Flash News

Friends Tamil Chat

Search This Blog

Saturday 30 March 2013

பற்களை வெண்மையாக்க - for white teeth


பற்களை வெண்மையாக்கும் வீட்டுப் பொருட்கள்


அழகான புன்னகையால் ஆயிரம் இதயங்களை கவர முடியும். ஆகவே அனைவருக்குமே அழகான மற்றும் வெள்ளையான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அத்தகைய வெள்ளையான பற்களை பெறுவதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம்.

இருப்பினும் ஏதாவது உணவுகளை சாப்பிட்டுவிட்டால், பற்களில் உணவுக் கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக் கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன. மேலும் சில நேரங்களில் அத்தகைய கறைகளால் வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும். எனவே இத்தகைய பிரச்சனைகளைப் போக்கி, பற்களின் இருக்குகளில் சிக்கிக் கொள்ளும் பொருட்களை தவிர்க்கவும், வாய் துர்நாற்றத்தையும் நீக்கவும், அத்தகைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும்.

மேலும் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!


எலுமிச்சை
எலுமிச்சை துண்டை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் இயற்கையாக வெண்மையாக இருக்கும். அதிலும் எலுமிச்சையை உப்பில் தொட்டு தேய்க்க வேண்டும்.



கடுகு எண்ணெய்
பற்களை வெள்ளையாக்கும் பராம்பரிய வீட்டு வைத்திய பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்க வேண்டும்.



பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.



சாம்பல்
அக்காலத்தில் பேஸ்ட் கிடைக்காத நேரத்தில் வாழ்ந்த மக்கள், வீட்டில் விறகு அடுப்பில் சமைக்கும் போது கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்தி பற்களை துலக்கினார்கள். இதனால் பற்கள் வலுவோடு இருப்பதோடு, வெள்ளையாகவும் இருக்கும்.



உப்பு
அனைவருக்குமே உப்பு பற்களை வெள்ளையாக்கும் பொருட்களில் மிகவும் சிறந்தது என்று. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.



ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு தோல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்கள் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள், ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.



வினிகர்
தினமும் வினிகரை நீருடன் சேர்த்து கலந்து வாயில் விட்டு, கொப்பளித்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களில் உள்ள மஞ்சள் நிறக் கறையும் நீங்கும்.



கிராம்பு எண்ணெய்
ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்களுக்கு கிராம்பு ஒரு சிறந்த மருத்துவப் பொருள். அதிலும் தினமும் பற்களை துலக்கும் போது, பிரஷ்ஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்க, பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.



வேப்பங்குச்சி
பற்களை வெண்மையாக்கும் பொருட்களில் இதுவும் ஒன்று. இதனை வைத்து தினமும் பற்களை தேய்த்து வந்தால், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, பளிச்சென்றும் மின்னும்.



பிரியாணி இலை
பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து, பற்களை துலக்க, பற்கள் வெள்ளையாகும்.




Kitchen Ingredients For White Teeth


We all wish to get white and sparkling teeth. A beautiful smile can melt millions of heart! But, maintaining white and sparkling teeth requires a lot of oral health care. Brushing twice or thrice every day, using dental floss are few tips to maintain good oral health.

However, whatever you eat will affect your teeth. Sticky foods, artificial sweeteners, smoking etc can damage your teeth and turn it yellow. There are few foods that stick to your teeth and leads to mouth odour. So, try to avoid these foods. You can include some teeth-friendly foods in your diet like strawberries, citrus fruits, crunchy vegetables like carrots to get white teeth.

You can also include these home ingredients to get white teeth naturally. These ingredients are easily available in your kitchen and effective too. So, make full use of these kitchen ingredients to get white teeth naturally.

Lemon: Rubbing a slice of lemon can help get white teeth naturally. You can also mix lemon with salt to brush your teeth.

Mustard oil: This is one of the traditional home remedies that is used to get white teeth naturally. Brush your teeth with mustard oil & turmeric paste and see the difference.

Baking soda: Baking soda when mixed with salt forms a good homemade toothpaste. It is an effective home remedy that is used to get white teeth naturally.

Wood ash: It might be surprising to know, but wood ash is also used as one of the home remedies to get white teeth naturally.

Salt: Use salt as a tooth scrub. It not only whitens the teeth but, also helps get the sparkling shine. Mix salt with lemon juice and clean your teeth.

Orange peel: Citrus foods are very good for the teeth. To get white and sparkling teeth naturally, use orange peel or pulp. It also prevents mouth odour.

Vinegar: Rinse your mouth with dilute vinegar and water. It prevents mouth odour and also gets rid of yellow teeth.

Clove oil: Gum pain or tooth decay are treated with this kitchen ingredient. Add a drop of clove oil in your toothbrush before brushing your teeth.

Neem stems: This is another home remedy to get white teeth naturally. It is natural and also promotes good oral health.

Bay leaves: Mix bay leaves powder with lemon juice and brush your teeth with this paste to get white teeth.

Thanks