Flash News

Friends Tamil Chat

Search This Blog

Friday 24 May 2013

வீட்டில் பறவை வளர்க்க வேண்டிய காரணங்கள் - 6 reasons get pet bird

வீட்டில் பறவை வளர்க்க வேண்டிய காரணங்கள்

வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாக இருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும்.


நம்மில் அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா? தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். சரி, பின் என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையை செல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இது குளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும்.

ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம் அதனுடைய கூண்டை அமைக்க ஒரு சிறிய இடம் மட்டுமே. மேலும் பல பேர் பறவையை ஒரு செல்லப்பிராணியாகவே பார்ப்பதில்லை. அதனால் அதனை உங்கள் வீட்டில் வளர்க்க நீங்கள் தனியாக அதற்கென்று கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.

top 6 reasons get pet bird

வீட்டில் பறவை வளர்க்க காரணங்கள்:

1. குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும் :
பொதுவாக செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் பறவைகளின் மீது நல்ல மதிப்பு கிடையாது. அதிலும் சில நாய் அல்லது பூனை விரும்பிகளை பொறுத்தவரை பறவைகள் என்பது அசிங்கமான, விரும்பத்தகாத ஒரு இனமாகும்; அது வீட்டில் இருப்பதை விட வெளியிலேயே இருப்பது நல்லது என்று எண்ணுவர். ஆனால் நாய் அல்லது பூனை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பறவைகள் தான் சரியான செல்லப்பிராணி.

2. மலிவாக கிடைக்கும் உணவுகள்:
நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவின் செலவு ஆதிகம். ஆனால் பறவைகளுக்கு மிகவும் குறைவே. அவைகள் உயிர் வாழ தேவையானதெல்லாம் தினசரி சிறு அளவு உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே. பறவைகளுக்கென்று நல்ல தரமான மாத்திரை வடிவிலான உணவு கொடுக்கப்பட வேண்டும். வேண்டுமெனில் அதனுடன் சேர்த்து சிறு பழங்களையும், காய்கறிகளையும் அதற்கு தீனியாக போடலாம்.


3 அறிவாளிகள்:
ஒருவரை "பறவையின் புத்தி" என்று புகழ்வது, அவரை அவமரியாதை செய்வதைப் போல் இருக்கலாம். ஆனால் உண்மையில் விலங்கு இனத்திலேயே புத்திக்கூர்மை அதிகமாக இருப்பது பறவைகளுக்குத் தான். யோசித்து பாருங்களேன், மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் பறவைகள் தான் நாம் செய்வதையும், பேசுவதையும் திரும்பச் செய்ய முயற்சி செய்யும்.



4. குறைந்த பராமரிப்புச் செலவு:
நாய்கள் மற்றும் பூனைகளைப் போல பறவைகளுக்கு அதிக கவனம் செலுத்த தேவையில்லை. அதற்கு நடை பயிற்சியையோ, வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையோ அல்லது அவைகளை சந்தோஷப்படுத்தும் கேளிக்கைகளைளோ செய்யத் தேவையில்லை. மேலும் நாய்களின் கழிவை சுத்தம் செய்வதை காட்டிலும், பறவைகளின் கூண்டை சுத்தப்படுத்துவது எளிது.


5. சிறிய இடத்திற்கு சரியான தேர்வு:
ஒரு சின்ன அபார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் வளர்ப்பதற்கு நாயும், பூனையும் சரியாக இருக்காது. ஏனெனில் அவைகள் ஓடவும், விளையாடவும் வீட்டில் போதிய இடம் இருக்காது. அதுவே பறவை என்றால், அதனை வளர்க்க ஒரு சிறிய கூண்டு மட்டும் போதுமானது.

6. மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை:
மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை பறவைகள். நாய்கள் மற்றும் பூனைகளை காட்டிலும் பறவைகள், அதனை வளர்ப்பவரிடம் அதிகமாக ஒன்றிவிடும். மேலும் அன்றைய நாளை பற்றிய குறைகளை நீங்கள் கூறும் போது, அதை கேட்பதற்கு நிச்சயம் உங்கள் பறவை செவி சாய்க்கும். கேட்பது மட்டுமல்லாது, உங்களுக்கு ஆறுதலாக கீச்சிடவும் செய்யும்.




Top 10 Reasons Why a Bird Could Be the Best Choice for Your Family



If you are thinking about adding a pet to your family, it's important to keep in mind your lifestyle and living situation so that you can choose a pet that will be compatible.

Perhaps you are live in an apartment, are unable to take a pet outside for daily walks, or simply crave a companion that will be a little less common than a cat or dog. If you feel like a furry friend might not quite fit what you are looking for, read on for the top ten reasons that a bird would make a wonderful pet!


1. Birds are intelligent animals.

In the animal kingdom, birds rank near the top when it comes to smarts. Their capacity for learning and inquisitive nature makes them facsinating, captivating pets. Birds that are bonded with their owners constantly learn from the person's behavior, and often delight them with surprisingly human-like antics. Think about it: when is the last time a dog looked up at you and said "Hello"?
 

2. They are relatively easy to care for.

As opposed to four-legged pets that typically roam free within their owners homes, birds are much easier to care for. They can be placed inside their cages when you are at work or busy, they don't require daily walks outside, and housebreaking is not an issue. Many people prefer the convenience of cleaning a cage once daily to scooping a litter box or having to go for walks outside every few hours.

3. Birds are fairly simple to train.

Because of their above average intelligence, birds can be a joy to train and are typically eager to learn new things from their owners. Since birds are relatively small, training them can be less physically demanding than working with larger creatures, making them a good choice for the young, elderly, or disabled.

4. They require minimal grooming.

Birds are naturally very hygienic animals, and they preen their feathers daily to keep them shiny and clean. Rather than having to deal with smelly shampoos, flea baths, and expensive haircuts, bird owners can usually maintain their pet's health and good looks with a quick nail trim now and then and a shower of plain water once or twice each week.

5. Birds are extremely social creatures.

If you want a pet that will bond strongly with you, a bird is a wonderful choice. Given proper training and socialization, birds can be every bit as loving and affectionate as a cat or dog. Many pet birds are inseparable from their owners, some even accompanying them on daily errands such as trips to the bank or grocery store.

6. Birds are fairly inexpensive to feed.

It's important to provide pet birds with a high quality pelleted diet, but they can also benefit greatly from foods that their owners share with them. When you serve fresh fruits or vegetables in your home, you can set a portion aside for your bird's meal. This provides the pet with additional nutrients and variety, and allows owners to "stretch out" the commercial diets they buy. Just make sure that the foods you share with your pet aren't toxic to birds!

7. They can be kept in a small space.

Small bird species, such as budgies, canaries, and finches, make wonderful pets for those who live in apartments or condominiums with limited space. While larger pets require extra room to romp and play, a small bird's cage can easily fit into a cozier living space.

8. Birds are not considered "pets" at most rental properties.

Owners of rental property often impose monthly "pet fees" on tenents that have cats and dogs. Most landlords, however, do not consider birds to be pets, effectively relieving bird owners of the extra charges. For this reason, a bird can be a very economical choice for renters who wish to adopt a pet.

9. Pet birds are attractive to look at.

Obvious as it may seem, the aesthetic value of owning a bird should not be underestimated. It was, after all, a bird's beauty that attracted mankind to them in the first place. Birds display beautiful colors and comical behavior patterns that are interesting to watch and have even proven to lower stress levels in individuals! It can't be denied that birds bring a certain life and vibrance to the homes that they grace.

10. They are long-lived companions.

Those who have experienced the heartbreak of losing a long time pet are often not eager to repeat the process any time soon. Many bird species live extraordinarily long lives, some living more than 100 years! This often eases the concerns of people who want to make sure they adopt a pet that they can love and enjoy for a very long time.


Share your comments here

Thanks

No comments:

Post a Comment