்கப்பட்டவர்கள், வாழைப்பழத்தை சாப்பிட்டால் குடலியக்கமானது சீராக இயங்கி, மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும்.



வயிற்றுக்கடுப்பு
மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.



தலைபாரம்
மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.




புகைப்பிடித்தலை நிறுத்த
வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களான வைட்டமின் ஏ1, பி6, பி12, சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உடலில் உள்ள நிக்கோட்டினை வெளியேற்ற உதவுவதோடு, புகைப்பிடித்தலை நிறுத்தவும் உதவியாக இருக்கும்.




மன அழுத்தம்
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடினின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.




குடல் கோளாறு
தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான நாள்பட்ட அல்சர் பிரச்சனை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்க கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும். மேலும் செரிமானமும் சீரான நடைபெறும்.



மூளை செயல்பாடு
பொட்டாசயிம் அதிகம் உள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டால், மூளையின் செயல்பாடானது அதிகரிக்கும். எனவே தினமும் காலையில் எழுந்து ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு, அன்றைய நாளை துவங்குங்கள்.




சிறுநீரக பிரச்சனை
வாழைப்பழத்தில் உள்ள குறைந்த அளவு புரோட்டீன் மற்றும் உப்பு மற்றும் அதிக அளவில் உள்ள கார்போஹைட்ரேட் சிறுநீரகத்தில் ஏற்படும் தீவிர பிரச்சனைகளை போக்கும். அதிலும் இந்த பழத்தை தொடர்ந்து மூன்று நாட்களில், ஒரு நாளைக்கு 8-9 பழங்கள் சாப்பிட்டால், எந்த ஒரு பிரச்சனையானாலும் போய்விடும்.



மாதவிடாய் பிரச்சனை
வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், அது மாதவிடாய் பிரச்சனைகளை குணமாக்க பெரிதும் உதவும். அதிலும் அதிகப்படியான இரத்தப் போக்கால் அவஸ்தைப்படுபவர்கள், வாழைப்பூவை சாப்பிட்டால், புரோஜெஸ்ட்ரோனின் அளவு அதிகரித்து, அதிகப்படியான இரத்தப் போக்கு குறையும்.



எடை குறைய உடல் எடை அதிகம் உள்ளவர்கள், டயட்டில் வாழைப்பழத்தை சேர்த்தால், உடல் எடை குறையும்.



இதய நோய்
வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள செல்களில் இருக்கும் எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் நீர்மத்தை சீராக வைத்து, இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோயான மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதை தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால், 40% பக்கவாதம் வருவது குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.




சிறுநீர் கோளாறு
வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடித்தால், சிறுநீரக கோளாறை போக்கலாம். இந்த ஜூஸ் சிறுநீரகம் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கும். குறிப்பாக சிறுநீரக கற்களை போக்குவதற்கு சிறந்த நிவாரணி.




Health Benefits Of A Banana


Have a banana each day to keep the doctor away. Apart from being healthy bananas are also very good to taste. Indulge in the creamy fresh texture of the bananas as it is available throughout the year. A banana has many health benefits. You can easily grab one and carry it on the way to your office. But there are many misconceptions about this healthy fruit. Many think that it can make you fat. But this is not at all the case. Lets check out some benefits of banana and shed all misconceptions.

Energy- A banana can make you high on energy. Bananas are rich in carbohydrates and thus it is easily broken down to release energy. Also being a rich source of vitamins and minerals it is an excellent food before or after a workout. Two to three bananas are enough to make up for the energy lost during one or two hours of workout. Banana provides a lot of nutrition and it is good if you have at least one regularly. Have a banana in between meals instead of snacking on any unhealthy junk food.


Improves Bowel Movement- Banana is rich in a kind of fibre that improves bowel movement and reduces constipation. Among the other banana health benefits one is that it also reduces the effects of diarrhoea. Being a rich source of potassium it replenishes our body with natural electrolytes. A banana restores the normal digestive system with the help of a soluble polysaccharide named pectin.

Hangover- Reducing hangover is one of the most amazing banana benefits. Banana replenishes vitamins in the body to the ideal . You can either have them raw or blend them to have a juicy shake. It is also good if you want to quit smoking. It combats both physical and psychological effects of nicotine withdrawal.

Good For Blood- A banana is rich in nutrition. It promotes the growth of red blood cells in the body due to the iron present in it. It is also a source of vitamin B6, a crucial element in blood. It produces antibodies and boosts our immune system. So if you are anaemic, have at least one to two bananas a day for good health.

Bones- You must have heard that we need sufficient calcium to make our bones strong and healthy. A couple of bananas in a day is enough to do so. It is very good for growing children. Reap the benefits of banana as may be this is one of the cheapest fruits with so many health benefits.

Experience all the benefits of banana by making it a part of your regular meal.

Share your comments here

Thanks

1 comment:

  1. வாழைப்பழத்தின் மிக சிறந்த நன்மைகள்? see like best tips....https://www.healthtips4.com/2021/06/banana-fruit-benefits-in-tamil.html

    ReplyDelete