Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday 16 May 2013

பைபோலார் டிஸார்டர் சில அறிகுறிகள் - find whether you have bipolar disorder symptoms

பைபோலார் என்னும் இருமுனையப் பிறழ்வு இருப்பதற்கான சில அறிகுறிகள


"பைபோலார் டிஸ்ஆர்டர்" எனப்படும் இருமுனையப் பிறழ்வைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? இது ஒரு விதமான மன அழுத்தமே. ஆனால் சற்று ஆபத்தானது. இதனை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தமிழ் படத்தில் கூட நாம் பார்த்திருப்போம். அது தான் நடிகர் தனுஷ் நடித்த "மூணு" (3) திரைப்படம். இந்த படத்தில் தனுஷ் கூட இருமுனையப் பிறழ்வால் தான் பாதிக்கப்பட்டிருப்பார்.


இருமுனையப் பிறழ்வு என்பது அதிகப்படியான வெறி மற்றும் சோர்வு கோளாறான ஓர் மனநோய் ஆகும். இது பெயருக்கு ஏற்றது போல் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மனநிலையானது அதீத அளவில் ஊசலாடும். இது பல வாரங்கள் அல்லது மாதங்கள், ஏன் அதற்கும் மேலாக கூட நீடிக்கும்.

நூற்றில் ஒருவர் வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்படுவர். இது பொதுவாக டீன் ஏஜில் (விடலைப் பருவத்தில்) அல்லது அதற்கு பிறகு தான் ஆரம்பிக்கும். ஆனால் இது நாற்பது வயதிற்கு மேல் வருவது அபூர்வமே. இது ஆண் பெண் என்ற பேதமில்லாமல் இருவருக்கும் வரும் பொதுவான பாதிப்பாகும்.

இப்போது இந்த இருமுனையப் பிறழ்வு இருப்பதை உறுதி செய்யும் சில அறிகுறிகளை பார்க்கலாமா!!!



1. வித்தியாசமான மனநிலை
இருமுனையப் பிறழ்வை, வெறி மற்றும் சோர்வுகளின் ஏற்றமும் இறக்கமும் கொண்ட அத்தியாயங்கள் என்று கூறலாம். வெறி ஏற்படும் சமயம் சில நோயாளிகள், நிஜ வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக விலகி போய்விடுவர்.




2. அதிக ஆற்றல்
இடநிலை மன வெறி/ஹைப்போமேனியா (hypomania) என்பதும் இருமுனையப் பிறழ்வின் ஒரு அறிகுறியே. இந்த நிலையில், அந்த நபர் அதிக ஆற்றலுடன் இருப்பதாக உணர்வர். ஆனால் அவர்கள் நிஜ வாழ்க்கையோடே பயணம் செய்வர்.



எடுத்த செயல்களை முடிக்க முடியாமல் போகுதல்
தொட்ட அனைத்து காரியத்தையும் முழுவதுமாக முடிக்க முடியாமல், அரை குறையாக முடித்தால் இருமுனையப் பிறழ்வு அங்கே குடி கொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும். அதிலும் இடநிலை உளக்கிளர்ச்சி இருக்கும் போது, ஆற்றலை சிறந்த முறையில் உபயோகிக்க தெரிந்தால், ஆக்கத்திறனானது பாதிக்கப்படாது. ஆனால் ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்த முடியாமல் போனால், பல வேலைகளை இழுத்து போட்டு செய்ய முடியாது. மேலும் ஒழுங்காக திட்டம் தீட்டவும் முடியாது.




மன சோர்வு போக்கிகள்
இருமுனையப் பிறழ்வு உள்ளவரின் நிலை சாதாரண மன அழுத்தத்தை போலவே தெரியும். சில மனச்சோர்வு போக்கிகள் மட்டும், இருமுனையப் பிறழ்வு உள்ளவர்களுக்கு கை கொடுக்காது. சொல்லப்போனால், அவை நிலைமையை இன்னும் மோசமடையத்தான் செய்யும். ஆனால் மனச்சோர்வு போக்கிகள், இருமுனையப் பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்கள் ஆபத்தான நிலைக்கு போவதை தடுக்க உதவும்.




எரிச்சலூட்டும் தன்மை
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில நேரம் மனவெறிகளின் கலவையோடு இருப்பர். இந்த நேரத்தில் வெறி மற்றும் சோர்வும் ஒரே நேரத்தில் ஒருவரை பாதிக்கும். இந்த நிலையில் இருப்பவர்கள், அதிக எரிச்சலூட்டும் தன்மையோடு விளங்குவர்.




உறவுகளை பாதித்தல்
அனைவருக்கும் ஏதாவது ஒரு நாள் மிகவும் மோசமாக அமைய வாய்ப்பு உள்ளது. அப்படி அமைந்தால் எரிச்சல் அடைவது உறுதி. இந்த காரணத்தினால், இருமுனையப் பிறழ்வை கண்டறிவது கடினமே. ஆனால் இருமுனையப் பிறழ்வு உள்ளவர்களுக்கு ஏற்படும் எரிச்சல் சற்று அதிகமான நிலையிலே இருக்கும். அது உறவுகள் பாதிக்கும் அளவிற்கு செல்லும்.




வேகமான பேச்சு
சில பேர் இயற்கையிலேயே லொட லொடவென்று பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அழுத்தத்தினால் ஏற்படும் வேகமான பேச்சு இருமுனையப் பிறழ்வால் ஏற்படுவதே. இந்த வகையான பேச்சு இரண்டு பேரும் உரையாடும் போது ஏற்படுவதில்லை. பாதிக்கப்பட்ட நபர் வேகமாக பேசும் போது, குறுக்கே பேச முற்பட்டால், பேச அனுமதிக்காமல் பேசிக் கொண்டே போவார்கள். சில நேரம் ஒரு தலைப்பில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக் கொண்டே இருப்பார்கள்.




வேலை செய்வதில் பிரச்சனை ஏற்படுதல்
இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு வேலை செய்யும் அலுவலகத்தில் பல கஷ்டங்களை கொடுக்கும். ஏனென்றால் அவர்களுக்கு வேலையை திறம்பட செய்வதில் சிரமம் ஏற்படும். வேலையை முடிப்பதில் ஏற்படும் பிரச்சனையை தவிர, தூக்கமின்மை, எரிச்சல் அடைதல் மற்றும் ஆணவம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். இவை அனைத்தும் கிளர்ச்சி/வெறி நிலையில் ஏற்படுவது. இதுவே சோர்வு மற்றும் அழுத்தம் ஏற்படும் வேளையில், அதிக நேர தூக்கம் மற்றும் அதிக அளவில் உணர்வுகளினால் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவைகளும் ஏற்படும்.




அதிக அளவு மதுபானத்தை பயன்படுத்துதல்
இருமுனையப் பிறழ்வு உள்ளவர்களில் 50% பேர்களுக்கு அதிக அளவு மதுப்பழக்கம் இருக்கும். கிளர்ச்சி நிலையில் இருக்கும் போது, அதனைக் கட்டுப்படுத்த மது குடிப்பது வழக்கம். அதே போல் அழுத்தம் ஏற்படும் போது, மன நிலையை நன்றாக வைத்துக் கொள்ளவும் மதுவை குடிப்பர்.



இயல்பு மாறிய பழக்கம்
கிளர்ச்சி நிலையில் இருக்கும் இருமுனையப் பிறழ்வு நோயாளிகளின் சுய மரியாதை மேலோங்கி நிற்கும். அவர்கள் தன்னை பெரிய ஆளாக எண்ணிக் கொள்வர். அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைக் கொள்வதில்லை. அவர்களை பொருத்தவரை அனைத்தும் நன்றாக நடக்கும். இதனால் ஏற்பட போகும் முக்கிய இரண்டு விளைவுகள்: மதுபான விருந்துகளில் அதிக நேரம் செலவழிப்பது மற்றும் வழக்கத்துக்கு மாறான பாலின குணங்களை வெளிப்படுத்துதல்.




தூக்க பிரச்சனை
இந்த நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் தூக்கப் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அழுத்தம் ஏற்படும் நிலைகளில் அதிக நேரம் தூங்குவர். மேலும் எப்போதும் அயர்வுடன் இருப்பர்.




தூக்கமின்மையிலும் ஆற்றலுடன் செயல்படுவது
வெறி நிலையில் இருக்கும் போது தூக்கமின்மை ஏற்படும். இருந்தும் அவர்கள் அயர்வு அடைவதே இல்லை. ஒவ்வொரு இரவும் கொஞ்ச நேரம் மட்டுமே தூங்கினாலும், அதிக அளவு ஆற்றலுடன் இருப்பார்கள்.




பலத்தரப்பட்ட எண்ணங்கள் முளைத்தல்
பொதுவாக இருமுனையப் பிறழ்வுகளின் அறிகுறிகளை கண்டுப்பிடிப்பது கடினம். ஆனால் வெறி நிலையில் இருக்கும் போது, பல அறிகுறிகளை தெரிந்து கொள்ளலாம். அதுவும் அப்போது மனம் எதையோ நோக்கி வேகமாக செல்வதைப் போன்ற உணர்வு ஏற்படும். அதனால் தங்கள் எண்ணத்தையோ செயலையோ அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. இப்படி பலத்தரப்பட்ட எண்ணங்கள் அழுத்தத்துடன் கூடிய பேச்சுடன் உதிர்க்கும்.


How to Know if You Have Bipolar Disorder


Have you ever wondered if you have bipolar disorder, or have been told that you may have it? Bipolar disorder is a type of mood disorder affecting about 1-2% of the population, commonly manifested as elevated mood alternating with depressed mood. This article will help you determine whether you, or people you care about, meet the diagnostic criteria to have bipolar disorder.

1. Find out whether you have ever had a manic episode. A manic episode is a period of time over one week when you feel extremely elevated or irritable, during which you have at least three of the following (four if mood is only irritable):

  • Distractability (unimportant things can easily divert your attention)
  • Indiscretion (impulsive pleasurable acts with painful consequences)
  • Grandiosity (or inflated ego)
  • Flight of ideas
  • Activity increase toward goals
  • Sleep deficits (less need for sleep)
  • Talkativeness (or feels pressured to keep on talking)

2. The mnemonic for memorizing these manic criteria is "DIG FAST." A manic episode MUST significantly impair your daily functions. IF your symptoms do not cause marked impairment in daily functions, or if the symptoms last for less than a week, but more than 4 days, and still meet at least 3 of the 7 "DIGFAST" criteria, then it is called a hypomanic episode.

3. Find out whether you have ever had a major depressive episode. A major depressive episode is a period of time over 2 weeks when you feel sad or have lost interest or pleasure, during which you have five or more of the following:

  • Sleep problems (can't sleep, wake up early, or sleep too much)
  • Interest loss (nothing motivates you anymore)
  • Guilt (excessive feeling of guilt or worthlessness)
  • Energy decrease (feels tired everyday)
  • Concentration lacking (easily distracted)
  • Appetite changes (either not wanting to eat (more common) or eating more)
  • Psychomotor agitation or retardation (moving faster or slower than usual)
  • Suicidal thoughts (or feeling you are better off dead)

4. The mnemonic for memorizing these depression criteria is "SIG E CAPS." To qualify for a major depressive episode, these symptoms MUST significantly impair daily functions.

5. Determine whether you have Bipolar disorder based on whether or not you have had a manic episode or a major depressive episode, or both. If you have had a manic episode (with or without a depressive episode), then you may have Bipolar I Disorder. If you have had a hypomanic episode AND a major depressive episode (during separate occasions, of course), then you may have Bipolar II disorder.

TIPS

  • Remember, to have bipolar disorder, your symptoms must be severe enough to cause marked impairment in your daily function.
  • If you are a heavy drinker or you use drugs, these can both cause mood swings with the appearance of bipolar disorder.So be sure whether you have bipolar, refrain from drug or alcohol use.


If you have similar problems, tell your comments here

Thanks

No comments:

Post a Comment