உதயநிதி ஸ்டாலின் வைத்திருக்கும் கார்கள் - udayanithi stalin car collection
கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது. மொத்தம் 7 சி.பி.ஐ., அதிகாரிகள் ஸ்டாலின் வீட்டில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஹம்மர் காரை மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார்.
உலகின் மிக விலையுயர்ந்த எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக கருதப்படும் ஹம்மர் இந்தியாவில் கிரிக்கெட் வீரர் டோணி, ஹர்பஜன்சிங் மற்றும் சினிமா பிரபலங்களிடமும், பெரும் தொழிலதிபர்களிடமும் உள்ளது. ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட இந்த எஸ்யூவி கார் தவிர பல கார்களை உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தி வரும் கார்கள் பற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.
ஹம்மர் எஸ்யூவி
உதயநிதி ஸ்டாலினிடம் இருக்கும் ஹம்மர் கார் அமெரிக்க தயாரிப்பு. ஜெனரல் மோட்டார்ஸ் அங்கமான ஹம்மர் பிராண்டு எஸ்யூவி கார்கள் முதலில், ராணுவ வாகனமாக பயன்படுத்தப்பட்டு பின்னர் சாதாரண வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்யப்படும் மாடலாக விற்பனை செய்யப்பட்டது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார பிரச்னை காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெனரல் மோட்டார்ஸ் இந்த கார் உற்பத்தி 2010ம் ஆண்டுடன் நிறுத்திவிட்டது.
ஹம்மர் எஞ்சின்
உதயநிதி வைத்திருக்கும் இந்த ஹம்மர் எச்3 காரில் 3.7 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 239 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த எஞ்சினுடன் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைந்து பணிபுரிகிறது. இந்த கார் லிட்டருக்கு 4 கிமீ மட்டுமே மைலேஜ் தருமாம். ஆல் வீல் சிஸ்டம் கொண்ட இந்த எஸ்யூவி எந்தவொரு சாலைநிலையிலும் சிறப்பாக செல்லும் வகையிலான வடிவமைப்பை பெற்றது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி
உதயநிதி வைத்திருக்கும் ஹம்மர் எச்3 தென் ஆப்ரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடல். ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விலை
இந்த கார் கஸ்டமைசேஷன், சிறப்பு வசதிகள் மற்றும் இறக்குமதி வரி சேர்த்து ரூ.20 கோடி என கூறப்படுகிறது.
திரும்ப ஒப்படைக்க முடிவு
இந்த காரை சி.பி.ஐ., வசம் ஒப்படைத்துவிட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஸராட்டி கிரான்ட் டூரிஷ்மோ
உதயநிதி ஸ்டாலிடம் இருக்கும் மற்றொரு விலையுயர்ந்த கார் மஸராட்டி ஜிடிஓ. இந்த கார் பின்புற எஞ்சின் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் ரகத்தை சேர்ந்தது. 440 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.7 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.
மஸராட்டி ஜிடிஓ
இந்தியாவில் பெரிதும் விரும்பப்படும் கோடீஸ்வர கார்களில் ஒன்றான இது ரூ.1.5 கோடி விலை கொண்டது.
போர்ஷே கேயென் போர்ஷேவின்
மிகப் பிரபலமான எஸ்யூவிதான் கேயென். இந்த எஸ்யூவியில் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 500 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட இந்த பெட்ரோல் எஞ்சினுடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் துணை புரிகிறது.
போர்ஷே கேயென் விலை
ஆல்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த சொகுசு எஸ்யூவி ரூ.1 கோடி விலை கொண்டது.
எக்ஸ்5 விலை
இந்த சொகுசு கார் ரூ.80 லட்சத்தில் கிடைக்கிறது.
பிஎம்டபிள்யூ எக்ஸ் 5
பிஎம்டபிள்யூவின் சிறந்த கிராஸ்ஓவர் ரக எஸ்யூவிதான் எக்ஸ்5. 4.4 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த காரில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.
Thanks