உண்மையான காதல் எது ? - What is true love ?
For english Read this: http://voices.yahoo.com/what-true-love-true-love-4-signs-love-real-5493621.html?cat=42
காதல் என்ற வார்த்தை இல்லாத இடம் இந்த தரணியில் உள்ளதா? சிறிய கிராமத்தில் இருந்து. பெரிய நகரம் வரை காதல் இல்லாத இடமே இல்லை. ஆதாம் ஏவாள் காலத்தில் உருவான காதல், கடைசி மனிதன் இருக்கும் வரை அழியப் போவதில்லை. காதல் என்பது ரஜினி சொன்னதை போல தான், "அது எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் காதலில் விழுவது நிச்சயம்".
Kātal eṉṟa vārttai illāta iṭam inta taraṇiyil uḷḷatā? Ciṟiya kirāmattil iruntu. Periya nakaram varai kātal illāta iṭamē illai. Ātām ēvāḷ kālattil uruvāṉa kātal, kaṭaici maṉitaṉ irukkum varai aḻiyap pōvatillai. Kātal eṉpatu rajiṉi coṉṉatai pōla tāṉ, "atu eppō varum eppaṭi varum eṉṟu yārukkum teriyātu. Āṉāl vara vēṇṭiya nērattil ovvoru maṉitaṉum kātalil viḻuvatu niccayam".
நம் வாழ்வின் ஸ்பெஷலான ஒரு நபரை சந்திக்கும் போதோ அல்லது அவரை பற்றி சிந்திக்கும் போதோ உங்களுக்குள் ஒருவித வினோத உணர்வு ஏற்படும் அல்லவா? சரி, அது காதலா இல்லையா என்பதை எப்படி அறிந்து கொள்ள போகிறீர்கள்? ஏன் அவர்களை பற்றி சிந்திக்கும் போது ஒரு இன்பமயமான உணர்வு ஏற்படுகிறது? இது வாழ்நாள் முழுவதும் நீடிக்குமா? காலம் காலமாக நிலைத்து நிற்கும் காதல் என்ற இந்த அபூர்வ உணர்வை பற்றி கொஞ்சம் பார்போமா...
Nam vāḻviṉ speṣalāṉa oru naparai cantikkum pōtō allatu avarai paṟṟi cintikkum pōtō uṅkaḷukkuḷ oruvita viṉōta uṇarvu ēṟpaṭum allavā? Cari, atu kātalā illaiyā eṉpatai eppaṭi aṟintu koḷḷa pōkiṟīrkaḷ? Ēṉ avarkaḷai paṟṟi cintikkum pōtu oru iṉpamayamāṉa uṇarvu ēṟpaṭukiṟatu? Itu vāḻnāḷ muḻuvatum nīṭikkumā? Kālam kālamāka nilaittu niṟkum kātal eṉṟa inta apūrva uṇarvai paṟṟi koñcam pārpōmā...
ஆழமான பாசம்
காதல் என்பது ஒரு ஆழமான பாச உணர்வாகும். அது நம்மை ஒருவரிடம் மிகவும் நெருக்கமாக இருக்க ஊக்குவிக்கும். இந்த நெருக்கத்தின் அளவு ஒவ்வொருவரை பொறுத்து மாறுபடும். யாருக்காக என்பதை பொறுத்து, காதலானது வலுவற்றதாக, உறுதியானதாக அல்லது கட்டுப்படுத்த முடியாததாக இருக்கும். காதல் மலரும் போது சில அறிகுறிகள் அதனை நமக்கு தெளிவுபடுத்தும். அவை படப்படப்பு, தொண்டை அடைத்தல், வியர்க்கும் உள்ளங்கை, மனம் கவர்ந்தவரை காணும் போதோ அல்லது நினைக்கும் போதோ அதிக அளவில் சந்தோஷம் பொங்குதல் போன்றவைகள் தான். இப்படித்தான் காதலுக்கும், நட்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறப்படுகிறது.
Āḻamāṉa pācam: Kātal eṉpatu oru āḻamāṉa pāca uṇarvākum. Atu nam'mai oruvariṭam mikavum nerukkamāka irukka ūkkuvikkum. Inta nerukkattiṉ aḷavu ovvoruvarai poṟuttu māṟupaṭum. Yārukkāka eṉpatai poṟuttu, kātalāṉatu valuvaṟṟatāka, uṟutiyāṉatāka allatu kaṭṭuppaṭutta muṭiyātatāka irukkum. Kātal malarum pōtu cila aṟikuṟikaḷ ataṉai namakku teḷivupaṭuttum. Avai paṭappaṭappu, toṇṭai aṭaittal, viyarkkum uḷḷaṅkai, maṉam kavarntavarai kāṇum pōtō allatu niṉaikkum pōtō atika aḷavil cantōṣam poṅkutal pōṉṟavaikaḷ tāṉ. Ippaṭittāṉ kātalukkum, naṭpiṟkum uḷḷa vēṟupāṭukaḷ kūṟappaṭukiṟatu.
காதலின் இயக்க அமைப்பு
மனோ தத்துவ நிபுணர்கள் பலரும் காதலை பற்றிய ஆய்வை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். காதல் என்பது சும்மா வாய்ப்பு கிடைப்பதால் நடக்கும் ஒரு விஷயம் அல்ல. யாருடன் இருக்கும் போது, மனமானது பூக்கிறதோ அவர்களின் மீது ஆழ் மனதில் உண்டாவது தான் காதல். முக பாவனை, குரல் அல்லது சைகை என எது வேண்டுமானாலும், காதல் உணர்வை தட்டி எழுப்பலாம். மேலும் காதல் வயப்பட்டிருக்கும் போது ஆழமான உணர்வுகளும், உளப்பிணியும் அதிகரிப்பதை நன்கு உணரலாம். குறிப்பாக மகிழ்ச்சியான மனதோடு மட்டுமே இவ்வுலகை பார்ப்போம். காதலை தேடும் போது, நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நபரை கண்களும் காதுகளும், தேடவும் கேட்கவும் செய்யும். அவர்கள் செய்யும் தவறை பெரிதாக எண்ணிக் கொள்ளாமல், நம் கனவுகளையும் ஆசைகளையும் அவர்களிடம் வெளிக்காட்ட முனைவோம். அதனால் தான் 'காதலுக்கு கண்ணில்லை' என்று கூறுகிறார்கள் போலும். சில சமயங்களில் காதல் குணத்தையும் கூட மாற்றி விடும். அதிலும் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை அதிக அளவில் இருக்கும். தன் மீது குறைவான சுய மதிப்பீடு கொண்ட பெண்கள், காதலில் விழுந்த பின்பு ஆசைகளையும் குணங்களையும் மாற்றிக் கொள்வார்கள் உன்று கூறப்படுகிறது.
Kātaliṉ iyakka amaippu: Maṉō tattuva nipuṇarkaḷ palarum kātalai paṟṟiya āyvai naṭattik koṇṭu tāṉ irukkiṟārkaḷ. Kātal eṉpatu cum'mā vāyppu kiṭaippatāl naṭakkum oru viṣayam alla. Yāruṭaṉ irukkum pōtu, maṉamāṉatu pūkkiṟatō avarkaḷiṉ mītu āḻ maṉatil uṇṭāvatu tāṉ kātal. Muka pāvaṉai, kural allatu caikai eṉa etu vēṇṭumāṉālum, kātal uṇarvai taṭṭi eḻuppalām. Mēlum kātal vayappaṭṭirukkum pōtu āḻamāṉa uṇarvukaḷum, uḷappiṇiyum atikarippatai naṉku uṇaralām. Kuṟippāka makiḻcciyāṉa maṉatōṭu maṭṭumē ivvulakai pārppōm. Kātalai tēṭum pōtu, nam etirpārppukaḷukku ēṟṟa naparai kaṇkaḷum kātukaḷum, tēṭavum kēṭkavum ceyyum. Avarkaḷ ceyyum tavaṟai peritāka eṇṇik koḷḷāmal, nam kaṉavukaḷaiyum ācaikaḷaiyum avarkaḷiṭam veḷikkāṭṭa muṉaivōm. Ataṉāl tāṉ'kātalukku kaṇṇillai' eṉṟu kūṟukiṟārkaḷ pōlum. Cila camayaṅkaḷil kātal kuṇattaiyum kūṭa māṟṟi viṭum. Atilum cakipputtaṉmai maṟṟum poṟumai atika aḷavil irukkum. Taṉ mītu kuṟaivāṉa cuya matippīṭu koṇṭa peṇkaḷ, kātalil viḻunta piṉpu ācaikaḷaiyum kuṇaṅkaḷaiyum māṟṟik koḷvārkaḷ uṉṟu kūṟappaṭukiṟatu.
மனரீதியான மாற்றங்கள்
காதலை பற்றி ஆராய்ச்சியாளர்களும் கூட சிலவற்றை கூறுகின்றனர். உடல் ரீதியான சந்தோஷத்தை காதல் அளித்தாலும், அதையும் தாண்டி, உடம்பில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எண்டோர்பின், லுரிபெரின், ஆக்ஸிடாக்சின் மற்றும் காம ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் ஆகிய அனைத்து ஹார்மோன்களும் காதலில் ஈடுபடும் போது அதிக அளவில் சுரக்கிறது. இது மனதின் உள்தடைகளை உடைத்தெறிந்து, விரும்புபவரின் அன்பை பெறச் செய்யும். இவை அனைத்தும் டோபமைன் என்பதை சுரக்க வைக்கும்.
Maṉarītiyāṉa māṟṟaṅkaḷ: Kātalai paṟṟi ārāycciyāḷarkaḷum kūṭa cilavaṟṟai kūṟukiṉṟaṉar. Uṭal rītiyāṉa cantōṣattai kātal aḷittālum, ataiyum tāṇṭi, uṭampil hārmōṉ māṟṟaṅkaḷai ēṟpaṭuttukiṟatu. Eṇṭōrpiṉ, luriperiṉ, āksiṭākciṉ maṟṟum kāma hārmōṉāṉa ṭesṭōsṭirōṉ ākiya aṉaittu hārmōṉkaḷum kātalil īṭupaṭum pōtu atika aḷavil curakkiṟatu. Itu maṉatiṉ uḷtaṭaikaḷai uṭaitteṟintu, virumpupavariṉ aṉpai peṟac ceyyum. Ivai aṉaittum ṭōpamaiṉ eṉpatai curakka vaikkum.
ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வேறுபாடுகள்
காதலால் ஏற்படும் உணர்வுகள் மற்றும் வெளிப்படும் ஹார்மோன்களும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் காதலினால் ஏற்படும் மாற்றங்களை, அவர்கள் வேறு இரு கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர் - ஆண்களுக்கு காம உணர்வு தான் அதிகமாக வெளிப்படும். டெஸ்டோஸ்டிரோன் தான் அவர்களின் நோக்கத்தை ஆட்சி செய்யும். மேலும் எண்ணத்தின் கொள்ளளவையும், உறவின் அமைப்புக்கு தரப்படும் மரியாதையையும் தீர்மானிக்கும். - பெண்களுக்கு இது வேறு மாதிரியாக செயல்படும். அவர்களுக்கும் அதே உணர்வு வெளிப்பாட்டாலும் முக்கியமாக காம உணர்வு), காதல் என்பது போதை வஸ்துவாக வேலை செய்யும். தன் காதலன் உடன் இருக்கும் போது, பாச உணர்வு அதிகமாக வெளிப்படும். இதுவே அவர் உடன் இல்லாத போது, ஒருவித ஏக்கத்தையும் தனிமையையும் ஏற்படுத்தும்.
Āṇkaḷukkum, peṇkaḷukkum uḷḷa vēṟupāṭukaḷ: Kātalāl ēṟpaṭum uṇarvukaḷ maṟṟum veḷippaṭum hārmōṉkaḷum āṇkaḷukkum, peṇkaḷukkum orē mātiri tāṉ irukkum. Āṉāl kātaliṉāl ēṟpaṭum māṟṟaṅkaḷai, avarkaḷ vēṟu iru kaṇṇōṭṭattōṭu pārkkiṉṟaṉar - āṇkaḷukku kāma uṇarvu tāṉ atikamāka veḷippaṭum. Ṭesṭōsṭirōṉ tāṉ avarkaḷiṉ nōkkattai āṭci ceyyum. Mēlum eṇṇattiṉ koḷḷaḷavaiyum, uṟaviṉ amaippukku tarappaṭum mariyātaiyaiyum tīrmāṉikkum. - Peṇkaḷukku itu vēṟu mātiriyāka ceyalpaṭum. Avarkaḷukkum atē uṇarvu veḷippāṭṭālum mukkiyamāka kāma uṇarvu), kātal eṉpatu pōtai vastuvāka vēlai ceyyum. Taṉ kātalaṉ uṭaṉ irukkum pōtu, pāca uṇarvu atikamāka veḷippaṭum. Ituvē avar uṭaṉ illāta pōtu, oruvita ēkkattaiyum taṉimaiyaiyum ēṟpaṭuttum.
எவ்வளவு நாள் காதல் நீடிக்கும்?
காதல் என்பது முதலில் மனக்கிளர்ச்சியால் ஏற்படுகிறது. ஆனால் அதற்காக அதை வெறும் பொழுதுபோக்காக எண்ணி விடக்கூடாது. காதல் உணர்வு சராசரியாக 3 வருடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை என்பதை பல விஞ்ஞானிகளும், மனோதத்துவ நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். அதற்காக 3 வருடங்கள் கழித்து காதல் நின்று விடும் என்பதில்லை. மாறாக அது ஒருவித மரியாதை கலந்த உறவாக வீடு, குடும்பம் மற்றும் குழந்தைகள் என்று மாறிவிடும். மனக்கிளர்ச்சியால் காதல் வளர்ந்தாலும், காம உணர்வு கண்டிப்பாக நீடித்து நிற்கும்.
Evvaḷavu nāḷ kātal nīṭikkum?: Kātal eṉpatu mutalil maṉakkiḷarcciyāl ēṟpaṭukiṟatu. Āṉāl ataṟkāka atai veṟum poḻutupōkkāka eṇṇi viṭakkūṭātu. Kātal uṇarvu carācariyāka 3 varuṭaṅkaḷukku mēl nīṭippatillai eṉpatai pala viññāṉikaḷum, maṉōtattuva nipuṇarkaḷum oppuk koṇṭuḷḷaṉar. Ataṟkāka 3 varuṭaṅkaḷ kaḻittu kātal niṉṟu viṭum eṉpatillai. Māṟāka atu oruvita mariyātai kalanta uṟavāka vīṭu, kuṭumpam maṟṟum kuḻantaikaḷ eṉṟu māṟiviṭum. Maṉakkiḷarcciyāl kātal vaḷarntālum, kāma uṇarvu kaṇṭippāka nīṭittu niṟkum.
இன்னொரு கேள்வி பல பேருக்கு தோன்றும்...
யாரையாவது காதலிப்பதை நிறுத்தி விட்டால், மீண்டும் அவர்களின் மேல் காதல் பிறக்குமா? ஏமாற்றியவர் அல்லது மனதை காயப்படுத்தியவர் மீது காதல் எப்படி மலரும்? என்பன. ஆனால், இது ஒவ்வொரு நபரை பொருத்ததாகும். மேலும் அந்த உறவு பிரிந்ததற்கான காரணத்தையும் பொருத்ததாகும். நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் முக்கியமானதாக விளங்குகிறது காதல். மனம் கவர்ந்தவரை மீண்டும் மீண்டும் சந்திப்போம் என்று மனம் கூறினாலும், இந்த காதல் உணர்வு தினமும் கொழுந்து விட்டு எரியுமாறு பார்த்துக் கொள்வது சற்று கடினமே. மேலும் மனம் கவர்ந்தவரை கவனித்துக் கொள்வது, ஆசைகளை வெளிக்காட்டுவது, விருப்பங்களை பகிர்வது, அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போன்றவைகள் எல்லாம் காதல் நிலைத்திட உதவும் ரகசியங்கள்.
Iṉṉoru kēḷvi pala pērukku tōṉṟum: Yāraiyāvatu kātalippatai niṟutti viṭṭāl, mīṇṭum avarkaḷiṉ mēl kātal piṟakkumā? Ēmāṟṟiyavar allatu maṉatai kāyappaṭuttiyavar mītu kātal eppaṭi malarum? Eṉpaṉa. Āṉāl, itu ovvoru naparai poruttatākum. Mēlum anta uṟavu pirintataṟkāṉa kāraṇattaiyum poruttatākum. Nam uṭal nalattiṟkum, maṉa nalattiṟkum mukkiyamāṉatāka viḷaṅkukiṟatu kātal. Maṉam kavarntavarai mīṇṭum mīṇṭum cantippōm eṉṟu maṉam kūṟiṉālum, inta kātal uṇarvu tiṉamum koḻuntu viṭṭu eriyumāṟu pārttuk koḷvatu caṟṟu kaṭiṉamē. Mēlum maṉam kavarntavarai kavaṉittuk koḷvatu, ācaikaḷai veḷikkāṭṭuvatu, viruppaṅkaḷai pakirvatu, avariṉ uṇarvukaḷukku matippaḷippatu pōṉṟavaikaḷ ellām kātal nilaittiṭa utavum rakaciyaṅkaḷ.
Thanks
No comments:
Post a Comment