Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday 19 May 2013

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் - health benefits almonds

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நட்ஸ்களின் ராஜாவாக விளங்கும் பாதாமில் நிறைய நன்மைகள் உள்ளங்கியுள்ளன. இந்த சூப்பர் நட்ஸ் உடல், சருமம் மற்றும் முடி என பலவற்றிற்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறந்ததாக உள்ளது. அதிலும் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் உடலை வலுவுடனும், எந்த ஒரு நோயும் அண்டாமல் பாதுகாக்கிறது.

குறிப்பாக பாதாமில் வைட்டமின் பி2, வைட்டமின் ஈ, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் காப்பர் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்திருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியத்துடன் வைப்பதில் பெரிதும் துணையாக உள்ளது. இவ்வாறு பாதாமின் நன்மைகளைப் பற்றி சொன்னால் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனெனில் அதன் நன்மைக்கு எல்லையே இல்லை.

இப்போது அந்த பாதாமை தினமும் சாப்பிடுவதால், உடலில் உண்டாகும் 15 நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.



இதய நோய்
பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், இதய நோய் வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் இதயத்தை பாதுகாக்கும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி வாரத்திற்கு 5 நாட்கள் தொடர்ந்து பாதாம் சாப்பிட்டு வந்தால், 50% இதய நோய் வருவதைத் தடுக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



கொலஸ்ட்ரால்
பாதாமில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நல்ல அளவில் உள்ளது. அதிலும் தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைக்க உதவும்.



இரத்த அழுத்தம்
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.




புற்றுநோய்
நார்ச்சத்து அதிகம் இருக்கும் பாதாமை சாப்பிட்டால், அது குடலியக்கத்தை சீராக வைத்து, குடல் புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் ஈ, பைட்டோ கெமிக்கல் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் இருப்பதால், மார்பக புற்றுநோயை உண்டாக்கும், செல்கள் வளர்வதை தடுக்கும்.




சீரான இரத்த ஓட்டம்
மக்னீசியம், பாதாமில் அதிகம் இருப்பதால், இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீராக பாய உதவியாக இருக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தணுக்களின் அளவு அதிகரிக்கவும் செய்யும். இதனால் நன்கு சுறுசுறுப்புடன் வேலை செய்யலாம்.



வலுவான எலும்புகள்
மற்றும் பற்கள் பாதாமில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால், மூட்டு வலியை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்கும்.


எடை குறைய
பாதாமில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் கலோரியின் அளவை கட்டுப்படுத்தி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும். மேலும் இதில் உள்ள புரோட்டீன், வயிற்றினை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும்.



நீரிழிவு
பாதாமில் குறைந்த அளவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றில் பாதாம் சாப்பிட்டால், உணவிற்கு பின் இரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை குறைத்து, சீராக வைக்க உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.



பித்தக்கற்கள்
பாதாமை தொடர்ந்து சாப்பிட்டால், 25% பித்தக்கற்கள் உருவாவது குறைந்துவிடும். ஆனால் ஏற்கனவே சிறுநீரகம் அல்லது பித்தப்பையில் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நட்ஸை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதற்கு இதில் உள்ள ஆக்சலேட் பண்புகள் தான் காரணம்.




எனர்ஜி
பாதாமில் உடலின் எனர்ஜியை அதிகரிக்கும் கனிமங்களான மாங்கனீசு, காப்பர் மற்றும் ரிபோஃப்ளேவின் உள்ளது.




ஆரோக்கியமான மூளை
ஆய்வு ஒன்றில், பாதாமில் ரிபோஃப்ளேவில் மற்றும் எல்-கார்னிடைன் இருப்பதால், அவை மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவியாக இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவத்திலும், தினமும் காலையில் நீரில் ஊற வைத்த 5 பாதாம் சாப்பிட்டு வந்தால், மூளையின் சக்தி அதிகரிக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.




இரத்த சோகை
காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.




அழகான சருமம்
பாதாமில் நல்ல அளவில் மாய்ஸ்சுரைசிங் தன்மை இருப்பதால், அது வறட்சி, முப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.



முடி பிரச்சனைகள்
முடிகளில் பிரச்சனை உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை தடவி வந்தால், சரிசெய்துவிடலாம். அதிலும் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, மெல்லிய முடி போன்றவற்றை குணமாக்க உதவியாக இருக்கும்.


பாதாம் அதிகமாக சாப்பிடுவதால் மலசிக்கல் ஏற்படும். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 சாப்பிடுவதே நலம்


Nutritional Benefits Of Almonds


Almond is well known for its health and nutritional benefits among all nuts. Almonds make a great after-meal snack as they reduce the blood sugar levels and free radicals from the body. If consumed twice in a week, nutritional benefits of almonds are found as it reduces the risk of weight gain so if you want to add this nut to your food, be ready enjoy its nutrition benefits and stay healthy.

Almond can be eaten raw or toasted and is also a component of various dishes. It is available in many forms like sliced, almond butter, almond milk and almond oil. But the best way to eat almonds is raw soaked in water for few hours. Lets look at the nutritional benefits of almonds:

1.Lower cholesterol: These small brown nuts are a rich source of energy and nutrients. It contains mono-unsaturated fatty acids like oleic and palmitoleic acids which lowers LDL (bad cholesterol) and increase the HDL (good cholesterol) levels. Therefore it reduces the chances of heart attacks and other heart diseases by favoring healthy blood lipid profile.

2.Prevents cancer: As the nut is low in saturated fat and rich in nutrients like calcium and magnesium, it builds strong bones. Its contains about 25 g per 100 g (about 170% of RDA) of vitamin E, a powerful lipid soluble antioxidants required to maintain cell membranes and protects the skin from harmful oxygen free radicals.

3.Phytochemicals helps protect against cancer and cardiovascular diseases. An effective nutritional benefit of almond.

4.Prevents osteoporosis:
20-25 almonds (an ounce) contains as much calcium as that of a ¼ cup of milk thus preventing chances of osteoporosis.

5.Almonds are a rich source of B-complex group of vitamins such as riboflavin, niacin, thiamine, pantothenic acid, folates and vitamin B-6. These work as co-factors for enzymes during cellular substrate metabolism.

6.Another nutritional benefits of almonds is found on pregnant women
as it is a great source of folic acid.

7.Phosphorus in the nuts build strong bones and teeth.

8.One of the benefits of almond is its oil extracts provide relief to strained muscles.

9.Sweet almond oil is one of the most popular essential oils used in aromatherapy.

10.Almond oil if applied on hair fosters hair growth and improves hair quality.


So, eat 2-5 pieces of almonds daily as excessive consumption of it can cause constipation.

Share your comments here

Thanks

3 comments:

  1. According to the California Almond Board, eating approximately 23 almonds, you will consume 160 calories but you will also intake 6 g of protein and 4 g of fiber, both of which make you feel full. In 2007 a study in Spain revealed that people who ate nuts in general, twice a week, were over 30% less likely to gain weight than those who never or almost never eat nuts.

    Health Benefits of Almond

    ReplyDelete
  2. Kalaiil Verum vaitril sapdalama

    ReplyDelete