Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday, 24 August 2013

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம் - how make thalaiva butter masala :)

'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்  - how make thalaiva butter masala :)

தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு


கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும்.

இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .

பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.

நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.

--------

Today naama seiya pora dish peru #Thalaivaa..!
>>Thevayana porutkaal..
# Devar magan
# Naayagan
# Badsha
# Bhagavathi
# Aadhi Bhagavan
# 1st Naayagan'a aduppula pottu konjam nalla soodu pannunga..Nalla pon nirama varum time la..
# Devar magan'a add pannanum..
# Badsha mattum alavaa add pannunga.. illana romba uppu athigam aidum..
# ippa nalla vendhurukkura time la konjama santhanam comedy add panni.. moodi vechrunga.. oru half an hour kalichu.. bhagavathi yum.. aadhi bhagavanayum lite ah thoovi vittu irakkirunga..
Ippa Soodana #ThalaivaaReady!!!
Ini adutha varam 'Vadai' epdi sudanum nu Vijay fans solli tharuvaanga! ; 'Briyani' epdi seyyanum nu Karthik fans solli tharuvaanga

-------------------

இது நாம போன வாரம் செஞ்ச SURA புட்டு(கிச்சு) வ விட நல்லா தானே இருக்கு மிக்சிங் :)

------------------


அம்மா உணவகத்தில் தடைசெய்யப்பட்ட இந்த உணவு தற்போது கிடைக்கும்...........

-----------------------------

அடேங்கப்பா.... இதுவரைக்கும் கதையதான் காப்பி அடிச்சி பார்த்திருக்கோம்... இந்த படத்துல scene by scene காப்பி அடிசிருக்கன்டா...
அப்புறம் அந்த பம்பாய், இந்திரா அதெல்லாம் விட்டுடீங்க..... இப்படி எடுத்தா 3 மணி நேரமென்ன 30 மணி நேரத்துக்கு ஓடுற மாதிரி என்னாலயும் படம் எடுக்க முடியும்... 'Ctrl+C' for Copy , 'Ctrl+V' for paste.........

---------------------

நோயாளி : டாக்டர் தலைவலி ஜாஸ்தியா இருக்கு.
டாக்டர் : தலைவா படம் பார்த்தியா?
நோயாளி : எப்படி டாக்டர் கண்டுபுடிச்சிகே?
டாக்டர் : நேத்துல இருந்து எனக்கும் அத பிரச்சனைதான்.

---------------------

அந்த தீம் மியூசிக் டான்ஸ் கூட ஜோடி நம்பர் 1 விஜய் டிவி டான்ஸ் ப்ரோக்ராம்ல ஒரு எபிசொட்ல சுட்டுட்டாங்க. டைரக்டர் விஜய் ஒரு ஏரியா விடாம எல்லா எடத்துலேயும் இன்ஸ்பயர் ஆகியிருக்கார்.

--------------------


நேத்து சுட்ட மசால் வடையை அவனில் வெச்சு சூடாக்கினா கூட சகிசிக்கலாம்....ப்ரோ. இவனுங்க புளிச்சி போன பழைய கஞ்சிய அல்லவா அடுப்புல வச்சி சூடா பரிமாற ஆசை பட்டு இருக்கனுங்க...
இது "Time to lead" .இல்லைப்பா "Time to old" ப்பா......
இந்த வெங்காயத்த பார்க்க முடியலன்னு ஒருத்தன்.....தூக்குல தொங்கிட்டான்..... கொடுமை ப்ரோ....

---------------------

கதைக்கும் கவெர்மெண்டுகும் சம்மந்தமே இல்லையே !!! அப்புறம் ஏன் இவ்ளோ அலபர ????

--------------------


போ போ இந்த தடவையும் மிஸ் ஆகல... படம் ஊத்திக்கிச்சி...

-------------------


இன்னொரு விஷயம் இந்த படத்தில் அனைவரும் கவனிக்க தவறியது ....
வில்லன் சத்யராஜ்/விஜய் கொல்ல அவர்களின் பெயரை கண்ணைமூடி கொண்டு உச்சரிப்பான் ..இந்த சீன் சில வருடங்களுக்கு முன்னாடி வந்த அட்டகாசம் படத்துல தல வில்லன்கள புரட்டி எடுபதர்க்கு முன்னாடி கண்ண மூடிக்கிட்டு இதே மாதிரி சொல்லுவார் ..ஒரு வேல அஜீத்த கிண்டல் பண்றாங்களோ ??

--------------------

இது "Time to lead" .இல்லை "Time to Copy" ப்பா......

---------------------


தலைவா செலவுகள்: 
டிக்கெட் 150/- 
பைக்பாஸ் 10/- 
பாப்கார்ன் 30/- 
பெப்ஸி 25/- 
தலைவலிமாத்திரை 4 x 2/- 
ஸ்ட்ராங் டீ 2 x 7/- 
.
.
தாயத்து 30/-

----------------------


எல்லா படத்­­துல இரு­ந்து சுட்டும் ஒன்னும் தெரி­யாத மாதிரி விஜய் நடிச்­சி­ரக்­காரே என்ன பண்­­ற­து-???

---------------------


தலைவா - விமர்சனம்
அண்ணா..வணக்கம்ணா...அது என்னண்ணா உங்களை புரிஞ்சுக்கவே முடியலண்ணா..நடிச்சா துப்பாக்கி
மாதிரி ஹிட்டு கொடுக்குறீங்க..இல்லாட்டி, குருவி, சுறா..அப்புறம் இந்தப்படம் அப்படின்னு
சூரமொக்கைகளை அடிச்சுவிடுறீங்க..எதுவோ..ஆனா, இன்னைக்கு நான் செலவழிச்ச 10 டாலரை திருப்பி
கொடுத்துருணும்..இல்லாட்டி, தியேட்டர் முன்னாடி மறியல் பண்ணுவேன்னா..
ஆனா ஒன்னுண்ணா, உங்களுக்கு எதிரி வெளியில இருந்தெல்லாம் இல்லீங்கண்ணா...கொஞ்சம் எட்டி
பார்த்தீங்கண்ணா உங்களுக்கே தெரியும்..
சரீங்கண்ணா..டைரக்டரு விஜய் கூட எம்புட்டு நேரம் பேசிருப்ப்பீங்க..கதைன்னு ஏதாவது சொன்னாரா...பயபுள்ள
சொல்லியிருக்க மாட்டாருண்ணே..தளபதி, நாயகன், தேவர் மகன்ன்னு மூணு சீ.டியை கொடுத்துருப்பாரே..என்னது
எப்படி தெரியுமா..அதுதான் தியேட்டருல்ல கொடுத்தாவுகளே...
அது எப்படிங்கண்ணா, அந்த டைரக்டரு, மனசாட்சியே இல்லாம ஒரு சீனு கூட புதுசா இல்லாம,
எல்லா படத்துல இருந்து மூணு, மூணு சீனு எடுத்து படம் பண்ணியிருக்காரு..ஆனா ஒன்னுண்ங்கனா,
ரொம்ப நாளைக்கப்புறம், முழுநீள காமெடி படம் பார்த்த திருப்தின்னா..இடைவேளை வரைக்கும்,
சந்தானம்..இடைவேளைக்கு அப்புறம், தலைவர் வேடத்தில் நீங்க..பிச்சிப்புட்டீங்க..விழுந்து
விழுந்து சிரிச்சோம்னா பார்த்துங்களேன்..
படத்தில ஒரு சீனு வருதுண்ணே..ஆஸ்பத்திரியில படுத்து கிடக்குற ஏழைங்களுக்கு, பொன்வண்ணன்
குடிக்க ஏதோ கொடுப்பாருண்ணே..அதுக்கு அவிங்க.."இது வேணாம், கொஞ்சம் விஷம் கொடுங்க"
அப்படின்னு கேட்பாய்ங்கண்ணே..வீட்டுக்கு வந்து கழுத, அந்த விஷ பாட்டில தேடுறேன்..கிடைக்கவே
இல்லீங்கண்ணா..
ஆங்க்..அப்புறங்கன்னா..கதையை ..சொல்லலின்னா, பசங்க கோவிச்சுருவாய்ங்க..சொல்லிறேன்..அதாவது,
நீங்க ஆஸ்திரேலியாவில இருக்கீங்க.உங்க அப்பா சத்யராஜ், மும்பையில பெரிய டான்..துரோகம்
பண்ணி உங்கள மும்பைக்கு கூட்டி வந்து சத்யராஜ கொன்னுருறாய்ங்க..அப்புறம் அந்த இடத்தை
புல்லப் பண்ண, நீங்க தலைவராகி, மிச்சம் சொச்சம் தியேட்டருல இருக்குறவய்ங்களையும் சேர்த்து
கொல்லுறீங்க...
ஆனா ஒன்னுண்ணே..இதுவரைக்கும் பாட்டு சீனுக்குதான் தம்மடிக்க வெளியே போய் கேள்விப்பட்டிருக்கேன்..இடைவேளைக்கு
அப்புறம், தியேட்டருல இருக்குற அம்புட்டு பேரும் தியேட்டருல இருந்து இன்னைக்குதான்னா
பார்க்குறேன்..செம வியாபரம்ணா.. அதுவும், ஒரு வீடியோ கேசட்டுக்காக, நீங்களும், வில்லனும்,
நடத்துற கூத்து இருக்கே..அண்ணா..அங்க புரியலண்ணா..வீட்டுக்கு வந்து யோசித்தப்பதான்
தெரிஞ்சது..அண்ணா.....முடியலங்கண்ணா...
இதுல பக்கத்துல இருக்குற பயபுள்ள, அமலா பாலை பார்த்தவுடேனே., "ராசா, நம்ம குருவித்துறையில
கொய்யாப்பழம் விக்குற பொண்ணு மாதிரி இருக்குதுங்குறாண்ணே.." என்னா நக்கலு பாருங்கண்ணா..அப்புறம்,
என்னண்ணா, மும்பையில இருக்குற எல்லாருமே இந்திய தவிர எல்லாத்தையும் பேசுறாய்ங்க..அதுவும்,
மஹாராஷ்டிர மக்களுக்கு, நீங்க கொடுத்த அறிவுரை ஒன்னு இருக்கே..அப்ப தூங்குனவய்ங்க தான்னா..
அண்ணா...ஒரு வேண்டுகொள்னா..படத்துல ஏத்தி விடுற மாதிரி அரசியலுக்கு கண்டிப்பா வந்துருங்கன்னா..சுப்ரமணிய
சாமிக்கு அப்புறம் அந்த இடம் இன்னும் காலியாத்தாங்கன்னா இருக்கு...
தலைவா - நாலு கொள்ளி கட்டைய நம்ம காசுபோட்டு வாங்கி, நடுமுதுகுல நாமேளே சொரிஞ்சுவிட்ட
மாதிரி இருக்குங்கணா...

-------------

Thanks

No comments:

Post a Comment