Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 29 June 2013

இயற்கையின் வெற்றி இதுதான் - This is nature's success


இயற்கையின் வெற்றி இதுதான்
- This is nature's success


வருடா வருடம் நேஷனல் ஜியோ கிராபி சேனலால் நடத்தப்படும் சிறந்த போட்டோகிராபி விருது இந்த படங்களுக்கு கிடைத்துள்ளது. இவையனைத்தும் மிகச்சிறந்த படங்களாகும். இது இயற்கை அன்னையின் அழகுக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இந்த புகைப்படங்கள் இயற்கையின் முழு அழகையும் வெளிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது. இதோ அந்த படங்களை நீங்களே பாருங்கள்
Conducted every year by the National Geo channel graphic images to get the best photography award. All the best photos. This is a great victory for mother nature's beauty. It is full of natural beauty in the way of displaying the photos. Here are the pictures and see for yourself ..Share your comments here : http://FriendsTamil.cbox.ws

Thanks


தூக்கத்தை கெடுக்கும் சில வேலைகள் - jobs that ruin your sleep

தூக்கத்தை கெடுக்கும் சில வேலைகள்

பணி நேரத்தில், மேஜை மீது தூங்குகிறீர்களா? அல்லது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்குகிறீர்களா? இப்படி நீங்கள் மட்டும் தான் தூங்குவதாக நினைக்கிறீர்களா? இல்லவே இல்லை, பலர் பேர் இப்படித் தான் இருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு இரவில், 6-8 மணிநேரம் வரை தூக்கம் மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பலருக்கு இரவில் நல்ல தூக்கம் என்பது 4-5 மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது. தூங்குவதற்குக் கூட நேரமில்லாத அளவுக்கு, அப்படிப்பட்ட பிஸியான வேலையில் அவர்கள் இருப்பதாகக் கருதிக் கொள்ளலாம்.

சிலர் காலை 10 மணிக்கு அலுவலகம் போய் பணிபுரிந்து, மாலை 6 மணிக்கு சரியாக புறப்பட்டு வீட்டுக்கு வருகின்றனர். இவர்களுக்கு ஷிப்ட் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் சிலரது பணியோ காலை, மாலை, இரவு என்று மாறி மாறி இருக்கும். இந்த நிலையில் வீட்டு வேலைகளைக் கூட முறையாகச் செய்ய முடியாது. ஏன் சொந்தப் பணிகளைக் கூட கவனிக்க முடியாது.

ஷிப்ட்களில் இல்லையென்றாலும் கூட, பணிச் சுமையால் இரவு, பகல் என்று பார்க்காமல் பணிபுரியும் மக்களும் உள்ளனர். இரவு முழுதும் கண்விழித்து பணிபுரியும் நிர்ப்பந்தத்தினால், அவர்கள் பகலில் பணிபுரிய முடியாமல் தம்மை அறியாமல் தூக்கத்தில் அழ்ந்துவிட நேரும்.

இப்போது தூக்கத்தைக் கெடுக்கும் மற்றும் தூங்குவதற்குக் கூட நேரம் தராத சில மோசமான வேலைகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா!!!


விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அலுவலர்
பயணிகளின் உயிர் ஆபத்திலிருக்கும் இந்நிலையில் கூட சில அலுவலர்களால் இரவில், தூங்காமல் விழிப்புடன் இருக்க முடிவதில்லை. ஏனென்றால், ஷிப்ட்டுகளில் பணிபுரிவதால் உடலில் உள்ள உயிரியல் கடிகாரத்தின் சுழற்சி பாதிக்கப்படும். இதனால் லேலையில் கவனமாக செயல்பட முடியாது.நெட்வொர்க் நிர்வாகி
இணையவழிச் சேவைகள் 24x7 என்பதால், பயனாளர்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். எனவே மக்கள் இணையத்தில் தொடர்புக் கொள்வது, புத்தகங்களை ஆன்லைனில் வாங்குவது, பாடல்களை டவுன்லோடுகள் செய்வது என அனைத்துவித சேவைகளும் 24 மணிநேரமும் தடையின்றிக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இது தொடர்பான சர்வர்களில் பணிபுரிபவர்கள் ஷிப்ட் நேரங்களில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.தொழிற்சாலை பணியாளர்
அதிகமான உற்பத்தித்திறனுக்கும், உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், ஷிப்ட் முறையில் பணிபுரிவதையே தொழிற்சாலைகள் நம்பியுள்ளன. ஷிப்ட்முறையில் பணிபுரியாத பணியாளர்களை விட, ஷிப்ட் முறையில் பணிபுரியும் பணியாளர்கள், ஆறு மணிநேரத்தை விடக் குறைவான நேரமே தூங்க முடிகிறது. தூக்கமின்றி, அரைத் தூக்கம் அல்லது அரை மயக்க நிலையில் பணிபுரியும் பணியாளர்களால், பணியிடங்களில் விபத்துகள் நிகழவும், காயங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தூக்கமின்மையால், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மனத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.முதுநிலை மேலாளர்
முதுநிலை மேலாளர்கள் தமக்கென்று ஒதுக்கப்பட்ட குழுவினரை மேற்பார்வை செய்ய வேண்டிய சூழலில் இருப்பார்கள். அதற்கென கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டியதிருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதல் நேரம் பணிபுரிகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு குறைவாகத் தூங்க வேண்டியிருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் மற்றொரு ஆய்வு என்ன தெரிவிக்கிறது என்றால், தூக்கமின்மைக்கும் பணியில் திருப்தியின்மைக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்றும் சொல்கிறது.செய்தி நிருபர்
24 மணி நேர செய்திச்சேனல்கள் தொடங்கப்பட்ட பின்னர், ஷிப்ட்டுகளில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. நிருபர்களும், தயாரிப்பாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், இரவு முழுவதும் செய்திகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை மேற்கொள்கின்றனர். நிறைய சேனல்கள் 24 மணிநேரச் சேவையை அதிகரித்துள்ளதால், ஷிப்ட்டுகளில் பணிபுரிபவர்களின் தேவையும் எண்ணிக்கையும் பெருகியுள்ளது.மருத்துவர்களும் செவிலியர்களும்
பெருகி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையினைப் பொறுத்து, மருத்துவர்களும் செவிலியர்களும் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் என்னும் சுழற்சிமுறை ஷிப்ட்டில் பணிபுரிகின்றனர். எனவே இத்தகையவர்களுக்கும் தூக்கமானது குறைவாகவே இருக்கும்.நிதியியல் ஆலோசகர்
ஷிப்ட்டுகளில் பணிபுரிபவர்கள் மட்டும் தான் தூக்கத்தைத் தொலைக்கிறார்கள் என்று பொருளல்ல. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற வெளிநாட்டு சந்தைகளில் வல்லுநராக உள்ள சில நிதியியல் ஆலோசகர்களும் தூக்கத்தைத் தொலைக்கின்றனர். சந்தையின் விலை ஏற்ற இறக்கங்களை உண்ணிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளதால், நேரங்கெட்ட நேரங்களில் சந்தையைக் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் சந்தை நேரம் மாறுபடுவதால், பணிபுரிய வேண்டிய நேரமும் மாறுபடுகிறது.காவல் துறை அலுவலர்கள்
மக்களைக் காக்கவும், மக்களுக்குச் சேவை புரியவும் காவல்துறையும் தமது பணிநேரத்தினை ஷிப்ட் முறையில் மாற்றி அமைத்துள்ளது. இதன்மூலம் மக்களுக்கு 24 மணிநேரமும் காவல் துறையின் சேவை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. ஆனால் பாதிப்பு காவல் அலுவலர்களுக்கு தான். ஏனெனில், இதன் மூலம் அலுவலர்கள் விடுப்பு மற்றும் விடுமுறைகளை அனுபவிப்பது கடினமாகிறது. அவர்களால் நிரந்தரமான ஒரு பணித்திட்டத்தினைக் கடைப்பிடிக்க முடியாமல் போகிறது.விமானிகள்
வர்த்தக் விமானங்களை இயக்கும் விமானிகள், இரவுத் தூக்கத்தினை அவ்வப்போது இழக்க வேண்டியுள்ளது. அவர்கள் வெவ்வேறு மண்டலங்களுக்கிடையே பறந்து பணிபுரிய வேண்டியுள்ளதால், சீரற்ற ஷிப்ட்டுக்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. விமானிகள் தளர்ச்சி அடைந்துவிடுவதைத் தடுக்கும் பொருட்டு சர்வதேச விமானப் போக்குவரத்து ஆணையங்களின் இயக்கம், பறக்கும் நேரம் மற்றும் ஓய்வு நேரங்களை வகுத்துள்ளது. ஒவ்வொரு 24 மணிநேர வேலைகளுக்கு இடையே விமானிகளுக்கு முழுமையான, இடையூறில்லாத 8 மணிநேர ஓய்வு அளிக்கப்படவேண்டும் என்று விதி உள்ளது.பெற்றோர்கள்
ஆண்டாண்டு காலமாகவே, தூக்கத்தைப் பாதிக்கும் புதிய பணி இது. பிறந்த குழந்தை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொள்ளும் பொழுது, பெற்றோரால், தொடர்ந்து தூங்குவது இயலாதது ஆகிறது. மேலும் ஆய்வு ஒன்று என்ன தெரிவிக்கிறது என்றால், புதிய தாய்மார்கள் இரவில் 7 மணிநேரம் தான் தூங்குகிறார்களாம். அதுவும் விட்டுவிட்டு தான் தூங்க முடிகிறதாம். அத்தூக்கமும் அவர்களுக்கு புத்துணர்வைக் கொடுப்பதில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தை 16 மாதங்கள் கடந்தபின், இந்த நிலை மேம்படுகிறதாம்.சரக்கு வாகன ஓட்டுநர்
சரக்கு வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் கூடுதலாகப் பணிபுரிகிறார்கள். ஏனெனில், பகல் நேர போக்குவரத்து நெரிசலிலிருந்து விடுபட்டு நிம்மதியாக வண்டி ஓட்டலாம். மற்றொன்று, குறித்த நேரத்தில் சரக்குகளை டெலிவரி செய்ய வேண்டியுள்ளது. இந்த வேலையில் தான் ஓட்டுநர்கள் இரவில் மிகக் குறைந்த அளவு நேரம் தூங்குகிறார்கள் என்று ஆதாரங்களுடன் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில், சம்பவிக்கும் மரணங்களில் முதலிடத்தைப் பிடிப்பது, சாலை விபத்துக்களில் ஏற்படும் மரணம் தான். இதற்குக் காரணம் சரியான தூக்கமின்றி, தூக்கக் கலக்கத்தில் வண்டி ஓட்டுதல் தான்.மதுபான பார்களில் உதவியாளர்கள்
பல மதுபான பார்கள் அதிகாலை 2 மணிவரை திறந்திருக்கின்றன. சில நகரங்களில், பார்கள் இரவு முழுதும் திறந்திருக்கின்றன. இந்த பார்களில் பணிபுரியும் உதவியாளர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து பணிபுரிகின்றனர். சிலருக்கு இரவுகளில் தூக்கமே வராது. ராக்கோழிகள் எனப்படும் இவர்கள், இது மாதிரியான பணிகளை விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர். இத்தகையவர்கள் பகல் முழுவதும் தூங்கி, இரவில் தெளிவாக விழித்திருந்து, தமது பணியைச் செவ்வனே செய்வார்கள்.இரவில் பணிபுரிய சில குறிப்புகள்
ஷிப்ட் முறையில் பணிபுரிய வேண்டுமென்றால், வார இறுதி விடுமுறை நாட்களிலும், இதே ஷிப்ட் முறையில் நடந்து கொள்ள வேண்டும். அதாவது பகலில் தூங்கி, இரவில் விழித்திருக்க வேண்டும். இது மாதிரிக் கடைப்பிடிக்காமல், விடுமுறை நாட்களில் பகலில் விழித்திருந்தால், இரவுப் பணிநேரத்தில் தூக்கக் கலக்கமாகவே உணரக்கூடும். ஆனால் தூங்காமல் இருக்க நிறைய உத்திகள் உள்ளன. அது தனியாகப் பணிபுரியாமல் பிறருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ஷிப்ட் தொடங்கும் போது, காஃபின் கலந்த பானங்களைப் பருகலாம். மேலும் சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். சிறிது நேரம் தூங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டால், தூங்கிக் கொள்ளலாம்.பகலில் தூங்க சில குறிப்புகள்
பெரும்பாலானவர்களுக்கு பகலில் தூங்குவது சற்று சிரமமான காரியம் தான். ஆனாலும் பகலில் தூங்க சில உத்திகள் உள்ளன. பணியிலிருந்து வீட்டுக்கு திரும்பும் போது, கருப்புக் கண்ணாடிகளை அணிந்து கொண்டு, நேரடியாக சூரிய வெளிச்சம் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். படுக்கை அறையை முடிந்தவரை இருட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது கண் மூடிகளைப் பயன்படுத்தலாம். பகல் நேர சத்தங்கள் காதுகளில் விழாமல் இருக்க, இயர் பிளக்குகளைப் பயன்படுத்தலாம்.http://www.sleepexplained.com/jobs-that-ruin-your-sleep-pattern/

Jobs that ruin your sleep

There are many factors that can affect the way a person sleeps and the amount of sleep he or she can get every single night. While there are several sleep aids and devices that can be used to promote sleep, these could prove to be ineffective if the lifestyle of the person is what is actually causing him or her to miss some good night's sleep. This is the problem being faced by so many people whose jobs require them to stay up at night. So before you decide on what career to pursue, perhaps it would be wise to find out first if you will be able to deal with the demands of such a career in relation to how well you can sleep.

Air Traffic Controller

You must have heard news about air traffic controllers unintentionally falling asleep on the job. This simply shows the difficulty that these professionals have to overcome every time they have to do their night shift work. Even though lives are at stake in this kind of job, it remains a huge challenge for these professionals to stay awake and alert all through the night. This is because their circadian rhythms or body clock might be out of sync with their work schedule. Night shifts at work can disrupt this cycle, which a lot of people find hard to adapt to.

Network Administrator

With the advent of the internet, there has also been more demand for night shift workers. Network administrators are the ones who make sure that internet-based services remain accessible to web users around the clock. The downside of this development is that the workforce in the internet industry has become more sleep-deprived compared to the previous years, and this could pose some serious health troubles.

Factory Worker

The manufacturing industry is built around the skills of laborers who do shift work to maximize the factory's productivity and to prevent downtime. There are disadvantages to this, however. In comparison to non-shift workers, those who work on shifts are way more likely to get insufficient sleep during work days. As a result, there is an increased risk of workplace accidents and injuries. Sleep deprived workers are also vulnerable to diabetes, high blood pressure and even depression.

Cable News Reporter

The emergence of 24 hour cable news definitely created a huge demand for shift workers. Camera operators, news anchors, reporters and producers are the ones who provide live news throughout the night. This is an indication of a growing trend in the marketplace as more and more industries are expanding to 24 hour operations. This is equivalent to an increase in the number of people lacking sleep.

Nurse

Nurses are amongst the first group of professionals who did shift work. This is an essential requirement in this job because hospitals and their staff should continuously provide care to patients. Research reveals that people are likely to be less focused and alert in the final four hours of a 12 hour shift, and this has become a cause of concern for jobs in the health industry.

Police Officer

Police departments are required to use rotating shifts to make sure that the public is kept safe day and night. But as we know, rotating shifts come with serious challenges for the cops. The fact that they have to adapt to changing schedules makes their job more difficult and dangerous.

Airline Pilot

Working as a commercial aircraft pilot is like saying goodbye to a good night's sleep. Pilots have to deal with long shifts, irregular hours, and jet lag because part of their job is to travel to differing time zones. In order to protect pilots from over-fatigue, there are strict guidelines on pilots' rest time and flight time. It is crucial that pilots have at least eight hours of sleep and uninterrupted rest before their scheduled flight.

Bartender

It is common for bars and clubs to stay open until 2 am or beyond. Some may even be operational round the clock in many cities. This means that bartenders tend to be up and working almost the entire night. To make it easier to adapt to this kind of work schedule, it would help to keep the same sleep schedule during day offs.

Truck Drivers

Truck drivers have taken to the road at nighttime. This is for them to manage tight schedules for delivery and to avoid heavy traffic during the day. This job, however, is one that has been well documented to experience the extreme consequences of poor sleep. Nothing could indeed be more dangerous than falling asleep when driving.

Tips for Night Shift Workers

If your job involves working late nights, it would help you adapt more quickly if you stick to the same schedule even during your day offs or weekends. You could also try to be with company during your shift because having a conversation with someone is a good way of keeping yourself awake. If you have the chance to take a nap, this would also help.

Share your comments here http://FriendsTamil.cbox.ws

ThanksThursday, 27 June 2013

மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்த - ways to use rainwater garden plants

மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்துவதற்கான சில வழிகள்

மழைக் காலமானது ஆரம்பித்துவிட்டது. அனைவரும் பொழியும் மழையில் நனைந்து ஒரே சந்தோஷத்துடன் இருப்போம். அந்த சந்தோஷத்தில் வீட்டில் வளர்க்கும் செடிகளை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம். ஏனெனில் எப்படி நமக்கு மழை வந்தால் சந்தோஷமோ, அதேப் போல் செடிகளும் குதூகலத்துடன் இருக்கும். பொதுவாகவே செடிகள் நன்கு செழிப்புடன் வளர்வதற்கு நீரானது மிகவும் இன்றியமையாதது. அதிலும் மழைநீர் மிகவும் சிறந்தது. ஏனெனில் மழை நீர் மிகவும் சுத்தமான நீர்.


எனவே மழைநீரை செடிகளுக்கு ஊற்றி, செடிகள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதே சமயம் மழைநீராலும் செடிகளுக்கு அழிவு நேரிடக்கூடும். எனவே இப்போது மழைநீரை செடிகளுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து பின்பற்றுங்கள்.

மழைநீரைப் செடிகளுக்கு பயன்படுத்துவதற்கான சில வழிகள்!!!

* மாசடைந்திருக்கும் நகரத்தில் இருந்தால், முதல் மழையில் செடிகள் நனையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான இடத்தில் பொழியும் மழையானது காற்றில் உள்ள அனைத்து மாசுக்களையும் வெளியேற்றும். இதனால் அந்த மழையானது செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும்.

* தொட்டியில் செடிகளை வளர்த்தால், மழை லேசாக பொழியும் போது, அவற்றை மழைப் பொழியும் இடங்களில் வைத்தால், செடிகளின் இலைகளில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கி, செடியை பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் வெளிப்படுத்தும்.

* ஒருவேளை மழையானது ஜோராக பொழிந்தால், அப்போது அதனை வெளியே வைக்க வேண்டாம். இல்லையெனில் மழையின் வேகமானது, செடிக்கு அழிவை ஏற்படுத்தும். மேலும் காற்று அதிகம் இருக்கும் போதும், செடிகளை பத்திரமாக வீட்டின் உள்ளே வைக்க வேண்டும்.

* வேண்டுமெனில் வேகமாக மழைப் பொழியும் போது, அந்த நீரை சேகரித்து வைத்து, செடிகளுக்கு ஊற்றலாம். அதிலும் ஒரு வாளியை மழைப்பொழியும் இடத்தில் வைத்து சேகரிக்கலாம். இவ்வாறு சேகரிக்கும் நீரை செடிகளுக்கு ஊற்றினால், செடிகள் நன்கு வலுவோடும், ஆரோக்கியமாகவும் வளரும். ஏனெனில் மழைநீர் என்பது மிகவும் தூய்மையான நீர் மற்றும் எங்கும் கிடைக்காதது.


Thanks

Wednesday, 26 June 2013

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறார்களா? dinner and nighttime snacks that can cause wet nights

குழந்தைகள் இரவில் 'சுச்சு' போவதை தடுக்க வேண்டுமா?

குழந்தைகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கிறார்களா? இதற்கு உணவு வகைகள் பலவற்றை சம்பந்தப்படுத்தி தீர்வுகளாக கூறப்படும் வதந்திகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த பிரச்சனையை சரிசெய்ய சில உணவு முறையை மாற்றி அமைத்தால் போதுமானது. பொதுவாக குழந்தைகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் பானங்கள் மற்றும் தண்ணீர் அதிகம் பருகுவதை குறைத்து கொள்ள வேண்டும். மேலும் ஆரஞ்சு சாறு மற்றும் காரமான உணவையும் தவிர்க்கவும்.

குழந்தை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த, அனைத்து வழிகளையும் கடைபிடிக்கும் ஆவல் நிச்சயம் அனைத்து பெற்றோருக்கும் இருக்கும். ஆனால் அவற்றைப் பின்பற்றும் முன், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பழக்கத்தை மாற்றி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனால், குழந்தையின் உடல்நிலை கண்டிப்பாக பாதிக்கப்படும்.

எனவே தான் தூக்கத்தில் சிறுநீர் கழித்தலுக்கு குறிப்பிட்ட சில உணவுகளை சுட்டிக்காட்ட மருத்துவர்கள் தயங்குவார்கள். ஏனென்றால் அதற்கு தகுந்த ஆதாரங்களோ சான்றுகளோ கிடையாது. இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!


கார உணவுகள்- கட்டுக்கதை
கார உணவுகளை சாப்பிடுவதால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடும் என்று நம்பப்படுகிறதா? அப்படியானால் அந்த நம்பிக்கையை உடைத்தெறியும் நேரம் வந்துவிட்டது. ஏனெனில் கார உணவுகள் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க தூண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.சிட்ரஸ் பழங்கள்- கட்டுக்கதை
கார உணவுகளைப் போல் ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் உணவுகளும், அதன் அமிலத்தன்மையால் சிறுநீர்ப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் குழந்தைக்கு ஆரஞ்சு சாறு மற்றும் எலுமிச்சை பானம் கொடுக்காமல் தடுத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாக எண்ணி தப்பு கணக்கு போட வேண்டாம். ஏனென்றால், சிட்ரஸ் உணவிற்கும், தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு சான்றும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன.காப்ஃபைன்- நிஜம்
உணவு அல்லது பானம் எதுவாக இருந்தாலும் சரி, அதில் காப்ஃபைன் கலந்திருந்தால், அது சிறுநீர்ப் பெருக்கியாக விளங்கும். அதனால் தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை தடுக்க வல்லுனர்கள் கூறும் ஒரு தீர்வு, மதியம் அல்லது மாலை நேரத்திற்கு பின் காப்ஃபைன் கலந்த பொருட்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதாகும். குழந்தைகள் குடிக்கும் காபி, தேநீர், கோலா போன்ற பானங்களில் காப்ஃபைன் கலந்திருக்கும். மேலும் அனைத்து குழந்தைகளும் விரும்பும் சாக்லெட்களில் கலந்திருக்கும் ரசாயனத்தில் ஒன்று காப்ஃபைன். எனவே காப்ஃபைன் கலந்த உணவை உண்ணும் போது கவனமாக இருக்க வேண்டும்.
பானங்கள்- நிஜம்
தூங்கும் முன்பு குழந்தைக்கு குடிக்க சிறிதளவு மட்டும் தண்ணீர் கொடுத்தால், அவர்களுடைய சிறுநீர்ப்பை நிறைவதற்கு அதிக நேரம் எடுக்கும். இதனால் குழந்தையும் படுக்கையை நனைக்க அதிக நேரம் ஆகும். இவ்வாறு நேரம் அதிகமாக இருப்பதா, குழந்தை படுக்கையை நனைக்கும் முன் விழிப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
உணவுகள்
தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதை தூண்டும் உணவுகளை கண்டுப்பிடிப்பதற்கான ஒரு ஸ்மார்டான டிப்ஸ். வல்லுனர்கள் இதற்காக ஒரு குறிப்பேட்டை உபயோகிக்க சொல்லுகிறார்கள். இதில் தினமும் தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் நிகழ்வை குறிக்க வேண்டும். அதை வைத்து இந்த நிகழ்வுக்கும் உணவுக்கும் ஏதாவது அமைப்பு முறை இருக்கிறதா என்பதை அடையாளம் காணலாம்.
குழந்தைகள்
சில குழந்தைகள் ஒரு திட்ட அமைப்பு தீட்டி, எந்த வகை உணவு உட்கொண்டால் தூக்கத்தில் சிறுநீர் கழிக்க நேரிடும் என்பதை கண்டறிய ஆவல் கொண்டிருப்பார்கள். இது குழந்தைகளுக்கு இரண்டு வகையில் பயன் அளிக்கும்:
1. தூக்கத்தில் சிறுநீர் கழிப்பதில் ஒரு கட்டுப்பாடு வரத் தொடங்கும். இதை சரிசெய்ய அவர்களே பொறுப்பையும் சுமப்பர்.
2. சில உணவால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என்று அவர்கள் நினைத்து, அதை உண்ணாமல் தவிர்ப்பதால், அந்த நம்பிக்கையே இந்த பழக்கத்தை மாற்ற உதவி புரியும்.
அணுகுமுறை
படுக்கையை நனைக்கும் பல குழந்தைகள், முக்கியமாக வயதில் பெரிய குழந்தைகள், இந்த பழக்கத்தினால் தர்ம சங்கடத்துக்கு ஆளாகின்றனர். மேலும் இதனால் பெற்றோர்கள் அதிகமாக எரிச்சலும் கோபமும் அடைந்து, குழந்தையின் தவிப்பை மேலும் அதிகரிப்பதால், மனரீதியாக அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். அது இந்த பழக்கத்தை அதிகமாக்கச் செய்யுமே தவிர குறைக்க வழி வகுக்காது. அதனால் பெற்றோர்கள் முயற்சிக்கும் அணுகுமுறை யாவும், இந்த பழக்கத்தை மாற்றவே என்பதை குழந்தைகள் உணருமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 


Dinner and Nighttime Snacks That Can Cause Wet Nights

If you have a child who wets the bed, you've probably heard lots of rumors about nutritional bedwetting solutions.

Limit liquids after 6 p.m. Avoid orange juice. Steer clear of spicy food.

In an effort to put an end to your child's bedwetting problem, you might be tempted to try them all. But before you do, keep in mind that making unnecessary dietary changes that don't work in an attempt to stop bedwetting could make you and your child even more unhappy and upset than you are now.

Doctors are very cautious when it comes to blaming specific foods for bedwetting, also called nocturnal enuresis, because there's very little evidence to back up the claims and much of it is anecdotal.

Here, WebMD investigates the myths and realities behind five food strategies to help control bedwetting in children.

Spicy Foods and Bedwetting: Myth

Has taco night become a thing of the past at your house since you heard that spicy foods might trigger bedwetting? If so, it's time to break out the salsa and grab some guacamole – experts say there is no evidence spicy foods trigger nocturnal enuresis.

The myth stems from the fact that spicy foods are known to irritate the bladder in some people and doctors may recommend that people with urinary incontinence avoid them.  But research hasn't found a connection between the consumption of spicy foods and bedwetting.

Citrus and Bedwetting: Another Myth


Like spicy foods, citrus fruits -- think oranges, lemons, and limes -- can be bladder irritants, owing to their acidity. So you might think you're doing your child a favor by taking orange juice and lemonade off the table.

But, as is the case with hot and spicy foods, medical research has not demonstrated a link between eating citrus fruits and children's bedwetting, except possibly in rare instances of food allergy to citrus in some bedwetters.

Food Allergens and Bedwetting: The Jury's Still Out

The evidence for a connection between food allergies and bedwetting is very weak. A single study of 21 children published in 1992 did support a connection at least in some children, but it's likely that in the vast majority of children allergy doesn't play any role.

Caffeine and Bedwetting: Fact

Caffeine, whether in food or drink, acts as a diuretic, meaning that it stimulates the bladder to produce more urine. So, one bedwetting solution that many experts recommend is to avoid caffeine in the late afternoon and evening.

Just because your child doesn't drink coffee doesn't mean he isn't ingesting caffeine. Teas, colas, and energy drinks often contain caffeine. And one food that many children love, chocolate, also contains a chemical closely related to caffeine. So you might want to be cautious about hot chocolate and desserts such as brownies or chocolate ice cream.

You don't need to add insult to injury and ban these foods from your child's diet -- just try to make sure they're enjoyed earlier in the day so the effects have worn off before bedtime.

Liquids Before Bed and Bedwetting: Fact

The reason your child wets the bed is not just because there is too much liquid in the bladder. Think of it this way – even if you drank a gallon of water before bed, you'd wake up to empty your bladder rather than wetting the bed.

Nonetheless, limiting the amount of liquid your child drinks before going to sleep makes common sense because it will delay the filling of the bladder and give your child some extra time before bedwetting occurs. This added time could give your child more of a chance to wake up before wetting the bed.

Keep in mind that drinks aren't the only way your child gets liquids -- certain foods, such as soup, yogurt, and many fruits and vegetables, have a very high water content.

Tips for Finding Bedwetting Food Triggers

Because everyone is different, you and your child might want to determine if you can figure out any food triggers that seem to affect whether your child wets the bed.

Experts recommend keeping a bedwetting journal to record incidences of bedwetting and identify any patterns to the accidents.

Some children become quite interested in designing their own hypotheses to see whether certain actions or foods have an effect on staying dry overnight. Working to identify their own personal bedwetting triggers can be beneficial for kids on two fronts:

It gives them a sense of control over their bedwetting problem and allows them to take some responsibility for trying to fix it.
If they do identify a food they think prevents or causes bedwetting, having or avoiding that food may actually help, even if it is only due to the placebo effect.


Putting Nutritional Bedwetting Strategies to Work

If you make the decision to have your child avoid certain foods in the evenings in an attempt to control your child's bedwetting problem, make sure the dietary changes don't come across as punishment for bad behavior.

Many children who wet the bed, especially older kids, are embarrassed and ashamed by their nocturnal enuresis. And, often, parents become increasingly frustrated and angry over the seemingly never-ending clean-up. This can cause anxiety in the children, which can be psychologically distressing and may make them even more likely to wet the bed.

So, it's important to make sure your child understands that the strategies you're trying are an attempt to solve the problem, not a consequence for misbehaving.If you have any comments, share here Friendstamil.cbox.ws

Thanks

சளி பிரச்சனையா - How To Get Rid of Throat Mucus or Phlegm Naturally

சளி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? 

தொண்டைச் சளி மற்றும் கபம் போன்றவற்றிலிருந்து விடுபட பல வழிகள் உள்ளன. தொண்டையில் சளி உண்டாவதையும், அதனால் ஏற்படும் தொந்தரவுகளையும் அனைவரும் அனுபவித்திருப்போம். அதிலும் தொண்டையில் சளி இருந்தால் மூச்சு விடவே சிரமமாக இருக்கும். சுவாசமானது இயல்பாக இல்லையென்றால் அன்றாட தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.

மேலும் தொண்டைச் சளி மற்றும் கபம் இருந்தால், வாய் துர்நாற்றம் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். இதனால் இயல்பாக செயல்பட முடியாத நிலை ஏற்படும். இதற்காக கண்டுபிடித்த மருந்துக்களை உட்கொண்டால், அவை மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதால், இதற்காக எடுக்கும் மருந்துகள் இயற்கையானதாக இருந்தால் மிகவும் சிறந்தது.

இதில் அதிர்ச்சி கொடுக்கக் கூடிய செய்தி என்னவென்றால், சிகரெட் பிடிப்பதாலும் தொண்டையில் சளி உருவாக்கலாம். இப்போது இருமலுடன் கூடிய சளியை குணப்படுத்த சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆவி பிடித்தல் 
தொண்டை சளி இறுகி இருந்தால், அப்போது சூடான நீரில் ஆவி பிடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.


தண்ணீர்  
கபம் மற்றும் சளியை தளர்த்த வேண்டுமெனில், தினமும் குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.


சுத்தமான மூக்கு 
தொண்டையில் சளி தேங்காமல் இருக்க, மூக்கினை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.


உப்புத் தண்ணீர் 
சளி இருக்கும் போது, வெதுவெதுப்பான தண்ணீருடன் உப்பைச் சேர்த்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வேண்டும். இதனால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்து, தொண்டை கரகரப்பு நீங்கும். இந்த தண்ணீரை முழுங்கிவிட கூடாது. 


யூகலிப்டஸ் எண்ணெய் 
கபத்தைத் தளர்த்தவும் மற்றும் சளியின் இறுக்கத்தை போக்கவும், சிறிது யூகலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தல் நல்லது.

உணவுகளில் கவனம் தேவை 
சளியை அதிகரிக்கும் பால் பொருட்கள், இறைச்சி அல்லது வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.

மூலிகைத் தேநீர் 
சளியை குணப்படுத்த மூலிகைத் தேநீர் அல்லது கோழி சூப் போன்றவற்றை சூடாக பருகினால், தொண்டை இதமாக இருக்கும்.

மஞ்சள் தூள் 
சளி இருக்கும் பொழுது, அரை டம்ளர் பாலுடன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பருக வேண்டும். ஏனேனில் மஞ்சள் தூளில் கிருமி நாசினிகளின் பண்பு அதிகமாக இருப்பதால், அதனைக் குடிக்கும் போது, தொண்டையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் தேன் 
எலுமிச்சை மற்றும் தேனை பயன்படுத்த வேண்டும். சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகவும். இதனால் தேன் தொண்டைப் புண்ணை ஆற்றவும், எலுமிச்சை சளியை குறைக்கவும் உதவுகின்றது.


சிகரெட் 
வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் க்ளீனர்கள், பெயிண்ட், இரசாயன பொருட்கள் அல்லது சிகரெட் புகை போன்றவற்றிலிருந்து விலகியே இருக்க வேண்டும். 


புகைப்பிடித்தல் 
தொண்டை எரிச்சல் மற்றும் சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதனை நிறுத்தி விட வேண்டும். புகை பிடிப்பதால் தொண்டை சளி மேலும் இறுகிவிடும்.


காரமான உணவுகள் 
காரமான உணவுகளை சாப்பிட வேண்டும். ஹார்ஸ் முள்ளங்கி அல்லது ஹாட் சில்லி பெப்பர்ஸ் போன்ற உணவுகளை உட்கொள்வது சளி இறுகுவதை தவிர்க்கும்.How To Get Rid of Throat Mucus or Phlegm Naturally


There are several ways to get rid of throat mucus or phlegm. You are probably familiar with that disturbing feeling of having mucus in your throat, which can make breathing extremely difficult. Mucus or phlegm in the throat can be uncomfortable and cause bad breath or other health problems. 

Phlegm or mucus is thick jelly like fluid different color from throat cough. However, mucus is part of our body's natural immune response that helps the body eliminate invaders. When the mucus excreted from the body by coughing or sneezing, frequent invaders will also be issued with it.

Color of phlegm, the original is white. Yellow mucus appears during the early stages of the disease or if the condition is mild, when the body tries to clear the invaders. Yellow mucus seen in the case of bacterial infections, lower respiratory tract infection, sinusitis, cold, or flu. Cough green phlegm or mucus is a sign of a serious condition in many cases, as pointed to pneumonia, tuberculosis, etc.. But coughing up phlegm with blood indicates that there is severe congestion in the respiratory or minor damage to the sinus and nasal cavity tissue, then, the patient requires immediate medical attention.

Cause of throat mucus or phlegm

Mucus or phlegm can be caused by a variety, such as:
Because allergy irritants, such as dust, pet dander, chemical fumes, etc..
Severe illnesses, such as pneumonia, asthma, acute heart failure, or pulmonary embolism (clots in the blood vessels of the lungs) can cause coughing phlegm for 3 weeks.
Smoking causes coughing green phlegm blood stained rusty brown or yellow foul smelling.
Gastro-esophageal reflux or bacterial or viral infection in the lungs, such as acute bronchitis, whooping cough, cough in children.

Tips To Get rid Of Mucus or Phlegm Naturally

1. Inhale steam from a tub of boiling water or hot shower to loosen mucus in the throat and sinus congestion
2. Drink at least eight glasses of water daily to loosen phlegm and thin mucus – it is also good for your overall health
3. Blow your nose frequently to prevent mucus from draining into your throat
4. Gargle regularly with warm water and salt
5. Add a few drops of eucalyptus oil to a vaporizer to loosen phlegm and relieve congestion
6. Avoid eating foods such as dairy products, meat or fried foods that increase mucus production
7. Drink hot liquids such as herbal tea or chicken broth to moisten the airways and break up the mucus
8. Add a teaspoon of turmeric to half a glass of milk – turmeric contains antiseptic properties that fights infection
9. Use a humidifier or cool mist vaporizer in your bedroom at night to thin the mucus – this helps to moisten the air and is particularly helpful during winter
10. Limit exposure to irritants such as household cleaners, paint fumes, chemicals or cigarette smoke
11. Add a few drops of eucalyptus oil to a vaporizer to loosen mucus and phlegm and relieve congestion
12. Stop smoking as it irritates the throat and worsens respiratory conditions
13. Eat spicy foods, horseradish or hot chili peppers to loosen mucus
14. Use lemon and honey. Mix approximately 2 teaspoons of lemon juice and a tablespoon of honey with a cup of hot water. This mixture should help clear your throat, as the lemon will cut through the mucus while the honey will soothe the throat.

If you cough out phlegm that is yellow or green in color or if it comes with blood, consult your doctor immediately. Remember that these are signs of a more serious health problem.


Share your comments here http://Friendstamil.cbox.ws

Thanks

Monday, 24 June 2013

செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கு - Tips for good digestion

செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்கு - Tips for good digestion

நாம் உண்ணும் உணவுகள், சரியான முறையில் செரிமானமாகவில்லை என்றால் அவை நமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக உணவுகள் சீராக செரிமானம் ஆகவில்லை என்றால் வாயுத் தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிறு இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

மேலே சொன்ன பிரச்சனைகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தாலும், பலரும் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இதே பிரச்சனைகள் நீண்ட காலம் நீடித்து வந்தால் அவை கண்டிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அல்சர் என்ற வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும். ஒருசில நேரத்தில் வயிறு முழுவதையும் பாதித்துவிடும்.

எனவே இத்தகைய பிரச்சனைகளைத் தவிர்த்து சிறந்த முறையில் உணவுகள் செரிமானமாக பின்வரும் வழிமுறைகளை பின்பற்றலாம்.

வெதுவெதுப்பான தண்ணீர் 
உணவு செரிமானமாவதில் பிரச்சனை இருப்பது தெரிந்தால் உடனே வெதுவெதுப்பான தண்ணீரை பருகவும். அதிலும் குறிப்பாக காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரைப் பருகினால், உடலில் இருக்கும் செரிமான அமைப்பைச் சுத்தப்படுத்தி, செரிமானத்திற்குத் தேவையான திரவத்தை மட்டும் சுரக்கச் செய்துவிடும். அதன் மூலம் செரிமானம் தங்கு தடையின்றி நடைபெறும்.

உணவுப் பழக்கம் 
சாப்பிடும் போது ஒரு முறையான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது செரிமானப் பிரச்சனைகளிலிருந்து காப்பாற்றும். சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிடத் தொடங்க வேண்டும். பின் படிப்படியாக கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். அதாவது முதலில் பழங்கள் அல்லது பழச் சாறுகள் போன்றவற்றை சாப்பிட்டு, அதற்கு பின்பு அசைவ உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த பழக்கம் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை அனுமதிக்காது. மேலும் அது செரிமான பிரச்சனைகளை மிக எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்.


உணவருந்தும் முறை 
உணவருந்தும் முறையிலும் செரிமானக் கோளாறுகள் உள்ளன. எனவே நன்றாக மற்றும் வசதியாக அமர்ந்து கொண்டு, ரசித்து, ருசித்து உணவை சாப்பிட வேண்டும். இவ்வாறு அமர்ந்து உணவருந்தும் போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருக்கும். மேலும் அது நன்றாக செரிமானமாக வழிவகுக்கும்.


தண்ணீர் 
செரிமானம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு சரியான வழி, அதிகமாக தண்ணீர் குடிப்பது தான். எனவே நாள் ஒன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது, அது மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கிறது.


எலுமிச்சைப் பழச்சாறு 
காலையில் வெதுவெதுப்பான தண்ணீரை பருகுவதில் விருப்பம் இல்லை என்றால் அதற்குப் பதிலாக எலுமிச்சைப் பழச்சாற்றை அருந்தலாம். தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை தவறாமல் அருந்தி வந்தால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவற்றை நீக்கி, அருமையான செரிமானத்திற்கு வழங்கும்.

மசாஜ் 
செரிமானம் தங்கு தடையின்றி நடைபெற, ஓய்வாக இருக்கும் போது, வயிற்றுப் பகுதியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய் மசாஜ் செரிமானக் கேளாறை நீக்கிவிடும்.


மென்று சாப்பிடுதல் 
உணவு அருந்தும் போது, குறைவான அளவு உணவை வாயில் வைத்து, அதை நன்றாகக் கடித்து, மென்று மெதுவாக சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிடும் போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும்.

நார்ச்சத்துள்ள உணவுகள் 
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளான செர்ரி, திராட்சை, மிளகு, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே சொன்ன உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.

கொழுப்புச்சத்து 
செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகள், கண்டிப்பாக செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் ஆகும். ஆகவே கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது. வேண்டுமெனில் கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை குறைவாக சாப்பிட்டு, மற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடலாம்.

வைட்டமின் சி உணவுகள் 
உணவில் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளான ப்ராக்கோலி, தக்காளி, கிவி பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். மேலும் பழங்கள் மற்றும் காய்களை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் அவை மலச்சிக்கலை நீக்கி எளிதாக செரிமானம் நடைபெற வழிவகுக்கும்.

செரிமானத்தை அதிகரிக்கும் உணவுகள் 
மிக விரைவாக செரிமானம் நடைபெற வைக்கும் உணவுப் பொருட்களான இஞ்சி, கருப்பு மிளகு, கல் உப்பு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாகச் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.

நேரம் 
மிக எளிதாக செரிமானமாக வேண்டுமென்றால் ஒரு முறையான சாப்பாட்டு நேரத்தை வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் அதே நேரங்களில் உணவை அருந்த வேண்டும். காலம் கடந்து உணவு உண்ணுதல் மற்றும் முறையான நேரம் இல்லாமல் உணவு அருந்துதல் போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.


உடல் எடை 
குண்டாக இருப்பது மற்றும் அதிக எடையுடன் இருப்பது ஆகியவை அதிகமான செரிமான கோளாறுகள் மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். ஆகவே மருத்துவரை அணுகியோ, போதிய டயட்டை மேற்கொண்டோ எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சி 
அசைவப் பிரியராக இருந்தால், கொழுப்புச்சத்து அதிகமுள்ள இறைச்சியால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும். எனவே கொழுப்புச்சத்து குறைந்த இறைச்சிகள் மற்றும் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணலாம். அது செரிமானக் கோளாறை அதிகம் ஏற்படுத்தாது.


இயற்கை உபாதைகள் 
இயற்கை உபாதைகள் ஏற்படும் போது உடனே கழிவறைக்குச் சென்று விட வேண்டும். அவ்வாறு செல்லாமல் அடக்கி வைத்திருந்தால், உடலில் உள்ள கழிவுகள், உடலில் பல கேடுகளை விளைவிக்கும்.


உடற்பயிற்சி 
தினமும் முறையாக உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமானப் பிரச்சனைகள் வராது. மேலும் உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.


அதிகமான உணவு 
தேவைக்கு அதிகமான உணவை உட்கொண்டால், அது செரிமானப் பிரச்சனைகளை உருவாக்கும். எனவே அளவாக உண்பது எப்போதும் நன்மையைத் தரும்.

மன அழுத்தம் 
மன அழுத்தம் இருந்தால், அது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.


தயிர் 
கொழுப்புச்சத்து அதிகம் இல்லாத தயிரைத் தினமும் பருகி வருவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். தயிர் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்குகிறது. அதோடு உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. மேலும் செரிமானப் பிரச்சனைகளையும் நீக்குகிறது.

இரவு உணவு 
மாலை நேரங்களில் நமது செரிமான மண்டலத்தின் வேகம் குறைவாக இருக்கும். ஆகவே இரவு நேரங்களில் நேரம் கழித்து உணவு உண்ணாமல் இருப்பது நல்லது. இரவு நேரத்தில் தூங்கும் 2 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவு அருந்திவிட்டால், அது சீக்கிரம் செரிமானம் ஆகிவிடும்.

Tips for Good Digestion


Are you troubled with constant belch, gas or flatulence, stomach bloating and all other digestive problems? 

Most of these problems go undiagnosed because they are not that serious, but if they appear in the long run, they can damage your health badly. To avoid these negative effects in your life, follow these simple tips for better digestion by Sunita Pathania - Sr. Registered Dietician and Diabetes Educator, Healthy Living Diet Clinic, Mumbai.


 # 1: Sip warm water

If you have trouble in digesting food, then sip warm water. Drinking warm water in the morning and at least thirty minutes before meals will help to clean your digestive system and enhance the production of gastric juice in your stomach.


 # 2: Eat in order

While dining, form a food pyramid to avoid indigestion. Start your meal with easy to digest food and slowly move towards the complex foods. Thus, start your meal with fruits or juices and end it up with a royal treat like poultry or meat, in this way you will avoid overeating and digestive problems.


 # 3: Always sit and eat your meal

The act of how you eat your meal also affects digestion. Thus, always sit in a relaxed posture and enjoy your meal. When we sit and eat our meal, our stomach acquires a relaxed posture and this helps to enhance our digestion.


 # 4: Drink lots of water

This is another best remedy to treat digestive trouble. Drinking 8-10 glasses of water every day, helps in easy passage of stools and cleanses your digestive tract.


 # 5: Drink some lemon water

If you don't like sipping warm water in the morning, then squeeze some lemon juice in a glass of water and drink it. Follow this treatment every day, as it will help to cleanse your stomach of leftover waster and remove excess acid.

 # 6: Do some massage

To enhance your digestion, practice some self-massage or stomach exercise when you are free. These daily routine will help to improve your digestion in long run. Just try massaging your stomach with some essential oils.


# 7: Grind and chew, should be your mantra

Your mantra while having food should be, taking smaller bites and chews each food slowly and steadily. This technique will help to create carbohydrate digestion in your mouth and allows production of amylase - the digestive enzyme, which enhances proper digestion.


 # 8: Make friends with fiber

Fill your plate with fiber rich foods like cherries, grapes, bell peppers, whole grains and nuts. Consumption of these foods will help to ease your digestion and keep it regular.


 # 9: Avoid fatty foods

Fatty foods take long time to digest, thus consumption of these foods are likely to cause constipation and other digestive problems. Don't completely avoid fatty foods, as fats are essential for the proper functioning of the body. As a result, moderation is the key, and pair it with other healthy foods so that they can be easy to your stomach.


 #10: Eat foods rich in vitamin C

Increase your intake of foods rich in vitamin C like broccoli, tomatoes, kiwi fruit and strawberries. Eat lots and lots of colourful fruits and vegetables to soften your stools and making them easier to pass.


#11: Add spices to your diet

Add taste your food by adding various spices like ginger, black pepper, rock salt or coriander. All these spices not only help to add flavour to your food but all improves digestion.


 # 12: Follow a mealtime

To have a good digestion, it is very important to eat at the same time every day. Marinating a steady eating time will help to have a regulating effect on your digestive system.


# 13: Maintain a healthy weight

Being obese or overweight can also lead to digestive problems like heartburn and gas. Thus, check with your doctor and aim to maintain a healthy weight.


 # 14: Choose lean meats

If you are a meat lover, then stay off from fatty cuts of meats as it can cause uneasy digestion. So if you want to eat meat, then choose lean cuts of meat and skinless poultry.


 # 15: Visit the loo often

If you have an urge to go to the toilet, then go instantly. Delaying the removal of excreta can stretch your rectum, which can make the passage of waste difficult. Thus, whenever you get the natures call, attend it.


# 16: Exercise regularly

Practicing exercise everyday is very good for digestion. Daily exercise helps to stimulate your metabolism and improves your blood flow.


 # 17: Watch your portion size

Consuming food beyond your limit can cause indigestion. So always, prefer smaller meals, to avoid overeating.


 # 18: Reduce stress

The reason for your constant digestive problems can be stress. Stress can have aggressive effect on your digestive tract. Therefore, control your stress by practicing breathing exercise or meditation.


 # 19: Add probiotics

Make sure to eat a bowl of low-fat yoghurt every day. Yoghurt is rich in probiotics - the healthy bacteria. They help to keep your body healthy, breaks down lactose, treats irritable bowel syndrome and enhances proper nutrient absorption.


 # 20: Avoid late night meals

Our digestive system tends to slow down in the evening. Thus, avoid late night foods, so that there in enough digestive chemicals in our stomach to properly digest our food.Thanks