Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday 17 February 2013

விசாகப்பட்டணம் - vizag tourism

விசாகப்பட்டணம் – கிழக்குக்கடற்கரையோரம் ஒரு முழுமையான சுற்றுலா நகரம்


வைசாக் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டணம் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு துறைமுக நகரமாகும். இந்தியாவின் தென்கிழக்குப்பகுதியில் ஆந்திர மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக இது விளங்குகிறது. அடிப்படையில் ஒரு தொழில் நகரமான இந்த விசாகப்பட்டணம் தனது ரம்மியமான கடற்கரைகள், எழில் கொஞ்சும் மலைகள், பசுமையான இயற்கைக்காட்சிகள் போன்றவற்றின் மூலம் ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தலமாகவும் மாறியிருக்கிறது.

விசாகப்பட்டணம் புகைப்படங்கள் - ரிஷிகொண்டா பீச்

சக்தியை குறிக்கும் விசாகா எனும் கடவுளின் பெயரால் இந்த விசாகப்பட்டணம் நகரம் அழைக்கப்படுகிறது. கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் மீது பொதிந்துள்ள இந்நகரம் தனது கிழக்குப்பகுதி வங்காள விரிகுடாக்கடலை நோக்கியவாறு அமைந்திருக்கும் அற்புதமான இயற்கை அமைப்பையும் கொண்டிருக்கிறது.

தனது ரம்மியமான கடற்கரை மற்றும் எழில் அம்சங்கள் காரணமாக இது 'கிழக்குக்கடற்கரையின் கோவா' என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படுகிறது. 'விதியின் நகரம்' என்ற மற்றோரு சிறப்புப்பெயரும் இதற்குண்டு.
வரலாறு என்ன சொல்கிறது?
ஆதியில் இந்த விசாகப்பட்டணம் விசாக வர்மா எனும் மன்னரால் 2000 வருடங்கள் ஆளப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. ராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற பெருங்காவியங்களிலும் இந்த விசாகப்பட்டிணம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இந்நகரம் கி.மு 260ம் ஆண்டுகளில் அசோகப்பேரரசரால் ஆளப்பட்டு கலிங்க வம்சத்தின் ஆளுகைக்குள் இருந்திருக்கிறது. பின்னர் உத்கல வம்சத்தினரின் ஆட்சியில் கி.பி 1600ம் ஆண்டு வரை இருந்துள்ளது.
அவர்களுக்கும் பிறகு ஆந்திர வெங்கி அரசர்களின் வசம் வந்து பின்னர் பல்லவ சாம்ராஜ்யத்தின் ஒரு அங்கமாகவும் இது திகழ்ந்திருக்கிறது. 15 மற்றும் 16 ம் நூற்றாண்டுகளில் முகலாயப்பேரரசின் அங்கமாக இது நிஜாம் மன்னர்கள் மூலம் ஆளப்பட்டது.
இறுதியில் காலனிய வரலாற்றின் துவக்கமாக 18 ம் நூற்றாண்டில் ஃபிரெஞ்சுக்காரர்களின் ஆக்கிரமிப்புக்கு விசாகப்பட்டிணம் உட்பட்டது. ஆனால், 1804ம் ஆண்டு விசாப்பட்டிணம் துறைமுகத்திற்கு அருகே நடந்த ஒரு போரில் வென்று ஆங்கிலேயர்கள் இந்நகரை ஃபிரெஞ்சுக்காரர்களிடமிருந்து பறித்துக்கொண்டனர்.
அப்போதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியின் இந்திய செயல்பாடுகளுக்கு இந்த விசாகப்பட்டிணம் துறைமுகம் ஒரு முக்கிய கேந்திரமாகவே இருந்துள்ளது. பின்னர் நேரடி ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் விசாகப்பட்டணம் நகரம் மெட்ராஸ் பிரெசிடென்சியின் அங்கமாகவும் இருந்திருக்கிறது.
இறுதியாக, இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு இந்த விசாகப்பட்டணம் மாவட்டம் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாவட்டமாக உருவெடுத்தது. நிர்வாக வசதி கருதி அது பின்னர் ஸ்ரீகுளம், விஜயநகரம் மற்றும் விசாகபட்டிணம் எனும் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.
இயற்கை அழகு ததும்பும் சொர்க்க நகரம்
சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கபுரி என்று சொல்லக்கூடிய அளவுக்கு தன்னுள்ளே பல எழில் அம்சங்களை இந்த விசாகப்பட்டணம் நகரம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு பயணிகளுக்காக காத்திருக்கின்றன.
அழகிய கடற்கரைகள், கம்பீரமான மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், நவீன நகர்ப்புற வசதிகள் என்று எல்லாம் கலந்த கதம்பமாக, எல்லோருக்கும் பிடிக்கும்படியான இயல்புடன் இது காட்சியளிக்கிறது.
வெங்கடேஸ்வரா கொண்டா, ராஸ் மலை மற்றும் தர்க்கா கொண்டா ஆகிய மலைகளால் இந்த நகரம் சூழப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரா மலையில் ஒரு சிவன் கோயிலும், ராஸ் மலையில் வர்ஜின் மேரி தேவாலயமும் மற்றும் தர்க்கா கொண்டா மலையில் பாபா இஷாக் மதீனா எனும் இஸ்லாமிய யோகியின் கல்லறை மாடமும் அமைந்துள்ளன.
வைசாக் நகரத்தின் அழகிய கடற்கரைகளாக ரிஷிகொண்டா பீச், கங்கவரம் பீச், பிம்லி மற்றும் யரடா பீச் போன்றவை நகரின் கிழக்குப்பகுதியில் காணப்படுகின்றன. மேலும், இயற்கை எழில் அம்சங்களாக கைலாசகிரிஹில் பார்க், சிம்மாசலம் மலைகள், அரக்கு வேலி, கம்பலகொண்டாகாட்டுயிர் சரணாலயம் போன்றவை இங்கு இயற்கை ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன.
சப்மரைன் மியூசியம், வார் மெமோரியல் மற்றும் நேவல் மியூசியம் போன்றவை விசாகப்பட்டிணம் நகரில் பார்க்க வேண்டிய இதர முக்கிய சுற்றுலா அம்சங்களாகும். பார்க்க வேண்டிய இடங்களை பார்த்தபின் நகரின் முக்கியமான அங்காடி வளாகமான 'ஜகதாம்பா சென்டர் மால்' க்கு விஜயம் செய்து 'ஷாப்பிங்' தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.
பயண வசதிகளும் இதர தகவல்களும்
விசாகப்பட்டணம் நகரம் சர்வதேசத்தரத்துடன் சிக்கனத்தையும் இணைத்து வழங்கும் சுற்றுலா மையமாக விளங்குகிறது. பல தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இங்கு எல்லா வசதிகளும் கிடைக்கின்றன.
அனைவரும் விரும்பி வருகைதரும் புகழ் பெற்ற சுற்றுலா ஸ்தலமாக திகழ்வதால் போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு பயணிப்பது சிறந்தது. சிறந்த போக்குவரத்து வசதிகளால் விசாகப்பட்டிணம் நகரம் நாட்டின் பல பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விசாகப்பட்டணம் விமான நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவைகளைக் கொண்டுள்ளது. நகர மையத்திலிருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள இந்த விமான நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலம் நகருக்குள் செல்லலாம். ரயில் பாதை மூலமாகவும் விசாகப்பட்டணம் நகரம் நாட்டில் பல பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் சாலை மார்க்கமாக பயணிக்க வசதியாக, பல முக்கிய தென்மாநில நகரங்களிலிருந்து சிக்கனமான கட்டணங்களைக் கொண்ட பேருந்து சேவைகளும் வைசாக் நகரத்துக்கு இயக்கப்படுகின்றன.
பருவநிலையைப் பொறுத்தவரையில் மழைக்காலம் முடிந்தபின்னர் வரும் குளிர்காலப்பருவம் வைசாக் நகரத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக உள்ளது. இது அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள மாதங்களை உள்ளடக்கியதாகும்.
கோடையில் கடுமையான வெப்பத்தையும், மழைக்காலத்தில் கடுமையான மழைப்பொழிவையும் இந்நகரம் பெறுகிறது. எனவே இவ்விரண்டு பருவகாலங்களும் பயணிகள் தவிர்க்க வேண்டியவையாகும். விசாகா உத்சவம் எனும் உள்ளூர் திருவிழா டிசம்பர்-ஜனவரி மாதத்தில் வெகு சிறப்பாக இங்கு கொண்டாடப்படுகிறது.
திருவிழாக் கோலாகலங்களை ரசிக்க விரும்புவோர் இந்த விழாக்காலத்தில் இங்கு விஜயம் செய்யலாம். சுருக்கமாக சொல்லப்போனால், சுற்றுலா ரசிகர்கள் யாவரும் ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான தென்னிந்திய நகரம் இந்த 'வைசாக்' எனப்படும் 'விசாகப்பட்டணம்' - என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

உண்மைகள்
பிரபலம்:கடற்கரைகள், இயற்கை காட்சிகள், வார் மெமோரியல், சப்மரைன் மியூசியம், காட்டுயிர் வாழ்க்கை
மொழி : தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, ஆங்கிலம்
சிறந்த சீசன்:ஜனவரி-டிசம்பர்
உயரம்: 5 மீட்டர
எஸ்டிடி கோடு: 91-891
பின்கோடு: 530 0XX 531 1XX

சமீபத்தில் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்ட விசாகப்பட்டணம் விமான நிலையம் எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளுக்கு விமான சேவைகளைப் பெற்றுள்ளது. நகர மையத்திலிருந்து 16 கி.மீ உள்ள இந்த விமான நிலையத்திலிருந்து நகரத்துக்கு செல்ல டாக்சி வசதிகள் உள்ளன.

8 சுற்றியுள்ள இடங்கள்


சேரும் இடங்கள்மாநிலம்தீம்தொலைவுகுறிப்பிடத்தக்கது
சிம்ஹாச்சலம்ஆந்திர பிரதேசம்புனித ஸ்தலம்16 km - 20 minகோயில்கள், புராணச் சிறப்ப...  மேலும்  
அரக்கு பள்ளத்தாக்குஆந்திர பிரதேசம்மலை வாசஸ்தலம்144 km - 2 Hrs, 40 minமியூசியம், டைடா, போரா குக...  மேலும்  
ராஜமுந்திரிஆந்திர பிரதேசம்மாநகரம்190 km - 2 Hrs, 50 minகலாச்சாரம், வரலாறு, ஆர்யப...  மேலும்  
பத்ராச்சலம்ஆந்திர பிரதேசம்புனித ஸ்தலம்339 km - 6 Hrs, 40 minயாத்ரீக ஸ்தலம், புராணச் ச...  மேலும்  
விஜயவாடாஆந்திர பிரதேசம்மாநகரம்349 km - 5 Hrs, 25 minதிருவிழாக்கள், கனக துர்கா...  மேலும்  
குண்டூர்ஆந்திர பிரதேசம்மாநகரம்384 km - 6 Hrs, 5 minவரலாறு, பாரம்பரிய பூமி, க...  மேலும்  
அமராவதிஆந்திர பிரதேசம்புனித ஸ்தலம்388 km - 6 Hrs, 25 minஅமராவதி ஸ்தூபம், கிருஷ்ணா...  மேலும்  
கம்மம்ஆந்திர பிரதேசம்மாநகரம்397 km - 6 Hrs, 30 minகோட்டைகள், லட்சுமி நரசிம்...  மேலும்  


Vizag Tourism - A Complete Tourist Destination

Vizag is the popular name of the port town, Visakhapatnam. Located in the south eastern coast of India, Vizag is the second largest city of Andhra Pradesh. Vizag, primarily an industrial city, is soon becoming a hot tourist destination thanks to its beautiful beaches, scenic hillocks, a lush green landscape and a rich history and culture. The city Visakhapatnam derives its name from the Hindu God of valour, Visakha. The city is located beautifully among the hills of the Western Ghats with its eastern side facing towards the Bay of Bengal. The city has also been nicknamed City of Destiny and Goa of the East Coast.
A Glimpse of history
The holy books say that the city of Vizag was under the reigned of King Visakha Varma over 2000 years ago. The name of the city was mentioned in the epics of Mahabharata and Ramayana. In 260, BC, it was ruled by Ashoka and came under the Kalinga Kingdom. After that Visakhapatnam was under the Utkala Kingdom till the 1600 AD. Later, the kingdom was ruled by the Andhra kings of Vengi and then it went to the Pallava Kings. The Mughals also ruled the area during the 15th and the 16th century through the Nizams of Hyderabad. In the 18th century, Vizag was under the rule of the French. In 1804, the French and the British squadrons fought a battle near the Visakhapatnam Harbour and the British came to control the region.
The port of Hyderabad played a very crucial role for the East India Company during the rule of the British. Visakhapatnam was a part of the Madras Presidency during the British Rule. After India became independent, Visakhapatnam was the largest district in India. The district later divided into three districts by the names of Srikulam, Vizianagaram and Visakhapatnam.
Tourist places in and around Vizag
Vizag has emerged as a paradise for travellers. Vizag has the resources to interest and entertain travellers from a wide range of interests. From beautiful beaches, to the scenic hills, to the natural valley, to the modern city infrastructure; it has something for everyone. Vizag is surrounded by hills such as the Sri Venkateshwara Konda, Ross hill and the Dargah Konda. Each of these hills houses the shrines of three different religions.
The Venkateshwara hill houses a temple dedicated to Lord Shiva, Ross Hill has the Virgin Mary Church and the Dargah Konda has the tomb of the Islamic saint, Baba Ishaq Madina. Beaches such as the Rishikonda Beach, Gangavaram Beach, Bhimli andYarada beach flank the eastern side of the city. Other tourist attractions include theKailasagiri Hill Park, the Simhachalam hills, Araku Valley, Kambalakonda Wildlife Sanctuary, Submarine Museum, the War Memorial and the Naval Museum are a few places that are a must visit. One can also go shopping to the famous Jagadamba CenterMall.
Thanks