ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம்
20 Health Benefits Of Apples
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர்
An apple a day keeps the doctor away. We all have heard the saying and totally believe that apples are loaded with several nutrients, vitamins and proteins that are required by the body. Nutritional and health benefits of apples clearly justify its 'apple a day' reputation. Taking an apple every day is an effective way to restore health and rejuvenate the body. Apples are highly nutritious with great store of fiber and immune-boosting Vitamin C antioxidants.
இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
Apples are good for the heart, prevents Alzheimer's Disease and cancer, decreases the risk of diabetes, reduces bad cholesterol levels, and boosts the immune system. You can have apple with milk, have its juice or add it as an ingredient in your dessert. Remember not to peel off apple's skin because it has a rich collection of antioxidants than the flesh.
இத்தகைய ஆப்பிள் உடலை ஆரோக்கியத்துடன் மட்டுமின்றி, சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. சிலருக்கு ஆப்பிள் சாப்பிட பிடிக்காது, அவ்வாறு சாப்பிட பிடிக்காதவர்கள் ஆப்பிளை ஜூஸ் போட்டு வேண்டுமென்றாலும் குடிக்கலாம். நாம் ஆப்பிள் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவில் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
Apples are good for the heart, prevents Alzheimer's Disease and cancer, decreases the risk of diabetes, reduces bad cholesterol levels, and boosts the immune system. You can have apple with milk, have its juice or add it as an ingredient in your dessert. Remember not to peel off apple's skin because it has a rich collection of antioxidants than the flesh.
குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்...
Start taking an apple a day, because health benefits of apples are too great to ignore. Lets take a look at few health benefits of apples.
Start taking an apple a day, because health benefits of apples are too great to ignore. Lets take a look at few health benefits of apples.
கெட்ட கொலஸ்ட்ரால்
ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
Reduce Bad Cholesterol
Apples contain plenty of pectin, a soluble fiber that reduces bad cholesterol. Pectin reduces the risk of atherosclerosis and heart diseases.
அல்சீமியர் நோய்
இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது.
Prevent Alzheimer's Disease
Prevent Alzheimer's Disease
This is another health benefit of apples. It contains quercetin, an antioxidant that protects brain cells from degeneration with neuro-protective effects.
நீரிழிவு
இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. எனவே நீரிழிவு உள்ளவர்கள், இதனை சாப்பிடுவது மிகவும் நல்லது.
Decreases the risk of diabetes
The phytonutrients and antioxidants in apples can regulate your blood sugar. Apple has a low Glycemic Index. In addition, the polyphenols in apple decreases absorption of glucose.
உடல் வலிமை
ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.
Boost your immune system
Apples are good source of immune boosting Vitamin C, which provides roughly 14 percent of your daily recommended intake of vitamins.
பெருங்குடல் புற்றுநோய்
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்தானது, பெருங்குடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்.
Protection Against Colon Cancer
Chemicals produced when fiber in apple is fermented in the colon can help fight the formation of cancer cells.
நோய் எதிர்ப்பு சக்தி
ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை உள்ளக்கியிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.
Increase body endurance
It is one of the health benefits of apple. An antioxidant called quercetin in apple provides endurance by increasing oxygen supply to the lungs.
கண்புரை
ஆப்பிளை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டால், கண்புரை நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
Prevents cataract
Increased intake of apples can help prevent the development of cataract due to its antioxidant property.
அழகாக சருமம்
ஆப்பிளில் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் இருப்பதால், அவை சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் தினமும் இதை சாப்பிட்டு வந்தால், அந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல் அழிவைத் தடுத்து, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவும்.
Great for radiant skin
Collagen and elastin in apple, is good for maintaining the youthful skin. Eating raw apples will increase the antioxidants in your body, which prevents cell and tissue damage.
இதயம்
ஆப்பிள் மற்றும் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவதால் இதய நோய் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
Protects your heart
This is one of the best health benefits of apples. Apples and apple juice may slow down oxidation that leads to heart diseases.
ஆரோக்கியமான பற்கள்
ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், வலுவிழந்து மற்றும் பொலிவிழந்து இருக்கும் பற்களை நன்கு பளிச்சென்று மின்ன வைப்பதோடு, ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளலாம்.
Offer whiter, healthier teeth
People who eat apples regularly are less likely to suffer from metabolic syndrome, which further reduces the risk of heart diseases and diabetes.
ஆஸ்துமா
ஆப்பிளில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஃபீனோலிக் ஆசிட்டுகள், மூச்சுக் குழாய்களில் இருக்கும் அடைப்புக்கள் அல்லது அழற்சியை நீக்கி, ஆஸ்துமா ஏற்படுவதை தடுக்கும்.
Reduce The Risk of Asthma
Phytochemicals in apples, such as flavanoids and phenolic acids, help clearing inflammation in the airways.
பார்கின்சன் நோய்
ஆப்பிளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மூளையில் உள்ள டோபமைன் உருவாக்கும் மூளை செல்களை அழித்து உண்டாகும், பார்கின்சன் நோய் ஏற்படுவதை தடுக்கும்.
Protect against Parkinson's Disease
Free radical-fighting power of the antioxidants in apples reduce chances of Parkinson's disease, characterised by a breakdown of the brain dopamine-producing nerve cells.
உயர் இரத்த அழுத்தம்
பொட்டாசியம் அதிகம் உள்ள ஆப்பிளில் உள்ளது. இந்த சத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எனவே இதனை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சாப்பிட்டால் நல்லது.
Controls High Blood Pressure
Apple is a rich source of potassium which help controlling high blood pressure. This reduces the risk of heart stroke.
எடை குறைவு
ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.
Weight loss
Antioxidants and pectin in fresh apples are responsible for getting you in shape. Polyphenols in apples may regulate the fat metabolism in people with relatively high Body Mass Index (BMI).
புற்றுநோய்
ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டுகளான க்யூயர்சிடின், நுரையீரல், மார்பகம் மற்றும் குடல் போன்றவற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
Apples fight cancer
Flavonoids like quercetin and triterpenoids in apples may slow down the development of cancers in the colon, lung and breasts.
வலுவான எலும்புகள்
ஆய்வுகளில் ஆப்பிளில் உள்ள ஃப்ளேவோனாய்டான ஃப்ளோரிட்ஜின் இருப்பதால், அவை இறுதி மாதவிடாய்க்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் எலும்புப்புரை ஏற்படுவதை தடுத்து, எலும்புகளை வலுவடையச் செய்யும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பெண்கள் ஆப்பிளை அதிகம் சாப்பிட வேண்டும்.
Bone Protection
Researchers believe that a flavanoid called phloridzin found only in apples may protect post-menopausal women from osteoporosis and also increase bone density. Boron in apples also strengthens bones.
மூளை
ஆப்பிள் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையில் நோய் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் மிகவும் குறைவு.
Good for your brain
Apple has been linked to acetylcholine production. It helps strengthening your memory and lowers your chances of developing brain diseases.
பித்தக்கற்கள்
ஆப்பிளில் இயற்கையாகவே மாலிக் ஆசிட் மற்றும் இதர மென்மைப்படுத்தும் பொருட்கள் அதிகம் இருப்பதால், இவை பித்தப்பையில் பித்தக்கற்கள் உண்டாவதை தடுக்கும்.
Prevent gallstones
Apples are naturally rich in malic acid and other important softening substances, which are extremely helpful in keeping gallstones under control.
குடலியக்க எரிச்சல்
அதிக நார்ச்சத்து ஆப்பிளில் இருப்பதால், இவை குடலியக்கத்தின் போது ஏற்படும் எரிச்சலைத் தடுக்கும்.
Neutralise irritable bowel syndrome
High fiber content in apples help neutralise irritable bowel syndrome.
இரத்த சோகை
தினமும் இரண்டு முதல் மூன்று ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், அனீமியா என்னும் இரத்த சோகையை சரிசெய்துவிடலாம். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கும்.
Treats anemia
Consuming two to three apples on a daily basis is helpful in treating anemia because of high iron content.
Thanks