Flash News

Friends Tamil Chat

Search This Blog

Showing posts with label festival. Show all posts
Showing posts with label festival. Show all posts

Saturday, 23 March 2013

ஹோலி பண்டிகை - safe holi festival


ஹோலி பண்டிகை கொண்டாடப் போறீங்களா? 


இந்துக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஹோலியும் ஒன்று. இந்த ஹோலி பண்டிகை பெரும்பாலும் வட இந்தியாவில் தான் கொண்டாடப்படும். இந்த பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ வீசிக் கொண்டு விளையாடுவது தான். இதனை ஒரு வசந்த கால பண்டிகை என்றும் சொல்லலாம். இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தின் போது வண்ணப் பொடிகள் படாமல், இருக்க பலரும் முயற்சிப்பர். இருப்பினும் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மேலும் இந்த பண்டிகையின் கொண்டாட்டத்தினால் சிலருக்கு உடல், சருமம் போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றி, ஹோலி பண்டிகையை நண்பர்களுடன் சிறப்பான முறையில் கொண்டாடி மகிழுங்கள்.



how stay safe this holi

* தற்போது தாவரங்களின் மூலம் தயாரிக்கப்பட்ட நிறங்கள் கொண்ட பொடிகளை விட, ஆசிட், மைகா, கண்ணாடி துகள்கள் போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்பட்ட பொடிகள் அதிகம் விற்கப்படுகின்றன. எனவே சரியான பொடிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதனால் எந்த ஒரு அழற்சியும் ஏற்படாமல் இருக்கும்.

* வண்ணப் பொடிகள் தலையில் பட்டால், பின் தலையில் பொடுகு, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படும். எனவே பண்டிகையை கொண்டாடும் முன், தலைக்கு நன்கு தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு, பின் விளையாடினால், தலையில் வண்ணப் பொடிகள் தங்குவதை தவிர்க்கலாம். மேலும் தலைக்கு தொப்பியை அணிந்து கொள்வதும் சிறந்தது.

* வண்ண நிறப் பொடியானது கண்களில் பட்டால், பின் அவை கண்களுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கும். எனவே அவ்வாறு கண்களில் பொடியானது பட்டுவிட்டால், அப்போது உடனே குளிர்ந்த நீரால் கண்களை அலசிவிட வேண்டும். ஒருவேளை கண்களில் பொடி பட்டு, எரிச்சலுடன் வலியும் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

* ஹோலி பண்டிகையின் போது எந்த நேரமும் முகத்தில் வண்ண பொடியானது வீசப்படும். எனவே இந்த பண்டிகையின் போது, சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, முகத்திற்கு மாய்ச்சுரைசர் க்ரீம் அல்லது சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டால், எந்த ஒரு பாதிப்பும் சருமத்தில் ஏற்படாமல் இருக்கும்.

* உடல் முழுவதும், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை உடல் முழுவதும் தடவிக் கொண்டால், சருமத்தில் வண்ணப் பொடியில் உள்ள நிறமானது சருமத்தில் தங்காமல் தடுக்கலாம்.

* ஹோலியின் போது பாங்க் என்னும் பானம் அருந்தப்படும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் அளவுக்கு அதிகமாக குடிக்க வேண்டாம். அதிலும் குறிப்பாக ஆல்கஹாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது.


How To Stay Safe This Holi?


Holi, the Indian festival of colours is around the corner, and people are getting ready to celebrate this festival of colours. Smearing colours to the guests and acquaintance is the norm of this Indian festival. Though celebrating this festival is fun, but use of synthetic colours can result in allergies, dermatitis or eye irritation which can be accompanied by headache, vomiting or lethargy.

Other than health issues, another important concern is about personal safety of women and children. Keeping an eye on matters which need extra care is the best and only way to make your festive season a memorable event.

We don't want ourself or our dear ones to suffer from allergies or other health or beauty problems due to the colours. Along with the fun and joy, safety aspects should also be in concerns to make your Holi celebrations more exciting. Remember these points and celebrate Holi and be safe during this festive season.

• Avoid artificial colours: Use of colours prepared from plants has been replaced by synthetic materials like acids, mica, glass powder and alkalis which causes mild to serious health complications. Using natural colours from plant extracts is the easiest way to avoid this.

• Hair care: Apply coconut oil to your hair. This will act as a coating and will help to wash-off the Holi colours easily. This will protect your hair from being rough due to synthetic colors. Using a cap or stole will also help.

• Eye care: Protect your eyes from eye irritations due to colours. Wash your eyes with fresh cold water, if powder or coloured water enters your eyes. If irritation persists with pain, consult a doctor. If you wear contact lenses, don't forget to remove them before going out to play Holi.

• Facial protection: Apply a thick layer of moisturizing cream and sunscreen on your face to prevent harmful effects of toxins present in colours. In an event of any attack on the face with colors, try to keep your lips shut and eyes closed.

• Skin protection: Clothes covering maximum body are considered ideal for the occasion. Cover your body with generous amounts of olive oil, coconut oil, almond oil or mustard oil. It will protect your skin from harmful powder colours.

• Limit Bhang: Bhang, the official drink for Holi, should not be consumed in large quantities on an empty stomach and do not mix it with alcohol.

• Stay away from hooligans: Women should take care to stay away from the hooligans who consider festival seasons like Holi as an opportunity for harassing women.

• Protect yourself: Try to be in groups. But avoid being in groups of unfamiliar people. Do not take chances to be on too much crowded roads.

Thanks




Tuesday, 15 January 2013

Pongal Special Programs

Pongal Special Programs - பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் in Sun Tv, Vijay Tv, Aditya TV, KTV, MEGA TV, Sun Music, Captain TV

Sun TV
Pattikkaada Pattanama Pongal 2013 - 15-01-2013

Chennaiyil Oru Naal - Munnottam - Pongal 2013 - 15-01-2013

Comedy Laddu Pongal 2013 - 15-01-2013

Vijay 20 Pongal 2013 - 14-01-2013

Sirappu Pattimandram Pongal 2013 - 14-01-2013

Mama Shooting Pakka Polama Pongal 2013 - 14-01-2013

Vijay TV
Villa To Village With Vishal Pongal 2013 - 15-01-2013

Sollathadum Unmai Prakash Raj Pongal 2013 - 15-01-2013

David Audio Launch Pongal 2013 - 15-01-2013

Trishavin Nanban Pongal 2013 -14-01-2013

Kedi Billa Killadi Ranga Pongal 2013 -14-01-2013

Viswaroopam Making Pongal 2013 - 14-01-2013

Karthiyudan Pongal 2013 -14-01-2013

Villa To Village With Vishal Pongal 2013 - 14-01-2013

Comedy Super Star Santhanam Pongal 2013 - 14-01-2013

Irubathaandil Illayathalapathy Pongal 2013 - 14-01-2013

Kanna Laddu Thinna Aasaiya Pongal Special Show Vijay


Adithya TV
Adithaya TV Pongal Jokes

Vadivelu Special

K TV
Nadithu Paarkiren - Power Star - Pongal Special Show


MEGA tv
Ravi In Jeyam


Sun Music
Anirudh – Vada Pochea Candid Show In Sun Music 


Captain TV
Killadi Bharath Pongal Exclusive Interview


Thanks






Sunday, 13 January 2013

பொங்கலுக்கு செய்யக்கூடிய அலங்காரங்கள்

பொங்கலுக்கு செய்யக்கூடிய அலங்காரங்கள்

பொதுவாக பண்டிகை என்றாலே அனைத்து வீடுகளும் மிகவும் சுத்தமாக இருக்கும். ஏனெனில் மற்ற நேரங்களில் வீட்டை சுத்தம் செய்கிறோமோ இல்லையோ, பண்டிகை நாட்களில் நிச்சயம் செய்வோம். அதிலும் உழவர் திருநாள், தமிழர் திருநாள் என்றழைக்கப்படும் பொங்கல் பண்டிகையன்று, அனைத்து தமிழர்களும் கண்டிப்பாக செய்வார்கள். ஏனெனில் பொங்கல் பண்டிகைக்கு முதள் நாள் வரும் போகியன்று அனைத்து பழைய பொட்களையும் வெளியேற்றிவிட்டு, பொங்கலன்று புதிய பொருட்களைப் பயன்படுத்துவார்கள். அதுமட்டுமின்றி, நமது முன்னோர்கள் இவ்வாறு பொட்களை எரிக்கும் போது, நமது மனதில் இருக்கும் அனைத்து தீய எண்ணங்களும் எரித்துவிட்டு, பொங்கல் முதல் நல்ல எண்ணங்களை நினைக்க வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், அந்த நாளன்று தேவைப்படும் பொருட்களை முன்னரே வாங்கிக் கொண்டு, எந்த மாதிரியான அலங்காரம் எல்லாம் வீட்டில் செய்ய வேண்டும் என்று ஒருசிலவற்றை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இப்போது அந்த செயல்கள் மற்றும் பொருட்களை மனதில் கொண்டு, பொங்கலுக்கு வீட்டை அழகாக அலங்கரித்து, பொங்கல் பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடி மகிழுங்கள்.


சுத்தம் செய்வது 
எந்த பண்டிகையானாலும் முதலில் வீட்டை சுத்தம் செய்வோம். அதிலும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையன்று செய்யாமலா இருப்போம். அதுவும் கிராமங்களில் மாட்டுச் சாணத்தை நீரில் கரைத்து, வீட்டைத் துடைப்பார்கள்.


பொங்கல் காப்பு 
பெரும்பாலும் பொங்கலுக்கு அனைத்து வீடுகளிலும் காப்புகளை கட்டுவார்கள். அந்த காப்பில் வேப்பிலை, ஆவாரம் பூ, பூலப் பூ ஆகியவற்றை சேர்த்து கட்ட வேண்டும்.



மாக்கோலம் 
வீட்டில் உள்ளே ஹாலின் மையப் பகுதியில், அரிசி மாவினால் கோலம் போட்டு, காவி நிறத்தை சுற்றி கொடுப்போம். இதனால் வீடே மிகவும் அழகாக காணப்படும்.



செங்கல் மற்றும் விறகு 
கிராமப் பகுதிகளில் பொங்கல் வைப்பதற்கு சிறிய பாறைக் கற்கள் அல்லது செங்கல் மற்றும் விறகுகளை சேகரித்து வைப்பார்கள். எனவே விறகு அடுப்பில் பொங்கல் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பொருட்களை மறக்காமல் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.



ரங்கோலி 
சிலர் வீட்டிற்கு வெளியே போடும் கோலங்களில் பொங்கல் பொங்குவது போன்ற ரங்கோலியைப் போட்டு, அதன் உள்ளே சரியான நிறங்களால் நிரப்புவார்கள்.



வண்ணமயமான பானை 
பொங்கல் வைப்பதற்கு மண் பானை மிகவும் முக்கியம். எனவே சிலர் வண்ணம் தீட்டப்பட்ட மண் பானையை வாங்கி வைப்பார்கள்.


மஞ்சள் கொத்து 
பொங்கல் வைத்து சாமி கும்பிடும் போது மஞ்சள் கொத்து மிகவும் முக்கியம். ஆகவே மஞ்சள் கொத்துக்களை வாங்க வேண்டும்.



கரும்பு 
அனைத்தையும் செய்துவிட்டு, டிவியில் நிகழ்ச்சி போடுகிறார்கள் என்று, கரும்பு வாங்குவதை மறந்துவிட வேண்டாம்.


Thanks



பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்

பொங்கலுக்கு கொண்டாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்!!!


பொங்கல் என்றாலே மனதில் ஒரு குதூகலம் பொங்கும். ஏனெனில் இந்த நாளன்று புத்தாடை அணிந்து, வீட்டில் அதிகாலையில் எழுந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து, சூரியனுக்கு பொங்கல் வைத்து நமஸ்காரம் செலுத்தி, பின் அந்த பொங்கலை வீட்டில் உள்ளோருடன் பகிர்ந்து உண்போம். பொங்கலின் மற்றோரு சிறப்பு கரும்பு. இந்த கரும்பிற்காகவே நிறைய பேர் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஆவலோடு இருப்பர். அதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான நிகழ்வுகள் நடைபெறும். அதிலும் கிராமப்பகுதிகளில் தான், பொங்கல் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடப்படும். அதிலும் அந்த விளையாட்டுக்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரின் வீரத்தையும் மதிப்பிடும் வகையில் இருக்கும். எனவே பெரும்பாலானோர் பொங்கல் என்று வந்துவிட்டால், கிராமப்பகுதிகளுக்கு செல்ல ஆசைப்படுவர். இப்போது பொங்கல் பண்டிகைக்கு விளையாடப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள் என்னவெல்லாம் என்று பார்ப்போமா!!!

இளவட்டக்கல் 
அக்காலத்தில் இந்த விளையாட்டானது விளையாடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த விளையாட்டு மறைந்துவிட்டது. பொதுவாக இந்த இளவட்டக்கல் விளையாட்டானது, ஒவ்வொருவரின் வலிமையை வற்புறுத்தும் வகையில் இருக்கும். இதில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் விளையாடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் இந்த விளையாட்டில் ஒரு குறிப்பிட்டக் கல்லை தூக்கும் பலசாலிக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் வாக்கு கொடுப்பர். ஏனெனில் அக்காலத்தில் வலிமையானவருக்கு தான் பெற்றோர்கள் திருமணம் முடித்து வைப்பார்கள். ஆனால் தற்போது இந்த விளையாட்டு மறைந்துவிட்டது என்பதைவிட, பலர் மறந்துவிட்டார்கள் என்று சொல்லலாம்.



கபடி 
இந்த விளையாட்டு பல கிராமங்களில் இன்றும் நடைபெற்று வருகிறது. அதிலும் இந்த விளையாட்டில் பங்குபெறுவோர் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும் என்று மிகவும் பாடுபடுவர். ஏனெனில் இந்த விளையாட்டு ஊர்களுக்கிடையே நடைபெறுவதால், பலர் மிகவும் ஆர்வத்துடன் விளையாடுவர். இதைப் பார்த்தால் நமக்கே விளையாட வேண்டுமென்ற ஆசை வரும்.



ரேக்ளா ரேஸ் 
ரேக்ளா ரேஸ் என்றால் மாட்டு வண்டி பந்தயம். இந்த பந்தயம் இன்றும் பல கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது. அதுவும் ஒரு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றாகும்.




ஜல்லிக்கட்டு 
பாரம்பரிய விளையாட்டுக்களில் அன்று முதல் இன்று வரை அழியாமல் கொண்டாப்பட்டு வரும் விளையாட்டு என்றால் அது ஜல்லிக்கட்டு தான். அதிலும் இந்த விளையாட்டு தமிழ்நாட்டில் இருக்கும் அலங்காநல்லூரில் நடைபெறும். இதில் காளைகளை நன்கு வளர்த்து, அந்த காளையின் கொம்புகளில் பணமூட்டையை கட்டிவிட்டு, காளையை அடக்கி, அந்த பொன்மூட்டை எடுக்க வேண்டும். இது மிகவும் ஆபத்தான விளையாட்டு. இன்றும் இந்த விளையாட்டைத் தான் பெரும்பாலான இளம் தலைமுறையினர் விரும்பி விளையாடுவார்கள்.



உறியடி 
இதுவும் ஒருவித பொங்கல் விளையாட்டுக்களில் ஒன்று. இதில் மேலே தொங்கும் பானையை, எந்த தடங்கல் வந்தாலும் முயன்று உடைக்க வேண்டும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஏனெனில் இந்த பானையை உடைக்க அருகில் செல்லும் போது, உடைப்பவர்களின் முகத்தில் தண்ணீர் ஊற்றி, அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள்.



கோலப் போட்டி 
பெண்களுக்கு நடைபெறும் ஒரு போட்டி என்றால் அது கோலப் போட்டி தான். இந்த போட்டியில் வெற்றி பெற பெண்கள் விடிய விடிய கோலத்தைப் போட்டு, வண்ணத்தை தீட்டுவார்கள். வேறு என்னவெல்லாம் விளையாடுவார்கள் என்று தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thanks