Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday, 17 May 2013

வடிவேலுவும் ஆணியும் - To control your angryness

வடிவேலுவும் ஆணியும்



இன்று உலக Hyper tension  தினம்.

இந்த   Hyper tension  வருவதால் என்ன நடக்கும்?

BP  எகிறும்.

BP  மிக உயரத்திற்கு  சென்று  High  BP என்ற உயரத்தை தொட்டால் எத்தனை எத்தனை  விபரீதங்கள்  உண்டாகும்  என்பது நம் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சம்.

இந்த BP  ஐ நம் கட்டுக்குள் வைத்திருக்க  வேண்டும்.
அதற்கான வழியும்  நம் கையில் தான் இருக்கிறது.
இந்த High BP  வருவதற்கு மருத்துவர்கள்  பல காரணங்கள் சொல்கிறார்கள்.
புகை பிடிப்பது, மது அருந்துவது , Stress ,  கோபம்  ....என்று பல.

பெரும்பாலானோருக்கு  மருத்துவர்கள்  கூறும்  அறிவுரை ,"ரொம்ப கோபப்படுவீர்களோ? கொஞ்சம் உங்கள் கோபத்தை குறைத்தால்  நல்லது." என்பது தான் .

ஆனால் நம்மால் கோபத்தை குறைத்துக் கொள்ள முடிகிறதா? 
இல்லையே!

நம் ஒவ்வொருவரும்  தினம் நம் எத்தனை முறை   கோபப்படுகிறோம் என்று கணக்கெடுத்து  எழுதி  அதை மீண்டும்  பார்த்தோமென்றால்  நம் மீதே நமக்கு கோபம் வந்து விடும்.

ஒரு சின்ன கதை நினைவிற்கு வருகிறது.பலருக்குத் தெரிந்திருக்கும்.(பெயர் மட்டும் என் கற்பனை)

வடிவேல்  என்பவர் உயர்ந்த பதிவியில் இருக்கும் ஒரு அதிகாரி.
ஆபீஸில் அவரைக் கண்டால்  சிம்ம சொப்பனம்  அத்தனை  கோபக்கார மனிதர்.பைல்  எல்லாம்  கண ஜோராய் பார்க்கும் 

 அவர் டாகடர்  கோபத்தை குறைக்க அறிவுரை கூற ,  அதற்கே அவர் கோபமானார்  என்றால் பார்த்துக் கொளுங்களேன்.

ஆனால் எப்படியாவது கோபத்தைக் குறைக்க என்னவெல்லாமோ செய்து பார்த்தார். யோகா, தியானம்......
ஒன்றிற்கும் அவர் கோபம்  மசியவேயில்லை.

இறுதியில் அவருடைய வயதான தந்தையிடம்  அடைக்கலமானார். வடிவல்.
கோபத்தை அடக்கும் வித்தையை கற்றுக் கொள்வதற்குத் தான்.

அவர் தந்தை ஒரு நல்ல உபாயம் கூறுகிறார்.
"ஒவ்வொரு முறை நீ கோபப் படும் போதும்  இந்த சுவற்றில்  ஆணியை அடித்து எண்ணிக் கொண்டு  வா? என்கிறார்.


மறு நாளே ஆரம்பிக்கிறார்.
அன்று இரவு தூங்கப் போவதற்கு முன்னால்  சுவரைப்  பார்த்தால்  14 ஆணிகள் .

பார்க்க , பார்க்க ,பயந்து போய் கோபத்தை கொஞ்சம் கொஞ்சமாக  கட்டுப் படுத்திக் கொள்கிறார். கோபத்தை விட தன்  ஆரோக்கியத்தின் மேல் பயம் அதிகமாகிறது.


அடுத்த நாளிலிருந்து கோபத்தை குறைக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து  ஒரு நல்ல நாளில்  கோபமே இல்லாத மனிதராக  மாறுகிறார்.

தன தந்தைக்கும் ஆணிக்கும்   நன்றி சொல்லிக் கொள்கிறார் வடிவேல்.

இல்லை. 
இன்னும் இந்தப் பயிற்சி முடிவடையவில்லை என்கிறார் அவர் தந்தை.

"நாளையிலிருந்து நீ கோபப்படாத ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு ஆணியாய் பிடுங்கி விடு " என்கிறார் தந்தை.

தந்தை  சொல் தட்டாத தனயனாய்  மறு நாளிலிருந்து செய்கிறார்  வடிவேல்.

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு  தந்தையே வடிவேலுவை கூப்பிட்டு சுவற்றைப் பார்க்க சொல்கிறார். 

வடிவேலுவும் மகிழ்ச்சியாக   ஆணிஎடுத்தபின்  இருக்கும்  சுவற்றில் இருக்கும்  ஓட்டைகளை   காண்பிக்கிறார்."
எத்தனை ஆணிகளை பிடுங்கிவிட்டேன் பாருங்கள் " என்கிறார் வடிவேல்.


"அதையே தான் நானும் சொல்கிறேன். நீ கோபப்ட்டதால்  சுவற்றில் மட்டுமல்ல உன் கோபத்துக்கு ஆளானவர்கள் மனதிலும் இப்படித்தானே  வடு ஏற்பட்டிருக்கும். பார்த்தாயா, உன் கோபத்தின் விளைவை " என்கிறார் தந்தை.

வடிவேலுவிற்கு  இப்பொழுது நன்றாகவே புரிகிறது தன்  தவறு .

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை முழுவதுமாக மாற்றிக் கொண்டு  தன் மன, மண , உடல் நலத்தையும் பேணிக் கொண்டு   தன்னை சுற்றியிருப்பவர்களின்  ஆரோக்கியமும் கெடாமல்  பார்த்துக் கொள்கிறார்.

எப்பவுமே "தந்தை சொல் மிக்க மந்திரமில்லை தான்"

நாமும் கோபத்தை  குறைத்து  Hyper tension  வராமல்  பார்த்துக் கொண்டு நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருப்போம்.


Thanks

No comments:

Post a Comment