Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 31 January 2014

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health Benefits of Ginger Juice

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Health Benefits of Ginger Juice


உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையயும் இஞ்சி கலந்த டீ-யின் மூலம் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர் மிகுந்த நேரத்தில் ஒரு கப் சூடான இஞ்சி டீயை விட சிறந்த பானம் எதுவாகவும் இருக்க முடியாது. அதிக அளவு வைட்டமின் சி, மெக்னீசியம், மற்றும் இதர கனிமங்களை கொண்ட இஞ்சி வேரை சாப்பிடுவது உடம்பிற்கு நன்மை விளைவிக்கும். மிகுந்த சுவையை கொடுக்கும் இந்த இஞ்சி டீ, உங்களுக்கு மிகவும் பிடித்த பானமாக மட்டுமல்லாமல் அது குளிர் காலத்தில் வரும் உடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெரும் தீர்வாகவும் உள்ளது. ஆகையால் இதை ஒரு மருந்துப் பொருளாகவும் இஞ்சியைக் கருதுகின்றனர். அதிலும் இஞ்சி டீ யை செய்ததும், அதனுடன் பெப்பர் மின்ட் (மிளகு கீரை), தேன் ஆகியவற்றை கலந்து டீயை அருந்தலாம். இதனால் இஞ்சியின் சுவை சற்றே மறைந்து காணப்படும். அதுமட்டுமில்லாமல் டீயின் சுவையும் மிகைப்படும். இப்போது நாம் ஏன் இஞ்சி டீயை அவசியம் குடிக்க வேண்டும் என்பதற்கான பதில் இதோ...

குமட்டலை குறைக்கும் 
ஒரு கப் இஞ்சி டீயை குடிப்பதன் மூலம் குமட்டலை குறைக்க முடியும். வெளியே வெகு தூரம் செல்லும் முன் ஒரு கப் இதை குடித்தால் குமட்டும் தன்மை ஏற்படாது. அல்லது இத்தகைய குமட்டல் வரப்போவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக இதை அருந்துவது அதை நிறுத்திவிடும்.

செரிமானத்தை மிகைப்படுத்தும் 
செரிமானத்தை மிகைப்படுத்தி உண்ட உணவை ஈர்த்துக் கொள்ள உதவி செய்கின்றது. அதிலும் நிறைய சாப்பிட்ட பின் இதை அருந்துவது உகந்தது.

வீக்கத்தை குறைப்பது 
தசை மற்றும் இதர பிடிப்புகளை தீர்க்கும் வீட்டு மருந்தாக இவை அமைகின்றது. இஞ்சியின் தன்மை வீக்கத்தை குறைப்பதே ஆகும். இஞ்சியை டீயாக மட்டுமல்லாமல் வீக்கமுள்ள இடங்களில் ஒரு பச்சிலை போன்று இடுவதும் வீக்கத்தை குறைத்து நிவாரணம் தரும்.

சுவாச பிரச்சனைகளை நீக்குதல் 
தொண்டை அடைப்பு மற்றும் சளி சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் இஞ்சி டீயாகும். அந்தந்த காலத்திற்கேற்ப வரும் சளி, இருமல் ஆகியவற்றால் வரும் சிரமங்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும்.

இரத்த ஓட்டத்தை சீர் செய்யும் 
வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இஞ்சி டீயில் இருப்பதால், அவை இரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றன. இது கொழுப்புகளை இரத்த குழாய்களில் தங்க விடாமல் பார்த்துக் கொள்கின்றது. இதனால் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளிடமிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

மாதவிடாய் பிரச்சனைகளை நீக்குவது 
கொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு தீர்வு இதோ! சூடான இஞ்சி டீயை ஒரு துணியில் நனைத்து அடி வயிற்றில் போட்டால் அது தசைகளை இளைப்பாற செய்து ஆறுதல் தரும். அதுமட்டுமல்லாமல் ஒரு கப் இஞ்சி டீயில் தேன் கலந்து குடிப்பது மேலும் நன்மை தரும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது 
அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் இஞ்சி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.

மன அழுத்தத்திலிருந்து நம்மை காக்கின்றது 
இஞ்சி டீக்கு அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. ஆகையால் மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றை குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிக அளவு குணமாக்கும் தன்மையும், வலுவான நறுமணமும் தான் காரணம் என்று எண்ணப்படுகின்றது.

================

Health Benefits of Ginger Juice

Garlic is a versatile medicine according to Indian Medicine Study – Ayurveda. Garlic is one spice which is rich In anti oxidants, anti inflammatory agents and anti microbial agents. Garlic is one of the extensively used spices in Indian delicacies. It has great health benefits and should be included in regular diet. Garlic can be used in three different ways. Ginger paste can be used as a flavoring agent in food items like rice, dal, vegetables, etc. Here, garlic provides taste as well as is good for the health.

Health Benefits of Ginger Juice
Secondly, it can be used in deserts, beverages, etc. Thirdly, ginger can be used in juices. Ginger juices are beneficial for health and fitness of the body. In this article, we will be discussing about the benefits of garlic juice on the health of our body. There are many health benefits associated with ginger. Some of these are:-

Digestion – Ginger Juice is good at clearing the digestive track. It is beneficial to drink a glass of ginger juice if you have digestion related problems like constipation. Garlic juice is therefore recommended after lunch and dinner as well. Ginger also helps to improve appetite of a person. The food intake increases gradually once you start eating ginger along with your meals. Ginger helps to digest the food and improves appetite. This is one of the most important health benefits of ginger.

Stomach Pain – Stomach pain or stomach ache can be due to many reasons like formation of gas, unhealthy eating or indigestion. For any of these problems there is one good and permanent solution – Garlic. Garlic acts as a pain reliever and helps to reduce stomach related problems. Garlic is also good to reduce gas formation and related issues. Thus, overall garlic has good health benefits. Therefore, garlic juice should be included in our every day diet.

Feel good spice – According to research, ginger is a sice that can calm down feelings of nausea and vomiting. Garlic juice should be mixed with water if it tastes too strong. The mixture can be used as a medicine for nausea, motion sickness, fatigue and vomiting. Ginger does not have any other side effects. Hence, it is very safe to have ginger juice whenever you feel queasy. Garlic juice soothes the stomach and makes you feel relaxed. This is a good health benefit og garlic juice. Garlic juice is beneficial for people who have a problem with motion sickness.

Immunity booster – After drinking ginger juice, you may start sweating, this is quite healthy for the body system. The body warms up and sweats. The sweating results in flushing off the unnecessary toxins. Ginger juice is thus a good detoxifying agent. This property of ginger helps to combat cold and cough. Another property of ginger which is beneficial for our health is the anti microbial property. Ginger helps to fight against viruses and bacteria, thus improving the immunity of our body. Ginger juice is thus healthy and should be included in our diet regularly.

Inflammation – Ginger has good anti inflammatory properties. The spice is good for preventing bloating and bulking of stomach. Ginger is also useful for removing stiffness in the body generally caused in the morning. It refreshes the body and revives the energy. Therefore, ginger acts as a energy booster along with an anti inflammatory agent. Ginger is one spice with many health benefits.

Thanks
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

No comments:

Post a Comment