Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday, 7 March 2013

இரத்த சோகை அறிகுறிகள் - anemic symptoms

இரத்த சோகை இருப்பதற்கான சில அறிகுறிகள்
Signs To Show That You Are Anemic


உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக இருந்தால், அதனை இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்வார்கள். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், அவற்றை ஒருசில அறிகுறிகளை வைத்தே சரியாக சொல்லலாம். மேலும் இந்த அனீமியாவானது உடலில் ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவை சரியான ஊட்டசசத்துக்கள் இல்லாதது, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் போன்றவை.

A person is called anemic when he or she has low blood count. To be precise, the signs of anemia are seen in a person who has a low blood count, especially of the component called haemoglobin. This can happen due to a number of reasons. The symptoms of anemia can manifest themselves due improper nutrition, stress, heredity or other disorders.

சில நேரங்களில் இரத்த சோகையானது, ஒரு சில நோய்களின் அறிகுறியாகவும் இருக்கும். அதிலும் இரத்த சோகையானது அடிக்கடி காணப்பட்டால், அது மஞ்சள் காமாலை, புற்றுநோய் அல்லது எய்ட்ஸ் போன்றவற்றின் அறிகுறியாகவும் இருக்கும். எனவே உடலில் இரத்த குறைவாக உள்ளதா, இல்லையா என்பதை சரியாக கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.

The important thing is to identify the signs of anemia immediately and investigate the cause. Anemia is often a symptom of other serious diseases like jaundice, cancer or HIV Aids. So it is absolutely essential to take note of the signs of anemia so that its cause can be determined. Moreover, low blood count have very serious implications on a person's health even when it does not indicate any other disease.

எனவே இத்தகைய இரத்த சோகையை கண்டுபிடிப்பதற்கு ஒருசில அறிகுறிகள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சரி, இப்போது உடலில் இரத்த குறைவாக இருந்தால், என்ன அறிகுறிகள் இருக்கும் என்று பார்ப்போமா!!!

So the signs of anemia must be detected to cure this condition as well. The commonest sign of anemia is in the eyes. When you stretch your eyelids, the bottom of your eye should ideally be bright red. But if you have colourless eyes, it is supposed to be a sign of anemia. Other symptoms of low blood count include pale complexion and persistent fatigue.


நிறமற்ற கண்கள் உடலில் இரத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்களை வைத்து தெரிந்து கொள்ளலாம். அதற்கு கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது, அடியில் உள்ள பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல், நிறமற்று காணப்பட்டால், இரத்த சோகை என்று தெரிந்து கொள்ளலாம்.
Colourless Eyes It is easy to detect anemia from the eyes. When you stretch your eyelids and the bottom portion of the eye is colourless, it indicates anemia.


சோர்வு உடலில் சோர்வானது தொடர்ந்து ஒரு மாதமாக இருந்தால், உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
Fatigue If you are tired all the time for a month or so, it could mean that you have low red blood cell count. Energy is dependent on oxidation and the lesser the RBCs, the lower the rate of oxidation in the body.குமட்டல் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியாதவாறு மயக்கம் அல்லது குமட்டல் போன்றவை ஏற்படும்.
Nausea Low blood count can sometimes give you the symptoms of morning sickness or nausea as soon as you get out of the bed.


தலை வலி அனீமியா இருப்பவர்கள் அடிக்கடி சொல்வது தலை வலிக்கிறது என்று தான். ஏனெனில் உடலில் இரத்தமானது குறைவாக இருப்பதால், மூளைக்கு தேவையான இரத்தம் செல்லாமல், தலை வலியை உண்டாக்குகிறது.
Headaches People who are anemic often complain of persistent headaches. As there is less blood in the body, the brain is starved for oxygen. This often leads to nagging headaches.


வெள்ளையான விரல்கள் ஒருவர் ஆரோக்கியமாக உள்ளாரா என்பதை விரல்களை அழுத்தும் போது தெரிந்துகொள்ளலாம். எப்படியெனில் அவ்வாறு அழுத்தும் போது, இரத்தமானது விரல் முனைகளுக்கு வரும். ஆனால் இரத்த சோகை உள்ளவர்களின் விரல்களை அழுத்தினால், எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், வெள்ளையாகவே இருக்கும். எனவே இதனை வைத்தும் தெரிந்து கொள்ளலாம்.
White Fingertips When you press the fingers of a healthy person, it turns red because all the blood is squeezed to the fingertips. But if you are anemic, your fingertips will be white.


மூச்சு திணறல் இரத்த சோகை இருந்தால், சரியாக சுவாசிக்க முடியாது. ஏனெனில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் இரத்தமானது குறைவாக இருப்பதால், சிறிது தூரம் நடந்தாலும், அதிகமாக மூச்சு வாங்கும்.
Shortness Of Breath Low blood count means that the oxygen carrying capacity of the blood is reduced. This makes you pant for breath even while doing daily activities like walking.


படபடப்பு எப்போது உடலில் இரத்தத்தின் அளவானது குறைவாக உள்ளதோ, அப்போது மூச்சு திணறல் மற்றும் குறைவான ஆக்ஸிஜன் இதயத்திற்கு கிடைப்பதால், இதயம் எப்போதும் படபடப்புடன் இருக்கும். சொல்லப்போனால், அப்போது இதயத் துடிப்பானது அதிக அளவில் இருக்கும்.

Palpitations When you are short of breath and low on oxygen, the heart rate increases to make up for the energy deficit. This makes your heart palpitate and you can hear your own heart beating rapidly.


வெளுப்பான சருமம் இரத்த சோகை இருந்தால், சருமம் ஒரு மஞ்சள் நிறம் கலந்த ஒருவித வெள்ளை நிறத்துடன் காணப்படும். இவ்வாறு இருந்தால், அனீமியா என்று பொருள்.
Pale Complexion If you are anemic then you will look pale; your complexion will become yellowish white, This paleness is different from fairness. There is a pallor of ill-health on your skin.


கூந்தல் உதிர்தல் இரத்தம் குறைவாக இருந்தால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய இரத்த ஓட்டமானது குறைவாக இருப்பதால், ஸ்கால்ப்பிற்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், கூந்தல் உதிர ஆரம்பிக்கும்.
Hair Loss As the the scalp will not get enough nourishment from the body, you will start losing hair at a very rapid rate.


நோய் எதிர்ப்பு சக்தி குறைவு இரத்தமானது குறைவாக இருப்பதால், உடலுக்கு வேண்டிய சக்தியானது கிடைக்காமல், நோய் எதிர்ப்பு சக்தியானது குறைந்து, அடிக்கடி உடல் நிலையானது சரியில்லாமல் போகும். எனவே இதை வைத்தும் அனீமியா என்று தெரிந்து கொள்ள முடியும்.
Loss Of Immunity When your body has very little energy and life giving oxygen, the immunity or ability to fight away diseases decreases. You will start falling sick at the drop of a hat.Thanks