Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 8 March 2013

பாதுகாப்பான 10 நகரங்கள் - Top 10 Safest cities


இந்த 10 நகரங்கள்தான் உங்களுக்கு புனிதமானது.. பாதுகாப்பானது!!!

Top 10 Friendly Cities In The World

ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள இந்த உலகில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இருப்பினும் உலகின் சில பகுதிகளில் பெண்கள் மிகவும் பாதுகாப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பெண்கள் நாட்டின் கண்கள் என்று தான் சொல்கின்றனர். ஆனால் அனைத்து நாட்டிலுமே சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. மேலும் பெண் சுதந்திரமானது இருந்தாலும், எந்த ஒரு பெண்ணாலும், இரவில் தனியாக நடக்க முடியாத நிலை இன்றும் நிலவுகிறது. இருப்பினும் உலகில் பெண்களுக்கு எந்த ஒரு அநியாயமும் நடக்காத வகையில், சரியான பாதுகாப்பை அளிக்கும் வகையில் ஒரு சில நகரங்கள் உள்ளன.

இப்போது பெண்களை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் மகளிர் தினத்தில், பெண்களுக்கு பாதுகாப்பையும் மதிப்பையும் அளிக்கும் நகரங்கள் என்னவென்று ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகள் தான் இருக்கின்றன. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த பட்டியலில் ஒரு இந்திய நகரம் கூட, பெண்களுக்கு பாதுகாப்பை தரும் வகையில் இல்லை என்பது தான்.

சரி, இப்போது உலகில் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் நகரங்கள் எவையென்று பார்த்து, வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த புனித நகரங்களுக்கு சென்று வாருங்கள்.

It is rare to find a women-friendly city in this male dominated world. But women still do have their safe havens. Certain cities are perceived as women-friendly or rather safest cities for women. A city is women-friendly only if it gives a woman the freedom to travel late at night and wear whatever she wants to. In the safest cities of the world, women do not have to alter their dressing sense or work timings in order to be safe.

As it is Women's Day, let us take a look at the most women-friendly cities in the world. Most of these cities are European. You would be surprised to know that there is not a single Indian city that can be called women-friendly. Nor will you find a single American name in this list of the safest cities for women.

So if you want to enjoy some exotic travel on Women's Day, these are the women-friendly cities that should be on your mind. These cities are good for women who are travelling alone too.


கோபன்ஹேகன், டென்மார்க் உலகிலேயே டென்மார்க் மிகவும் பாதுகாப்பான நாடு. அதிலும் அந்த நாட்டில் உள்ள மிகச் சிறிய நகரமான கோபன்ஹேகனில், பெண்கள் சுதந்திரமாக எந்த நேரத்திலும் செல்லும் அளவில் பாதுகாப்பானது உள்ளது.
Copenhagen, Denmark Denmark is one of the safest countries in the world. And Copenhagen is a quite little European town where women can roam free and be safe at any hour.



ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து இந்த நகரத்தில் விபச்சாரத்தையே சட்டப்பூர்வமாக அமல்படுத்தியிருப்பதால், இங்கு கணிசமான அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் இருக்கும் என்ற விவாதம் நிலவுகிறது.
Amsterdam, Holland A city were people can smoke weed on the streets can hardly be called unsafe. There is a lot of debate on the fact that because prostitution is legal in Amsterdam, it has increased the safety of women substantially.



ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் ஸ்வீடன் நாட்டில் உளள ஸ்டாக்ஹோம் நகரமும் ஒரு பாதுகாப்பான நகரம் ஆகும். ஏனெனில் ஸ்வீடன் நாட்டில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்காக ஒரு சிறந்த கொள்கையை கொண்டுள்ளது. அது என்னவென்றால், பெண்கள் மகப்பேறுவிற்கு நீண்ட கால விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதே. எனவே தான் இந்த நகரமும் பெண்களுக்கான ஒரு சிறந்த பாதுகாப்பான நகரமாக உள்ளது.
Stockholm, Sweden Stockholm is a city that is women-friendly as far as employment is concerned. The state of Sweden gives the longest maternity leaves and has the best HR policies for women.




ஜூரிச், சுவிச்சர்லாந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் ஒரு திறந்த நகரம். பொதுவாகவே சுவிட்சர்லாந்து வரலாற்று அடிப்படையில் மிகவும் அமைதியானது. அந்த நாட்டில் உள்ள ஜூரிச் நகரம் அனைவருக்குமே ஒரு சிறந்த பாதுகாப்புடன் கூடிய, மகிழ்ச்சியைத் தரும் நகரமாக உள்ளது.
Zurich, Switzerland Zurich is an open city for everyone. As Switzerland is a country that has historically been peaceful, Zurich is thus a free city for everyone including women.



வியன்னா, ஆஸ்திரியா இந்த நகரத்தில் எந்த ஒரு இளம் தம்பதியரும் பயமின்றி, சுதந்திரமாக எந்த நேரமும் நடந்து செல்ல முடியும். அந்த அளவில் அந்த நகரம் பாதுகாப்பான ஒன்று.
Vienna, Austria Remember the streets of Vienna from the movie 'Before Sunrise'? If a young couple can walk around the streets of Vienna all night, then it must be a safe city.



சிங்கப்பூர் சிங்கப்பூரின் பாதுகாப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் தெருவில் ஒரு பேப்பரைப் போட்டாலே, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடுவர், அந்த அளவு அங்கு சட்டமானது மிகவும் கடுமையாக இருக்கும். எனவே அத்தகைய ரோட்டையே சுத்தமாக வைத்துக் கொள்ள நினைக்கும் அந்த நகரத்தில் வாழும் பெண்களுக்கு மட்டும் எப்படி பாதுகாப்பு இல்லாமல் இருக்கும்.
Singapore Singapore is a city that has some of the most stringent rules for safety. This ensures that women remain safe on the streets.



சியோல், தென் கொரியா சியோல் ஒரு தொழில்முறை மற்றும் நிபுணத்துவ நகரம். இத்தகைய நகரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு வேலையின் போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, சரியான பாதுகாப்பு இருக்கும்.
Seoul, South Korea Seoul is a very professional city. Women remain safe while working and even in the night clubs of Seoul.



முனிச், ஜெர்மனி பெண்கள் வேலை செய்வதற்கு ஒரு சிறந்த நகரம் என்றால், அது ஜெர்மனியில் உள்ள முனிச் தான். இந்த நகரத்தில் உள்ள போக்குவரத்தானது மிகவும் பாதுகாப்பானது.
Munich, Germany Munich is a great place for women to work. The public transport is effective and extremely safe.



டோக்கியோ, ஜப்பான் உலகின் பரபரப்பான மற்றும் விலையுயர்ந்த நகரம் என்றால் அது ஜப்பானில் உள்ள டோக்கியோ தான். இந்த நகரத்தில் வேலை செய்யும் பெண்கள், வேலை செய்யும் போது பாதரம் கலந்த மருந்து ஒன்றை வைத்துக் கொண்டு இருப்பதால், இந்த நகரமும் ஒரு பாதுகாப்பான நகரம் ஆகும்.
Tokyo, Japan Tokya is one of the busiest and most expensive cities in the world. Women work with mercurial efficiency in this city and are considered quite safe.




துபாய், அரபு பொதுவாக அரபு நாடுகள் என்றாலே அங்குள்ள பெண்களுக்கு நிறைய பாதுகாப்புகள் இருக்கும். அதிலும் அங்குள்ள துபாய் என்றால் சொல்லவா வேண்டும். இந்த நகரத்தில் பெண்கள் எந்த ஒரு மார்டன் உடையையும் அணிந்து செல்ல இயலாது. எனவே இதுவும் பெண்களுக்கான நகரம் ஆகும்.
Dubai, United Arab Emirates Dubai is the safest city in the Gulf for women. Unlike other Gulf countries, we don't have to dress modestly in Dubai.

Thanks