Flash News

Friends Tamil Chat

Search This Blog

Tuesday 26 February 2013

தலைவலியை சரிசெய்ய - foods that cure headache

தலைவலியை சரிசெய்யும் 9 சூப்பர் உணவுகள்!!!   

நிறைய பேருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. இத்தகைய தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை, அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், ஆல்கஹால் அருந்துவது போன்றவை. மேலும் ஒரு சில சத்துக்கள் குறைபாடும் தலைவலியை உண்டாக்கும்.

சிலர் தலைவலி வந்தால், உடனே மாத்திரைகளை போடுவார்கள். அவ்வாறு எப்போது தலை வலி வந்தாலும், மாத்திரைகளைப் போடும் பழக்கத்தை கொண்டால், பின் அது பழக்கமாகி, உடலுக்கு கேடு விளைவிக்கும். எனவே அவ்வாறு மாத்திரைகளை போட்டு, தலைவலியை குணமாக்குவதை விட, அவற்றை ஏற்படுத்தும் செயல்களை தவிர்த்து, தலைவலியை சரிசெய்யும் ஆரோக்கியமான உணவுகளை மேற்கொண்டு வந்தால், தலை வலியை குணமாக்குவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சரி, இந்த ஆரோக்கியமான உணவுகள் என்னவென்று பார்த்து, அதனை சாப்பிட்டு தலை வலியை சரிசெய்யலாமா!!!



உருளைக்கிழங்கு 
உருளைக்கிழங்கு சாப்பிட்டால், தலை வலியை சரிசெய்யலாம். அதிலும் ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தலைவலியை குணமாக்கும். பொதுவாக ஆல்கஹால் அருந்தினால், சிறுநீர் அடிக்கடி வரும், இதனால் உடலில் வறட்சி ஏற்பட்டு, உடலுக்கு அவசியமான சத்தான பொட்டாசியம் வெளியேறிவிடும். இத்தகைய பொட்டாசியம் உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. எனவே தலை வலி இருக்கும் போது, உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், வாழைப்பழத்தை விட அதிகப்படியான பொட்டாசியத்தை பெறலாம்.


தர்பூசணி 
உடலில் வறட்சியினால் தலை வலி வரும். எனவே தலை வலியின் போது மாத்திரைகளை சாப்பிடுவதை விட, நீர்சசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம். அதிலும் தர்பூசணியில் நீர்ச்சத்து மட்டுமின்றி, மக்னீசியம் சத்தும் அதிகம் உள்ளது. மக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை உண்டாலும், தலைவலியை குறைக்கலாம்.


காபி 
ஆம், தலை வலியின் போது காபி குடித்தால், தலை வலி போய்விடும். ஏனெனில் தலைவலிக்கும் போது உட்கொள்ளும் மாத்திரைகளில் காப்ஃபைன் இருப்பதால் தான் தலைவலி குணமாகிறது. ஆகவே தலை வலிக்கும் போது காப்ஃபைன் அதிகம் உள்ள காபியை குடித்தால், தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். அதிலும் ஒரு கப் குடிப்பது போதுமானது.

கோதுமை பிரட் 
கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும், தலை வலி உண்டாகும். எனவே காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். அதற்கு போதுமை பிரட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் நன்கு இருக்கும்.

பாதாம் 
நிறைய ஆய்வுகளில் பாதாமில் இருக்கும் மக்னீசியமானது தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும் என்று சொல்கிறது. எனவே ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள், மக்னீசியம் உணவுகளை சாப்பிட்டால், நல்லது. அதற்கு பாதாம், வாழைப்பழம், அவகேடோ போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

காரமான உணவுகள் 
தலைவலியின் போது கார உணவுகளை சாப்பிட்டால், தலை வலியானது சீக்கிரம் பறந்து போய்விடும்.


தயிர் தலை 
வலியின் போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் தலை வலி குணமாவதோடு, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.


எள் 
எள்ளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலை வலியும் போய்விடும். மேலும் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். இவற்றில் மக்னீசியமும் அதிகம் உள்ளது.


பசலைக் கீரை 
பசலைக் கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, தலைவலியையும் குறைக்கும். எனவே தலை வலிப்பது போல் இருந்தால், அந்த நேரம் சாலட் செய்து, அதில் லெட்யூஸ் பயன்படுத்துவதற்கு பதிலாக பசலைக் கீரையைப் பயன்படுத்தலாம். இதனால் தலை வலியைக் குறைக்கலாம்.

9 Foods To Cure Migraine Headache

Migraine is one of the most common health problems. Many people suffer from migraine headaches once in a week or two. Whenever you get a headache, you just pop in some migraine pills to cure it. The headache can also lead to other health problems like nausea, vomiting and laziness. The throbbing pain is felt on one side of the head and this pain is very acute. The headache occurs due to complex interactions between the nervous system and the vascular system. Even alterations in the brain cells can trigger migraine headache. There are many ways to cure this pain. You can either pop a pill or have some foods. There are many foods that can trigger migraine headache but there are few foods that can help you cure this disorder. If you do not want to rely on medicines and wish to try some home remedies, then include these foods. Whenever you suffer from a migraine headache, have these foods to get relief from the pain. Apart from having these foods, take some rest. A nice sleep can also cure the migraine headache. Check out the list of foods that can cure migraine headache.


Spinach The leafy green vegetable is a rich source of magnesium. The chemical is effective for curing migraine headaches. Whole grains, seafood and wheat germ are other magnesium rich foods.

Fish The seafood is rich in omega 3 fatty acids and vitamins that helps get rid of migraine headache. Omega 3 fatty acids reduce inflammation that is caused by migraine.

Milk Skimmed milk and other low fat dairy products can be effective to cure migraine. Milk has vitamin B namely riboflavin that increases cellular energy. Lack of cellular energy triggers migraine.

Flaxseed The small seeds are a big source of omega 3 fatty acids and fiber. The anti-inflammatory properties of these tiny seeds cures migraine.

Coffee It is true that a cup of coffee can cure headache. If you are suffering from migraine, have a cup of coffee. If consumed in moderate amounts, caffeine can cure migraine headache.

Red wine Tyramine (an anti acid) is found in many fermented beverages like wine and beer. A glass of red wine or beer can help get rid of migraine headache.

Millet The whole grain is rich in fiber, antioxidants and minerals. So, have whole grains and millet to cure headache.

Broccoli The green vegetable is a rich source of magnesium. Have boiled or steamed broccoli with cayenne pepper to get rid of migraine headache.

Ginger The anti-bacterial spice is an Ayurvedic cure for headache. Add some ginger to your food and cure migraine.

 Topics: health, foods, wellness, healthy foods, headache, ஆரோக்கியம், உடல் நலம், உணவுகள், ஆரோக்கிய உணவுகள், தலைவலி 


Thanks