Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday 21 January 2014

வயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் - Old Age Health Problems

வயதானவர்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் - Old Age Health Problems

வயதான காலத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கும். ஆனால் அதற்கான அர்த்தமும் விளக்கமும் ஒன்றே. வயதான காலத்தில் உடலின் மீளவுயிர்ப்பிக்கும் அளவு குறைந்து விடும். அதனால் தான் வயதான காலத்தில் பல உடல்நல கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வயதான காலத்தில் ஏற்படும் பல விதமான உடல்நல பிரச்சனைகளை பற்றி பலவிதமான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அதனை முதுமை நோய் மருத்துவம் என்று கூறுகிறார்கள்.

வயதான காலத்தில் ஏற்படும் பொதுவான உடல்நல பிரச்சனைகளை பற்றி நன்கு தெரிவதால், அதன் விளைவுகளை குறைக்க, உங்கள் வாழ்க்கைமுறையை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள். சில திட்டங்களும் ஏற்பாடுகளும் செய்தால் போதும், உங்கள் வயதான காலம் அழகாக இருக்கும். அந்நேரத்தில் உடல்நல பிரச்சனைகளை சுலோபமாக சமாளிக்கும் திறனும் உங்களிடம் இருக்கும்.

வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளை பற்றி இப்போது பார்க்கலாமா? வருங்காலத்தில் உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம் அல்லவா?

1. எலும்பு மெலிதல் 
வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான உடல்நல பிரச்சனைகளில் ஒன்றாக விளங்குகிறது எலும்பு மெலிதல். இந்த பிரச்சனையால் எலும்புகள் எளிதில் உடையக்கூடிய நிலையை அடையும். எலும்பின் அடர்த்தி குறைவதால் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளு அதிகம். பெண்களுக்கு மாதவிடாய் நிரந்தரமாய் நின்று விட்ட பிறகு, அவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை இது.

2. பார்வை (மாக்குலர்) குறைவு 
பார்வை கோளாறு என்பதும் வயதான காலத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதனை மாக்குலர் டீஜெனெரேஷன் (பார்வை மங்குதல்) என்று கூறுவார்கள். இது வயதான காலத்தை இன்னமும் சிரமப்படுத்தும். பிம்பங்களை உணர்ந்து அதனை மூளைக்கு எடுத்துச் செல்வது கருவிழியே. வயதான காலத்தில் இந்த கருவிழி பாதிப்படைவதால் ஏற்படுவதே இந்த பிரச்சனை.

3. காது கேட்பதில் பிரச்சனை 
வயதானவர்கள் சந்திக்கும் முக்கியான உடல்நல கோளாறுகளில் ஒன்று தான் காது கேட்கும் திறன் குறைவது. வயதான காலத்தில் காது கேட்பதில் குறைபாடு ஏற்படுவதை ப்ரெஸ்பைக்யூசிஸ் என்று சொல்வார்கள். காலப்போக்கில் அதிக அதிர்வெண் சத்தங்கள் அவர்களுக்கு கேட்பதில்லை. அதனால் காது கேட்கும் கருவியை பொருத்தி கொள்ள வேண்டியிருக்கும்.

4. கண் அழுத்த நோய் 
வயதானவர்கள் சந்திக்கும் மற்றொரு முக்கிய பிரச்சனை தான் கண் அழுத்த நோய். கண்களின் உள்ளே உள்ள திரவத்தின் அழுத்தம் அதிகரிப்பதால் இந்த பிரச்சனை உண்டாகிறது. அதிகப்படியான இந்த அழுத்தம், உங்கள் பார்வைக்கான நரம்பை பாதித்து, பார்வை இழப்பை உண்டாக்கி விடும்.

5. அல்சைமர் நோய் 
வயதான காலத்தில் ஏற்படும் நோய்களின் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது அல்சைமர் என்ற மன நோய். இந்த நோய் வந்து விட்டால், உங்கள் ஞாபக சக்தியும் யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிப்படையும். ஞாபக சக்தி தான் இந்த நோயின் ஆரம்ப கட்டமாகும்.

6. அறிவுத்திறன் வலுக்குறை 
அறிவுத்திறன் வலுக்குறை, ஞாபக மறதியை உண்டாக்கி, ஒன்றுக்கொன்று தொடர்பை உண்டாக்கும் அறிவையும் கணக்கிடும் சக்தியையும் குறைத்து விடும். இதனால் பாதிப்படைந்தவர்கள் குழப்ப நிலைக்கு உள்ளாவார்கள். மேலும் ஒரே நேரத்தில் பல வேலையை செய்யும் திறனும் பாதிப்படையும்.

7. உணர்வற்ற நிலையில் சிறுநீர் வெளியேற்றம் 
வயதான காலத்தில் எரிச்சலடைய செய்யும் பிரச்சனைகளில், உணர்வற்ற நிலையில் சிறுநீர் வெளியேறும் பிரச்சனையும் ஒன்று. பொதுவாக பெண்கள் தான் இப்பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்களின் இடுப்புகுரிய தசைகளின் திடம் குறைந்து விடும். பெரிதான முன்னிற்கும் சுரப்பியால் ஆண்களும் கூட இந்த அவஸ்தைக்கு ஆளாகின்றனர்.

8. கீல்வாதம் 
கீல்வாதம் என்பது அநேகமாக வயதான அனைவரும் சந்திக்கும் பிரச்சனையாக உள்ளது. இது ஒரு தன்னுடல் தாங்கு திறன் நோயாகும். மூட்டு வலி தான் இதன் முக்கிய அம்சம். விரல்கள், இடுப்பு, முட்டிகள், மணிக்கட்டுகள் மற்றும் முதுகெலும்பு போன்ற பகுதிகள் இதனால் பாதிக்கப்படுகிறது.

மெட்டபாலிக் தாக்கீடு 
வயதான காலத்தில் உடல் பருமன் மற்றும் இதர நோய்கள் உண்டாவதற்கு காரணமாக இருப்பது மெட்டபாலிக் தாக்கீடே. இது இரண்டு வகை சர்க்கரை நோய், இதயகுழலிய நோய், புற்று நோய் மற்றும் இரத்த கொதிப்பை உண்டாக்கும்.

உணர்ச்சி ரீதியான பிரச்சனை 
வயதாகி விட்டால் உடல் ரீதியான பிரச்சனைகளால் மட்டும் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. மன ரீதியான பிரச்சனைகளாலும் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் அசௌகரியத்தை உண்டாக்கலாம்.


======================================================================

Old Age Health Problems

Old age can be a terrifying concept for many people. It is true that the regenerative capacity of the body will decline with old age, making you more prone to old age related health issues. 

There are many studies going on about the various health problems of old age, which is called geriatrics. 
It is important to be prepared to face the various health issues that you may experience as you near your old age. Apart from physical health problems of old age, there will be mental stress and anxiety as well due to social reasons.

Knowing the common health problems of old age people will help you manage your life and lifestyle to reduce its impact. Some planning and preparations can make your old age more beautiful. The ability to deal with health problems of old age will make the task easier. 

Here are some of the important health problems of old age that you should know about. Awareness of these problems will help you to plan for an optimum health even in your twilight years.

1. Osteoporosis 
Osteoporosis is one of the major health problems many old people face. Osteoporosis is a condition in which bones become very fragile. This will increase the chance of fracture due to decreased bone density. The risk for osteoporosis is more in women after menopause.

2. Macular Degeneration 
Vision deterioration is one of the most common health problems in old people. In macular degeneration, the macula, which helps to sense and transmit images to the brain, is affected. This medical condition is usually found in elderly people above the age of 50.

3. Hearing Loss 
Hearing loss is an important issue that many senior citizens face. The most common form of age-related hearing loss is presbycusis. Older people may need a hearing aid because the ability to hear high frequency sound may decrease over time.


4. Glaucoma 
Glaucoma is one among the health problems of old people, which is due to an increase in the fluid pressure inside the eye. This increased pressure will cause damage to the optic nerve resulting in loss of vision.


5. Alzheimer's disease 
Alzheimer's disease is another serious issue in the list of health problems of old age. Once you get Alzheimer's disease, your ability to remember and think will be affected. Memory lapse is the common problem that will be noted in the early stage.


6. Cognitive Impairment 
Cognitive impairment will cause memory loss and your ability to correlate things and do calculations will decrease over time. The affected person will be confused and the ability to take up more than one task at a time will be affected.


7.Incontinence 
Urinary incontinence is one of the most annoying health problems of old age people. Women are most likely to have this condition due to decreased strength of the pelvic muscle. Men who have enlarged prostate may also experience this difficulty.


8. Arthritis 
Arthritis is a common condition that almost all old people have to face. This is mainly an autoimmune disease, which is characterized by joint pain and deformities. Arthritis commonly affects fingers, hips, knees, wrists, and spine.


9. Metabolic Syndrome 
Obesity and other related issues during old age are mainly due to metabolic syndrome. This may further lead to Type 2 diabetes, cardiovascular disease, cancer and high blood pressure.


10. Emotional disturbance 
Health problems of old age are not limited to physical disabilities. Old age can affect your mental health also because of various social aspects. This may create discomfort both to you and your family. Make sure you share and discuss your problems with close family and friends s that they can support you in every possible way.

Thanks
Share your comments : http://FriendsTamil.cbox.ws
For more health tips    : http://NanbanTamil.blogspot.com

No comments:

Post a Comment