Flash News

Friends Tamil Chat

Search This Blog

Monday, 17 February 2014

எப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit always


எப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit always


ஒரு மனிதனுக்கு பெரிய சொத்தே ஆரோக்கியமான உடல் தான். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். அதனால் ஆரோக்கியமான உடல் இருந்தால் தான் ஓடியாடி வேலை பார்க்க முடியும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நம்மில் பலரும் உடலை வருத்திக் கொண்டு உழைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் விளைவாக சின்ன வயதிலேயே பல உடல் நல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

கட்டமைப்பான உடல் என்பது ஆரோக்கியத்தை குறிக்கும். கட்டமைப்பான உடலைப் பெற, உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் சேர்ந்து செயல்பட வேண்டும். மற்றொரு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது உடற்பயிற்சி. கட்டமைப்பான உடலுக்கு மனதும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது.

உடலை கட்டுக்கோப்புடன் வைத்து நீண்ட நாள் வாழ்வதற்கு நாங்கள் சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடற்பயிற்சி இதில் அடக்கம். உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள வல்லுனர்கள் கூறும் வீட்டு சிகிச்சைகள் இதோ:

1. சருமத்திற்கு வயதேறாமல் இருக்க கடல் உணவுகள் 
மீன்களை வாரம் மூன்று முறை உட்கொண்டால், சரும சுருக்கம் மற்றும் தொய்வை 30 சதவீதம் வரை குறைக்கும். அதற்கு காரணம் கடல் உணவுகளில் வளமையான அளவில் புரதம், கனிமங்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது கொலாஜனுக்கு புத்துணர்வு கொடுத்து தசைகளை வளுவளுவென வைத்திருக்கும். சால்மன் மீன்களில் அஸ்டாக்சன்தின் என்ற ஆண்டி-ஆக்சிடன்ட் உள்ளது. இது உங்கள் சருமத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்.2. மன அழுத்தத்தை நீக்க க்ரீன் டீ 
க்ரீன் டீயில் உள்ள கூட்டுப்பொருட்கள், இரத்த சர்க்கரையை எரிப்பொருளாக உங்கள் மூளை பயன்படுத்த உதவும். மேலும் ஆற்றல் திறனை ஊக்குவிக்கும் ஹார்மோனான என்டோர்பின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும். அதனால் அடுத்த முறை ஆற்றல் திறன் குறையும் போது, ஒரு கப் க்ரீன் டீயை பருகுங்கள்.


3. திடமான இதயத்திற்கு 
வால்நட் தினமும் 5-6 வால்நட்களை உண்ணுமாறு இதய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது நெஞ்சு வலி ஏற்படும் இடர்பாட்டை பாதியாக குறைக்கிறதாம். ஆயுளையும் 3 வருடங்களுக்கு அதிகரிக்கிறதாம். இந்த மொறுமொறு நட்ஸில், இதயத்தை குணமாக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வளமையாக உள்ளது.


4. நல்ல நினைவாற்றலுக்கு மஞ்சள் 
உங்கள் உணவுகளில் மஞ்சளை சேர்த்துக் கொண்டால், உங்கள் நினைவாற்றல் குறைந்தது 30 சதவீதமாவது அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் மஞ்சளில் உள்ள கர்குமின். இது மூளைக்கு புத்துணர்வை உண்டாக்கும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாகும்.


5. சுவாசப்பயிற்சியால் மன அழுத்தத்தை நீக்குங்கள் 
வயிறு மூலமாக சுவாசித்து மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை நீக்குங்கள். 6 எண்ணும் வரை உங்கள் மூக்கின் வழியாக மெதுவாவும் ஆழமாகவும் மூச்சை உள்ளிழுக்கவும். அப்படி செய்யும் போது வயிற்று பகுதி அமைதி பெற்று விரிவடையும். 4 எண்ணும் வரை அப்படியே இருந்து, பின் வாயின் வழியாக மெதுவாக மூச்சை வெளியேற்றவும். 7 எண்ணும் வரை இதனை செய்யவும். நன்றாக உணரும் வரை இதனை தொடர்ந்து செய்யுங்கள்.


6. தூக்கத்தை கொண்டு வலிகளை குறையுங்கள் 
உங்களுக்கு அடிக்கடி தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி அல்லது இதர வலிகள் ஏற்படுகிறதா? கவலையை விடுங்கள், போய் தூக்குங்கள். நன்றாக தூங்கினால், ஒரு மாதத்தில், உங்கள் அசௌகரியங்கள் அனைத்தும் பாதியாக குறையும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தூக்கம் உங்கள் வளர்ச்சி ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கும். அதனால் அது அழற்சியை குறைத்து, பாதிப்படைந்த திசுக்களை வேகமாக ஆற வைக்கும்.


7. இரத்த கொதிப்பை கட்டுப்படுத்த லவங்கப்பட்டை 
ஆராய்ச்சியாளர்களின் படி, உங்கள் உணவில் தினமும் 1/2 டீஸ்பூன் லவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் இரத்த அழுத்தத்தை 29% அல்லது அதற்கு மேலாகவும் கட்டுப்படுத்தும். உங்கள் சிறு குடலில் கார்ப் உறிஞ்சுவதை குறைக்கும்.


8. காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 
வண்ணமயமான காய்கறிகளை அதிகமாக உட்கொண்டால் வியாதிகளில் இருந்து அது நம்மை பாதுகாக்கும். கேரட், மிளகு மற்றும் வெண்டைக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதிக வண்ணம் இருந்தால் அதிக நன்மை. காயின் நிறமி சுவாச குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் கிருமிகளால் உள்ளே நுழைய முடியாது. மேலும் நோய் எதிர்ப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.


9. கிருமிகளை கொல்வதற்கு தேன் 
பாய்ஸ்சுரைஸ் செய்யப்படாத தேனில் இயற்கையான ஆன்டி-பயாடிக்ஸ் மற்றும் குணப்படுத்தும் என்சைம்ஸ் அடங்கியுள்ளது. அதனால் நோய்வாய்பட்டிருக்கும் போது, அதனை உட்கொண்டால், மூன்று நாட்களுக்கு முன்னதாகவே குணமாகும். சைனஸ் பிரச்சனை மற்றும் அனைத்து வகையான சளி பிரச்சனைகளை உண்டாக்கும் கிருமிகளையும் இது கொள்ளும்.

===========

How to stay super fit always?

A man of great wealth and a healthy body . If you can draw the picture on the wall . If the body is healthy so you can see rushing . But today , many of us were working with the body hurt . As a result, such a young age , causing many health problems .

The health of the body representing the construct . To construct the body , eating habits , lifestyle must act together . Exercise is another important consideration . Construct is important for the body and mind .

We have some tips on how to survive a long day in order to keep up with the body . Food , including lifestyle and fitness . Home treatments are available to keep the structure of the body , experts say :

1. Seafood to be Anti Aging skin
Consumption of fish three times a week , up to 30 percent and reduce skin wrinkles and sag . Due to the level of the sea foods rich in protein , minerals and is rich in nutrients such as omega-3 fats . It is refreshing to collagen valuvaluvena keeps the muscles . Astakcant salmon fish of the year - is the oxidant . This will reduce the wrinkles in your skin .Remove the stress of Green Tea
Compounds in green tea , blood sugar will help to fuel your brain . Harmonana to promote energy efficiency and encourage the production of endorphins . So next time when energy efficiency is reduced , drink a cup of green tea .


Solid heart
Doctors recommend heart walnuts eat 5-6 walnuts daily . It reduce halved the risk of heart attack . your life time will increase by 3 years . In this crispy Nuts , heart healing , prosperity is Mono saturated fats .


Yellow for good memory
Add the turmeric to your diet , your memory will increase to at least 30 percent , according to experts . Karkum because it 's in yellow . It revitalized the brain , which can lead to powerful anti - aksitanttakum .


Delete the stress cuvacappayirci
Breathe through the abdomen to remove stress and tension . 6 counting the breath deeply and slowly through your nose, inhale. While doing so, the abdominal area will expand peace . Counting up to 4 remains intact , then exhale slowly through the mouth to the left . 7 Repeat this until the epilogue . It feels good to work.


Reduce pain and sleep
You have frequent headaches , back pain , joint pain or other aches happen ? Do not worry , Pick go . If you sleep well , in a month , according to research that will be half of your inconvenience . Increases production of growth hormones in your sleep . So it reduces inflammation , and heal damaged tissue will keep pace .


Cinnamon to control blood pressure
According to researchers , in your diet daily 1 / 2 teaspoon lavankappattaiyai add 29 % or more , and controlling your blood pressure . Corp. of your small intestine to reduce the suction .


Vegetables to boost the immune system
Colorful vegetables consumption, as it protects us from diseases . Carrots , pepper and okra boost your immune system . Greater benefit if more color . Cain keeps pigment respiratory tract healthy . So germs can enter the inside . In addition to increasing the production of immune cells .


Honey to kill germs
Honey has been payscurais natural anti - encaims includes payatiks and healing . So when the ailing , the antidepressants , three days before the healing. Sinus problems and colds all kinds of problems which can lead to germs .


Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

No comments:

Post a Comment