Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label மகளிர் தினம். Show all posts
Showing posts with label மகளிர் தினம். Show all posts

Friday, 8 March 2013

பாதுகாப்பான 10 நகரங்கள் - Top 10 Safest cities


இந்த 10 நகரங்கள்தான் உங்களுக்கு புனிதமானது.. பாதுகாப்பானது!!!

Top 10 Friendly Cities In The World

ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்த உலகில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இருப்பினும் உலகின் சில பகுதிகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள் என்று தான் சொல்கின்றனர். ஆனால் அனைத்து நாட்டிலுமே சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. மேலும் பெண் சுதந்திரமானது இருந்தாலும், எந்த ஒரு பெண்ணாலும், இரவில் தனியாக நடக்க முடியாத நிலை இன்றும் நிலவுகிறது. இருப்பினும் உலகில் பெண்களுக்கு எந்த ஒரு அநியாயமும் நடக்காத வகையில், சரியான பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு சில நகரங்கள் உள்ளன.

இப்போது பெண்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில், பெண்களுக்கு பாதுகாப்பையும் மதிப்பையும் அளிக்கும் நகரங்கள் என்னவென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தான் இருக்கின்றன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பட்டியலில் ஒரு இந்திய நகரம் கூட, பெண்களுக்கு பாதுகாப்பை தரும் வகையில் இல்லை என்பது தான்.

சரி, இப்போது உலகில் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நகரங்கள் எவையென்று பார்த்து, வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த புனித நகரங்களுக்கு சென்று வாருங்கள்.

It is rare to find a women-friendly city in this male dominated world. But women still do have their safe havens. Certain cities are perceived as women-friendly or rather safest cities for women. A city is women-friendly only if it gives a woman the freedom to travel late at night and wear whatever she wants to. In the safest cities of the world, women do not have to alter their dressing sense or work timings in order to be safe.

As it is Women's Day, let us take a look at the most women-friendly cities in the world. Most of these cities are European. You would be surprised to know that there is not a single Indian city that can be called women-friendly. Nor will you find a single American name in this list of the safest cities for women.

So if you want to enjoy some exotic travel on Women's Day, these are the women-friendly cities that should be on your mind. These cities are good for women who are travelling alone too.


கோபன்ஹேகன், டென்மார்க் உலகிலேயே டென்மார்க் மிகவும் பாதுகாப்பான நாடு. அதிலும் அந்த நாட்டில் உள்ள மிகச் சிறிய நகரமான கோபன்ஹேகனில், பெண்கள் சுதந்திரமாக எந்த நேரத்திலும் செல்லும் அளவில் பாதுகாப்பானது உள்ளது.
Copenhagen, Denmark Denmark is one of the safest countries in the world. And Copenhagen is a quite little European town where women can roam free and be safe at any hour.



ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து இந்த நகரத்தில் விபச்சாரத்தையே சட்டப்பூர்வமாக அமல்படுத்தியிருப்பதால், இங்கு கணிசமான அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் இருக்கும் என்ற விவாதம் நிலவுகிறது.
Amsterdam, Holland A city were people can smoke weed on the streets can hardly be called unsafe. There is a lot of debate on the fact that because prostitution is legal in Amsterdam, it has increased the safety of women substantially.



ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் ஸ்வீடன் நாட்டில் உளள ஸ்டாக்ஹோம் நகரமும் ஒரு பாதுகாப்பான நகரம் ஆகும். ஏனெனில் ஸ்வீடன் நாட்டில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்காக ஒரு சிறந்த கொள்கையை கொண்டுள்ளது. அது என்னவென்றால், பெண்கள் மகப்பேறுவிற்கு நீண்ட கால விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதே. எனவே தான் இந்த நகரமும் பெண்களுக்கான ஒரு சிறந்த பாதுகாப்பான நகரமாக உள்ளது.
Stockholm, Sweden Stockholm is a city that is women-friendly as far as employment is concerned. The state of Sweden gives the longest maternity leaves and has the best HR policies for women.




ஜூரிச், சுவிச்சர்லாந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் ஒரு திறந்த நகரம். பொதுவாகவே சுவிட்சர்லாந்து வரலாற்று அடிப்படையில் மிகவும் அமைதியானது. அந்த நாட்டில் உள்ள ஜூரிச் நகரம் அனைவருக்குமே ஒரு சிறந்த பாதுகாப்புடன் கூடிய, மகிழ்ச்சியைத் தரும் நகரமாக உள்ளது.
Zurich, Switzerland Zurich is an open city for everyone. As Switzerland is a country that has historically been peaceful, Zurich is thus a free city for everyone including women.



வியன்னா, ஆஸ்திரியா இந்த நகரத்தில் எந்த ஒரு இளம் தம்பதியரும் பயமின்றி, சுதந்திரமாக எந்த நேரமும் நடந்து செல்ல முடியும். அந்த அளவில் அந்த நகரம் பாதுகாப்பான ஒன்று.
Vienna, Austria Remember the streets of Vienna from the movie 'Before Sunrise'? If a young couple can walk around the streets of Vienna all night, then it must be a safe city.



சிங்கப்பூர் சிங்கப்பூரின் பாதுகாப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் தெருவில் ஒரு பேப்பரைப் போட்டாலே, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவர், அந்த அளவு அங்கு சட்டமானது மிகவும் கடுமையாக இருக்கும். எனவே அத்தகைய ரோட்டையே சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அந்த நகரத்தில் வாழும் பெண்களுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்.
Singapore Singapore is a city that has some of the most stringent rules for safety. This ensures that women remain safe on the streets.



சியோல், தென் கொரியா சியோல் ஒரு தொழில்முறை மற்றும் நிபுணத்துவ நகரம். இத்தகைய நகரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, சரியான பாதுகாப்பு இருக்கும்.
Seoul, South Korea Seoul is a very professional city. Women remain safe while working and even in the night clubs of Seoul.



முனிச், ஜெர்மனி பெண்கள் வேலை செய்வதற்கு ஒரு சிறந்த நகரம் என்றால், அது ஜெர்மனியில் உள்ள முனிச் தான். இந்த நகரத்தில் உள்ள போக்குவரத்தானது மிகவும் பாதுகாப்பானது.
Munich, Germany Munich is a great place for women to work. The public transport is effective and extremely safe.



டோக்கியோ, ஜப்பான் உலகின் பரபரப்பான மற்றும் விலையுயர்ந்த நகரம் என்றால் அது ஜப்பானில் உள்ள டோக்கியோ தான். இந்த நகரத்தில் வேலை செய்யும் பெண்கள், வேலை செய்யும் போது பாதரம் கலந்த மருந்து ஒன்றை வைத்துக் கொண்டு இருப்பதால், இந்த நகரமும் ஒரு பாதுகாப்பான நகரம் ஆகும்.
Tokyo, Japan Tokya is one of the busiest and most expensive cities in the world. Women work with mercurial efficiency in this city and are considered quite safe.




துபாய், அரபு பொதுவாக அரபு நாடுகள் என்றாலே அங்குள்ள பெண்களுக்கு நிறைய பாதுகாப்புகள் இருக்கும். அதிலும் அங்குள்ள துபாய் என்றால் சொல்லவா வேண்டும். இந்த நகரத்தில் பெண்கள் எந்த ஒரு மார்டன் உடையையும் அணிந்து செல்ல இயலாது. எனவே இதுவும் பெண்களுக்கான நகரம் ஆகும்.
Dubai, United Arab Emirates Dubai is the safest city in the Gulf for women. Unlike other Gulf countries, we don't have to dress modestly in Dubai.

Thanks

சிறந்த 8 பெண்கள் - 8 special women in your life

வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய 8 விதமான பெண்கள்
8 Special Women In Your Life



ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக் கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது. அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள் கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர்.

It is a common saying that behind every successful man, there is a woman. Men often retort with this saying considering it is true because women never go behind unsuccessful men. However, the rolw of women in teaching men the vital lessons of life cannot be denied. 8th of March is International Women's Day, a day when we celebrate all the special women in our life. That is why Women's Day is a celebration of all the woman who have contributed to making you the man that you are today.

எனவே தான் ஆண்கள் எந்த ஒரு இடத்திலும் பெண்களுக்கு மதிப்பளிக்கின்றனர். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இத்தகைய பெண்களிடம் இருந்து, எப்போதும் நல்லதை மட்டும் கற்றுக் கொள்வதில்லை. தீயதையும் தான் கற்றுக் கொள்கிறோம். ஆனால் இவற்றால் தான் ஒரு உண்மையான வாழ்க்கையை அனைவரும் கற்றுக் கொள்கிறோம். ஆகவே அத்தகைய பெண்களை சிறப்பிக்கும் வகையில் மார்ச் மாதம் 8 ஆம் தேதி மகளிர் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இத்தகைய தினத்தில், வாழ்க்கையில் மறக்க முடியாத உறவுமுறைகளில் சந்திக்கக்கூடிய 8 விதமான பெண்கள் யார் யார் என்று பார்ப்போமா!!!

All the special women who come into your life have something to teach you. And if you learn your lessons well, you will be successful in your relationships with women all your life. These special women do not always teach you good things. Sometimes, you might learn a nasty thing or two from your relationships with women. But eventually, it will help you become a better person. On Women's Day, honour these 8 special women in your life who teach you important lessons.


அம்மா: உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும், அம்மா பையன் தான். ஏனெனில் அம்மாவின் மூலம் உலகை பார்க்கும் ஆண், அந்த அம்மாவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக் கொள்கிறான். சொல்லப்போனால், ஆண்களின் ஹீரோயின் அவர்கள் அம்மா தான்.
Mother: Every boy is a mamma's boy. Your mother teaches you almost everything that you know in your life. She teaches you speak the first words and take your step steps. The lesson to learn from your mother is that women are the kindest creations of God with infinite patience and resilience.


மாமியார்: அம்மாவின் காதலுக்கு கண்ணே இல்லை என்பதை மாமியாரின் மூலம் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்வோம். எனவே இந்த உறவுமுறையிலும் ஒரு நல்ல அம்மாவைக் காணலாம்.
Mother-in-law: Mother's love is blind and you learn that from your mother-in-law. When she interferes in your married life, she is trying to protect her own child (your wife). So be patient and learn your lesson.


பாட்டி: பாட்டிக்கு பேரன்/பேத்தி என்றால் அளவு கடந்த பிரியம் இருக்கும். அதிலும் பாட்டியின் மூலமும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வோம். எனவே இந்த பாட்டி உறவு முறையும் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஒன்று.
Grandmother: Your grandmother's relationship with your mother will make you realise that it is very difficult for two women to co-exist in the same kitchen. Take this lesson seriously when you intend to get married.


ஆசிரியர்: குறும்பு செய்யும் ஒவ்வொரு ஆணுக்கும், படிக்கும் காலத்தில் ஒரு பெண் ஆசிரியர் மிகவும் பிடிப்பவராக இருப்பவர். எனவே அவ்வாறு ஒழுக்கத்தோடு, இவ்வாறு தான் வாழ்க்கையில் நடக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த மனதிற்கு பிடித்த பெண் ஆசிரியரை, எந்த ஒரு ஆணும் நிச்சயம் மறக்க மாட்டார்கள்.
The Teacher: You Had A Crush On Every adolescent boy has a crush on his favourite lady teacher. This infatuation teaches men that a woman encompasses all the beauty in the universe.


தங்கை: அண்ணானாக இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயம் தங்கை என்றால் மிகவும் பிடிக்கும். ஆண்கள் எவ்வளவு தான் பொறுக்கியாக இருந்தாலும், தங்களை விஷயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக தங்கையாக இருக்கும் பெண், எவ்வளவு தான் அண்ணனுடன் சண்டை போட்டாலும், எந்த ஒரு விஷயத்திலும் தனது அண்ணனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவே இவ்வாறு விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை ஒவ்வொரு ஆணும், தங்கையிடமிருந்து கற்றுக் கொள்கின்றனர்.
Sister: If you have your sister or a female cousin, she will teach you that women can be mean at times. They are just as human as you are and want to have chocolates just like you do. A sister helps you realise that women are not just exotic fantasies, they are real human beings.


முன்னாள் காதலி: பெண்களிடமிருந்து எத்தனை தான் நல்ல விஷயத்தை கற்றுக் கொண்டாலும், ஒரு கெட்ட விஷத்தையும் கற்றுக் கொள்வோம். அதிலும் காதலிக்கும் ஒரு பெண்ணிடமிருந்து சரியான புரிதல் மற்றும் நம்பிக்கையின்மையினால் பிரிந்து விட்டாலும், வாழ்வில் காதலித்த முதல் காதலியை யாரும் மறக்க மாட்டார்கள்.
Ex-Girlfriend: A disastrous relationship with the wrong girl usually teaches you to choose well the next time. You realise that just because you are attracted to the opposite sex, every member of the female gender is not compatible with you.


மனைவி: அம்மாவிற்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு மறுக்க மற்றும் மறக்க முடியாத உறவுமுறை தான் மனைவி. மனைவி என்ன தான் சண்டை போட்டாலும், ஏதாவது ஒன்று என்றால், அடுத்த நிமிடமே வந்து எதையும் மனதில் கொள்ளாமல், அம்மாவிற்கு அடுத்து அனுசரித்து நடப்பவள் தான் மனைவி. எனவே இத்தகைய மனைவியை உயிர் பிரிந்தாலும், எந்த ஒரு ஆணும் மறக்கமாட்டார்கள்.
Wife: The woman who you promise to keep in sickness and health teaches you that women are like a bottomless pit. And one lifetime is too short to know them completely.


மகள்: அனைத்து அப்பாக்களின் செல்லப்பிள்ளை, அவர்களது மகள் தான். ஏனெனில் அவர்கள் தங்கள் மகளிடமிருந்தும் நிறைய கற்றுக் கொள்கின்றனர். மேலும் அவர்களிடம், அவர்களது மகளைப் பற்றி சொல்லச் சொன்னால், அனைவரும் சொல்வது "என் உயிர் தான் என் மகள்" என்பது. இத்தகைய உறவுமுறையைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
Daughter: Every father knows that the one woman in the world that they can die for is their little girl. Your daughter arouses all the protective and paternal instinct that was deep hidden in you till now.

Happy Women's Day. To discuss further chat in friends tamil room

Thanks