Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label facial. Show all posts
Showing posts with label facial. Show all posts

Monday, 11 February 2013

முகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment

ஆண்களே! பிம்பிள் அதிகமா இருக்கா? கவலைபடாதீங்க...

சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதே காரணம். இத்தகைய பிரச்சனைக்கு பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அதற்கு ஆண்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். இதற்காக நிறைய அழகுப் பொருட்கள் உள்ளன. ஆனால் அவற்றில் எந்த ஒரு பலனும் இல்லை. அவற்றைப் பயன்படுத்துவதால், பருக்கள் மற்றும் பிம்பிள் அதிகமாகிறதே தவிர, குறைவதில்லை. அதுவே இயற்கை முறையில், வீட்டில் இருக்கும் பொருட்கள் மற்றும் ஒருசில செயல்கள் மூலம் சரிசெய்யலாம்.

சரி, இப்போது ஆண்களின் முகத்தில் இருக்கும் பிம்பிள் மற்றும் முகப்பருக்களை என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!

pimple treatment men

கிளின்சிங்: 
பொதுவாக பருக்கள் மற்றும் பிம்பிளைப் போக்க மைல்டு கிளின்சரைப் பயன்படுத்தி, முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் கிளின்சிங் செய்வதால், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் நீங்கிவிடும். மேலும் முகப்பரு மற்றும் பிம்பிள் உடைந்து, பரவாமல் தடுக்கலாம். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனைத் தரும். இது ஆண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு முறை. எனவே ஆண்கள் இதனை குறைந்தது வாரத்திற்கு 2-4 முறை செய்வது நல்லது.

ஷேவிங் முறை: 
பருக்கள் இருக்கும் ஆண்கள் ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்களுக்கு பருக்கள் வருவதற்கு ஷேவிங் முறையும் ஒரு காரணம். எனவே ஷேவிங் செய்யும் போது மிகவும் கவனமாக, நல்ல கூர்மையான பிளேடுகளை பயன்படுத்தி, பிம்பிள் உள்ள இடத்தில் அதிக அழுத்தம் கொடுக்காமல் ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் அது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

ஐஸ் கட்டி: 
பருக்களை போக்கும் சிறந்த பொருட்களுள் ஐஸ் கட்டியும் ஒன்று. அதற்கு ஐஸ் கட்டியை பிம்பிள் உள்ள இடத்தின் மேல் வைக்க வேண்டும். வேண்டுமெனில் மூல்தானி மெட்டி, எலுமிச்சை மற்றும் சந்தனப் பவுடரை கலந்து, அதனையும் பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து, பின் ஐஸ் கட்டியை வைத்து தேய்க்க வேண்டும். இதனால் அந்த குளிர்ச்சியினால், பிம்பிள் உடைந்து பரவாமல் எளிதில் போய்விடும்.

சந்தன பவுடர்: 
இது பருக்களை போக்கும் ஒரு பாரம்பரிய வீட்டு மருந்துகளுள் ஒன்று. அதற்கு சந்தன பவுடரை, ரோஸ் வாட்டரில் கலந்து, பிம்பிள் மேல் வைத்து, காய வைத்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், பிம்பிள் விரைவில் போய்விடும்.

எலுமிச்சை மசாஜ்: 
பிம்பிளைப் போக்குவதில் எலுமிச்சை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த பொருள் இருபாலருக்குமே நல்ல பலனைத் தரும். அதற்கு எலுமிச்சை துண்டு அல்லது சாற்றை பருக்கள் உள்ள இடத்தில் தடவி தேய்த்து வந்தால், பருக்கள் மறைந்துவிடும். அதிலும் இதனை தினமும் இரண்டு முறை செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேலும் இவ்வாறு செய்த பின், மறக்காமல் மாய்ச்சுரைசரை தடவ வேண்டும்.

இவையே ஆண்களின் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் பிம்பிளை போக்க செய்யப்படும் இயற்கை முறைகள். வேறு ஏதாவது முறைகள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் நண்பன் தமிழ் அரட்டையில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Pimple Treatment For Men

Acne and pimples are more than a skin problem for women. And even men are prone to getting acne and pimples. You might have probably tried all sorts of creams and other beauty treatments to get rid of acne and pimples. However, nothing seems to give effective results. So, here are few home remedies for men to treat acne effectively.


Cleansing: Oily skin is one of the main causes of acne and pimples. So, it is important to wash your face often with a mild cleanser. Cleansing the skin removes dead skin cells and exfoliates the skin. This prevents acne and pimple break outs on the face. Cleanse your face at least twice a day and exfoliate it. This is one important step for pimple treatment of men. Over exfoliation will make your skin look dry so, exfoliate once or twice every week and use specific exfoliator for acne prone skin.

Shaving techniques: Men who have acne should be very careful while shaving. Shaving is one of the causes behind acne for men. So, for treating it completely you have to look at the way you shave. Always use a sharp blade to keep the strokes to minimum. Do not apply too much pressure on the pimple. It will worsen the situation.

Ice cube: This is one of the effective home remedies for men to get rid of acne. Rub ice cube on the pimple. You can also apply a paste of multani mitti, lemon juice and sandalwood powder on the pimple. After drying it, rub with ice cube. The chilled ice cubes suppress the pimple breakout.

Sandalwood powder: This is one traditional home remedy for men to treat acne and pimple. Mix sandalwood powder with rosewater and apply it on the pimple. It will soothe the breakout and also curb it.

Lemon massage: Lemon is a natural bleach and an astringent that soothes pimple breakouts. Both men and women can use this home remedy for the treatment of pimples. Lemon is a very effective beauty ingredient that cures acne and pimple naturally. Rub fresh lemon juice or lemon slice on the prone skin. Do this twice every day and rinse with cold water. Lemon not only helps get rid of acne or pimples but also exfoliates the skin, removes pimple scars and also cleanses it. Lemon can dry the skin so moisturise the skin after applying lemon.

These are few effective home remedies for men to treat acne and pimples at home. If you know any other treatments for pimples share with us in FriendsTamil.cbox.ws

Thanks







Thursday, 24 January 2013

கற்றாழை ஜெல்லின் நன்மைகள் - Using Aloe vera gel

கற்றாழை ஜெல்லின் சரும நன்மைகள்

வீட்டில் வளர்க்கும் செடிகளில் ஒன்றான கற்றாழையில் சருமத்திற்கான நன்மைகள் நிறைய அடங்கியுள்ளன. மேலும் இவை சருமத்திற்கு மட்டுமின்றி, கூந்தலுக்கும் பெரிதும் உதவும். குறிப்பாக முகப்பருவை நீக்க சிறந்த பொருள் என்றால் அது கற்றாழை தான். ஏனெனில் இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அவை முகப்பரு மற்றும் பிம்பிளை நீக்குகின்றன. மேலும் இந்த கற்றாழையை வைத்து நிறைய அழகுப் பொருட்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கற்றாழையை வீட்டிலேயே வளர்த்து, தினமும் முகத்திற்கு தடவி வந்தால், முகம் நன்கு பட்டுப் போன்று மாறிவிடும். இப்போது அதன் மற்ற நன்மைகளைப் பார்ப்போமா!!!


benefits aloe vera gel on skin

* முகப்பருவை குறைக்க வேண்டுமென்பவர்கள், இதனை தினமும் தடவி வந்தால், பருக்களை குறைக்க முடியும். ஏனெனில் இதில் ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி- பாக்டீரியல் பொருட்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் சருமத்தில் இருக்கும் பாக்டீரியா அழிவதோடு, பருக்களால் சருமத்தில் காயங்கள் ஏற்படாமலும் தடுக்கும். 

* வறட்சியான சருமம் இருந்தால், அதற்கு கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி வந்தால், அவை சருமத்தை ஈரப்பசையுடன் வைப்பதோடு, சருமத்தை மென்மையாக்கும். குறிப்பாக பெண்கள் அளவான மேக்-கப் போட வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முன்னர் கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி ஊற வைத்து, கழுவி பின் மேக்-கப் போட்டால், நன்றாக இருக்கும். 

* ஆண்கள் ஷேவிங் செய்த பின்னர், முகத்திற்கு லோசனை தடவுவார்கள். ஏனெனில் ஷேவிங் செய்த பின்னர், அந்த இடத்தில் அரிப்புகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமென்று தடவி மசாஜ் செய்வார்கள். அவ்வாறு கெமிக்கல் கலந்த லோசனை தடவுவதற்கு பதிலாக கற்றாழை ஜெல்லை தடவினால், எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். 

* உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். ஆனால் கற்றாழையை வைத்து, மார்க்குகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், மார்க்குகள் லேசாக மறைய ஆரம்பிக்கும். பொதுவாக இந்த மார்க்குகள் உடல் எடை அதிகரிப்பது அல்லது கர்ப்ப காலத்தில் ஏற்படும். 

* முதுமை தோற்றம் சிலருக்கு இளமையிலேயே ஏற்படுகிறது. எனவே இத்தகைய தோற்றத்தை தடுக்க கற்றாழை ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வர, தளர்ந்து இருக்கும் சருமம் நன்கு இறுக்கமடைந்து, இளமை தோற்றதை வைக்கும். அதுமட்டுமின்றி கற்றாழை ஜெல்லில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இதனால் சருமம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். 

* சூரிய கதிர்கள் சருமத்தில் அதிகம் படுவதால், சருமம் கருமையான நிறத்தில் காணப்படும். அதுமட்டுமின்றி சில நேரங்களில் கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு நிற சருமம் போன்றவை ஏற்படும். இவ்வாறு தொடர்ந்து சூரியக்கதிர்கள் சருமத்தில் பட்டால், தோல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எப்போது வெளியே செல்வதாக இருந்தாலும், ஏதேனும் மாய்ச்சுரைசரை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தை பாதிப்பிலிருந்து தடுக்கலாம். இதற்கு கற்றாழை ஜெல் மிகவும் சிறப்பானதாக இருக்கும்


Skin benefits of aloe vera gel

Plants growing in the house, one of the many benefits of aloe vera include carumatti. And not only the skin, the hair and helps. Aloe is the best means to remove acne, especially if it is. Because of the anti - bacterial material because they remove acne and pimpilai. And a lot of beauty products made with these cactus. These cactus grow at home, if they apply to the face, the face will change as well silk. Now about the other benefits?


* To reduce acne, if you apply it daily, can reduce pimples. Because of the anti - microbial and anti - bacterial products are in high level. With the destruction of the bacteria on the skin, prevent injuries and to prevent pimples on the skin.

* If you have dry skin, the aloe vera gel and apply it to the face, the skin with moisture to keep skin lightening. Make Modest especially women - have started to think that, before the face, apply aloe vera gel to soak, wash the Mac - and if, it will be fine.

* After sevin men, locanai apply it to the face. After the sevin, should anything happen to the erosion of the massage will apply. Instead, apply aloe vera gel mixed locanai Chemical tatavin if so, to prevent any disruption of one half.

* The stretch marks on the body to eliminate one of the most difficult. But with the cactus, rub marks on the left for some time to come massage, slight marks will start to disappear. This marks an increase in body weight during pregnancy usually occurs at or.

* Some ilamaiyileye appearance of aging. Apply aloe vera gel to the face and massage to prevent such appearance, the skin is loose irukkamataintu well, to make youth feel. Aloe gel contains vitamin C and E as well. Moisture is always with the skin.

* Solar radiation in the skin cells, the skin is dark in color. Moreover, in some cases, like black and brown color of the skin. Thus, if the curiyakkatirkal of the skin, skin cancer is likely to be. So if you are going out, and to apply any mayccuraicarai. This will prevent the skin from damage. Aloe gel is the most effective

Thanks