டேப்லெட் கணினிகள் ஏன்
டேப்லெட் கணினிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளது. எல்லா எலெக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இப்பொழுது டேப்லெட் கணினிகளை வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம்காட்டிவருகின்றது. மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தான் முன்னிலையில் உள்ளது.சாம்சங் மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் தான் இதற்கு முன்னோடியாகவே திகழ்கிறது. ஆப்பிள் இந்த பட்டியலில் இல்லாமலும் இல்லை. டேப்லெட் கணினிகளை வாங்குவது அதிகரித்தாலும் சில விசயங்களை பார்த்துதான் வாங்கவேண்டும். டேப்லெட் கணினிகள் ஏன் வாங்கலாம்? சூப்பர் டிப்ஸ் இங்கே தரப்பட்டுள்ளது....
PDF போன்ற இ-புக் தரவுகளை படிப்பதற்கு டேப்லெட் கணினிகள் தான் சிறந்தவை என பலராலும் சொல்லப்படுகிறது. மேலும் இணையம் பயன்படுத்துவதற்கும் சிறந்தது.
டேப்லெட் கணினிகள் போர்டபிள் முறையில் செயல்படுகிறது. இதை எடுத்து செல்வது எளிது. பயன்படுத்துவது எளிது.
பழைய லேப்டாப்புகளை விட டேப்லெட் கணினிகள் சிறந்தவைகளே. நல்ல செயல்திறன் கொண்டவை.
பிசினஸ் மீட்டிங் போன்றவைகளில் கலந்துகொள்ளும்பொழுது உதவியாக இருக்கும். குறிப்புகள் எடுப்பது, சில நேரங்களில் பிரசன்டேசன் போன்றவைகளுக்கும் உதவும்.
இந்த டேப்லெட் கணினிகளில் போட்டோக்களை ஷேர் செய்வதெல்லாம் சுலபம்.
படங்களை பார்ப்பதற்கும், பாடல்களை ரசிப்பதற்கும் டேப்லெட் கணினிகள் வசதியானவை. வசதியாகவும் இருக்கும்.
டேப்லெட் கணினிகள் மிகவும் மலிவுவிலைக்கும் கிடைக்கிறது. தற்பொழுது வெளியாகும் லேப்டாப் கணினிகளின் விலையைவிட பல மடங்கு குறைவாகவும் கிடைக்கிறது.
பயணங்களில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்துவது எளிது.
பயணங்களில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்துவது எளிது. லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்தவே முடியாது. இது எடைகுறைவாகவும் வசதியாகவும் இருப்பதால், பயணங்களில் உறுதுணையாக இருக்கும்.
இது கண்டிப்பாக சிறப்பான அனுபவத்தை தருவதுடன், அதிநவீனத்துடன் வருங்காலத்தில் இருப்பதைப்போல் நம்மை உணரவைக்கும்.
------
5,000க்கும் குறைவான விலையில் ஆன்ட்ராய்டு போன்கள்
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அதிக விலைகொண்டவையாகவே இருக்கும். ஆனால் தற்பொழுது ஆன்ட்ராய்டு போன்களை விலை குறைவாகவே தயாரிக்கின்றன மொபைல் நிறுவனங்கள். இவ்வாறு தயாரிக்கப்பட்டு இந்திய மொபைல் சந்தைகளில் ரூ.5,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஆன்ட்ராய்டு போன்களின் தகவல்கள் மற்றும் விலை விவரங்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.இன்டெக்ஸ் அக்குவா எஸ்எக்ஸ் :
டூயல்சிம் வசதி,
3.5 அங்குல திரை,
1 GHz செயலி,
256 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
வைபை மற்றும் ப்ளுடூத் வசதிகள்,
விலை ரூ.4,490
மைக்ரோமேக்ஸ் போல்ட் A51:
டூயல்சிம் வசதி,
3.5 அங்குல திரை,
832 MHz செயலி,
256 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
2 எம்பி கேமரா,
வைபை மற்றும் ப்ளுடூத் வசதிகள்,
விலை ரூ.4,400
லாவா ஐரிஸ் 349:
3.5 அங்குல திரை,
1 GHz செயலி,
256 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
2 எம்பி கேமரா,
வைபை மற்றும் ப்ளுடூத் வசதிகள்,
விலை ரூ.3,999
ஹுவாய் அசென்ட் Y210டி:
டூயல்சிம் வசதி,
3.5 அங்குல திரை,
1 GHz செயலி,
256 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
2 எம்பி கேமரா,
விலை ரூ.4,899
மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்டி A65:
டூயல்சிம் வசதி,
4.3 அங்குல திரை,
1 GHz செயலி,
512 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
2 எம்பி கேமரா,
வைபை மற்றும் ப்ளுடூத் வசதிகள்,
விலை ரூ.4,999
மைக்ரோமேக்ஸ் A27 நிஞ்சா:
டூயல்சிம் வசதி,
3.5 அங்குல திரை,
1 GHz செயலி,
256 எம்பி ரேம்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
0.3 எம்பி கேமரா,
விலை ரூ.3,399
Thanks