Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday, 4 August 2013

நட்பை காதலாக மாற்றுவது எப்படி ? how to fall in love with your best friend ?

நட்பை காதலாக மாற்றுவது எப்படி ? how to fall in love with your best friend ?

காதல் உணர்வோடு வாழும் ஒரு மிகச் சிறந்த தம்பதியினர் கண்டிப்பாக நல்ல நண்பர்களாகவும் இருப்பார்கள். ஒருவருக்கு நல்ல நண்பனே வாழ்க்கை துணையாக வந்தால், அதை விட பெரிய பாக்கியம் என்ன இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்க்கை துணையிடம் வெளிப்படையாக எது வேண்டுமானாலும் பேசலாம், முழுமையாக நம்பிக்கையை அவர் மீது வைக்கலாம், அவரின் துணையை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுவதால், ஒரு இனிமையான உறவை மலரச் செய்யலாம்.

Kātal uṇarvōṭu vāḻum oru mikac ciṟanta tampatiyiṉar kaṇṭippāka nalla naṇparkaḷākavum iruppārkaḷ. Oruvarukku nalla naṇpaṉē vāḻkkai tuṇaiyāka vantāl, atai viṭa periya pākkiyam eṉṉa irukkiṟatu. Appaṭippaṭṭa vāḻkkai tuṇaiyiṭam veḷippaṭaiyāka etu vēṇṭumāṉālum pēcalām, muḻumaiyāka nampikkaiyai avar mītu vaikkalām, avariṉ tuṇaiyai ovvoru noṭiyum koṇṭāṭuvatāl, oru iṉimaiyāṉa uṟavai malarac ceyyalām.


நம்மில் பல பேருக்கு, ஏற்கனவே அப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமைந்திருப்பார்கள். அவர்களே உங்களின் நெருங்கிய நண்பர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வெறுமனே நெருங்கிய நண்பராக இருப்பவர், உங்களை நேசிக்க ஆரம்பித்தால், உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டது. சில நேரம் நெருங்கிய நண்பரை நண்பராக மட்டுமே பார்க்குமாறு மனதளவில் ஒரு தடை இருக்கும். இந்த தடையை உடைத்து, நெருங்கிய நண்பரை காதலிக்க நாங்கள் கூறும் டிப்சை பின்பற்றுங்கள். பின் என்ன... வாழ்க்கை செம ஜாலியாக செல்லும்.

Nam'mil pala pērukku, ēṟkaṉavē appaṭippaṭṭa vāḻkkai tuṇai amaintiruppārkaḷ. Avarkaḷē uṅkaḷiṉ neruṅkiya naṇparkaḷākavum iruppārkaḷ. Āṉāl veṟumaṉē neruṅkiya naṇparāka iruppavar, uṅkaḷai nēcikka ārampittāl, uṟavai aṭutta kaṭṭattiṟku eṭuttuc cellum nēram vantuviṭṭatu. Cila nēram neruṅkiya naṇparai naṇparāka maṭṭumē pārkkumāṟu maṉataḷavil oru taṭai irukkum. Inta taṭaiyai uṭaittu, neruṅkiya naṇparai kātalikka nāṅkaḷ kūṟum ṭipcai piṉpaṟṟuṅkaḷ. Piṉ eṉṉa... Vāḻkkai cema jāliyāka cellum.பயத்தை தவிர்த்துவிடுங்கள்
முதலில் நட்பு கெட்டு போகும் என்ற பயத்தை விட்டொழிக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கு இடையே வரும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது மற்றும் சண்டைகளை எப்படி நிறுத்துவது என்பதை நன்கு அறிவீர்கள். உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களாக இருந்து, உறவுமுறை அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்கள் நட்பை தொடரலாம். இது கண்டிப்பாக உங்களுக்கு வலியை தந்தாலும், சிறிது காலத்தில் இந்த காயம் ஆறும். மேலும் உண்மையான நட்புக்கு, இது ஒரு சோதனை என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.

Payattai tavirttuviṭuṅkaḷ Mutalil naṭpu keṭṭu pōkum eṉṟa payattai viṭṭoḻikka vēṇṭum. Nīṅkaḷ iruvarum ēṟkaṉavē neruṅkiya naṇparkaḷāka irukkiṟīrkaḷ. Uṅkaḷ iruvarukku iṭaiyē varum piraccaṉaiyai eppaṭi camāḷippatu maṟṟum caṇṭaikaḷai eppaṭi niṟuttuvatu eṉpatai naṉku aṟivīrkaḷ. Uṇmaiyilēyē neruṅkiya naṇparkaḷāka iruntu, uṟavumuṟai aṭutta kaṭṭattiṟku cellavillai eṉṟāl kavalaippaṭātīrkaḷ. Uṅkaḷ naṭpai toṭaralām. Itu kaṇṭippāka uṅkaḷukku valiyai tantālum, ciṟitu kālattil inta kāyam āṟum. Mēlum uṇmaiyāṉa naṭpukku, itu oru cōtaṉai eṉṟum eṇṇik koḷḷuṅkaḷ.
உறவை விளக்குங்கள்
நெருங்கிய நண்பரிடம், உங்கள் தற்போதைய உறவை விளக்கி, அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புவதையும் வெளிப்படுத்துங்கள். அவருக்கும் கூட இந்த எண்ணம் இருந்திருக்கலாம் அல்லவா?

Uṟavai viḷakkuṅkaḷ Neruṅkiya naṇpariṭam, uṅkaḷ taṟpōtaiya uṟavai viḷakki, atai aṭuttak kaṭṭattiṟku eṭuttu cella virumpuvataiyum veḷippaṭuttuṅkaḷ. Avarukkum kūṭa inta eṇṇam iruntirukkalām allavā?குணங்களை பட்டியலிடுங்கள்
நெருங்கிய நண்பரிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் மதிக்கும் அனைத்து நல்ல குணங்களையும் பட்டியலிடுங்கள். பின்பு ஒரு காதல் உறவில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் பட்டியலிடுங்கள். இப்போது இரண்டு பட்டியலிலும் ஒத்து போகிற அம்சங்களை குறித்துக் கொண்டே வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தது அவரிடம் இருந்தால், கண்டிப்பாக இந்த வழிமுறை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.

Kuṇaṅkaḷai paṭṭiyaliṭuṅkaḷ Neruṅkiya naṇpariṭam uṅkaḷukku piṭitta maṟṟum nīṅkaḷ matikkum aṉaittu nalla kuṇaṅkaḷaiyum paṭṭiyaliṭuṅkaḷ. Piṉpu oru kātal uṟavil nīṅkaḷ eṉṉavellām etirpārkkiṟīrkaḷ eṉpataiyum paṭṭiyaliṭuṅkaḷ. Ippōtu iraṇṭu paṭṭiyalilum ottu pōkiṟa amcaṅkaḷai kuṟittuk koṇṭē vāruṅkaḷ. Nīṅkaḷ etirpārttatu avariṭam iruntāl, kaṇṭippāka inta vaḻimuṟai uṅkaḷukku āccariyattai aḷikkum.கற்பனையை பயன்படுத்துங்கள்
உங்கள் நெருங்கிய நண்பருடன் காதல் உறவில் ஈடுபட்டால், எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது நடந்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கும் என்று எடுத்துகாட்டாக விளங்கும்.
Kaṟpaṉaiyai payaṉpaṭuttuṅkaḷ Uṅkaḷ neruṅkiya naṇparuṭaṉ kātal uṟavil īṭupaṭṭāl, eppaṭi irukkum eṉpatai kaṟpaṉai ceytu pāruṅkaḷ. Atu naṭantāl uṅkaḷukku evvaḷavu makiḻcciyai aḷikkum eṉṟu eṭuttukāṭṭāka viḷaṅkum.


காதல் ரசம் சொட்டும் சூழலை நண்பர்களாகவே உருவாக்குங்கள்
உதாரணத்திற்கு, இருவரும் கடற்கரைக்கு செல்லுங்கள், டான்ஸ் ஆடுங்கள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவு அருந்துங்கள். இவ்வகை சூழலில் இருவருக்கும் இடையே ஒரு புது வகை உணர்வு ஏற்படலாம்.

Kātal racam coṭṭum cūḻalai naṇparkaḷākavē uruvākkuṅkaḷ Utāraṇattiṟku, iruvarum kaṭaṟkaraikku celluṅkaḷ, ṭāṉs āṭuṅkaḷ, meḻukuvartti veḷiccattil uṇavu aruntuṅkaḷ. Ivvakai cūḻalil iruvarukkum iṭaiyē oru putu vakai uṇarvu ēṟpaṭalām.கனவுகளை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்கள் இருவரின் வருங்கால கனவுகளை பற்றி அடிக்கடி பேசும் போது, உங்கள் எதிர்காலத்தை அவருடன் தான் செலவிட வேண்டும் என்ற எண்ணம் வளரத் தோன்றும்.
Kaṉavukaḷai oṉṟāka pakirntu koḷḷuṅkaḷ Uṅkaḷ iruvariṉ varuṅkāla kaṉavukaḷai paṟṟi aṭikkaṭi pēcum pōtu, uṅkaḷ etirkālattai avaruṭaṉ tāṉ celaviṭa vēṇṭum eṉṟa eṇṇam vaḷarat tōṉṟum.


போதிய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
காதலில் விழுவது என்பது துரிதமாக நடப்பது கிடையாது. காதலில் விழும் முன், வாழ்க்கையை எந்த ஒரு தருணத்திலும் உங்கள் நண்பரிடம் ஒப்படைக்க முழு மனதுடன் தயாராக வேண்டும். தயாரான நிலையில் இருந்த பின் காதலை சொல்லுங்கள்.

Pōtiya nērattai eṭuttuk koḷḷuṅkaḷ Kātalil viḻuvatu eṉpatu turitamāka naṭappatu kiṭaiyātu. Kātalil viḻum muṉ, vāḻkkaiyai enta oru taruṇattilum uṅkaḷ naṇpariṭam oppaṭaikka muḻu maṉatuṭaṉ tayārāka vēṇṭum. Tayārāṉa nilaiyil irunta piṉ kātalai colluṅkaḷ.முக்கியமான டிப்ஸ்...
நீங்கள் இருவரும் சேர்ந்து ஈடுபடும் செயல்கள் இனிமையாக இல்லாமல் போகலாம் அல்லது காதல் உணர்வு இல்லாமலும் போகலாம். இது நட்பு வரையில் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே உறவை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், செய்ததையே திரும்ப திரும்ப செய்யாதீர்கள், போன இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்லாதீர்கள். மாற்றங்கள் தேவை, புதிதாக ஏதாவது செய்யுங்கள். முக்கியமாக அது காதல் உணர்வை தூண்ட வேண்டும்.

Mukkiyamāṉa ṭips... Nīṅkaḷ iruvarum cērntu īṭupaṭum ceyalkaḷ iṉimaiyāka illāmal pōkalām allatu kātal uṇarvu illāmalum pōkalām. Itu naṭpu varaiyil iruntāl, enta piraccaṉaiyum illai. Ituvē uṟavai aṭutta kaṭṭattikku eṭuttuc cella virumpiṉāl, ceytataiyē tirumpa tirumpa ceyyātīrkaḷ, pōṉa iṭattiṟkē mīṇṭum aḻaittuc cellātīrkaḷ. Māṟṟaṅkaḷ tēvai, putitāka ētāvatu ceyyuṅkaḷ. Mukkiyamāka atu kātal uṇarvai tūṇṭa vēṇṭum.
நீங்களாக இருங்கள்...
நெருங்கிய நண்பருக்கு உங்கள் மீது காதல் மலரவில்லை என்றால், நீங்கள் அவரிடம் முன்பு இருந்ததை போலவே இருக்க வேண்டும். அவர் உங்களை காதலிக்க வற்புறுத்துமாறு, நீங்கள் நடந்து கொள்ள கூடாது. நீங்கள் நீங்களாகவே இருப்பதனாலேயே, அவர் உங்கள் நெருங்கிய நண்பராக இருந்தால், இதற்காகவே உங்களை அவர் காதலிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

Nīṅkaḷāka iruṅkaḷ... Neruṅkiya naṇparukku uṅkaḷ mītu kātal malaravillai eṉṟāl, nīṅkaḷ avariṭam muṉpu iruntatai pōlavē irukka vēṇṭum. Avar uṅkaḷai kātalikka vaṟpuṟuttumāṟu, nīṅkaḷ naṭantu koḷḷa kūṭātu. Nīṅkaḷ nīṅkaḷākavē iruppataṉālēyē, avar uṅkaḷ neruṅkiya naṇparāka iruntāl, itaṟkākavē uṅkaḷai avar kātalikkum vāyppukaḷ uḷḷatu.கவனமாக இருங்கள்
வேண்டுமென்றே காதலில் விழ வேண்டும் என்ற எண்ணத்தில், நண்பரை காதலிக்காதீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதை முதலில் தெளிவாக முடிவு செய்து கொள்ளுங்கள்.
Kavaṉamāka iruṅkaḷ Vēṇṭumeṉṟē kātalil viḻa vēṇṭum eṉṟa eṇṇattil, naṇparai kātalikkātīrkaḷ. Uṅkaḷukku eṉṉa tēvai eṉpatai mutalil teḷivāka muṭivu ceytu koḷḷuṅkaḷ.


எண்ணத்திற்கு மதிப்பு கொடுங்கள்
நீங்கள் உங்கள் உயிர் நண்பரை மனதார விரும்பி, உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா? முதலில் அவருடைய எண்ணத்திற்கும் மதிப்பளியுங்கள். அவர்களின் மேல் அழுத்தம் போடாதீர்கள். இரண்டு பேரும் ஒத்துப்போனால் தான், ஒரு புது உறவு மலரும்.

Eṇṇattiṟku matippu koṭuṅkaḷ Nīṅkaḷ uṅkaḷ uyir naṇparai maṉatāra virumpi, uṅkaḷ uṟavai aṭutta kaṭṭattiṟku eṭuttuc cella virumpukiṟīrkaḷā? Mutalil avaruṭaiya eṇṇattiṟkum matippaḷiyuṅkaḷ. Avarkaḷiṉ mēl aḻuttam pōṭātīrkaḷ. Iraṇṭu pērum ottuppōṉāl tāṉ, oru putu uṟavu malarum.Share your comments in friends chat Friendstamil.cbox.ws

Thanks

No comments:

Post a Comment